Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன - கல்வித் திணைக்களம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன - கல்வித் திணைக்களம்

Published By: Vishnu

31 Mar, 2026 | 11:45 PM

image

கல்வித் திணைக்களம் நாட்டில் நடைபெற்ற பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகளை அறிவித்துள்ளது.

இந்த வருடம் நாட்டின் 2,362 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெற்றது, இதில் மொத்தம் 3,40,525 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் 2,46,521 பேர் பாடசாலை வழிக் விண்ணப்பதாரர்கள் மற்றும் 94,004 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் ஆவர்.

பரீட்சை பெறுபேறுகளை https://www.doenets.lk இணையத்தில் பார்க்கலாம்.

https://www.virakesari.lk/article/242441

  • கருத்துக்கள உறவுகள்

exam.jpg?resize=750%2C375&ssl=1

2025 உயர்தரப் பரீட்சை: 62%க்கும் அதிகமானோர் பல்கலை சேர்க்கைக்கு தகுதி!

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் (A/L) பங்கேற்ற மொத்த பரீட்சார்த்திகளில் 62.64 சதவீதம் பேர் பல்கலைக்கழக சேர்க்கைக்குத் தகுதி பெற்றுள்ளனர் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு A/L தேர்வு முடிவுகள் நேற்று (31) இணையத்தில் வெளியிடப்பட்டன.

பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான (www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk) ஆகியவற்றில் உள்நுழைந்த பிறகு, சரியான சுட்டெண்ணை உள்ளிடுவதன் மூலம் முடிவுகளைப் பெறலாம்.

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சை தேர்வில் மொத்தம் 221,413 பாடசாலை பரீட்சார்த்திகளும், 60,397 தனியார் பரீட்சார்த்திகளும் பங்கேற்றனர்.

146,405 பாடசாலை பரீட்சார்த்திகளும் பல்கலைக்கழக சேர்க்கைக்குத் தகுதி பெற்றுள்ளனர் என்றும், அதே நேரத்தில் 30,122 தனியார் பரீட்சார்த்திகளும் பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

அதன்படி, மொத்த பரீட்சார்த்திகளில் 62.64 சதவீதமான, அதாவது 1,76,527 பரீட்சார்த்திகளில் பல்கலைக்கழக சேர்க்கைக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், பரீட்சையை எதிர்கொண்ட 111 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2026/1470577

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

Mar 31, 2026 - 11:42 PM

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (31) நள்ளிரவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.


இந்தப் பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உள்ளடங்கலாக மொத்தம் 281,810 பேர் தோற்றியிருந்தனர்.


இவர்களில் 176,527 மாணவர்கள் (62.64%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.


பரீட்சார்த்திகள் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களினூடாகத் தமது பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.


மேலும், 01.04.2026 (இன்று) முதல் பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு http://onlineexams.gov.lk/eic எனும் இணையத்தளத்தினூடாக பெறுபேற்று அட்டவணையை தரவிறக்கம் செய்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


அதிபர்கள் மற்றும் வலய/மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் இதே இணையத்தளத்தினூடாக தமக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி முடிவுகளைத் தரவிறக்கம் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.


பல்வேறு காரணங்களுக்காக 111 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகப் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 

பெறுபேறுகளின் மீளாய்வுக்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், http://onlineexams.gov.lk/onlineapps எனும் இணையத்தளத்தினூடாக 06.04.2026 தொடக்கம் 22.04.2026 ஆம் திகதி வரை நிகழ்நிலையில் (Online) மாத்திரம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளின் அச்சிடப்பட்ட பரீட்சைப் பெறுபேற்று அட்டவணைகள், மீளாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகள் வெளியான பின்னரே அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

மேலதிக விசாரணைகளுக்கு:

