Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்தவுக்கு இலஞ்சம் வழங்கியதாக வாக்குமூலத்தில் வெளிப்பாடு – ஏயார்பஸ் ஊழல் வழக்கில் புதிய திருப்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

19 Mar, 2026 | 04:41 PM

image

( இணையத்தள செய்திப் பிரிவு )

ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தனது முன்னைய வாக்குமூலம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு மிரட்டல் சூழ்நிலையில் பெறப்பட்டதாகக் கூறும் சத்தியப்பிரமாணம் அவரது வழக்கறிஞர்களால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்ததையடுத்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

ஏயார் பஸ் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய நிதிகளில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரூ. 60 மில்லியன் வழங்கப்பட்டதாக சந்திரசேன தெரிவித்துள்ளார் என நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, அந்த ரூ. 60 மில்லியன் மூன்று தனித்தனி சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவுக்கு ரூ. 20 மில்லியன் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்களின் அடிப்படையில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் கபில சந்திரசேனவை ஏப்ரல் 2 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

ஏயார்பஸ் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய அமெரிக்க டொலர் 2 மில்லியன் இலஞ்சம் கோரல் மற்றும் பெற்றுக்கொண்டதாக அவர் முன்பு கைது செய்யப்பட்டிருந்தார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்தவுக்கு இலஞ்சம் வழங்கியதாக வாக்குமூலத்தில் வெளிப்பாடு – ஏயார்பஸ் ஊழல் வழக்கில் புதிய திருப்பம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கு மீண்டும் விளக்கமறியல்

Published By: Digital Desk 3

19 Mar, 2026 | 02:06 PM

image

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை ஏப்ரல் 02 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டப் பிரதிநிதிகள் முன்வைத்த வாதங்களை கருத்தில் கொண்டு, பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ஏர்பஸ் விமான ஒப்பந்தம் தொடர்பாக 02 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கடந்த 12 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.

2013 ஆம் ஆண்டில் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 விமானங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தின் போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இருந்த சந்திரசேன, 16 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற சதி செய்ததாகவும், சிங்கப்பூரில் உள்ள வங்கிக் கணக்கு ஒன்றில் 1.45 மில்லியன் யூரோ பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்திரசேன, தனது மனைவியின் பெயரில் உருவாக்கிய போலி நிறுவனம் மூலம், இலஞ்சம் பெற்ற பணத்தை தனது சிங்கப்பூர் வங்கிக் கணக்கில் செலுத்த ஏற்பாடு செய்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/241364

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.