Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

த.பு.கழகத்தின் பண முடக்கம் தமிழர்களுக்கு எதிரானது அல்லவாம் - பிளேக் கூறுகிறார்

Featured Replies

த.பு.கழகத்தின் பண முடக்கம் தமிழர்களுக்கு எதிரானது அல்லவாம் - பிளேக் கூறுகிறார்

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதி முடக்கம் தமிழ் மக்களிற்கு எதிரான செயலல்ல என, சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் புதிய விளக்கமளித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு நிதி சென்றடைவதைத் தடுப்பதற்கே தமது அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும், இதனை தமிழ் மக்களிற்கு எதிரான நடவடிக்கையாகக் கொள்ள வேண்டாம் எனவும், நிதி முடக்கம் தொடர்பாக இன்று கேட்டபோது அவர் கூறினார்.

அமெரிக்கத் தூதுவரின் இந்தக்கூற்று தொடர்பாக கருத்துரைத்த கொழும்பின் பிரபல ஆய்வாளர் ஒருவர், தமிழ் மக்களிற்கான பிரதான மனிதநேய அமைப்பாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இயங்கிவரும் நிலையில், பிளேக்கின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனச்சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு, உள்நாட்டு மனிதநேய அமைப்புகள் பணியாற்ற முடியாத பல இடங்களில் தமிழ் மக்களிற்கான பணியை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆற்றி வருகின்றது.

இதேவேளை, இனப்பிரச்சினைக்கான தீர்வை சமாதானப் பேச்சுவார்த்தையின் மூலமே காண முடியுமெனவும், சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் இன்று மீண்டும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வு காண முடியுமெனக்கூறும் அமெரிக்கத் தூதுவர், விடுதலைப் புலிகளின் பேச்சுக்குழுவின் தலைவர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்டபோது எந்தவித கண்டனத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/

உப்பிடி அனைத்து மனுதர்மத்தையும் அழிப்பதனால் தான் இஸ்லாம் மதம் நல்ல பாடம் படிப்பிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கத் தூதரின் வழியிலேயே சொன்று நோக்கினால் கூட அமெரிக்காவின் தர்க்கம் தவறானது சுயநலத்தோடு நகர்கிறது என்பதை இலகுவாகக் கண்டறியலாம்.

யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறி இராணுவ நடவடிக்கைகள் மூலம் பிரதேசங்களைப் பிடித்ததும் அதற்காக மக்களை வலிந்து இடம்பெயரச் செய்ததும் சிறீலங்கா அரசு... இதை எப்போதாவது அமெரிக்கா கண்டித்திருக்கிறதா..??! அல்லது இதைத் தடுத்து நிறுத்த சிறீலங்கா அரசுக்கு பகிரங்கமாக அழுத்தங்கள் அல்லது தடைகளைக் கொண்டு வந்திருக்கிறதா..??! மியாண்மாரிலும் ஈரானிலும் அமெரிக்காவின் செயற்பாடு மின்னல் வேகத்தில் இருக்க ஏன் இலங்கைத் தீவில் சிங்கள அரசின் மனித உரிமை மீறல்கள் மீது கருசணை காட்டுகிறது அமெரிக்கக் கழுகு..??!

தமிழர் பிரதேசங்களில், ஐநாவின் அவதானிப்புக்கு இணங்கக் கூட ,மனித உரிமைகள் உருப்படியாக இல்லை. அதற்கு இராணுவம் ஆயுதக்குழுக்களும் முதன்மை பங்களிக்கின்றன என்பது வெளிப்பட்டும்.. அமெரிக்கா மெளனம் காக்கிறதே ஏன்...??!

அமெரிக்கா மூச்சுக்கு முந்நூறு தரம் உச்சரிக்கும் ஜனநாயக வழியில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான ஜோசப் பரராஜசிங்கம்.. அரிநாயகம் சந்திரநேரு.. ரவிராஜ் இவர்களின் படுகொலைகள் தொடர்பில் உண்மையைக் கண்டறிய அமெரிக்கா என்ன நடவடிக்கை அல்லது அழுத்தம் கொடுத்தது சிறீலங்கா அரசுக்கு..??!

கொழும்பில் காணாமல் போதல் கைதிகள் சித்திரவதை என்று அமெரிக்கத் தூதரின் கண் முன்னாலே தமிழர்கள் சித்திரவதைப்படும் போது ஏன் அமெரிக்கா அதையிட்டு சிறீலங்கா அரசுக்கு தமிழர்களுக்கு தகுத்த பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல் வழங்க முன் வரவில்லை..??!

