Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலத்தில் தம்மிடையே அடிபடத் தொடங்கியிருக்கும் ஒட்டுக்குழுக்களின் கூலிகள்!!!!!

Featured Replies

இது சில காலங்களுக்கு முன் ஒன்றாக இருந்த கூலிகள் அடிபடத்தொடங்கி தெருவுக்கு இறங்கி இருக்கும் நிலையில், ஓர் கூலிகளின் இணையத்தளத்திலிருந்து....... உண்மைகள் மெல்ல மெல்ல .....

தமிழர்களை நாசம் செய்ய தமிழர்களையே பயன்படுத்தும் சிங்கள அரசு!

November 16,2007

பருத்தி வேந்தன்

கருணா புலிகளிடத்திருந்து தப்பித்து ஈ.என்.டி.எல்.எப். பிடம் சரணடைந்ததும், தனக்கு எதுவித கொள்கையும் இல்லை என்றும் நீங்கள் எதைச் சொல்கீறீர்களோ அதனைநான் செய்கிறேன் என்றும் வாக்குறுதி அளித்து ஈ.என்.டி.எல்.எப். பிடம் சரணகதியடைந்துள்ளார்.

திரு. வைகோ, திரு. நெடுமாறன், திரு. அலெக்சாண்டர் (முன்னாள் தமிழக டி.ஜி.பி.) போன்றோரது தூண்டுதலால் ஈ.என்.டி.எல்.எப். தலைவர் திரு. ஞானசேகரன் அவர்கள் சென்னையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதும், லண்டனிலிருந்த புங்குடுதீவுக் கிருஸ்ணன் ஈ.என்.டி.எல்.எப். வழியாக கருணாவுடன் தொடர்பை ஏற்படுத்தினார். கிருஸ்ணன் இலங்கை அரசின் உளவாளியாகச் செயற்பட்டு வருவது, ஈ.என்.டி.எல்.எப். அமைப்புக்குத் தெரிந்திருக்கவில்லை. பழைய புளொட் நபர் என்ற பெயரைப் பயன்படுத்திக் கொண்டு கிருஸ்ணன் ஈ.என்.டி.எல்.எப். அமைப்புடன் ஒட்டிக்கொண்டார்.

சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த கிருஸ்ணன், கருணாவை மீண்டும் கொழும்புக்கு அழைத்துச் சென்று சிங்கள உளவுத்துறையிடம் ஒப்படைத்தார். இதன் மூலம் கிருஸ்ணன் இலங்கை அரசின் அதி முக்கிய காட்டிக் கொடுப்பாளர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார்.

இலண்டனிலிருந்து அவர் கொழும்புக்குச் சென்றால் ஐந்து நட்சத்திர விடுதியில், சிவில் உடை சிங்களப் பாதுகாவலருடன் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உளவுத்துறையினரே கவனித்து வருகின்றனர். கடந்த 15-10-2007 அன்று கூட அவர் கொழும்பு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்து ஏதோ சதித் திட்டம் தீட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புளொட் இயக்கத்தின் அழிவுக்கும் இந்த கிருஸ்ணன்தான் முக்கிய பங்காற்றினார் என்பது அந்த இயக்கத்தினரின் கருத்துக்காளாக உள்ளன. கருணாவை இலங்கைக்கு மீண்டும் அழைத்துச் சென்று இவரே கருணாவின் அரசியல் ஆலோசகரானார். இடையிடையே திரு. ஆனந்தசங்கரி அவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கிவந்ததாக லண்டன்வாசிகள் தெரிவித்தனர். திரு. ஆனந்தசங்கரி அவர்கள் சமீபகாலமாக லண்டன் வரும்போதெல்லாம் கார் ஓட்டிச் செல்லும் வேலையையும் கிருஸ்ணன் செய்துவந்தார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் இலங்கை இராணுவ உளவுத்துறை திரு. ஆனந்தசங்கரி அவர்களை அவர்களது வாகனத்தில் அள்ளிப் போட்டுக்கொண்டு கருணா மறைந்திருந்த இடத்துக்குச் சென்றது. அங்கு கருணா பல்லிளித்து நிற்க ஆனந்தசங்கரி அவர்கள் தட்டுதடுமாறி வாகனததை விட்டு இறங்கி, “தம்பி நான் கனகாலமா உம்மை பார்க்கோனும் என்று கனபேரிட்ட கேட்டுத் திரிந்தனான். எப்படி இருக்கறியள்” என்று ஆரம்பித்து புலிகளைச் சும்மாவிடக்கூடாது என்று தனது பங்குக்கும் வீரத்தைக் காண்பித்த ஆனந்தசங்கரி அவர்கள், நாங்கள் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து நின்றால் பிரபாகரன் கிளிநொச்சியை விட்டு ஓடவெல்லோ வேணும் என்று தனது ஆசையையும் தெரிவித்தார்.

