Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு

Mar 26, 2026 - 07:51 PM

நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலைச் சம்பவம் தொடர்பில், குற்றம் சாட்டப்பட்டிருந்த கடற்படை சிப்பாய்கள் உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (26) ரத்து செய்துள்ளது. 

அத்துடன், இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குறித்த பிரதிவாதிகளை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்த பின்னரே, நீதியரசர்களான சஷி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmn7k8hgf0000356p9amhajf6

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

அத்துடன், இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகிந்தவின் கையாளாக இருந்தவர்

அரசதரப்பு சாட்சியாக மாறி இருப்பதால்

இந்த கொலை பற்றி மேலதிக தகவல்களை வழங்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பை இரத்து செய்தது மேன்முறையீட்டுமன்று ; மேல் நீதிமன்றத்தில் புதிய மீள் விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவு

27 Mar, 2026 | 10:17 AM

image

எம்.எம்.எம்.பஷீர், செ.சுதர்ஷினி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் லகுவெல்லமுரகே லக்ஷ்மன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றம் சுமத்தப்பட்டிருந்த பிரதிவாதிகளை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றத்தின் விசேட ஜூரி சபை வழங்கிய தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (26) இரத்து செய்துள்ளது.

அத்துடன், இந்த வழக்குத் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் புதிய விசாரணையை ஆரம்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான பி. சசி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்தத் தீர்ப்பை அறிவித்தது.

கடந்த 2016-ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிரதிவாதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளது.

வழக்கின் பிரதான சாட்சியாளரான பிரிதிவிராஜ் எனப்படும் குற்றப் பங்காளியின் சாட்சியம் தொடர்பாக, மேல் நீதிமன்ற நீதியரசர் ஜூரி சபையைச் சரியாக வழிநடத்தவில்லை என்பதே சட்டமா அதிபரின் பிரதான வாதமாகும்.

இந்த வழக்கில் ‘பிரிதி விராஜ்’ என அழைக்கப்படுபவர், தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடையவர் எனவும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுபவருமான சம்பத் மனம்பேரி என்பவராவார்.

குற்றப் பங்காளி ஒருவரின் சாட்சியம் சுயாதீன சாட்சியங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படாவிட்டால், அதனை நம்புவதில் உள்ள ஆபத்து குறித்து ஜூரி சபைக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க மேல் நீதிமன்ற நீதியரசர் தவறியுள்ளார் என மேன்முறையீட்டு நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. சான்றுச் சட்டத்தின் 133 மற்றும் 114(ஆ) பிரிவுகளின்படி, ஒரு கூட்டாளியின் சாட்சியத்தின் நம்பகத்தன்மை குறித்து மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மேலும், வழக்கு விசாரணையின் முடிவில் ஜூரி சபைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கும் பணி இரவு 8:50 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஜூரி சபை தனது தீர்ப்பை நள்ளிரவு 12:50 மணிக்கே வழங்கியுள்ளது. இது மிகவும் அசாதாரணமான நிலை என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

இரண்டாவது பிரதிவாதி ரி56 ரக துப்பாக்கியால் ரவிராஜ் பயணித்த சிவப்பு நிற ஜீப் வண்டியின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகப் பிரதான சாட்சியாளர் தெரிவித்திருந்தார்.