அமெரிக்காவுக்கு உண்மையில் இலங்கைத் தீவின் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வில் அக்கறை இருப்பின் விடுதலைப்புலிகளின் தடையை நீக்கி அவர்களுடன் நேரடிக் கலந்தாலோசனைகளைச் செய்து வன்முறைகளை நிறுத்தி இரண்டு தரப்பையும் சமனாக மதித்து பேச்சு மேடைக்கு கொண்டு வரலாம் தானே. ஏன் அமெரிக்கா அப்படிச் செய்யாமல் சிறீலங்கா அரச படைகளின் பலத்தை அதிகரிப்பதிலும் அவர்களின் ஆக்கிரமிப்பை அங்கீகரிப்பதிலும் சிறீலங்கா அரசின் விருப்புக்கு ஏற்ப புலிகளை ஒடுக்கவும் முன்னின்று செயற்படுகிறது. இது எந்த வகையில் பலவீனமான தமிழர் தரப்பை, பலமான சிங்கள அரச தரப்புடன் நியாயமான தீர்வுகளை எட்ட,பேச்சுக்களில் பேரம் பேச தமிழர் தரப்புக்கு உதவியாக அமையும்..??!

சிறீலங்காவின் இனப்பிரச்சனையே இனங்கள் ஒன்றாக வாழ முடியாத நிலையில் எழுந்த ஒன்று. அப்படி இருக்க எங்கோ இருக்கும் அமெரிக்கா இனங்களின் ஐக்கியத்தோடு எப்படி என்ன வகையான தீர்வை, தமிழர்கள் எதிர்பார்க்கும் நியாயபூர்வ உரிமைகளை வழங்கத்தக்கதாக சிறீலங்கா அரசூடு அளிக்க இருக்கிறது என்பதை தெளிவுபடுத்திக் கூறக் கூடிய நிலையில் இருக்கிறதா..??!

விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் வன்முறைவாதிகள் என்றால் அவர்களை விட மோசமான இன அழிப்பு வன்முறையில் ஈடுபடும் சிங்களப் படையினருக்கு அமெரிக்கா இராணுவ உதவிகளை அளிப்பது எந்த வகையில் நியாயம். இப்படி ஒருதலைப்பட்சமாக சிறீலங்காவின் இராணுவ வெறித்தனத்தை ஊட்டி வளர்க்கும் அமெரிக்கா எப்படி சிறீலங்கா அரசை இதய சுத்தியுடன் அதுவும் இராணுவ மேலாதிக்க நிலையில் உள்ள ஒரு சந்தர்ப்பத்தில் தமிழர் தரப்புக்கு நியாயம் வழங்க அழுத்தம் கொடுக்க முடியும்..??! வெறுமனவே விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நினைப்பது இராணுவ மேலாதிக்கத்தை விரும்பும் அரசுக்கு சாதமாகத்தானே அமையும்.. இது வெளிப்படை உண்மைதானே. ஏன் இதை அமெரிக்கா கருத்தில் கொள்ளாது நாடகம் ஆடுகிறது..??!

அமெரிக்காவின் செல்வாக்கை நிலை நிறுத்தவும் இதர நாடுகளின் இராணுவத்தலையீட்டைத் தவிர்க்கவும் அமெரிக்கா மட்டுப்படுத்திய இராணுவ உதவிகளை சிறீலங்காவுக்குச் செய்ய வேண்டிய கட்டாய நிலை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டு நோக்கினும் சிறீலங்கா அரசின் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை அமெரிக்கா கண்டிக்காதது ஏன்..??! இராணுவ உதவிகளை எந்த எச்சரிக்கைகளுக்கும் இடமின்றி அள்ளி வழங்குவது சிறீலங்கா தனது பக்கத் தவறுகளை உணர எவ்வகையில் உதவும்..??!

சீனா மியாண்மார் ரஷ்சியா ஈரான் என்று மனித உரிமைப் பிரச்சனைகள் பூதாகரம் இல்லாத இடங்களில் எல்லாம் அவற்றைப் பூதாகரம் ஆக்கும் அமெரிக்கா ஏன் சிறீலங்கா தொடர்பில் ஐநா மற்றும் அமெரிக்காவையே தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை அமைப்புக்களின் குரலை செவி மடுக்காமல் இருக்கிறது..??!

