Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசாலை காவல்துறை மீது கடற்புலிகள் அதிரடித் தாக்குதல்

Featured Replies

மன்னார் மாவட்டம் பேசாலையில் அமைந்துள்ள காவல்துறை நிலையம் மீது இன்று காலை கடற் புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

ஆறு படகுகளில் வந்த கடற்புலிகள் காலை 8.00 மணியளவில் காவல்துறை நிலையம் மீது தாக்குதலை நடத்தியுள்ளன.

இதேவேளை தலைமன்னார் கடற்படைத் தளம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் விடுதலைப் புலிகளின் தாக்குதலை தாம் முறியடித்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் 17 பேர் கொல்லப்பட்டதாகவும் புலிகளின் ஒரு படகு சேதமடைந்ததாகவும் சிறிலங்கா படைத்தரப்புத் தெரிவித்துள்ளது.

மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை.

  • தொடங்கியவர்

Sea Tigers open fire on coastal sentry in Peasaalai

[TamilNet, Friday, 23 November 2007, 06:32 GMT]

Six gunboats of Sea Tigers, the naval wing of the Liberation Tigers of Tamileelam (LTTE), Friday morning at 7:50 approached Peasaalai and opened fired from their vessels on coastal naval and police posts, Police said. The Sri Lanka Navy (SLN) from Peasaalai and Vangkaalaippaadu were engaged in fighting the Sea Tigers. Thereafter, a naval clash erupted 2 km off Peasalai and lasted for 35 minutes. The clash later shifted to Thalai Mannaar and went on for more than 3 hours in the seas off Thalai Mannaar.

Some houses on the Peasalai coast have sustained damages during the clash and civilians in wards 01, 02, 03 and 04 sought refuge at Our Lady of Victory Church. Later, the civilians from the remain four wards also fled their houses and sought refuge at St. Mary's school.

All traffic to and from Thalai Mannar via Peasaalai on A14 road was halted from 7:50 a.m.

TamilNet

  • கருத்துக்கள உறவுகள்

பேசாலை பொலிஸ் காவலரண் மீது தாக்குதல்

வீரகேசரி இணையம்

மன்னார் பேசாலை பொலிஸ் காவலரண் மீது இன்று வெள்ளிக்கிழமை காலை விடுதலை புலிகள் தக்குதல் நடத்தியுள்ளனர். இன்று காலை இரு படகுகளில் வந்த விடுதலை புலிகள் இத் தாக்குதலை நடத்தியதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எனினும் இன்று காலை விடுதலை புலிகள் பேசாலை பொலிஸ் காவலரண் மீது தொடுத்த தாக்குதலை பேசாலை பொலிஸார் முறியடித்துள்ளதுடன் புலிகளின் ஒரு படகு இத் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாகவும் இதி பொலிஸாரிற்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை எனவும் ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

பேசாலை கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி சிறிலங்கா கடற்படையினரின் மேற்கொண்ட முன்னகர்வு தாக்குதல் நடவடிக்கையை கடற்புலிகள் முறியடித்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி 23-11-2007 15:02 மணி தமிழீழம் [செந்தமிழ்]

பேசாலை கடற்பரப்பில் இருந்து கரைநோக்கி கடற்புலிகள் தாக்குதல்

ஆறு விடுதலைப்புலிகளின் கடற்கடலங்கள் இன்று காலை 7.50 மணியயளவில் மன்னார் பேசாலை பகுதியில் கடல்வழியாக சென்று கரையோர பகுதியில் அமைந்திருந்த சிறீலங்காபடைகளின் நிலைகளை இலக்கு வைத்து தாக்குதல் நிகழ்த்தியதாக தெரியவருகிறது.

இதனையடுத்து பேசாலை வங்காலைப்பாடு பகுதியில் சிறீலங்கா கடற்படையினருடனும் மோதல்கள் இடம்பெற்றுள்ளது. பேசாலைப்பகுதியில் இருந்து 2 கிலோமீற்றர் தொலைவில் நிகழ்ந்த இம்மோதல் சுமார் 35 நிமிடநேரம் நீடித்துள்ளதாக தெரியவருகிறது.

பின்னர் மோதலானது தலைமன்னார் பகுதிக்குள் நிகழ்ந்ததாகவும் இச்சமர் சுமார் 3 மணித்தியாலத்திற்கு மேலாக நிகழ்ந்ததாகவும் தெரியவருகிறது.

இம்மோதல்களையடுத்து பொதுமக்கள் குடியிருப்புகளான 1ம், 2ம், 3ம் மற்றும் நான்காம் காலணிகள் சில சேதமடைந்துள்ளதாகவும் பொதுமக்கள அவ லேடி விக்ரோறியா சேர்ச்சில் தஞ்சமடைந்ததாகவும் பின்னர் அவர்களது வீடுகளுக்கு டிசன்றதாகவும் தெரியவருகிறது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

பேசாலை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் முன்நகர்வு முறியடிப்பு

மன்னார் பேசாலை கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி சிறிலங்கா கடற்படையினரின் மேற்கொண்ட முன்நகர்வு தாக்குதல் நடவடிக்கையை கடற்புலிகள் முறியடித்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் பேசாலை பொலிஸ் காவலரன் மீது தாக்குதல்

வீரகேசரி இணையம்

மன்னார் பேசாலை பொலிஸ் காவலரன் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நொஹெல் சந்தன குடா ஹெட்டி தெரிவித்துள்ளார்.

இதற்கு பொலிஸாருக்கும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது 4 படகுகளில் வந்த விடுதலைப்புலிகள் இத்தாக்குதலை நடத்தியதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர் .

இத்தாக்குதல் சுமார் அரை மணி நேரம் வரை நீடித்துள்ளதாகவும் பொலிஸாரின் பதில் தாக்குதலையடுத்து விடுதலைப்புலிகளின் படகுகள் மன்னார் விடத்தல் தீவை நோக்கி சென்றதாகவும் மன்னார் சிரேஷ்ட அத்தியட்சகர் மேலும் குறிப்பிட்டார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.