Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-2-10.jpg?resize=750%2C375&ss

போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!

மத்திய கிழக்கு முழுவதும் எண்ணெய் மற்றும் போக்குவரத்து வசதிகள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்திய ஈரான், ஈராக் கடலில் இரண்டு டேங்கர்களை தீ வைத்து எரித்தது. 

அமெரிக்கா ஏற்கனவே போரில் வெற்றி பெற்றுவிட்டது என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கூற்றை மீறி, பீப்பாய்க்கு $200க்கு எண்ணெய் வாங்க உலகம் தயாராக இருக்க வேண்டும் என்றும் தெஹ்ரான் எச்சரித்தது.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு வான்வழித் தாக்குதல்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்தப் போர், இதுவரை சுமார் 2,000 பேரைக் கொன்றுள்ளதுடன், உலகளாவிய எரிசக்தி சந்தைகளையும் போக்குவரத்தையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்த மோதல் மத்திய கிழக்கு முழுவதும் பரவியுள்ளதுடன், 1970 களுக்குப் பின்னர் ஏற்பட்ட மோசமான எரிபொருள் அதிர்ச்சிகளில் ஒன்றைத் தணிக்க மூலோபாய எண்ணெய் இருப்புக்களை சாதனை அளவில் வெளியிடுவதற்கான திட்டங்களைத் தூண்டியுள்ளது.

இதனிடைடேய அண்மைய மோதலினால் 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள்/குழந்தைகள் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்கள் நிதியம் (UNICEF), தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நவம்பர் இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக கென்டக்கியில் புதன்கிழமை (12) நடந்த பிரச்சார பாணி பேரணியில் டொனால் ட்ரம்ப், அமெரிக்கா போரில் வெற்றி பெற்றதாக கூறினார்.

வாரத்தின் தொடக்கத்தில் பீப்பாய்க்கு சுமார் $120 ஆக உயர்ந்து பின்னர் $90 ஆக நிலைபெற்ற எண்ணெய் விலை, புதன்கிழமை கிட்டத்தட்ட 5% உயர்ந்தது.

வால் ஸ்ட்ரீட்டின் முக்கிய பங்கு குறியீடுகள் சரிந்தன, ஆசியாவில் பங்குகளும் வீழ்ச்சி கண்டன.

இவ்வாறான நிலையில் ஈரான் நீண்டகால பொருளாதார அதிர்ச்சியை ஏற்படுத்த விரும்புவதாக தெளிவுபடுத்தியுள்ளது.

ஈரானின் இராணுவ கட்டளையின் செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை அமெரிக்காவை நோக்கி, பீப்பாய்க்கு $200க்கு எண்ணெய் வாங்க உலகம் தயாராக இருக்க வேண்டும், ஏனெனில் எண்ணெய் விலை எமது பிராந்திய பாதுகாப்பைப் பொறுத்தது, அதை நீங்கள் நிலைகுலைத்துவிட்டீர்கள் என்று கூறினார்.

ஈரானிய வெடிபொருட்கள் நிறைந்த படகுகள் ஈராக்கிய நீரில் இரண்டு எரிபொருள் டேங்கர்களைத் தாக்கியதாகத் தெரிகிறது.

வளைகுடா நீரில் மூன்று வணிகக் கப்பல்களைத் தாக்கிய பின்னர் அவை தீப்பிடித்து எரிந்தன.

இதில், ஒரு பணியாளர் கொல்லப்பட்டதாக துறைமுக அதிகாரிகள், கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஆபத்து நிறுவனங்கள் வியாழக்கிழமை (12) தெரிவித்தன.

இது தவிர ஈரான் பஹ்ரைனின் முஹாரக்கில் உள்ள ஒரு நிலையத்தில் உள்ள எரிபொருள் தொட்டிகளையும் குறிவைத்ததாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம், முக்கிய எண்ணெய் நுகர் நாடுகளைக் கொண்ட சர்வதேச எரிசக்தி நிறுவனம், புதன்கிழமை, 1970 களுக்குப் பின்னர் ஏற்பட்ட மோசமான எண்ணெய் அதிர்ச்சிகளில் ஒன்றைத் தணிக்க, உலகளாவிய மூலோபாய இருப்புக்களில் இருந்து 400 மில்லியன் பீப்பாய்களை விடுவிக்க பரிந்துரைத்தது – இது வரலாற்றில் மிகப்பெரிய தலையீடு ஆகும்.

இவ்வாறான பின்னணியில் அமெரிக்கா தனது மூலோபாய பெட்ரோலிய இருப்பிலிருந்து 172 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை விடுவிப்பதாகக் கூறியுள்ளது. 

திட்டமிடப்பட்ட வெளியேற்ற விகிதங்களின் அடிப்படையில் இது வழங்க சுமார் 120 நாட்கள் ஆகும் என்று அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

A 'tanker war' with Iran would be more complicated than the 1980s version -  Los Angeles Times

https://athavannews.com/2026/1468065

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு

தம்பரின் உலகு தனி உலகு…

அங்கே கச்சா எண்ணை பரலுக்கு 40 டொலர் போகிறது😂

தெஹ்ரானில் சிங்க கொடி பறக்கிறது…😂

தம்பருக்கு நோபல் பரிசை கமிட்டி அறிவிக்கிறது😂

ஏதோ இஸ்ரேல் காரன் கூட போயிருக்கிறான் எண்டது மட்டும்தான் ஒரே நம்பிக்கை.