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் பணிகளை தீவிரமாகக் கண்காணிக்கக் கூடிய புலனாய்வு வசதிகளை அமெரிக்கா கொண்டிருந்தும் ஏன் அதற்குத் தடை விதிக்க வேண்டும்..??! இது சிங்கள ஆளும் தரப்பை மேலாதிக்க நிலையில் வைத்துக் கொண்டு தமிழர் தரப்பை பலவீன நிலையில் வைத்திருக்க செய்யும் செயலாகத்தானே தென்படுகிறது..??! அதுவும் சுனாமி பாதிப்பின் பின்னர் சர்வதேசத்தின் உதவி தமிழர் தரப்புக்கு சரியான வககயில் போய் சேரவில்லை என்று முன்னால் ஐநா பொதுச் செயலர் கொபி அனான் கோடிட்டுக் காட்டிய பின்னும் அமெரிக்கா இப்படி ஒரு நகர்வைச் செய்வதன் உள்நோக்கம் தமிழர் தரப்பின் மீது சிங்கள அரசின் இன அழிப்பை ஊக்கப்படுத்துவது தானே..??!

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் வேறு எந்த நடுநிலைத்தரப்பின் ஊடு அமெரிக்கா தமிழ் மக்களுக்கு உதவி செய்யப் போகிறது. அதையேன் அமெரிக்கா இன்னும் பகிரங்கப்படுத்தவில்லை..??!

தமிழர் தரப்பை சிறீலங்கா அரசுக்கு ஏற்ப பேச்சுக்களத்தில் சமதரப்பு நிலையில் வைத்திருக்க அமெரிக்கா செய்த நகர்வுகள் என்பது இவை தானா..??!

இராணுவ மேலாதிக்கம் உள்ள ஒரு அரசு எப்படி இராணுவ அடக்குமுறைக்குள் பலவீனப்பட்டுள்ள ஒரு இன மக்களுக்கு நியாயம் வழங்கும்..??! அமெரிக்கா இதை எவ்வகையில் தமிழர் தரப்புக்கு நம்பத்தகுந்த வகையில் வெளிச் சொல்லப் போகிறது. அதற்காக அது செய்யும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டக் கூடிய நகர்வுகள் என்ன..??! அப்படி எதுவும் இருந்ததாக கடந்த 3 தசாப்தகால போராட்டமே சாட்சியாகி நிற்கிறது..!

ஆக அமெரிக்காவின் நகர்வுகள் சிறீலங்காப் பேரினவாதத்தின் செயற்பாடுகளை அங்கீகரித்தபடி தமிழர் தரப்பை மட்டும் குறை காண்பதிலும் ஒடுக்குவதிலும் தான் குறியாக இருக்கிறது. காரணம் தமிழர் தரப்பு பலவீனமான தரப்பு என்பதால் தனது அச்சுறுத்தல்களால் அத்தரப்பை மிரட்டி இலகுவாகப் பணிய வைக்கலாம் என்றும் ஆனால் அதை சிங்களத் தரப்போடு செய்வது தனக்கு அனுகூலமாக அமையாது என்றும் கருதியே அமெரிக்கா இலங்கைத் தீவில் சமீப காலமாக தனது நகர்வுகளைச் செய்து வருகிறது. இது தமிழர் தரப்பு எதிர்பார்க்கும் எந்த அரசியல் தீர்வையும் சிங்களவர்களிடமிருந்து பெற்றுத்தர எள்ளளவும் தமிழர்களுக்கு உதவாது. மாறாக அமெரிக்க நலங்களை பிராந்தியத்தில் நிலைநிறுத்தவும் அதற்கு வெகுமதியாக தமிழர் போராட்டத்தை நசுக்கி சிங்கள அரசின் மேலாதிக்கத்தை தமிழர் தாயகத்தில் நிறுவி, தமிழர் தாயகத்தை சிங்கள இராணுவ மயப்படுத்தல் மூலம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து.. சிங்களவர்களின் ஜனநாய முலாம் பூசப்பட்ட அரைகுறைத் தீர்வை பலவீனப்பட்டுப் போயிருக்கும் தமிழர் மீது திணிப்பதன் மூலம் தனது நலனுக்காக இலங்கைத் தீவை நீண்டகால முதலீடாக்கிக் கொள்வதும் அதை நிலைநிறுத்திக் கொள்வதுமே அமெரிக்காவின் திட்டம்..! :icon_mrgreen::icon_mrgreen:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

தமிழர் புனர்வாழ்வுகழக சொத்துக்கள் முடக்கப்பட்டமை தமிழர்களிற்கு எதிராக அல்ல அமெரிக்க தூதுவர் - தூதுவர் நடந்து செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார்

