Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க ராஜபக்ச முயற்சி – பொன்சேகா குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க ராஜபக்ச முயற்சி – பொன்சேகா குற்றச்சாட்டு

February 19, 2026 9:45 am

விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க ராஜபக்ச முயற்சி – பொன்சேகா குற்றச்சாட்டு

ராஜபக்சக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய அனுமதித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்

எவ்வாறாயினும், இராணுவம் அவர்களை அழிக்க விரும்பியதாகவும், அவர்கள் சரணடைந்திருந்தால், பிரபாகரன் இப்போது வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய வாய்ப்பளிக்கும் வகையில், மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதியுடன் மே 17, 2009 அன்று காலை கலந்துரையாடியதாக பொன்சேகா கூறினார்.

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய அனுமதிப்பது குறித்து, மே 17, 2009 அன்று மாலையில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளருக்கும் சவேந்திர சில்வாவிற்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் ஒரு தொலைபேசி உரையாடலின் காணொளியையும் அவர் இதன் போது வெளியிட்டிருந்தார்.

தொலைபேசி உரையாடலை விளக்கிய பொன்சேகா, ராஜபக்சக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஊடாக விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய அனுமதிக்க கலந்துரையாடினர்.

எனினும், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைய மறுத்ததாகவும், ஆனால் மூன்றாம் தரப்பினரிடம் சரணடைய விரும்பியதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.

எனினும், ராஜபக்சக்கள் விடுதலைப் புலிகள் மூன்றாம் தரப்பினரிடம் சரணடைவதை எதிர்த்ததாகவும், அவர்கள் ராணுவத்திடம் சரணடைய வேண்டும் என்றும் விரும்பியதாகவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

இருப்பினும், விடுதலைப் புலிகள் இராணுவத்திடம் சரணடைய மறுத்ததால் அந்த திட்டம் தோல்வியடைந்தன.

விடுதலைப் புலிகள் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைய ஒப்புக்கொண்டிருந்தால், பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இன்னும் உயிருடன் இருந்திருப்பார்கள். பிரபாகரன் வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார்.

குறிப்பிட்ட நாளில் தான் சீனாவில் இருந்ததாகவும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அசர்வதேச மன்னிப்புச் சபை உடனாக மேற்படி பேச்சுவார்த்தைகள் குறித்து தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும், பொக்சேகா குறிப்பிட்டார்.

மே 17, 2009 அன்று கலந்துரையாடல் நடந்தபோது, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் 400 மீட்டர் பரப்பளவில் சுற்றிவளைக்கப்பட்டனர்.

அடுத்த சில மணி நேரங்களுக்குள் தாம் உயிரிழந்துவிடுவோம் என்பது விடுதலைப் புலிகளுக்குத் தெரியும் என்றும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் காப்பாற்ற விரும்பவில்லை, மாறாக அவர்களை அழிக்கத் திட்டமிட்டிருந்தது என்று பொன்சேகா கூறினார்.

ராஜபக்‌சவின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால், மே 19, 2009 அன்று இராணுவத்தால் விடுதலைப் புலிகளை முற்றிலுமாக ஒழிக்க முடிந்தது என்று சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

https://oruvan.com/rajapaksa-trying-to-force-ltte-leaders-to-surrender-fonseka-alleges/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ராஜபக்சக்கள் விடுதலைப் புலிகள் மூன்றாம் தரப்பினரிடம் சரணடைவதை எதிர்த்ததாகவும், அவர்கள் ராணுவத்திடம் சரணடைய வேண்டும் என்றும் விரும்பியதாகவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

2 hours ago, கிருபன் said:

விடுதலைப் புலிகள் இராணுவத்திடம் சரணடைய மறுத்ததால் அந்த திட்டம் தோல்வியடைந்தன.

2 hours ago, கிருபன் said:

இராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் காப்பாற்ற விரும்பவில்லை, மாறாக அவர்களை அழிக்கத் திட்டமிட்டிருந்தது என்று பொன்சேகா கூறினார்.

ஆமா.... நடேசன், அவருடன் பல போராளிகள், பாதிரியார் அவருடன் சரணடைந்த போராளிகள், பாலச்சந்திரன், பல பொதுமக்கள் யாரிடம் சரணடைந்தனர்? அவர்களை கொன்றது யார்? அவர்கள் என்ன ஆனார்கள்? சரணடைவோரையெல்லாம் கொன்று யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று யார் கட்டளையிட்டது? சர்வதேசம் போரை முடிவுக்கு கொண்டுவர வற்புறுத்தியது, ஆனால் நாம் புலிகளை அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோமென கோத்தாவே பலமுறை சொல்லியிருக்கிறார். இவர் அப்பப்போ தூக்கத்தால் எழும்பியதுபோல் ஒவ்வொரு கதை சொல்வார்.

