Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமான நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! கண் கலங்க வைத்த தம்பதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! கண் கலங்க வைத்த தம்பதி

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை இடம்பெற்ற சம்பவம் அங்கிருந்த பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டிற்கு வேலைக்காக சென்ற தனது கணவன், 5 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்பும் நிலையில் அவரை வரவேற்பதற்காக அவரது மனைவி மலர்க்கொத்துடன் விமான நிலையத்தில் காத்திருந்துள்ளார்.

இதன் போது விமான நிலையத்தை வந்தடைந்த தனது கணவரை கண்டதும் ஓடிச் சென்று அவரைக் கட்டிப்பிடிக்க முயன்றார். ஆனால், எதிர்பாராத விதமாக கணவர் அவரைத் தள்ளிவிட்டு, தன்னிடம் வரவேண்டாம் எனவும் தள்ளி நிற்குமாறு என்று சத்தமிட்டுள்ளார்.

பயணிகள் குழப்பம்

தனது மனைவியை மதிக்காமல் கணவன் நடந்துகொள்வதாக அங்கிருந்த பயணிகள் குழப்பம் அடைந்தனர். இதன் போது கணவன் தான் அணிந்திருந்த பெரிய கோட்டைக் கழற்றியுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! கண் கலங்க வைத்த தம்பதி | Emotional Incident At Bia

அப்போது இயந்திரத்தில் சிக்கி அவரது இடது கை முழங்கையோடு துண்டிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

நாட்டை விட்டு போகும்போது ஒரு முழு மனிதனாகப் போனேன், ஆனால் இன்று ஒரு ஊனமுற்றவனாகத் திரும்புகிறேன். எனக்கு இப்போது வேலையில்லை, நான் உனக்கு ஒரு சுமை. என்னை விட்டுவிடு” என கணவர் கீழே அமர்ந்து கதறி அழுததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கணவனின் நிலையைக்கண்டு அவரது மனைவி மற்ற கையைப் பற்றிக்கொண்டுள்ளார். நான் உங்கள் கைகளை திருமணம் செய்யவில்லை, உங்களைத்தான் திருமணம் செய்தேன். உங்களால் வேலை செய்ய முடியாவிட்டாலும், நான் கூலி வேலை செய்தாவது உங்களை பார்த்துக்கொள்வேன். என்னை விட்டுப் பிரிந்து போக வேண்டாம் என கூறிய சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளதாக அந்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/emotional-incident-at-bia-1771635198

  • கருத்துக்கள உறவுகள்

இதுஒரு சங்கடமான தருணம்தான் .......எனக்கும்கூட சவுதியில் காலை இழக்கும் நிலையில் ஒரு விபத்து ஏற்பட இருந்து நூலிழையில் தப்பினேன் ........!

அந்தக் குடும்பம் நன்றாக வாழ வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ........!

  • கருத்துக்கள உறவுகள்

இயந்திரத்தில் சிக்கி கை துண்டிக்கப்பட்ட தொழிலாளியை எந்த நஷ்ட தொகையும் கொடுக்காமல் இலங்கைக்கு அனுப்பி வைத்த அந்த அல்லாவின் சட்டம் ஆட்சி செய்கின்ற நாட்டை பெயர் குறிப்பிடாமல் காப்பாற்றி தமிழ் பத்திரிக்கையின் மத நல்லிணக்கம் புல்லு அரிக்குது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.