பின்னர் உளவுத்துறையினரைப் பார்த்து என்னை எதற்காக கூட்டிக்கொண்டு வந்தனீங்கள் என்று சங்கரியார் கேட்க, கிழக்கில் நீங்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து வேலைசெய்தால்தான் எங்களுக்கு நல்லது. அதற்காகத்தான் இங்கே கூட்டிவந்து கருணாவைச் சந்திக்க ஏற்பாடுசெய்தோம்.

கருணாவுக்கு முகமெல்லாம் மலர்ச்சி. தன்னை ஓர் அரசியல் தலைவர் என்ற அளவுக்கு இலங்கை அரசு உயர்த்தி உள்ளது. ஆனந்தசங்கரி அவர்கள் என்னைத் தேடிவந்து பார்க்கும் அளவுக்கு நான் உயர்ந்துவிட்டேன் என்று அதுவரை நுணிக்கதிரையில் இருந்த கருணா இந்த நினைப்புக்குப் பிறகு அடி ஆசனம் வரை நிமர்ந்து சௌகரியமாக அமர்ந்து புதிய கணக்கினை எண்ணிப்பார்க்க ஆரம்பித்தார்.

திரு.ஆனந்தசங்கரி அவர்களோ, கூனிக் குறுகி புலிகள் தலைவருக்கு கிளிநொச்சியில் கொடுத்த மரியாதைக்கு மேலாக கருணாவுக்கு மரியாதைக் கொடுத்து “தம்பி உமக்கு என்ன உதவியென்;றாலும் நான் செய்வதற்குத் தயாராயிருக்கிறன், வெளிநாடுகளில் எனக்குத்தான் ஆதரவு அதிகமாக இருக்குது. நான் கடிதங்கள் அனுப்பாத அரசாங்கமும் கிடையாது, ஆக்களும் கிடையாது. மகிந்தகூட என்னட்ட கேட்டுத்தான் எல்லாத்தையும் செய்கிறார்” என்று அடுக்கிக்கொண்டு போக, உளவுத்துறையினர் ‘போதும் இவ்வளவும் போதும், மட்டக்களப்பில் நடக்கவேண்டியதைப் பேசுங்கள்” என்றனர்.

சங்கரி அவர்களுக்கு என்னபேசுவதென்றே தெரியாது, உளவுத்துறையினரைப் பார்த்து நீங்கள் என்ன சொன்னாலும் நான் சம்மதம், தம்பி (கருணாவைப் பார்த்து) நீர் என்ன சொன்னாலும் நான் செய்யிறன். பேச்சுவார்த்தையே வேண்டாம், புலிகளை ஒழித்தால் சரி, அதுதானே உமது கொள்கையும், எங்கள் எல்லோரது (உளவுத்துறையினரைப் பார்த்து) கொள்கையும் அதுதானே. என்று கூறி சரி நான் போட்டுவரட்டே என்று கருணாவுக்கு கையை நீட்டி விடைபெற்று வந்த வாகனத்திலேயே யாரும் சொல்லாமலேயே ஏறிக்கொண்டார் சங்கரியார். (குறிப்பு;:- திரு.ஆனந்தசங்கரி அவர்கள் இதனை மறுத்தால் நான் ஆதாரத்துடன் வெளியிடத் தயாராக இருக்கிறேன்)

கருணா ஐரோப்பாவுக்குப் புறப்படுவதற்கு முன்னர் இந்த நாடகங்கள் நடந்தன. கருணாவின் பிரதம ஆலோசகர் புங்குடுதீவு கிருஸ்ணப்பிள்ளைதான் கருணாவுக்கு ஐரோப்பிய ஐடியாவைக் கொடுத்தவர். ஐரோப்பாவுக்குள் சென்றால் யாராலும் எதுவும் செய்யமுடியாது, தனக்கு அந்த அளவுக்கு அங்கே செல்வாக்கு உண்டு என்று கருணாவை நம்பவைத்தார் கிருஸ்ணன். கருணாவையும் அவரது மனைவியையும் ஐரோப்பா மோகம் உருக்குலைத்து வந்தது. குறிப்பாக லண்டன்தான் அவர்களது உள்ளத்தின் கனவுக்கோட்டையாக இருந்துவந்தது.

