Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க பசிபிக் கடற்படை தளபதி இலங்கை வருகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிராந்திய ஸ்திரத்தன்மை குறித்து உயர்மட்ட சந்திப்புகள் – அமெரிக்க கடற்படை தளபதி இலங்கை வருகை

Published By: Priyatharshan

19 Feb, 2026 | 04:54 PM

image

( வீ. பிரியதர்சன் )

உலகின் மிகப்பெரிய கடற்படை கட்டளைப்பிரிவுகளில் ஒன்றான அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியான அட்மிரல் ஸ்டீவ் “வெப்” கேலர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியான அட்மிரல் ஸ்டீவ் “வெப்” கேலரை அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.

அவர் இன்று 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு முக்கிய சந்திப்புகளை நடத்த உள்ளார்.

இவ்விஜயத்தின் போது, கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகிய விடயங்கள் தொடர்பாக இலங்கை அரச அதிகாரிகளுடனும், இராணுவத்தின் உயர் அதிகாரிகளுடனும் அட்மிரல் கேலர் கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஒருவரோடொருவர் தொடர்பு கொண்டு இணைந்து இயங்கும் திறன் (Interoperability), மற்றும் பிராந்திய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் கூட்டாண்மை ஆகிய விடயங்களிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/239027

629023060_18559195645034632_362166847824

634579495_1331387289030496_5066681587352

https://www.virakesari.lk/article/239066

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்புச் செயலாளர் சம்பத் தூயகொந்தாவை சந்தித்தார் அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலர்

Published By: Vishnu

19 Feb, 2026 | 07:51 PM

image

( வீ.பிரியதர்சன்)

இறையாண்மையைப் பாதுகாத்து பிராந்தியப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரான (ஓய்வுபெற்ற) எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை, அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலர் வியாழக்கிழமை (19) சந்தித்தார்.

WhatsApp_Image_2026-02-19_at_19.14.38.jp

இந்த சந்திப்பில், நடைமுறை ரீதியிலான இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், இந்தோ-பசிபிக் பிராந்திய ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துதல், கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல் எனும் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.

WhatsApp_Image_2026-02-19_at_19.14.37.jp

மேலும், தொழில்வாண்மைத்துவ திறன்களை வளர்த்தல், நாடுகடந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த செயற்பாடு, பாதுகாப்பான இந்து சமுத்திரத்திற்கான நீண்டகால ஒத்துழைப்பு ஆகிய விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

WhatsApp_Image_2026-02-19_at_19.14.383.j

இச்சந்திப்பு, இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

https://www.virakesari.lk/article/239091

  • கருத்துக்கள உறவுகள்

சிவப்பு கோவண்ம் மெல்ல மெல்ல கிழிகின்றது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை துறைமுக அதிகாரசபை அதிகாரிகளை சந்தித்து பல விடயங்களை ஆராய்ந்தார் அட்மிரல் ஸ்டீவ் கேலர்

Published By: Vishnu

20 Feb, 2026 | 09:49 PM

image

(வீ.பிரியதர்சன் )

அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, பாதுகாப்பு துறையை மட்டுமல்லாது இரு நாடுகளின் பொருளாதாரப் பாதுகாப்பையும் பலப்படுத்தும் வகையில் முன்னேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp_Image_2026-02-20_at_21.23.111.j

கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் வாய்ப்புகளை ஆராய்வதற்காக அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலர், இலங்கை துறைமுக அதிகாரசபை அதிகாரிகளுடன் கொழும்பு துறைமுகத்தில் சந்திப்பு மேற்கொண்டார். 

WhatsApp_Image_2026-02-20_at_21.23.11.jp

இந்த சந்திப்பின் போது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகப் பாதுகாப்பு மற்றும் துறைமுக ஒத்துழைப்பு குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இலங்கை தனது கடற்பரப்பை பாதுகாப்பாக பராமரிப்பதுடன், சர்வதேச தரத்திற்கு ஏற்ப செயல்திறன் மிக்க சரக்கு மாற்று (Transshipment) மையமாகத் தொடர்வது மிக அவசியமானதாக இதன்போது குறிப்பிடப்பட்டது. 

குறிப்பாக, உலகின் மிக முக்கியமான கடல்வழித் தடங்களின் சந்திப்பாக விளங்கும் இலங்கையின் புவியியல் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான துறைமுக செயற்பாடுகள் உறுதி செய்யப்படும் போது, இலங்கையிலும் அமெரிக்காவிலும் வர்த்தகம் சீராக முன்னேறி, வணிக வளர்ச்சி ஏற்பட்டு, வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்கா–இலங்கை பங்காண்மை, வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை மற்றும் பரஸ்பர நன்மை ஆகிய அடிப்படைகளில் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இந்த ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.South Asians & Diaspora

இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.

https://www.virakesari.lk/article/239190

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலரின் கொழும்பு விஜயம் – இருநாட்டு ஒத்துழைப்பில் புதிய கட்டம்

Published By: Vishnu

20 Feb, 2026 | 10:02 PM

image

(வீ.பிரியதர்சன்)

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கிய கடல் வழித்தட சந்திப்பில் அமைந்துள்ள இலங்கை மற்றும் அமெரிக்கா இடையிலான நீடித்த பாதுகாப்புப் பங்காண்மை மேலும் வலுப்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp_Image_2026-02-19_at_19.14.37.jp

அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலர் மேற்கொண்டுள்ள கொழும்பு விஜயம், இருநாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு வெறும் பாதுகாப்பு தொடர்பானதாக மட்டுமன்றி, பொருளாதாரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகிய பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாக விரிவடைந்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.

