Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீன்பாடும் தேன் நாடு - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

--------------------------------------

மீன்பாடும் தேன்நாடு

வங்கக்கடலுக்கோ வெண்பட்டு மணல்விரிப்பு

மலையகத்து அருவிகட்கோ பச்சை வயல்விரிப்பு

பாடும்மீன் தாலாட்டும் பௌர்ணமி நிலாவுக்கு

ஒயிலாக முகம்பார்க்க ஒய்யாரமாய்த் தூங்க

மட்டு நகரில் வாவியிலே நீர்விரிப்பு.

எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் அனுபவிக்க

சொந்தங்கள் இங்கே துயரம் சுமக்கிறது.

காலமெல்லாம் இங்கே

கணபதியும் எங்கள் காக்கா முகம்மதுவும்

தெம்மாங்குபாட திசைகாணும் தாய் எருமை.

திசைதோறும் புற்கள் முலைதொட்ட பூமியிலே

கன்றை நினைந்து கழிந்தபால் கோலமிடும்.

காடெல்லாம் முல்லை கமழும் வசந்தத்தில்

வயல்புறங்கள் தோறும் வட்டக்களரி எழும்.

வட்டக்களரியிலே வடமோடிக் கூத்தாடும்

இளவட்டக்கண்கள்

தென்றல் வந்து மச்சியின் தாவணியை இழுப்பதிலே

தடுமாறும் கால்கள் தாளம் பிசகாது.

குதிரையிலேதாவி கொதிப்போடு இளவரசன்

போருக்குப் போவான்

கொடும்பகையில் வென்றிடுவான்.

எட்டாக வட்டமிட்டு இறுமாப்பாய்த் தலைநிமிர்ந்து

செட்டாகப்பாடிச் செழிப்பார்கள் போர்வீரர்

அண்ணாவிதட்டும் மத்தளத்தின்

தாளத்தின் சொற்படிக்கு

எல்லாமே வட்டக் களரியிலே மட்டும்தான்,

படிக்கட்டில்

பொல்லாவறுமை பசியோடு இவனுடைய

கைகோர்த்துச் செல்லக் காத்திருக்கும் வேதனைகள்.

போடியாரின் மாளிகையில் போரடித்த நெல்குவித்து

நாடோடிப் பாடல் மகிழ்ந்து பசிமறக்கும்.

ஊரின்புறத்தே ஒருநாள் நடக்கின்றேன்,

எல்லைப்புற வயலும் எழுவான் கடற்கரையும்

செல்வங்கள் எல்லாம் சொத்தாய்ப் பிறர்கொள்ள

பொட்டல்வெளியில்

கணபதியும் எங்கள் காக்கா முகம்மதுவும்

சிண்டைப்பிடித்துக் கிடக்கின்றார், என் சொல்வேன்!

1982.

1980பதுகளில் ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் தூண்டிவிடப்பட்ட மோதல்கள் தந்த துயருடன் எழுதியது.

நீங்கள் கவிதை வரைந்த காலகட்டத்தில் நான் பிறக்கவே இல்லை தமிழ்,முஸ்லீம் மக்களுகிடையில் 1980 யில் நடந்த மோதலை பற்றி நீங்கள் சொல்லி தான் அறிந்து கொண்டேன்!அந்த துயரில் நீங்கள் எழுதிய கவிதை பல துயர்களை மனகண்ணின் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது!! :o

கிழக்கு ஈழத்தின் வனப்பை அழகாக வர்ணித்து வந்த கவிதையின் இறுதிப் பகுதி மனதைக் கனக்க வைக்கிறது.

தமிழீழ ஒருமைப்பாட்டுக்கான உங்கள் முயற்சிகளுக்குத் தலைவணங்குகிறேன்.

எல்லைப்புற வயலும் எழுவான் கடற்கரையும்

செல்வங்கள் எல்லாம் சொத்தாய்ப் பிறர்கொள்ள

பொட்டல்வெளியில்

கணபதியும் எங்கள் காக்கா முகம்மதுவும்

சிண்டைப்பிடித்துக் கிடக்கின்றார், என் சொல்வேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு ஈழத்தின் வனப்பை அழகாக வர்ணித்து வந்த கவிதையின் இறுதிப் பகுதி மனதைக் கனக்க வைக்கிறது.

தமிழீழ ஒருமைப்பாட்டுக்கான உங்கள் முயற்சிகளுக்குத் தலைவணங்குகிறேன்.

தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் மலையகத் தமிழருக்கும் இடையில் நீதியும் சமத்துவமும் உள்ள ஒருமைப் பாட்டுதான் விடுதலை. அதுதான் என் வாழ்வின் கனவு இணையவன். வடபகுதி முஸ்லிம்களின் தாயக மீழ் குடிவரவுக்கும் அவர்கள் இழப்புகளில் இருந்து மீண்டு நிமிர என் ஆற்றல் பயன்படுமானால் பங்களிப்புச் செய்ய வாய்க்குமானால் நான் நிம்மதியாகக் கண்மூடுவேன்.

Edited by poet

இந்து முஸ்லீம் கலவரத்தை தந்திரமாய் தூண்டிவிட்டு எமது சொத்தை நிலத்தை அபகரிக்கும் அவர்கள் (சிங்களவர் ) என்றுதான் இதையுணர்ந்து திருந்துவாரோ... இவர்கள்?!