தற்போதிலுள்ள சாட்சியங்களின்படி, பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கினைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்குப் போதுமான காரணிகள் உள்ளதாகத் தீர்மானித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல் நீதிமன்றத்தின் விடுதலை உத்தரவைத் தள்ளுபடி செய்தது. அதற்கமைய, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் புதிய விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரவிராஜ் படுகொலை விவகாரத்தில் கொழும்பு மேல்நீதிமன்றம் ஹெட்டியாரச்சி முதியன்சலாகே சந்தனகுமார ஹெட்டியாரச்சி, காமினி செனரத், கங்கானம்லாகே பிரதீப் சமந்த ஆகிய மூன்று கடற்படை புலனாய்வாளர்களையும் விடுவித்திருந்தது. ஜூரி சபை ஒன்றின் முன் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த நிலையில் நான்காவது பிரதிதியாகப் பெயரிடப்பட்டிருந்த சரண் எனும் சிவகாந்த விவேகானந்தன் மற்றும் பேபியன் ரோஸ்டன் ஆகியோர் இல்லாமலேயே இந்த வழக்கு விசாரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் செய்த மேன்முறையீட்டுக்கு அமைய சசி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் நேற்று இந்த தீர்ப்பை அறிவித்திருந்தது. அதன்படி ஜூரி சபை முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பை இரத்துச் செய்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் அது தொடர்பான வழக்கை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுகர் ஹேரத் ஆஜரானதுடன் இரண்டாம் மூன்றாம் பிரதிவாதிகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி அனுச்ச பிரேமரத்னவும் முதலாம் பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி சகான் குலத்துங்கவும் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/242049

  • கருத்துக்கள உறவுகள்

மாமனிதர் நடராஜா ரவிராஜ் – ஒரு ஜனநாயகக் குரலின் வீழ்ச்சியும், நீதிக்கான நீண்ட பயணமும்

March 28, 2026 11:59 am

மாமனிதர் நடராஜா ரவிராஜ் – ஒரு ஜனநாயகக் குரலின் வீழ்ச்சியும், நீதிக்கான நீண்ட பயணமும்

ஈழத்து அரசியல் வரலாற்றில் அழியாத வடுவாகவும், ஒரு பெரும் அரசியல் வெற்றிடமாகவும் அமைந்த மாமனிதர் நடராஜா ரவிராஜின் வாழ்வும், அவரது படுகொலை தொடர்பான நீதிக்கான போராட்டமும் குறித்த ஒரு உணர்ச்சிகரமான வரலாற்றுத் தொகுப்பு இது.

இலங்கையின் தமிழ் அரசியல் வரலாற்றில், இனங்களைக் கடந்து அனைவராலும் நேசிக்கப்பட்ட ஒரு தலைவர் உண்டென்றால் அவர் நடராஜா ரவிராஜ். 2006 நவம்பர் 10 ஆம் திகதி கொழும்பின் இதயப்பகுதியில் கேட்கப்பட்ட அந்தத் துப்பாக்கிச் சத்தங்கள், ஒரு தனிமனிதனை மட்டும் வீழ்த்தவில்லை; மாறாக, இனங்களுக்கு இடையே பாலமாக இருந்த ஒரு பலமான ஜனநாயகக் குரலையே மௌனிக்கச் செய்தன.

1962 இல் சாவகச்சேரியில் பிறந்த ரவிராஜ், ஒரு சிறந்த சட்டத்தரணியாகத் தனது பயணத்தை ஆரம்பித்தார். 1987 இல் உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பதிவு செய்த அவர், வெறும் வருமானத்திற்காக வாதிடுபவராக இருக்கவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் அநியாயமாகக் கைது செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்றார். மனித உரிமைகள் ஊடாக அவர் ஆற்றிய பணிகள், பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் அவருக்கு ஒரு ‘நீதியின் காவலன்’ என்ற பிம்பத்தை உருவாக்கியது.

யாழ். மாநகர முதல்வராகவும், பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் உயர்ந்தபோது, தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் சரளமாக வாதிட்டார். தமிழ் மக்களின் உரிமைகளைப் பேசுவதோடு நிறுத்திவிடாமல், முஸ்லிம் சமூகத்தின் நலன்களுக்காகவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஓங்கி ஒலித்த அவரது குரல், அவரை ஒரு தேசியத் தலைவராக மாற்றியது. சிங்கள மக்கள் மத்தியில் தென்னிலங்கை ஊடகங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் வலிகளை அவர்களின் மொழியிலேயே புரியவைத்த ஆற்றல் ரவிராஜுக்கு மட்டுமே இருந்தது.

கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள தனது இல்லத்திலிருந்து ஊடக நேர்காணல் ஒன்றை முடித்துவிட்டுப் புறப்பட்ட அந்தச் காலை வேளை (காலை 8.15), மரணம் மோட்டார் சைக்கிள் வடிவில் வந்தது. நாரஹேன்பிட்டி மார்தா வீதி வழியாகத் தனது வாகனத்தில் எல்விட்டிகல மாவத்தைக்குள் அவர் பிரவேசித்தபோது, இனந்தெரியாத நபர்களால் ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சரமாரியாகப் பாய்ந்த தோட்டாக்கள் 44 வயதேயான அந்த இளம் தலைவரையும், அவரது மெய்ப்பாதுகாவலர் லக்ஷ்மனையும் சிதைத்தன. தலைப்பகுதியில் ஏற்பட்ட பலத்த காயத்தினால், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்த செய்தி கேட்டு நாடே அதிர்ந்தது. படுகொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் கூட, வாகரையில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு எதிராகக் கொழும்பில் ஐநா அலுவலகம் முன் நின்றுகொண்டு, “எங்கள் மக்களைக் கொல்லாதீர்கள்” என்று ஆவேசமாக முழங்கியவர் அவர்.

இந்தக் கொலையின் பின்னணியில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இருந்ததாக நீதிமன்றத்தில் சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டன. உளவுப்பிரிவு அதிகாரி Liyanarachchige Abayaratne அளித்த சாட்சியத்தில், இந்தக் கொலைக்காக ‘கருணா குழு’ சார்ந்த பிரிவினருக்கு 50 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். கங்காராம கடற்படை புலனாய்வு முகாமில் இருந்த அதிகாரிகளே இதற்கான திட்டத்தைத் தீட்டியதாகச் சாட்சியங்கள் தெரிவித்தன.

பத்து ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில், 2016 டிசம்பர் 23 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இலங்கையின் நீதித்துறை வரலாற்றிலேயே முதல்முறையாக, நள்ளிரவு 12:25 மணிக்குத் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. பிரதிவாதிகளின் கோரிக்கைப்படி, ஏழு பேர் கொண்ட சிங்களம் பேசும் ‘சிறப்பு ஜுரர் சபை’ இந்த வழக்கை விசாரித்தது.

சாட்சிகள் அடையாளம் காட்டிய போதிலும், மூன்று கடற்படை அதிகாரிகள் மற்றும் கருணா குழுவைச் சேர்ந்த இருவர் உட்பட ஐந்து பேரையும் ஜுரர் சபை ஏகமனதாக விடுதலை செய்தது. “தமிழர் குரலை நசுக்க இராணுவத்துடன் இணைந்த துணை இராணுவக் குழுக்களின் முயற்சி இது” என அப்போது சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாகச் சாடினர். குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட அந்த நள்ளிரவு நேரம், இலங்கையின் நீதித்துறையில் ஒரு கறுப்புப் பக்கமாகவே இன்றும் பார்க்கப்படுகிறது.

நீண்ட 20 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, 2026 மார்ச் 26 அன்று இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

2016ஆம் ஆண்டு ஐந்து பேரையும் விடுதலை செய்து வழங்கப்பட்ட தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

நள்ளிரவில் தீர்ப்பு வழங்கப்பட்ட முறையை “அசாதாரணமானது” என நீதிபதிகள் பி. சசி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா சுட்டிக்காட்டினர்.

குற்றவாளிகளுக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இருப்பதை உறுதிப்படுத்திய நீதிமன்றம், விடுவிக்கப்பட்ட ஐந்து பிரதிவாதிகளையும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

ரவிராஜ் மறைந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அந்த வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. 15 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக் கிடந்த இந்த வழக்கு மீண்டும் உயிர் பெற்றுள்ள நிலையில், இலங்கை நீதித்துறை தனது கடமையைச் சரிவரச் செய்து உண்மையான நீதியை நிலைநாட்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

https://oruvan.com/the-great-man-nataraja-raviraj-the-fall-of-a-democratic-voice-and-the-long-journey-to-justice/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.