Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்களை திருடிய சிறுமிகள் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MediaFile-21-2.jpeg?resize=750%2C375&ssl

சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்களை திருடிய சிறுமிகள் கைது!

களுத்துறை வர்ணத் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து, அங்கிருந்த சுமார் 40,000 ரூபா பெறுமதியான டொபிகள் மற்றும் சொக்லேட்டுகளைத் திருடிய குற்றச்சாட்டில் மூன்று சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தினேஷ் சில்வா தலைமையிலான குழுவினர் முன்னெடுத்த விசாரணைகளின் போதே இந்தச் சிறுமிகள் அடையாளம் காணப்பட்டனர்.
அப்பகுதியில் உள்ள சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார், குறித்த சிறுமிகள் தங்கியிருந்த சிறுவர் இல்லத்திலேயே மறைத்து வைக்கப்பட்டிருந்த டொபிகள், சொக்லேட்டுகள், லொலிபொப்கள் மற்றும் சுயிங்கம் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த சிறுமிகள் தங்கியிருந்த சிறுவர் இல்லத்தின் சாவியைத் திருடிவிட்டு, அதிகாலை 1.30 மணியளவில் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். பின்னர் விளையாட்டரங்க சிற்றுண்டிச்சாலையின் முன் பக்க கண்ணாடியைத் தடியால் அடித்து உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த இனிப்பு வகைகளை பொலித்தீன் பைகளில் நிரப்பிக்கொண்டு மீண்டும் சிறுவர் இல்லத்திற்குச் சென்று அவற்றை மறைத்து வைத்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட சிறுமிகள் 13, 14 மற்றும் 15 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் இவ்வாறான திட்டமிட்ட கொள்ளையில் ஈடுபட்டமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://athavannews.com/2026/1466375

  • கருத்துக்கள உறவுகள்

பலே பலே...

ஜேவிபி சட்டம் ஒழுங்கை சொன்னபடி நிலைநிறுத்துகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, goshan_che said:

பலே பலே...

ஜேவிபி சட்டம் ஒழுங்கை சொன்னபடி நிலைநிறுத்துகிறார்கள்.

பொலிஸ் குழுவினர்… மிகுந்த சிரமப் பட்டு இந்தக் குற்றவாளிகளை கண்டு பிடித்தமைக்கு, பதவி உயர்வு கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

பொலிஸ் குழுவினர்… மிகுந்த சிரமப் பட்டு இந்தக் குற்றவாளிகளை கண்டு பிடித்தமைக்கு, பதவி உயர்வு கொடுக்க வேண்டும்.

😂 ஏதோ பெரிய போதை கும்பலை பிடித்த மாதிரி டொபிகளை வைத்து கொண்டு போஸ் கொடுத்து போட்டோ வேற…

40,000 என்பதும் பொய்யாகவே இருக்கும். அதுகள் கொஞ்சத்தை எடுக்க, மிச்சம் எல்லாத்தையும் பெரியவர்கள் எடுத்து போட்டு கணக்கு காட்டுகிறார்கள் என நினைக்கிறேன்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

😂 ஏதோ பெரிய போதை கும்பலை பிடித்த மாதிரி டொபிகளை வைத்து கொண்டு போஸ் கொடுத்து போட்டோ வேற…

40,000 என்பதும் பொய்யாகவே இருக்கும். அதுகள் கொஞ்சத்தை எடுக்க, மிச்சம் எல்லாத்தையும் பெரியவர்கள் எடுத்து போட்டு கணக்கு காட்டுகிறார்கள் என நினைக்கிறேன்.

MediaFile-21-2.jpeg?resize=750%2C375&ssl

பொலிஸ் காரருக்கும்... 🍬டொபி🍡, 🍫 சொக்லேட் 🍭

சாப்பிடுகிற பிள்ளைகள் இருக்கும் தானே. 😜

அதுகளும் பாவம் இல்லையா. 😋 😛

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

படரவேண்டிய இடத்தில் படராமல் தவறான இடத்தில் தவறாகப் படர்ந்த முல்லைச் செடிக்கு தன் தேரையே கொடுத்தான் காவலன் பாரி வள்ளல் அன்று.

இனிப்பு உண்ணும் ஆசையால் இனிப்பைத் திருடித் தவறுசெய்த இளம் முல்லைகளைக் கைதுசெய்து படம்காட்டுகிறது காவல்துறை இன்று.😲

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.