Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யா, சீனாவிற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பகிரங்க எச்சரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா, சீனாவிற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பகிரங்க எச்சரிக்கை!

Mar 31, 2026 - 08:30 PM

ரஷ்யா, சீனாவிற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பகிரங்க எச்சரிக்கை!

ஈரானுக்கு ஆதரவளிக்க சீனா மற்றும் ரஷ்யா எடுக்கும் முயற்சிகளை அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், தேவைப்படும் போதெல்லாம் அந்தத் தலையீடுகளுக்கு எதிராகச் செயற்படும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஹெக்செத், மத்திய கிழக்கு மோதலில் அடுத்த சில நாட்கள் மிகவும் தீர்மானமிக்கதாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, ஈரான் ஆயுதப் படைகளிலிருந்து வீரர்கள் பெருமளவில் வெளியேறும் போக்குக் காணப்படுவதாக அவர் இதன்போது வெளிப்படுத்தினார்.

ரஷ்யாவும் சீனாவும் ஈரானுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பது பற்றி அமெரிக்கா சரியாக அறிந்துள்ளதாகவும், அவை அனைத்தையும் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், தேவையான இடங்களில் அவர்களை நேரடியாக எதிர்கொள்வோம் என்றும் அவர் கூறினார்.

புலனாய்வுத் தகவல்களை மேற்கோள் காட்டிப் பேசிய ஹெக்செத், அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரான் இராணுவத்தின் மன உறுதி சிதைந்துள்ளதாகக் கூறினார். இதன் காரணமாக வீரர்கள் இராணுவத்தை விட்டு வெளியேறுவதும், சிரேஷ்ட தலைவர்கள் மத்தியில் கடும் விரக்தி ஏற்பட்டுள்ளதும் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

"எங்களிடம் தெரிவுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் ஈரானுக்கான தெரிவுகள் மட்டுப்படுத்தப்பட்டவை. கடந்த ஒரு மாதத்திற்குள்ளேயே போருக்கான நிபந்தனைகளை நாங்கள் தீர்மானித்துவிட்டோம். வரும் நாட்கள் மிகவும் முக்கியமானவை," என அவர் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை தாம் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு விஜயம் செய்ததாகவும், அங்கு ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை நேரடியாக அவதானித்ததாகவும் ஹெக்செத் மேலும் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmneodwew000d356pb6qi8sgh

  • கருத்துக்கள உறவுகள்

தரைத்தாக்குதல் சாத்தியமில்லாத நிலையிலும் ஒரு தரைத்தாக்குதல் நோக்கி அமெரிக்க படையினரை தள்ளுகின்றது இந்த ட்ரம்ப் அரசு, அதனை செய்வேண்டும் எனவே சீனாவும், இரஸ்சியாவும் காத்துக்கொண்டுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

ரஷ்யாவும் சீனாவும் ஈரானுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பது பற்றி அமெரிக்கா சரியாக அறிந்துள்ளதாகவும், அவை அனைத்தையும் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், தேவையான இடங்களில் அவர்களை நேரடியாக எதிர்கொள்வோம் என்றும் அவர் கூறினார்.

ஆமாம் ஈரானை தாக்குவதற்கான காரணத்தை அறிவித்தார்கள் ஆனால் வேறொரு காரணமே உண்மையானது என்பதை காலந்தாழ்த்தியே அறிவிக்கிறார்கள், அந்த நாடுகள் மீதான உங்கள் எச்சரிக்கை அமெரிக்கருக்கு பயம் வந்துவிட்டதென தெரிவிக்கிறது. இவர்கள் இஸ்ரேலுடன் கூட்டுச்சேரலாம் நட்ப்பு நாடுகள்இவர்களுக்கு உதவ வேண்டுமென எச்சரிக்கிறார்கள் நச்சரிக்கிறார்கள். சீனா, ரஷ்யா ஈரானுக்கு உதவினால் என்ன தப்பு? சரி, சீனா ரஷ்யாவை தொட்டுத்தான் பார்க்கட்டுமேன், சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துத்தான் அவர்களும் இவர்களின் அழைப்ப்பிற்காக காத்திருக்கிறார்கள். இந்த ஈரானை வெல்லவே முடியவில்லை, கோழை அமெரிக்கா சமாதானம், போர்நிறுத்தம் என பேசிக்கொண்டு வானில் மிக மோசமான தாக்குதல்களை கொண்டு அவர்களின் வளங்களை தாக்குவது பெரும் வெற்றி. இதற்குள் சீனா, ரஷ்யாவுக்கு எச்சரிக்கை வேறு!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அதானே, நட்பு நாடுகள்… தமக்குள் உதவிக் கொள்வதால், அமெரிக்காவுக்கு என்ன பிரச்சினை. அமெரிக்காவின் செயல்… சரியான சின்னப் பிள்ளைத்தனமாக உள்ளது. 😁

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.