கவிதை அருமை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்து முஸ்லீம் கலவரத்தை தந்திரமாய் தூண்டிவிட்டு எமது சொத்தை நிலத்தை அபகரிக்கும் அவர்கள் (சிங்களவர் ) என்றுதான் இதையுணர்ந்து திருந்துவாரோ... இவர்கள்?!

கவிதை அருமை

நன்றி கெளரிபாலன், இக்கவிதை மூலம் எனக்கு நிறைய கிழக்கு மாகாண தமிழ் மூஸ்லிம் தோழதோழியர்கள் அறிமுகமானார்கள். காலங்கள் குருதிசிந்தச் சிந்தக் கடந்து சென்றதைப வாழ்நாள்முழுவதும் பார்த்துவிட்டேன். எனது தோழ தோழியரின் பிள்ளைகளாவது ஒன்றாகிக் கைகோர்த்து வாழ்வின் சவால்களை ப் புறங்கண்டு வாழவேண்டும்..

அருமையான வர்ணனையுடன் ஆரம்பித்து சோகத்துடன் நிஜத்தைக் கூறி முடித்துவிட்டீர்கள்.

கவிதை அருமையாகவுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான வர்ணனையுடன் ஆரம்பித்து சோகத்துடன் நிஜத்தைக் கூறி முடித்துவிட்டீர்கள்.

கவிதை அருமையாகவுள்ளது.

ரசிகைக்கு நல்வாழ்த்துக்கள். கிழக்குமாகாணத்துடனான எனது தொடர்பு வலிமையானது. 1977 புயலின்போது கிழக்கைச் சேர்ந்த யாழ் பல்கலைக் களக மாணவர்களோடு முதல் பஸ்வண்டியில் அங்குபோய்ச் சேர்ந்தோம். என்னோடு பயணித்த யாராவது இதனை வாசிக்கக் கூடும். பின்னர் 1981 நககிரியாற்று நீரை சிங்களவர்கள் சில்லிக்கொடிவாய்க்காலினல் கல்பறித்து மறித்த கலவரதின்போது அங்கு சென்றேன். அவை பெரிய கதைகள். அந்தப் பயணதின்போதுதான் தோழர் அஸ்ரப்பை முதன் முதலில் சந்தித்தது. அவர் தனது தேன்நிலா இரவுகளையும் காதிருக்கும் காதல் மனைவியையும் மறந்து என்னோடு பேசிக்கொண்டிருப்பார். தோழர் அஸ்ரப் தமிழ் பேசிக் கேட்டிருக்கிறீர்களா? இலக்கியத்தில் கன்னித் தமிழ் என்கிறது அதுவாகத்தான் இருக்கும். பின்னர் 1990ல் மட்டக்களப்பு அபிவிருத்திதொடர்பாக நோறாட் நிறுவனத்துக்காக வெளிக்கள ஆய்வுகளில் ஈடுபட்டேன். அது உயிர் ஆபத்துகள் நிறைந்த நாட்கள். பின்னர் ஒவ்வொரு வருடமும் மட்டக்களப்பு அக்கரைப்பற்று பொத்துவில் அறுகம்குடா பாணமை குமண வடகிழக்கு மாகாணத்தில் தெற்கெல்லையான கும்புக்கன் ஓயா என்று என்னுடைய தமிழ் முஸ்லிம் தோழ தோழியரைச் சந்திக்கிறதும் அளவளாவிக் கற்றுக் கொள்கிறதும் கூடித் திரிகிறதுமே எனது வாழ்வாயிற்று. கிழக்கின் அழகிலும் கிழக்கின் அவலங்களிலும் இயன்ற அளவு அக்கறையாக இருந்திருக்கிறேன். யாழ்பாணத்தைச் சேர்ந்த எங்களில் பலருக்கு ஈழம் ஆணையிறவுவரைக்கும்தானே. ரசிகை அமைதியோ போரோ அடுத்த தடவை இலங்கைக்குச் செல்லும்போது கிழக்கு மாகானத்துக்கும் போய்வாருங்கள்.

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீன்பாடும் தேன்நாடு கவிதை பற்றி அண்மையில் எனக்கு வந்த மின் அஞ்சல்களில் ஒன்றின் சில பகுதிகளை இங்கு இணைக்க விரும்புகிறேன் :

.......... கவிஞருக்கு

வெகுகாலத்திற்குப் பிறகு ........... நான் சுவைத்துப் படித்த கவிதை. கவித்துவமிக்க சொற்கள், மட்டுநகர் கண்முன்னே நிற்கிறது, பாடுமீன் தாலாட்டுகூட காதில் ஒலிப்பதுபோல பிரமை. கன்றை நினைந்து கழிந்தபால் கோலமிடும், ரசித்துவாசித்தேன். ஊடுபாவாக சோகம் இழையோடுவதை ஆரம்பத்திலேயே உணர்ந்தபோதிலும், இறுதியிலே வாழ்ந்த பொழுதின் ஏக்கத்தில் தாளுடைந்து தண்டூன்றி தளர்ந்த மனத்தினை தேற்றும் வகையறியாத வாசகனாகிப்போனேன் .

மீண்டும் தங்கள் தமிழுக்குக் தண்டனிட்டு - நாகி

எனக்கு மின்னஞ்சல் எழுதுகிற கவிதை ஆர்வலர்களுக்கு நன்றிகள்.

visjayapalan@gmail.com

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.