Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘குடி’யை நிறுத்திவிட்டேன் - சாஹல் ‘ஓபன் டாக்’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘குடி’யை நிறுத்திவிட்டேன் - சாஹல் ‘ஓபன் டாக்’

hindutamil-prod%2F2026-03-19%2F7lxuw5kq%

யுவேந்திர சாஹல்

ஆர்.முத்துக்குமார்

Updated on: 19 Mar 2026, 11:45 am

1 min read

இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட லெக் ஸ்பின்னர் யுவேந்திர சாஹல் தன் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள், குடிபோதை அவதி போன்றவை பற்றி மனம் திறந்துள்ளார். மதுபான பழக்கத்தை முழுமையாக கைவிட்டது தனது உடல் மற்றும் மனநிலைக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

2023 முதல் ஐபிஎல் தொடரில் 172 போட்டிகளில் 221 விக்கெட்டுகளுடன் ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான பவுலராகத் திகழ்கிறார் யுவேந்திர சாஹல்.

2005 ஆஷஸ் தொடரை இழந்த பிறகு கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் ‘ஆல்கஹால் எனக்குப் பெரிய பிரச்சனை தான்’ என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். அது போன்ற ஒரு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் மனநிலை துணைக்கண்டத்தின் வீரர்களுக்குக் கிடையாது, இப்பகுதி சமூகம், கலாச்சாரம் அத்தகைய ஏற்புடைமை கொண்டதல்ல.

2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சாஹல், இறுதிப்போட்டியில் பட்டத்தை வெல்ல முடியாதது இன்னும் மனதில் ஏமாற்றமாக இருப்பதாக தெரிவித்தார். அந்தப் போட்டியில் ஆர்சிபி அணியிடம் குறைந்த வித்தியாசத்தில் தோல்வியடைந்தது மன வருத்தத்தை அளிக்கிறது என்றார்.

அந்த இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க இடது கை வேகப்பந்து வீச்சாளர் மார்க்கோ யான்சென் இல்லாதது அணிக்கு பெரிய பாதிப்பாக இருந்ததாக சாஹல் கூறினார். “அவர் இருந்திருந்தால், முடிவை மாற்றியிருக்க முடியும்” என்ற நம்பிக்கையையும் யான்சென் வெளிப்படுத்தினார் என்கிறார் சாஹல்.

மேலும் தொடரின் முக்கியக் கட்டத்தில் தான் காயமடைந்ததும் அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது என்றார். மேலும், 35 வயதில் தனது உடல்நலத்திற்கே முக்கியத்துவம் தர வேண்டும் என்ற எண்ணத்தில் மதுபானத்தை 6 மாதங்களாக கைவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். “சிறந்த உடல்நிலை மற்றும் கட்டுப்பாடு இருந்தால் தான் அணிக்கு 150% கொடுக்க முடியும்” என்றார்.

ஏ.பி.டிவில்லியர்ஸ் யூடியூப் சேனலில் சாஹல், கூறியதாவது, “அந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் யான்சென் இல்லாதது பின்னடைவை ஏற்படுத்தியது. அவர் இருந்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று கோப்பையைத் தூக்கியிருப்போம். அந்தத் தொடர் முழுதுமே யான்சென் அற்புதமாக வீசினார். பேட்டிங்கிலும் கடைசியில் இறங்கி 2-3 சிக்சர்களை அவர் அடிக்கக் கூடியவர். வரும் ஐபிஎல்-ல் அவர் சக்தியாகத் திகழ்வார், இப்போது இன்னும் பிரமாதமாக வீசுகிறார்.

கேகேஆர் மேட்சுக்குப் பிறகு நான் காயமடைந்தது எனக்கே ஏமாற்றமளித்தது. அரைஇறுதி, இறுதிப் போட்டிகளில் என்னால் லெக்ஸ்பின் வீச முடியவில்லை. இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் நன் என் உடல் நிலை மீது அக்கறை செலுத்த முடிவெடுத்தேன். உங்களுக்கு ஒரு நற்செய்தியும் கூறுகிறேன். நான் மதுப்பழக்கத்தை முற்றிலும் நிறுத்திவிட்டேன். 6 மாதமாகிறது. இப்போது எனக்கு வயது 35, நான் இன்னும் சுறுசுறுப்பாக இயங்க விரும்புகிறேன்.” என்றார்.

‘குடி’யை நிறுத்திவிட்டேன் - சாஹல் ‘ஓபன் டாக்’

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல விடயம் .........! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.