Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது

23 Feb, 2026 | 09:47 AM

image

அமெரிக்காவின் நியூயோர்க் நகரைத் தாக்கியுள்ள மிக மோசமான பனிப்புயல் காரணமாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு 9:00 மணி முதல் அந்த நகரம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

நகரிலுள்ள அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் புகையிரதப் பாதைகள் மூடப்பட்டுள்ளன.

பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் விமானப் போக்குவரத்துக்கள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. அவசர சேவைகளைத் தவிர ஏனைய அனைத்துப் பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினர், அத்தியாவசிய சேவையாளர்கள் மற்றும் அனர்த்த நிவாரணப் பிரிவினரின் வாகனங்களைத் தவிர, ஏனைய தனியார் வாகனங்கள் வீதிகளில் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க் நகர மேயர் சொஹ்ரான் மம்தாணி விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தி, மக்கள் அனைவரும் தங்களது பயணங்களைத் தவிர்த்து வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பனிப்புயல் இன்று திங்கட்கிழமை மாலை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தரைமட்டத்திலிருந்து சுமார் இரண்டு அடி உயரத்திற்குப் பனிப்பொழிவு இருக்கும் என்றும், இத்தகையதொரு பாரிய பனிப்புயல் பல ஆண்டுகளுக்குப் பின்னரே ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/239349

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே ஒன்றரை அடி பனி கொட்டிக் கிடக்கிறது.

காற்று 55 மைல் வேகத்தில் வீசுகிறது.

நிலமை மிகவும் மோசமாகவே உள்ளது.

பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

வழமையில் இந்த காலங்களில் நியூயோர்க்கில் நிற்பதில்லை.

அடுத்தடுத்து 3-4 நாட்களுக்கும் பனிபொழிவு என்று காட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே ஒன்றரை அடி பனி கொட்டிக் கிடக்கிறது.

காற்று 55 மைல் வேகத்தில் வீசுகிறது.

நிலமை மிகவும் மோசமாகவே உள்ளது.

பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

வழமையில் இந்த காலங்களில் நியூயோர்க்கில் நிற்பதில்லை.

அடுத்தடுத்து 3-4 நாட்களுக்கும் பனிபொழிவு என்று காட்டுகிறார்கள்.

அவதானமாக இருங்கள் அய்யனே...வெளியில் போக வேண்டாம் ...கிரிக்கட்டை பாருங்கள் ... யாழில் கிறுக்குங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே ஒன்றரை அடி பனி கொட்டிக் கிடக்கிறது.

காற்று 55 மைல் வேகத்தில் வீசுகிறது.

நிலமை மிகவும் மோசமாகவே உள்ளது.

பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

வழமையில் இந்த காலங்களில் நியூயோர்க்கில் நிற்பதில்லை.

அடுத்தடுத்து 3-4 நாட்களுக்கும் பனிபொழிவு என்று காட்டுகிறார்கள்.

கவனம் அண்ணா...........

இது என்ன அங்கு இப்படி அடித்துக் கொட்டுகின்றது. இங்கு மேற்குப் பக்கம் நல்ல காலநிலை அண்ணா, ஆனால் நீங்கள் அங்கே கிழக்கில் நின்று விட்டீர்கள்............

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே ஒன்றரை அடி பனி கொட்டிக் கிடக்கிறது.

காற்று 55 மைல் வேகத்தில் வீசுகிறது.

நிலமை மிகவும் மோசமாகவே உள்ளது.

பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

வழமையில் இந்த காலங்களில் நியூயோர்க்கில் நிற்பதில்லை.

அடுத்தடுத்து 3-4 நாட்களுக்கும் பனிபொழிவு என்று காட்டுகிறார்கள்.

இனிமேல்… வின்ரர் காலங்களில், நியூயோர்க்கில் நிற்பதை தவிருங்கள் ஈழப்பிரியன். நில்மினியின் இடத்தில்… ஒரு கிழமையாக வெளியே செல்ல முடியாத அளவிற்கு பனி கொட்டி இறுகி விட்டதாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.