  • நேரடி அழைப்பு எண்: 1911

  • தொலைபேசி எண்கள்: 0112784208, 0112786616, 0112784537, 0112785413

  • தொலைநகல் (Fax): 0112784422

  • மின்னஞ்சல்: gcealexam@gmail.com

பெறுபேறுகளின் மீளாய்வுக்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், http://onlineexams.gov.lk/onlineapps எனும் இணையத்தளத்தினூடாக 06.04.2026 தொடக்கம் 22.04.2026 ஆம் திகதி வரை நிகழ்நிலையில் (Online) மாத்திரம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளின் அச்சிடப்பட்ட பரீட்சைப் பெறுபேற்று அட்டவணைகள், மீளாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகள் வெளியான பின்னரே அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலதிக விசாரணைகளுக்கு:

  • நேரடி அழைப்பு எண்: 1911

  • தொலைபேசி எண்கள்: 0112784208, 0112786616, 0112784537, 0112785413

  • தொலைநகல் (Fax): 0112784422

  • மின்னஞ்சல்: gcealexam@gmail.com

0.jpg

https://adaderanatamil.lk/news/cmnexm8iu000i356pqi8ofsit

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

A/L பெறுபேறுகள் : வணிகப் பிரிவில் மட்டக்களப்பு மாணவன் முதலிடம்

Apr 1, 2026 - 10:25 AM

A/L பெறுபேறுகள் : வணிகப் பிரிவில் மட்டக்களப்பு மாணவன் முதலிடம்

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவரான சுபைதீன் முஹம்மட் ஃபர்தான், வணிகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmnfkly19000a356poagzecs4

A/L Results : அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த சாதனையாளர்கள் இதோ!

Apr 1, 2026 - 10:50 AM

A/L Results : அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த சாதனையாளர்கள் இதோ!

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், இம்முறை 66 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.


நேற்று (31) இரவு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.


இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு 281,810 விண்ணப்பதாரர்கள் தோற்றியதுடன், அவர்களில் 176,527 பேர் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்காக விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.


இதேவேளை, 111 விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

image.png


மாகாண ரீதியான பல்கலைக்கழகப் பிரவேசத் தகுதி வீதம்:

மேல் மாகாணம்: 69.42%

வடமேல் மாகாணம்: 68.48%

வட மாகாணம்: 66.91%

கிழக்கு மாகாணம்: 66.32%

தென் மாகாணம்: 65.69%

சப்ரகமுவ மாகாணம்: 64.97%

ஊவா மாகாணம்: 63.53%

மத்திய மாகாணம்: 63.04%

வடமத்திய மாகாணம்: 60.91%

 

பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றவர்களில் பெரும்பாலானோர் மாணவிகளாவர். இருப்பினும், உயிரியல் விஞ்ஞானம்  பிரிவில் மாத்திரம் மாணவர்களே அதிகளவில் தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இம்முறை கலைப்பிரிவில் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 32.03% ஆகக் குறைவடைந்துள்ளதுடன், உயிரியல், பௌதீகவியல், தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதாக ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

 

இதன்படி, இம்முறை தேசிய மட்டத்தில் முதலிடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் வருமாறு:


உயிரியல் விஞ்ஞானப் பிரிவு:

முதலிடம் - டிலான் சஞ்சன (கொழும்பு றோயல் கல்லூரி)

இரண்டாமிடம் - கிரிஷான் சசிந்து நம்தர (ஹொரணை தக்ஷிலா மத்திய மகா வித்தியாலயம்)

மூன்றாமிடம் - தர்ஷனா கோனேஷ் (திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி)

 

பௌதீகவியல் (கணித) பிரிவு:

முதலிடம்: தேவேந்தன் திருகுமரன் (கிளிநொச்சி மகா வித்தியாலயம்)

இரண்டாமிடம்: தருஷ கிம்ஹான கம்லத் (குருணாகலை மலியதேவ வித்தியாலயம்)

மூன்றாமிடம்: வினுர பிரசாத் டி மெல் (பாணந்துறை ஸ்ரீ சுமங்கல ஆண்கள் பாடசாலை)