விடுதலைப் புலிகளிற்கு நிதியுதவிகள் கிடைக்கவிடாமால் தடுப்பதற்காகவே அமெரிக்காவில் தமிழ் புனர்வாழ்வு கழகத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டன மாறாக தமிழ் மக்களிற்கு கிடைக்கூடாது என்பதற்காக அல்ல என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் பிளேக் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலமான தீர்வே மிகச் சிறந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அமெரிக்க நிலையத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை அமெரிக்க தூதுவர் அமெரிக்க தூதரகத்தில் இருந்து கோல்ரோஸ் ஹோட்டலிற்கருகாமையிலுள்ள அமெரிக்க நிலையத்திற்கு நடந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது . காலி வீதி தற்காலிகமாக முக்கிய பிரமுகர்களின் நடமாட்டத்திற்கு மூடப்பட்டிருந்தது

அமெரிக்க தூதுவர் ரொபேர் பிளேச் ச்மெரிக்க நிலையத்தில் அமெரிக்காவின் தமிழர் புனர் வாழ்வு கழகம் சொத்துக்கள் மூடக்கப்பட்டமை தொடர்பாக ஊடகவியலாளர்களிற்கு விளக்கமளிக்கச் சென்ற சமயமே இவ்வாறு ஏற்பட்டுள்ளது

http://www.tamilwin.net/

  • தொடங்கியவர்

அமெரிக்கத் தூதுவர் நடந்து செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார்

தமிழர் புனர்வாழ்வுக் கழக்கத்தின் அமெரிக்க கிளையின் நிதியை தமது அரசு முடக்கியுள்ளமை தொடர்பாக அமெரிக்க தூதுவர் றொபேட் ஓ பிளேக் இன்று மதியம் 2.00 மணியளவில் கொழும்பில் ஊடகர்கள் மத்தியில் விளக்கமளித்திருந்தார்.

ஊடகர் சந்திப்பிற்காக காலி வீதியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தலிருந்து அருகிலிருந்த அமெரிக்க மையத்திற்கு வாகனத்தில் செல்வதற்கு அமெரிக்கத் தூதுவருக்கு சிறீலங்காப் படையினர் அனுமதி மறுத்து, நடந்து செல்லுமாறு நிர்ப்பந்தித்துள்ளனர்.

அரசின் முக்கிய பிரமுகர்களின் போக்குவரத்து அந்த நேரத்தில் இடம்பெற இருப்பதாகத் தெரிவித்தே இந்த அனுமதி மறுப்பு இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கத் தூதுவருக்கே இந்தக்கதி என்றால் சாதாரண தமிழ் பொதுமக்களின் நிலை என்ன என்பதை அவர் நன்றாக உணர்ந்திருப்பார் என இன்றைய ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் "பதிவு"க்குத் தெரிவித்தார்

http://www.pathivu.com/

இவர்களை நிர்வாணமாக நடந்து போக நிர்ப்பந்திக்கப்பட்டாலும் இவர்கள் பங்கரவாத அரசுக்கு எதிராக வாய் திறக்க மாட்டார்கள். இவர்களின் கவனம் தற்போது தமது வல்லரசுத் தனத்தை உலக பொலிஸ்காரன் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்வதே. எம்மை நாம் நம்பி எம் கைகளை ஒன்று சேர்ந்து என்று நாம் எம்மைப் பலப்படுத்திக் கொள்கின்றோமோ அன்று தான் எமக்கு விடிவு. உலகை உலக வியாபாரிகளை நம்பி இனி பிரயோசனமில்லை என்பது தெளிவு.

ஜானா

Edited by Janarthanan

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஆயுதங்களை வழங்குவதாக பீற்றும் அமேரிக்கா இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு அது என்ன உதவிகளை / நடவடிக்கைகளை எடுத்து இருக்கின்றது என்ற பட்டியலை தூதுவர் வெளியிடுவாரா?

Edited by rajcan

இப்படி கதச்சுக்கதச்சே உலகத்தில உள்ள பல நாடுகளிற்கு பல்லப் புடுங்கிப்போட்டான் அமெரிக்கன்.

தலைவர் இவ்வளவு காலமாய் பொறுமை காக்கிறது,இப்படியான வல்லரசுகளின் ராஜதந்திர நகர்வுகளால் தான்.இதற்குப்பதில் எங்கட புலம்பெயர் மக்களிட்டத்தான் இருக்கு.அதற்கு முதல், எல்லாரும்" நான்,நீ" என்ற பிரச்சனையவிட்டிட்டு ஒரே அணியில சேரவேணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.