Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டித்வாவினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சென்ற IMF பிரதானி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டித்வாவினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சென்ற IMF பிரதானி

Feb 17, 2026 - 07:13 PM

டித்வாவினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சென்ற IMF பிரதானி

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா டித்வா புயலினால் மண்சரிவுக்கு உள்ளான உடபலாத்த பிரதேச செயலகப் பிரிவின் மாவதுர கிராமத்திற்கு சென்று கண்காணிப்பு விஜயத்தை இன்று (17) மேற்கொண்டுள்ளார்.

அனர்த்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியான மாவதுர பிரதேசத்தில், ஏராளமான வீடுகள் மண்சரிவுக்கு உள்ளாகி 28 பேர் உயிரிழந்ததுடன் ஆறு பேர் காணாமல் போயுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடிய ஜோர்ஜியேவா, அவர்களுக்கு தனது கவலையைத் தெரிவித்தார்.

அனர்த்தத்தின் போது, அரசாங்கம் மேற்கொண்ட விரைவான நடவடிக்கைகளையும், மக்கள் வெளிப்படுத்திய தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமை உணர்வையும் அவர் மேலும் பாராட்டினார்.

இப்போது இங்கு வாழும் சிறு குழந்தைகள் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக நாளை பெரும் பங்களிப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் இளைய தலைமுறையினரை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்படும் என்று தாம் நம்புவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளிடம் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா குறிப்பிட்டார்.

தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, மத்திய மாகாண பிரதம செயலாளர் ஜீ.எச்.எம். பிரேமசிங்க, கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

https://adaderanatamil.lk/news/cmlqnifln0023356ny2r4eci4

  • கருத்துக்கள உறவுகள்

டித்வாவினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சென்ற IMF பிரதானி

படத்தில் எல்லோரும் சந்தோசமாக சிரித்துக் கொண்டு நிற்கிறார்கள்.

அழுகிற மாதிரி நின்றால்தானே… IMF இன்னும் நிறைய காசு கொடுப்பார்கள்.

ஒருவரும்… இந்த “ரெக்னிக்கை” முன்பே சொல்லிக் கொடுக்கவில்லையா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா டித்வா சூறாவளியால் மண்சரிவுக்குள்ளான பகுதிகளில் கண்காணிப்பு விஜயம்

17 Feb, 2026 | 06:17 PM

image

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா, டித்வா சூறாவளி காரணமாக மண்சரிவுக்கு உள்ளான உடபலாத்த பிரதேச செயலகப் பிரிவின் மாவதுர கிராமத்திற்கு இன்று (17) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.

அனர்த்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியான மாவதுர பிரதேசத்தில், ஏராளமான வீடுகள் மண்சரிவுக்கு உள்ளாகி 28 பேர் உயிரிழந்ததுடன் 6 பேர் காணாமல் போயுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடிய ஜோர்ஜிவா, அவர்களுக்கு தனது கவலையைத் தெரிவித்தார். 

WhatsApp_Image_2026-02-17_at_5.48.05_PM_

அனர்த்தத்தின்போது, அரசாங்கம் மேற்கொண்ட விரைவான  நடவடிக்கைகளையும், மக்கள் வெளிப்படுத்திய தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமை உணர்வையும் அவர் மேலும் பாராட்டினார்.

இப்போது இங்கு வாழும் சிறு குழந்தைகள் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக நாளை பெரும் பங்களிப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் இளைய தலைமுறையினரை வலுப்படுத்த  அர்ப்பணிப்புடன் செயல்படும் என்று தாம் நம்புவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளிடம்  கிறிஸ்டலினா ஜோர்ஜிவா குறிப்பிட்டார்.

தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, மத்திய மாகாண  பிரதம செயலாளர் ஜீ.எச்.எம். பிரேமசிங்க, கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2026-02-17_at_5.48.00_PM.

WhatsApp_Image_2026-02-17_at_5.48.01_PM_

WhatsApp_Image_2026-02-17_at_5.48.02_PM.

WhatsApp_Image_2026-02-17_at_5.48.01_PM.

WhatsApp_Image_2026-02-17_at_5.48.04_PM_

WhatsApp_Image_2026-02-17_at_5.48.03_PM.

WhatsApp_Image_2026-02-17_at_5.48.05_PM.

WhatsApp_Image_2026-02-17_at_5.48.06_PM.

https://www.virakesari.lk/article/238898

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

படத்தில் எல்லோரும் சந்தோசமாக சிரித்துக் கொண்டு நிற்கிறார்கள்.

அண்ணை, வள்ளுவர் தந்த குறளை நன்றாக படித்திருக்கிறார்களோ!

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

"இடுக்கண் வருங்கால் நகுக" என்பது திருக்குறள் (621) ஆகும்.

இதன் பொருள்: துன்பம் வரும்போது கலங்காமல், அதை கண்டு சிரித்து மகிழ்ந்து எதிர் கொள்ள வேண்டும். அத்தகைய மன தைரியத்தை விட, துன்பத்தை வெல்லக்கூடிய சிறந்த வழி வேறு எதுவுமில்லை. இது இடுக்கண் அழியாமை அதிகாரத்தைச் சேர்ந்தது.

சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வலு உள்ளது. தமிழ் அரசியல்வாதிகள் யாராவது இவரைச் சந்தித்துப் பேச முயற்சிக்கலாம்.

குறைந்தபட்சம் இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டங்கள் மூலம் சிறுபான்மையினரின் சுதந்திரம் பறிக்கப்படுவதையாவது சுட்டிக் காட்டலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

அண்ணை, வள்ளுவர் தந்த குறளை நன்றாக படித்திருக்கிறார்களோ!

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

"இடுக்கண் வருங்கால் நகுக" என்பது திருக்குறள் (621) ஆகும்.

இதன் பொருள்: துன்பம் வரும்போது கலங்காமல், அதை கண்டு சிரித்து மகிழ்ந்து எதிர் கொள்ள வேண்டும். அத்தகைய மன தைரியத்தை விட, துன்பத்தை வெல்லக்கூடிய சிறந்த வழி வேறு எதுவுமில்லை. இது இடுக்கண் அழியாமை அதிகாரத்தைச் சேர்ந்தது.

இந்தக் குறள் ஜோர்ஜிவாவுக்குத் தெரியுமா ..........! 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

இந்தக் குறள் ஜோர்ஜிவாவுக்குத் தெரியுமா ..........! 🙂

அவவுக்கும் சிலவேளை (திருக்குறள் நிறைய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்காம்) தெரிந்திருக்கலாம் அண்ணை, ஆனால் சிரிக்கும் சிறார்களுக்கு தெரிந்திருக்க சந்தர்ப்பம் குறைவு! அவர்கள் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் என நினைக்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.