Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன் துணைப் பிரதமர் சந்திப்பு : நல்லிணக்கம் மற்றும் நீதியியல் விடயங்கள் குறித்து கலந்துரையாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன் துணைப் பிரதமர் சந்திப்பு : நல்லிணக்கம் மற்றும் நீதியியல் விடயங்கள் குறித்து கலந்துரையாடல்

Published By: Vishnu

18 Feb, 2026 | 06:47 PM

image

(வீ.பிரியதர்சன்)

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லாமி, தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் நேற்று சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் ஆண்ட்றூ பற்றிக் உடனிருந்தார்.

கலந்துரையாடலின் போது நல்லிணக்கம், சர்வதேச நீதியியல் (Transnational Justice), மற்றும் தமிழர் சமூகங்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பிரதிநிதிகளின் குரல்கள் தொடர்ந்து கேட்கப்படுவதை உறுதிப்படுத்துவதிலும், நீதி மற்றும் சமத்துவத்தை முன்னிறுத்துவதிலும், அர்த்தமுள்ள முன்னேற்றத்துக்கு ஆதரவு வழங்குவதிலும் ஐக்கிய இராச்சியம் உறுதியாக இருப்பதாக பிரிட்டன் தரப்பு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் நிலையான நல்லிணக்கமும், சமூக நீதி நடைமுறைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து இருதரப்பினரும் கருத்து பரிமாறிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

WhatsApp_Image_2026-02-18_at_17.06.07.jp

WhatsApp_Image_2026-02-18_at_17.06.01.jp

WhatsApp_Image_2026-02-18_at_17.06.13.jp

https://www.virakesari.lk/article/238989

Edited by ஏராளன்

  • கருத்துக்கள உறவுகள்

எம்பி இல்லை ஆனால் லமிக்கு அருகில் சுமன் நிக்கிறார்.

செயல்(படா) தலைவர் ஓரமாய்😂.

1 hour ago, ஏராளன் said:

image

பார் சிறி போன கூட்டத்தில் மிக்ஸர் இல்லையா..::

அநியாயம்

1 hour ago, ஏராளன் said:

WhatsApp_Image_2026-02-18_at_17.06.07.jp

  • ஏராளன் changed the title to தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன் துணைப் பிரதமர் சந்திப்பு : நல்லிணக்கம் மற்றும் நீதியியல் விடயங்கள் குறித்து கலந்துரையாடல்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்திக்கச் செல்வதும், வடையும் கோப்பியும் அருந்திவிட்டு வருவதும் தான் நாம் காலம் காலமாகச் செய்வது. இதனால் யாருக்கு என்ன இலாபம்?

இங்கிலாந்தும் எதுவும் செய்யப்போவதில்லை, அமெரிக்காவும் செய்யப்போவதில்லை, இந்தியாவும் செய்யப்போவதில்லை. இவ்வாறான சந்திப்புக்கள் எல்லாமே தமிழ்க் கட்சிகள் "நாமும் இருக்கிறோம்" என்பதை தமிழ்ச் சனத்திற்குக் காட்ட நடத்தப்படுபவைதான். இதனால் ஆன பயன் எதுவும் இல்லை.

ஏனென்றால் சிங்களத்தை மீறி, அவர்களை எதிர்த்து தமிழ்க் கட்சிகள் தமது கோரிக்கைகளை வெளிநாடுகளிடம் வைக்கப்போவதுமில்லை, வெளிநாடுகளும் அவற்றைக் கேட்கப்போவதில்லை.

அரசியலில் உதிரிகளாகச் சிதறிக் கிடந்தபடி, பேரினவாதிகளை மடிக்குள் வரவிட்டு விட்டு இன்று வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சென்று பார்த்துப் படமெடுத்துப் போடுவதால் மட்டும் எதுவுமே ஆகிவிடாது.

இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட எவரிடமாவது இதன் மூலம் தமிழினத்திற்குச் சார்பான துரும்பைத்தன்னும் நகர்த்த முடிந்ததா என்று கேளுங்கள். அப்படியில்லை என்றால் எதற்காக இப்படியான சந்திப்புக்களில் கலந்துகொள்கிறீர்கள் என்றாவது கேளுங்கள்.

Edited by ரஞ்சித்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.