 

வணிகப் பிரிவு :

முதலிடம்: சுபைதீன் மொஹமட் ஃபர்தான் மொஹமட் (காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை))

இரண்டாமிடம்: செனாதி திஹஸ்னா சுமனசேகர (கொழும்பு மியூசியஸ் கல்லூரி)

மூன்றாமிடம்: திலீப சந்தெரஸ் கருணாரத்ன (கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயம்)

https://adaderanatamil.lk/news/cmnflbyh3000b356p8d1e7pj1

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றுப் பெருமை தேடித்தந்த மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்திய சிறீதரன் எம்.பி!

large.8128a714-d90f-46eb-8f6d-1e7b2b778f15.jpeg

நேற்றைய தினம் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி, அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடம் பெற்ற செல்வன் தெய்வேந்திரன் திருக்குமரன், கிளிநொச்சி மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் முதலிடம் பெற்ற செல்வன் ஆனந்த் கிருசோந் மற்றும் வர்த்தகப் பிரிவில் முதலிடம் பெற்ற செல்வி கமலநாதன் மதுமினி ஆகிய மாணவச் செல்வங்களை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்றைய தினம் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நேரில் சந்தித்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள், "இது கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வரலாற்றில் ஒரு புதிய அடையாளத்தைப் பதித்துள்ளது. கல்வி ரீதியாகவும், வளங்கள் ரீதியாகவும் பின்தங்கிய மாவட்டம் என்று பலரால் விமர்சிக்கப்பட்ட நிலையில், இங்கிருந்து ஒரு மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்திருப்பது எமக்குக் கிடைத்த ஒரு வரலாற்று வெற்றியாகும்" என்று குறிப்பிட்டார்.

பெருமை தேடித்தந்த மாணவர்களுக்கும், இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் அவர் தனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

  • வாட்ஸப் மூலம்

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி மாணவனுக்கு ஆளுநர் பாராட்டு

adminApril 1, 2026

dd2f835a-bdf0-4558-a742-040346232190.jpe

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்த கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரனை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேரில் சந்தித்துத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு இன்றைய தினம் புதன்கிழமை நேரில் சென்ற ஆளுநர் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் ஆகியோர் மாணவர்களை பாரட்டினர்.

இப்பாடசாலையைச் சேர்ந்த மாணவன் தெ.திருக்குமரன் கணிதப் பிரிவில் தேசிய நிலையில் சாதனை படைத்துள்ள அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் ஆ.கிரிஷாந்த் மற்றும் வர்த்தகப் பிரிவில் க.மதுமினி ஆகியோர் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுப் பெருமை சேர்த்துள்ளனர்.

இந்தச் சாதனை மாணவர்களை ஆளுநர் பாராட்டியதுடன், இவர்களின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த பெற்றோர், கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார். தமது கடின உழைப்பாலும் சுயமுயற்சியாலும் மாபெரும் வெற்றியீட்டிய மாணவர்களைப் பாராட்டிப் பேசிய ஆளுநர், ‘கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து மாணவரொருவர் தேசிய நிலையில் முதலிடம் பெற்றுள்ளமை, மாகாணத்தின் கல்வி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது’ எனக் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேலும், ‘இந்தச் சாதனை மாணவர்கள் ஏனைய மாணவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்குவதோடு, எதிர்காலத்தில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டிகளாகவும் திகழ வேண்டும்’ எனவும்

 வலியுறுத்தினார். அத்துடன், இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் ஆளுநர் வெகுவாகப் பாராட்டினார்.

60adc8fa-9245-4f2f-9acb-42557f5c5ea9.jpe73deb342-b4a1-49c3-9276-b9af4565d8ca.jpe435343de-89fd-4a6a-8dac-b379c23f24bd.jpe

https://globaltamilnews.net/2026/231351/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.