2 hours ago, கிருபன் said:

குறிப்பிட்ட நாளில் தான் சீனாவில் இருந்ததாகவும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அசர்வதேச மன்னிப்புச் சபை உடனாக மேற்படி பேச்சுவார்த்தைகள் குறித்து தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும், பொக்சேகா குறிப்பிட்டார்.

தெரிவிக்கப்படாமல் எப்படி இவருக்கு எல்லாம் தெரிந்தது? இட்டுக்கட்டினாரா?

3 hours ago, கிருபன் said:

விடுதலைப் புலிகள் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைய ஒப்புக்கொண்டிருந்தால், பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இன்னும் உயிருடன் இருந்திருப்பார்கள். பிரபாகரன் வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார்.

சரத் பொன்சேகாவின் பெரிய பகிடி! போரில் ஈடுபடாத பொதுமக்கள், பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டனர். இராணுவம் விடுதலைப்புலிகளின் தலைவர்களை காப்பாற்ற விரும்பவில்லை என்கிறார், பின்னர் அவர்கள் இராணுவத்திடம் சரணடைந்திருந்தால் அவர்கள் உயிருடன் இருந்திருப்பர், தலைவர் முதலமைச்சராக இருந்திருப்பார் என்கிறார், ராஜபக்சக்கள் விடுதலைப்புலிகளை காப்பாற்ற எண்ணினர், இராணுவத்தினர்தான் அதற்கு எதிராக இருந்து அழித்தனர் என்கிறார். அப்போ, போரில் இறந்தவர்கள், பாலியல் கொலை, சிறுவர் கொலை எல்லாவற்றையும் இராணுவத்தினர்தான் திட்டமிட்டு செய்தனர் என்பதை ஒப்புக்கொண்டு ராஜபக்சக்களை காப்பாற்றுகிறாரா? இவர் என்னதான் சொல்ல வருகிறார்? இவரே இராணுவத்தினரின் போர்க்குற்றத்தை ஏற்றுக்கொள்கிறாரா? சொல்லுங்கள் இன்னும் தளபதியாரே! கேட்கத்தான் எதிர்பார்த்துக்காத்திருக்கிறோம் நாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு அறளை பெயர்ந்த இனவாதி...தன் இருப்பை காட்டிக்கொள்ள எதையும் புலம்பும்

4 hours ago, satan said:

ஆமா.... நடேசன், அவருடன் பல போராளிகள், பாதிரியார் அவருடன் சரணடைந்த போராளிகள், பாலச்சந்திரன், பல பொதுமக்கள் யாரிடம் சரணடைந்தனர்? அவர்களை கொன்றது யார்? அவர்கள் என்ன ஆனார்கள்? சரணடைவோரையெல்லாம் கொன்று யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று யார் கட்டளையிட்டது? சர்வதேசம் போரை முடிவுக்கு கொண்டுவர வற்புறுத்தியது, ஆனால் நாம் புலிகளை அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோமென கோத்தாவே பலமுறை சொல்லியிருக்கிறார். இவர் அப்பப்போ தூக்கத்தால் எழும்பியதுபோல் ஒவ்வொரு கதை சொல்வார்.

தெரிவிக்கப்படாமல் எப்படி இவருக்கு எல்லாம் தெரிந்தது? இட்டுக்கட்டினாரா?

சரத் பொன்சேகாவின் பெரிய பகிடி! போரில் ஈடுபடாத பொதுமக்கள், பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டனர். இராணுவம் விடுதலைப்புலிகளின் தலைவர்களை காப்பாற்ற விரும்பவில்லை என்கிறார், பின்னர் அவர்கள் இராணுவத்திடம் சரணடைந்திருந்தால் அவர்கள் உயிருடன் இருந்திருப்பர், தலைவர் முதலமைச்சராக இருந்திருப்பார் என்கிறார், ராஜபக்சக்கள் விடுதலைப்புலிகளை காப்பாற்ற எண்ணினர், இராணுவத்தினர்தான் அதற்கு எதிராக இருந்து அழித்தனர் என்கிறார். அப்போ, போரில் இறந்தவர்கள், பாலியல் கொலை, சிறுவர் கொலை எல்லாவற்றையும் இராணுவத்தினர்தான் திட்டமிட்டு செய்தனர் என்பதை ஒப்புக்கொண்டு ராஜபக்சக்களை காப்பாற்றுகிறாரா? இவர் என்னதான் சொல்ல வருகிறார்? இவரே இராணுவத்தினரின் போர்க்குற்றத்தை ஏற்றுக்கொள்கிறாரா? சொல்லுங்கள் இன்னும் தளபதியாரே! கேட்கத்தான் எதிர்பார்த்துக்காத்திருக்கிறோம் நாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பரதேசிக்கு வாக்களிக்க சொல்லி மக்களுக்கு வழிகாட்டிய "அவியல் அரசியல் வியாதிகளை" என்ன சொல்லலாம்.

Edited by Sasi_varnam

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.