கிருஸ்ணனின் எண்ணப்படி லண்டன் வந்து சேர்ந்தால் கருணா தனது பிடியில்தான் இருக்கவேண்டும். வேறு யாரும் அவருடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க கருணாவை லண்டனுக்குத் தள்ளிச் சென்றால் மட்டுமே சாத்தியம், அதன் பின்னர் கருணாவின் கட்சி கிருஸ்ணனின் காலடியில் என்பது புங்குடுதீவுக் கிருஸ்ணனின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

அதன்படி கருணா லண்டனுக்கு சிங்கள நபரின் கடவுச் சீட்டில் தள்ளிச் செல்ல அரசாங்கமே வழிசமைத்துக் கொடுத்தது. கிருஸ்ணன் யாருக்கும் தெரியாமல் மத்திய லண்டனில் தனியான வீடு ஒன்றினை விலைக்கு வாங்கி கருணாவையும் குடும்பத்தையும் குடியமர்த்தினார். இந்தவிடயங்களில் கிருஸ்ணனுக்கு சொந்தமாகப் புத்திவேலை செய்யாது. இவற்றுக்கு உதவியது உண்டியல் புகள் ஜெயதேவன் என்பது திரைமறைவில் கிடைத்த தகவலாகும்.

இந்த ஜெயதேவனை கருணாவுக்கு அறிமுகப்படுத்தியது புங்குடுதீவு கிருஸ்ணன்தான். ஜெயதேவன் ஓர் கணக்குப் பிள்ளை. லண்டனில் கோவில் உண்டியல் பணத்தில் தனது வாழ்வைத் தக்கவைத்துக் கொண்டவர். கருணாவின் வரவு செலவுகளைப் பார்த்து அதனை முதலீடு செய்ய வேண்டும் என்று கிருஸ்ணப்பிள்ளை கூற அதுவரை கருணாவைத் தூற்றிவந்த ஜெயதேவன் கிருஸ்ணனையும் அழைத்துக்கொண்டு இந்தியாவில் தனக்கிருக்கும் முதலீடுகளைக் காண்பிக்க ஆரம்பித்தார். இதற்கென ஓர் சுற்றுப்பயணமும் நடைபெற்றது.

ஜெயதேவனின் மனைவியின் சகோதரன் தமிழகத்தின் கோயம்புத்தூரில் இருக்கிறார். அவர் ஜெயதேவனின் சில கோடி ரூபாய்களை முதலீடு செய்து கவனித்துவருகிறார். கருணாவின் பணத்தையும் அதுபோன்று முதலீடு செய்யலாம் என்று அறிவுரை கூறி கிருஸ்ணப்பிள்ளையும் கருணாவுக்கு ஆலோசனை கூறவைத்து கருணாவைக் களத்தில் இறக்கினர் இந்த இருவரும்.

அதன்படி பெனியன் தயாரிக்கும் இயந்திரம் ஒன்றினை தைவானிலிருந்து இறக்குமதி செய்து தொழிற்சாலை ஒன்றினை திருப்பூரில் ஆரம்பித்தனர். 2006ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது.

இதுமுதல் ஜெயதேவன் கருணாவின் நிரந்தரக் கணக்குப்பிள்ளையானார். கிருஸ்ணனுக்கு அரசியல் ஆலோசனையையும் இடையிடையே வழங்கி வருகிறார் இந்த முதலீடு மூலம் கருணாவுக்கு கிருஸ்ணன் மீது மிகவும் நம்பிக்கை ஏற்பட்டது. இதுவுமல்லாமல், வடிவேலு ஆனந்தன் (அல்லது ஆனந்தசிவா) என்பவர் கொழும்பு செட்டியா தெருவில் நகைக்கடை வைத்திருப்பவர் இவரை 2006 ஆம் ஆண்டு மாசிமாதம் ஆறாம் திகதி கிருஸ்ணனின் ஏற்பாட்டில் கடத்தப்பட்டார். அவரிடமிருந்த ரூபா 5கோடி பெறப்பட்ட பின்னர் 10-02-2006 அன்று விடுவிக்கப்பட்டார். இந்தக் கடத்தலுக்கும் பணப்பறிப்புக்கும் புங்குடுதீவு கிருஸ்ணன்தான் சூத்திரதாரி என்று கருணா அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