WhatsApp_Image_2026-02-19_at_19.14.38.jp

உலக வர்த்தகத்தின் பெரும்பகுதி கடல் வழியாக நடைபெறும் நிலையில், முக்கிய கடல் வழித்தடங்களின் பாதுகாப்பு இருநாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

கடல் வழித்தடங்களைப் பாதுகாப்பதன் மூலம், தடையற்ற வர்த்தகம், முதலீட்டு வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இது இலங்கை பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய ஆதாரமாக அமைகிறது.

இந்த கூட்டாண்மை, தனது கடற்பரப்பையும் தேசிய எல்லைகளையும் பாதுகாப்பதற்கான இலங்கையின் திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.

இலங்கை தனது தேசிய நலன்களைப் பாதுகாக்கும் திறனை வலுப்படுத்த அமெரிக்கா தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது இராணுவ துறையை மட்டுமன்றி, பேரிடர் மேலாண்மை மற்றும் அவசரகால பதிலளிப்பு நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாகும்.

அமெரிக்காவின் மொன்டானா தேசிய காவற் படை வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவு, இலங்கையின் பேரிடர் தயார்நிலையை மேம்படுத்த உதவியுள்ளது. குறிப்பாக, சமீபத்தில் தாக்கம் செலுத்திய ‘டிட்வா’ சூறாவளி காலத்தில் இருநாடுகளும் இணைந்து மேற்கொண்ட பதிலளிப்பு நடவடிக்கைகள், இந்த ஒத்துழைப்பின் பலத்தைக் காட்டியதாக கூறப்படுகிறது.

இருநாடுகளும் இணைந்து, ஸ்திரமான, அமைதியான மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ளன.

கடல் பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் பேரிடர் எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றில் வலுவான கூட்டாண்மை, பிராந்திய அமைதிக்கும் நீடித்த வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது என அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/239191

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி - இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்தார்

Published By: Priyatharshan

21 Feb, 2026 | 02:32 PM

image

( வீ. பிரியதர்சன் )

அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலர் தலைமையிலான குழுவினருக்கும், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவுக்கும் இடையில் இடம்பெற்ற இரவு விருந்துபசார நிகழ்வின் போது இரு தரப்பு கடற்படை உறவுகளை வலுப்படுத்தும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வின் போது, இலங்கைக் கடற்படைக்காக சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட DECISIVE P628 (ex-USCG Cutter) கப்பலின் கட்டளை அதிகாரி கயான் விக்கிரமசூரியவுக்கு வீடியோ அழைப்பும் மேற்கொள்ளப்பட்டது.

WhatsApp_Image_2026-02-21_at_14.02.43.jp

WhatsApp_Image_2026-02-21_at_14.02.43__1

துறைமுகத்திலிருந்து புதிய பயணத்தை ஆரம்பிக்கவிருந்த கப்பலின் குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலர் “நல்ல காற்று, பின்தொடரும் கடல் அலைகள் மற்றும் பாதுகாப்பான தாயகம் திரும்பும் பயணம் அமையட்டும்” என கப்பல் கட்டளை அதிகாரிக்கும் குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

இலங்கைக் கடற்படை மற்றும் அமெரிக்க பசிபிக் கடற்படைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு முக்கியமானதாக அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடல்சார் பாதுகாப்பு, பயிற்சி பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் தொடர்ந்தும் இணைந்து செயற்பட்டு வருகின்றன.

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக கடந்த 19 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த அமெரிக்க பசிபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலர், நேற்று வெள்ளிக்கிழமை ( 20) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

அதன்படி, அட்மிரல் ஸ்டீவ் கேலருக்கு பாரம்பரிய கடற்படை மரியாதை அளிக்கப்பட்டு கடற்படை தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்டதை தொடர்ந்து, கடற்படைத் தளபதிக்கும் அட்மிரல் ஸ்டீவ் கேலருக்கும் இடையே கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் ஒத்துழைப்பு மற்றும் இயங்குதன்மையை மேம்படுத்துதல் உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து மூலோபாய அளவிலான கலந்துரையாடல் நடைபெற்றது.

கடல்சார் பாதுகாப்பு மற்றும் நிலையான கடல்சார் மண்டலத்தை உறுதி செய்வதற்கான இலங்கை கடற்படையின் பங்கு மற்றும் தயார்நிலை குறித்தும், கடலின் சட்டபூர்வ பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான கூட்டு அணுகுமுறையுடன் பணியாற்றுவதற்கான இலங்கை கடற்படையின் அர்ப்பணிப்பு குறித்தும் அமெரிக்க பசிபிக் கடற்படையின் தளபதிக்கு விளக்கப்பட்டது.

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் கடற்படை தலைமை அதிகாரி உட்பட கடற்படைத் தலைமையகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகளும் பரிமாறப்பட்டன. 

WhatsApp_Image_2026-02-20_at_18.15.45.jp

WhatsApp_Image_2026-02-20_at_18.15.47__1

WhatsApp_Image_2026-02-20_at_18.15.46.jp

WhatsApp_Image_2026-02-20_at_18.15.47.jp

WhatsApp_Image_2026-02-20_at_18.15.48.jp

WhatsApp_Image_2026-02-20_at_18.15.49.jp

WhatsApp_Image_2026-02-20_at_18.15.49__1

WhatsApp_Image_2026-02-20_at_18.15.50.jp

WhatsApp_Image_2026-02-20_at_18.15.51.jp

WhatsApp_Image_2026-02-20_at_18.15.51__1

WhatsApp_Image_2026-02-20_at_18.15.52.jp

WhatsApp_Image_2026-02-20_at_18.15.52__1

https://www.virakesari.lk/article/239229

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.