Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பம்பலப்பிட்டி ரயில் நிலையம் நவீனமயமாக்கல் ஆரம்பம் : 60 மில்லியன் ரூபா செலவில் 5 மாதங்களில் பணிகள் நிறைவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

19 Mar, 2026 | 05:26 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு )

கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையம் நவீன தரத்திற்கு உயர்த்தும் பணிகளின் முதற்கட்டம் வியாழக்கிழமை (19) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இப்பணிகள் தொடங்கப்பட்டன.

‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ், Dawoodi Bohras சமூகத்தின் நிதி பங்களிப்புடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நிர்மாணப் பணிகளை Amic Engineering Private Limited நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது.

சுமார் 60 மில்லியன் ரூபா செலவில் 5 மாதங்களுக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ரயில் நிலைய நடைமேடைகள் தரமுயர்த்தப்படுவதுடன், நவீன இருக்கை வசதிகளும் அமைக்கப்படுகின்றன. மழைநீரால் பாதிக்கப்படாத வகையில் நிலையத்தின் கூரை முழுமையாகப் புனரமைக்கப்படவுள்ளது.

மேலும், துருப்பிடிக்காத வலுவான உலோகப் படிக்கட்டுகள் அமைக்கப்படுவதோடு, நவீன மின்விளக்கு வசதிகள் மற்றும் CCTV கண்காணிப்பு அமைப்புகளும் நிறுவப்படவுள்ளன. இது பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் விசேட அணுகுமுறைப் பாதைகள் (Easy Access Routes) உருவாக்கப்படவுள்ளன. அதேபோல், ரயில்களின் நேர அட்டவணையை துல்லியமாக அறிய நவீன காட்சிப் பலகைகள் நிறுவப்படுகின்றன.

இத்திட்டம் இலங்கை ரயில்வே திணைக்களத்தின் மேற்பார்வையில், நாடு முழுவதும் உள்ள 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

ஏற்கனவே தல்பே ரயில் நிலையம் புனரமைக்கப்பட்டுள்ள நிலையில், நாரஹேன்பிட்டி, தெஹிவளை, பொலன்னறுவை, கண்டி மற்றும் மருதானை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களும் விரைவில் இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம், பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை உயர்த்துவதோடு, நாட்டின் ரயில் சேவையின் தரத்தையும் மேம்படுத்தும் முக்கியமான முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது.

WhatsApp_Image_2026-03-19_at_17.13.00.jp


பம்பலப்பிட்டி ரயில் நிலையம் நவீனமயமாக்கல் ஆரம்பம் : 60 மில்லியன் ரூபா செலவில் 5 மாதங்களில் பணிகள் நிறைவு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ரயில் நிலையதத்தையும் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு 100 வருட குத்தகையில் விடலாம்.

அவர்கள் அந்த நிலத்தில் மாடிவீடுகள், வர்தக நிலையங்கள் அமைக்கலாம். ரயில் நிலையம், மேடைகள் புனரமைக்கப்பட்டு அரசிடம் கொடுக்க வேண்டும். வருடாவருடம் குறித்த அளவு நில வாடகையும் அரசுக்கு செலுத்த வேண்டும்.

ஐடியா இல்லாத பசங்க.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

ஏற்கனவே தல்பே ரயில் நிலையம் புனரமைக்கப்பட்டுள்ள நிலையில், நாரஹேன்பிட்டி, தெஹிவளை, பொலன்னறுவை, கண்டி மற்றும் மருதானை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களும் விரைவில் இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்பகுதிகளிலும் புகையிரத நிலையங்கள் உள்ளன.

2 hours ago, goshan_che said:

கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ரயில் நிலையதத்தையும் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு 100 வருட குத்தகையில் விடலாம்.

அவர்கள் அந்த நிலத்தில் மாடிவீடுகள், வர்தக நிலையங்கள் அமைக்கலாம். ரயில் நிலையம், மேடைகள் புனரமைக்கப்பட்டு அரசிடம் கொடுக்க வேண்டும். வருடாவருடம் குறித்த அளவு நில வாடகையும் அரசுக்கு செலுத்த வேண்டும்.

ஐடியா இல்லாத பசங்க.

Tooooo late.

இதை முதலே சொல்லியிருந்தால் கவனத்தில் எடுத்திருப்பார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.