இவர் அல்லாமல், கொழும்பு நாலாம் குறுக்குத் தெருவில் சீனி வியாபாரம் செய்துவந்த சிறிஸ்கந்தராஜா என்பவரை அவரது கார் ஓட்டுனருடன் சேர்ந்து 20-07-2006 அன்று கடத்தப்பட்டார். இவரிடமிருந்தும் 5கோடி ரூபா பெற்றுக்கொண்டு அவர்களை விடுதலை செய்வதற்குப் பதிலாக அவர்கள் இருவரையும் தீவுச் சேனையில் வைத்து கொலை செய்து அங்கேயே புதைத்தும் விட்டனர். இந்தக் கடத்தலும் கிருஸ்ணன் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் நடந்தது. இருவரையும் விடுதலை செய்யவேண்டாம், கொன்றுவிடுங்கள் என்று உத்தரவிட்டது இதே கிருஸ்ணப்பிள்ளைதான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விரு சம்பவங்களுக்கும் கிருஸ்ணன்தான் சூத்திரதாரி என்று பிள்ளையான் சொன்னதும் கருணாவுக்கு இருப்புக்கொள்ளவில்லை. உடனே கிருஸ்ணன் சொல்படி நடந்தால் உலகின் உச்சிக்கே செல்லலாம் என்று தீர்மானித்துவிட்டார். அதன்படிதான் கருணா மீண்டும் கொழும்பு செல்ல வேண்டும் என்ற கிருஸ்ணனின் வலையில் வீழ்ந்தார்.

வடக்கிலிருந்துகிழக்கைப் பரிப்பதற்கு கருணாவைப் பயன்படுத்தவேண்டும் என்பது மகிந்தாவின் விருப்பம். மகிந்த உளவுத்துறையுடன் ஆலோசிக்க, உளவுத்துறை கிருஸ்ணனுடன் ஆலோசித்தது. கிழக்கைத் துண்டாடும் வரை கருணாவைப் பயன்படுத்துவதென்றும் அதன் பின்னர் கிருஸ்ணனே அந்த இயக்கத்தின் தலைவர் என்ற நிலையை உருவாக்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், நடந்ததோ வேறு!

நாளை தொடரும்.

சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினருக்கு இடையிலான உள்ளக மோதல்களால் சிறிலாங்கா இராணுவம் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "டெய்லி மிரர்" நாளேடு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

திசையாறியா கூட்டம் இப்பிடித்தான் .................

ஒருநாள் காலடியில் நசிந்து கொண்டு கிடக்கும் அப்போது நடந்தவைகளை

மறக்காமல் ஞபகம் வைத்து உதைக்க வேண்டியது எமது கடமை

  • கருத்துக்கள உறவுகள்

நாளை தொடரும்.

பழையபடி கருணா கும்பலுக்கு கருணாதான் தலைவராக இருக்கிறார் என்பதையும் மறக்காமல் போட்டுவிடுங்கள்.. அடிபடுவது எல்லாம் பணத்திற்காக மற்றும்படி மக்களின் நலனுக்காக அல்ல என்பது சாதாராண சுப்பனுக்கும் தெரிந்த விடயம்தானே..

கரி நாகம் கருணாவின் நிலை ?

கருணாவின் காசுகள் எங்கே?

லண்டன் என்ன செய்ய போகிறது கரி நாகத்தை?

மனைவி பிள்ளைகளுக்கு அகதி அந்தஸ்து கிடைக்குமா?

மனைவி மீது சில குற்றங்கள் இருக்கிறது தானே?

இவர்களுக்கு எங்கு இருந்து காசு வருகிறது?

அல்லது புலிகளுக்கு எதிராக செய்ற்படுபவர்களை தண்டித்தால் புலிகள் பக்கம் நியாயம் இருக்கிறது ஏற்க்க வேண்டிய நிலைவராலாம் என்றும் புலிகளுக்கு எதிராக செயற்படுபவர்கள் தாங்கள் செய்த குற்றத்திற்காக தங்களுக்கும் தண்டனை கிடைக்கும் என்று நினைத்து பின்வாங்குவார்களா?

இல்லை கருணாவுக்கு அகதி அந்தஸ்து கொடுத்து கிழக்குக்கு விடியல் என்று யாழ்ப்பாணி என்று பிரதேசவாதம் பேசும் கருணாவை வழிநடத்த தீவான் கிஸ்னரும் பருத்துதுறையான் ராஜசிங்கமும் பின் நின்று தோல்கொடுப்பார்களா?

( மேலே கூறப்பட்ட சில சொற்கள் உங்கள் மனதை புன் படுத்தி இருந்தால் மன்னிக்கவும்) இது சில மானம் ரோசம் இல்லாத சில பிறப்புக்களுக்காக எழுதப்பட்டது தமிழ் தேசியத்தை நேசிக்கும் எந்த ஒரு உறவையும் கயப்படுத்துவதற்க்கு இல்லை)

இந்த 3 பேர் கூட்டனியை மேலும் அம்பலப்படுத்தி தமிழீழத் தேசதுரோகிகளின் உண்மை முகத்தை வெளியே கட்டுவோமா? இல்லை கரி நாகம் கருணாவின் கொள்ளை அடித்த காசுக்காக அவன் யாழ்பாணி என்று சொன்னது தேசியத் தலைவரை மட்டும் தான் எங்களை இல்லை என்று லண்டனில் நக்க திரிவோமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.