Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

"இது 300 மனித உயிர்களைப் பலிகொண்ட ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகும். இவர்களில் பெரும்பான்மையானோர் உயிர்த்த ஞாயிறுத் திருப்பலியில் கலந்துகொள்ளச் சென்றவர்கள். உயிரிழந்தவர்களில் அனைத்து மதங்களையும், அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்களும் உள்ளனர். இது ஒரு படுகொலையாகும்.

இதன் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிவது என்பது, இந்நாட்டில் சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை எவரும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு விடயமாகும். அவ்வாறு இல்லாவிட்டால், சிலர் சட்டத்திற்குப் பயப்படுவதில்லை என்பதே அதன் பொருளாகும். ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு மறைந்திருக்க முடியும் என்பது உறுதியாகிறது. எனவே, குற்றங்கள் செய்வதற்குப் பயமின்மை என்பது இதன் மூலம் நிரூபிக்கப்படுகிறது. இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவோரையும், கைது செய்யப்படுவதற்குப் பல்வேறு வியாக்கியானங்களை அளிப்போரையும் பார்க்கும் போது புரிகிறது, அவர்களின் பின்னணியில் உள்ள நிகழ்ச்சி நிரல் என்னவென்று. எனவே இதனை அரசியலாக்க வேண்டிய அவசியமில்லை. இது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுக்கும் ஒரு சுயாதீனமான விசாரணையாகும். அந்த விசாரணைகளைச் சுயாதீனமாக முன்னெடுக்க இடமளிப்பதே சிறந்தது.

அவ்வாறின்றி இந்த விசாரணைகளைக் குழப்புவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை, இத்தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழைக்கப்படும் அநீதியாகவே நாம் பார்க்கிறோம். எனவே, நாம் அனைவரிடமும் கேட்டுக்கொள்வது என்னவென்றால், இந்த விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம். இந்த விசாரணைகள் தொடர வேண்டும். இவ்விசாரணைகள் மூலம் ஏதேனும் ஒரு பலன் கிடைக்கும் என நாம் நம்புகிறோம்.

இதன் மூலம், பலர் பேசுகின்ற அரசியல் சதியொன்று இருந்ததா இல்லையா என்பதையும், அவ்வாறு இருந்திருந்தால் அதனைச் செய்தது யார்? இத்தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது? போன்ற விடயங்களை நாம் கட்டாயம் கண்டறிய வேண்டும். அதற்கு எவரேனும் இடையூறு விளைவிப்பார்களாயின், அதனைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகச் செய்யப்படும் ஒரு மாபெரும் குற்றமாகவே நாம் கருதுகிறோம். எனவே, தயவுசெய்து இந்த விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல இடமளித்து, பொறுமையுடன் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்."

No image preview

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு இடையூறு செய்ய வேண்டாம்: அருட்தந்தை சிறில் காமினி பகிரங்க வேண்டுகோள்!

26 Feb, 2026 | 12:35 PM

image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது இடையூறு விளைவிக்கவோ வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை  (26) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த பயங்கரவாத தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகின. உயிரிழந்தவர்களில் அனைத்து மதத்தவர்களும், அனைத்து இனத்தவர்களும் அடங்குவர். இது ஒரு திட்டமிட்ட மனிதப்படுகொலை. இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை கண்டறிவது என்பது, இந்த நாட்டில் சட்டம் சரியாகச் செயற்படுகின்றது என்பதை உறுதிப்படுத்தும் ஒரு விடயமாகும். அவ்வாறு உண்மை கண்டறியப்படாவிட்டால், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியும் என்ற அச்சமற்ற நிலை உருவாகும்.

புலனாய்வுப் பிரிவு முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் கைது மற்றும் தற்போதைய விசாரணைகளுக்கு பல்வேறு தரப்பினர் தமக்குச் சாதகமான வியாக்கியானங்களை அளித்து வருகின்றனர்.

இவர்களின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பது தெளிவாகத் தெரிகிறது. இது குற்றப் புலனாய்வுத் திணைக்களம்  முன்னெடுக்கும் சுதந்திரமான விசாரணை. எனவே, இதனை அரசியல் மயமாக்காமல் விசாரணைகளை அதன் போக்கில் முன்னெடுக்க இடமளிக்க வேண்டும்.

விசாரணைகளைக் குழப்ப முயற்சிப்பதானது, இத்தாக்குதலில் உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும்.

மக்கள் அனைவரும் பொறுமையுடன் காத்திருந்து உண்மைகள் வெளிவர ஒத்துழைக்க வேண்டும். இதன் பின்னணியில் அரசியல் சதி இருந்ததா? அவ்வாறு இருந்தால் அதற்குப் பொறுப்பானவர்கள் யார்? என்பது நிச்சயம் கண்டறியப்பட வேண்டும். யாராவது இதற்குத் தடையாக இருந்தால், அதனை பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகச் செய்யப்படும் மற்றுமொரு குற்றமாகவே நாம் கருதுவோம். எனவே, புலனாய்வுப் பிரிவினர் தமது பணிகளைச் சுதந்திரமாக முன்னெடுக்க அனைவரும் இடமளிக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

https://www.virakesari.lk/article/239620

  • கருத்துக்கள உறவுகள்

விசாரணையை குழப்புபவர்கள் சந்தேக நபர்களை விசாரிக்கும்போது ஏன் குழம்புகிறார்கள்? அவர்கள் குற்றவாளிகள் இல்லையென்றால், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க உங்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டதே, அப்போது ஏன் கண்டுபிடிக்கவில்லை? இப்போ ஏன் தடைஏற்படுத்துகிறார்கள்? குற்றவாளி தண்டிக்கப்படக்கூடாது என்றா, விசாரணை நடைபெறக்கூடாது என்றா, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கக்கூடாது என்றா, இனிமேலும் இப்படியான குற்றங்கள் நிகழ்வதை தடுக்கக்கூடாது என்றா? தடை ஏற்படுத்துபவர்களையும் கைது செய்து விசாரிக்க வேண்டும். குறிப்பிட்ட நபர் செய்யவில்லை என்றால், உண்மையான குற்றவாளியை இவர்களுக்கு தெரியும், அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டியது இவர்களின் கடமை. அல்லது சட்டம் தன் கடமையை செய்ய வழிவிட வேண்டும்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.