இல்லாட்டில் தம்பரும், வான்சும், ஹெக்செத்தும், ரூபியோவும் சேர்ந்து…அமெரிக்காவின் கோவணத்தையே முல்லாக்கள் கையில் கொடுத்து விடுவார்கள் 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!

2 minutes ago, goshan_che said:

தம்பரின் உலகு தனி உலகு…

அங்கே கச்சா எண்ணை பரலுக்கு 40 டொலர் போகிறது😂

தெஹ்ரானில் சிங்க கொடி பறக்கிறது…😂

தம்பருக்கு நோபல் பரிசை கமிட்டி அறிவிக்கிறது😂

ஏதோ இஸ்ரேல் காரன் கூட போயிருக்கிறான் எண்டது மட்டும்தான் ஒரே நம்பிக்கை.

இல்லாட்டில் தம்பரும், வான்சும், ஹெக்செத்தும், ரூபியோவும் சேர்ந்து…அமெரிக்காவின் கோவணத்தையே முல்லாக்கள் கையில் கொடுத்து விடுவார்கள் 😂

1739832751603?e=2147483647&v=beta&t=z7Rz

அதை ஈரான்காரன் தான் சொல்ல வேண்டும். 😂

போரை தொடங்கியது... அமெரிக்காவாக இருக்கலாம்...

அதை முடித்து வைப்பதை ஈரான்தான் முடிவு செய்யும் என்று முன்பு குறிப்பிட்டு இருந்தார்கள்.

சந்தடி சாக்கில்... "ட்றம்பு", நைசாக நழுவ பார்க்கிறான். 🤣

பாவம்... இஸ்ரேல், ஈரானிடம் சணல் அடி வாங்கிக் கொண்டு இருக்குது.

அமெரிக்கன் தரைப் படையை அனுப்புறது என்று, "பீலா" விட்டுட்டு,

"எஸ்கேப்" ஆகிறான். அவனை விடாதீங்க. animiertes-gefuehl-smilies-bild-0090.gif

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

1739832751603?e=2147483647&v=beta&t=z7Rz

அதை ஈரான்காரன் தான் சொல்ல வேண்டும். 😂

போரை தொடங்கியது... அமெரிக்காவாக இருக்கலாம்...

அதை முடித்து வைப்பதை ஈரான்தான் முடிவு செய்யும் என்று முன்பு குறிப்பிட்டு இருந்தார்கள்.

சந்தடி சாக்கில்... "ட்றம்பு", நைசாக நழுவ பார்க்கிறான். 🤣

பாவம்... இஸ்ரேல், ஈரானிடம் சணல் அடி வாங்கிக் கொண்டு இருக்குது.

அமெரிக்கன் தரைப் படையை அனுப்புறது என்று, "பீலா" விட்டுட்டு,

"எஸ்கேப்" ஆகிறான். அவனை விடாதீங்க. animiertes-gefuehl-smilies-bild-0090.gif

தம்பருக்கு மூக்கை உடைக்கத்தான் வேண்டும்…

ஆனால் தம்பரும் அமெரிக்க சண்டித்தனமும், தடிமன் மாதிரி…கொஞ்ச நாளில மாறிடும். பிறகு வரும் போகும் ஆனால் உயிரை எடுக்காது.

ஆனால் அடிப்படைவாத முல்லாக்கள் கான்சர் மாதிரி…வெட்டா விட்டால் உயிராபத்து.

கூடவே இவர்கள் பிடியில் இருந்து விடுபட அடிக்கடி போராடி, மிருகதனமாக நசுக்கப்படும் ஈரானியர்களுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு.

ஆகவே இதில் முல்லாக்கள் தோற்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, தமிழ் சிறி said:

அதை ஈரான்காரன் தான் சொல்ல வேண்டும். 😂

போரை தொடங்கியது... அமெரிக்காவாக இருக்கலாம்...

அதை முடித்து வைப்பதை ஈரான்தான் முடிவு செய்யும் என்று முன்பு குறிப்பிட்டு இருந்தார்கள்.

சந்தடி சாக்கில்... "ட்றம்பு", நைசாக நழுவ பார்க்கிறான். 🤣

பாவம்... இஸ்ரேல், ஈரானிடம் சணல் அடி வாங்கிக் கொண்டு இருக்குது.

அமெரிக்கன் தரைப் படையை அனுப்புறது என்று, "பீலா" விட்டுட்டு,

"எஸ்கேப்" ஆகிறான். அவனை விடாதீங்க. animiertes-gefuehl-smilies-bild-0090.gif

உடையார்ரை திருவிழாவில ஆரோ ஒருத்தன் வெடி கொழுத்தி வாணம் விட்டானாம் எண்ட மாதிரி.....அமெரிக்க-ஈரான் திருவிழாவில சீனா புகுந்து விளையாடுது போல கிடக்கு.....சீனாவும் தன்ர விளையாட்டு சாமான் எல்லாத்தையும் ரெஸ்ற் பண்ணி பாக்குது போல.....🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.