Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஷாரா செவ்வந்திக்கு சிஐடி பிரிவுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஷாரா செவ்வந்திக்கு சிஐடி பிரிவுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் : பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Published By: Digital Desk 1

30 Mar, 2026 | 04:32 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு )

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு, பொலிஸ் பிரிவுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக பொலிஸார் கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனிப்பட்ட ரீதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விஜயம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். அங்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரிகள் அரச அதிகாரிகளாவர் என்றும், அவர்கள் குற்றவாளிகளுடன் எவ்வித தொடர்புகளையும் பேண முடியாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் இதன்போது வலியுறுத்தினார். பொலிஸ் அதிகாரிகள் தமது கடமைகளைச் செய்யும்போது தமது பொறுப்புகளை பேண வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/242304

செவ்வந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

இப்படிக்கு

செயலாளர்

க.செ.ர.ச

  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcSSyQOHRTfKuio2Fg6r0fT

ஹாப்பி பேர்த்டே செவ்வந்தி. 😂 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

செவ்வந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

இப்படிக்கு

செயலாளர்

க.செ.ர.ச

14 minutes ago, தமிழ் சிறி said:

images?q=tbn:ANd9GcSSyQOHRTfKuio2Fg6r0fT

ஹாப்பி பேர்த்டே செவ்வந்தி. 😂 🤣

செல்லாது செல்லாது!

இவண் அகில உலக செவ்வந்தி ரசிக மன்றம் சார்பாக வெள்ளை மாளிகையில் இருந்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

CCDயில் இஷாரா செவ்வந்திக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் விழா

Mar 30, 2026 - 10:20 PM

CCDயில் இஷாரா செவ்வந்திக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் விழா

கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் (CCD) தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சந்தேகநபரின் பிறந்ததினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) எட்டப்பட்ட நிலையில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிற்குள்ளேயே கேக் வெட்டிக் கொண்டாடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக, கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சாவிற்கு தனிப்பட்ட ஒற்றர் மூலம் தகவல் கிடைத்துள்ளது. 

புலனாய்வுப் பிரிவினர் மூலம் இத்தகவலை உறுதிப்படுத்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர், உடனடியாக பிராந்திய பொறுப்பதிகாரியைத் தொடர்புகொண்டு குறித்த செயற்பாட்டைத் தடுக்குமாறு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

பின்னர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் குமாரசிங்கவை அங்கு அனுப்பி வைத்ததுடன், தாமும் நேரடியாகச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தார். 

இதன்போது, சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் சகோதரர் கேக் ஒன்றைக் கொண்டு வந்திருப்பதும், அவரது பெரியம்மா மற்றும் மகன் ஆகியோர் அங்கு வருகை தந்திருப்பதும் தெரியவந்தது. 

சந்தேகநபரை சிறைக்கூண்டிலிருந்து வெளியே அழைத்து வந்து, அங்குள்ள ஓரிடத்தில் கேக் வெட்டுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டிருந்தமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ளது. 

இதற்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர், "கேக் வெட்டும்போது புகைப்படம் எடுக்க வேண்டாம், பின்னர் அவை இணையத்தில் வெளியாகிவிடும்" என அவர் அறிவுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபரின் உறவினர்கள் மற்றும் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட சுமார் 15 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. 

பொறுப்பதிகாரியின் இத்தகைய செயற்பாடு குறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். 

விசாரணைகளின்படி, சந்தேகநபரின் சகோதரருடன் குறித்த பொறுப்பதிகாரி நீண்டகாலமாகத் தொலைபேசியில் உரையாடி வந்துள்ளமையும், அவரே இந்தப் பிறந்தநாள் விழாவிற்குத் திட்டமிட்டு வாய்ப்பளித்துள்ளமையும் அம்பலமாகியுள்ளது. 

இதன் காரணமாக, குறித்த பொறுப்பதிகாரியின் சேவை விரைவில் இடைநிறுத்தப்படலாம் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

https://adaderanatamil.lk/news/cmndfbkxc000a356p3gen4pog

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.