Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகளுக்கு ஐ.நா. குண்டு துளைக்காத வாகனங்கள்: ஜே.வி.பி. குற்றச்சாட்டு

Featured Replies

ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெஃப் கிளையானது வன்னியில் உள்ள விடுதலைப் புலிகளுக்கு குண்டு துளைக்காத வாகனங்களை வழங்கியிருப்பதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

ஜே.வி.பி.யின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது - ஜ.நா அலுவலகம்

குண்டு துளைக்காத தகடுகள் பொருத்தப்பட்ட வாகனங்களை யுனிசெப் விடுதலைப் புலிகளுக்கு வழங்கியுள்ளதாக ஜே.வி.பி. முன்வைத்துள்ள குற்றச்சாட்டை கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் முற்றாக மறுத்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

குண்டுத்துளைக்காத வாகனங்களையும் யுனிசேப் புலிகளுக்கு வழங்கவுள்ளது

வீரகேசரி நாளேடு

குண்டு துளைக்காத தகடுகள் பொருத்தப்பட்ட வாகனங்களை விடுதலைப் புலிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நலன் பேணும் அமைப்பான யுனிசெவ் விடுதலைப் புலிகளுக்கு வழங்கியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஜே.வி.பி. யின் பாராளுமன்றக் குழுத்தலைவர் விமல் வீரவன்ச சபையில் கோரிக்கை விடுத்தார்.

இலங்கையில் சிறுவர்களின் நன்மைக்காக கிடைக்கும் பணத்தை யுனிசெவ் நிறுவனம் புலிகளுக்கு வழங்கியுள்ளது. அதேபோல் குண்டு துளைக்காத தகடுகள் பொருத்தப்பட்ட வாகனங்களையும் வழங்கியுள்ளது. இத்தகைய நிலையில் வெளிவிவகார அமைச்சு இருளில் தடுமாறிக் கொண்டிருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் வி.ஜே.மு.லொக்குபண்டார தலைமையில் கூடியபோது பிரதான நடவடிக்கைகள் முடிவடைந்ததன் பின்னர் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதை அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

ஐக்கிய நாடுகள் சபையோடு இணைந்த யுனிசெப் நிறுவனம், இலங்கையிலிருக்கும் பிரிவினைவாத புலி பயங்கரவாதிகளுக்கு சார்பாக செயல்படுவது தொடர்பாக இந்த அதியுயர் சபையின் கவனத்துக்கு பல முறை கொண்டு வந்துள்ளோம். அதற்கேற்ப ரூபா 10 கோடிக்கும் அதிகமான பணத்தை தமிழர் புனர்வாழ்வு அமைப்பின் ஊடாக புலி பயங்கரவாதிகளுக்கு ஒரு வருட காலத்துக்குள் பெற்றுக் கொடுப்பதற்கு யுனிசெப் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருப்பதும் புலிகள் அமைப்போடு தொடர்புடைய நபர்களை யுனிசெப் நிறுவனத்தின் ஊழியர்களாக நியமித்துக் கொண்டிருப்பதும் தொடர்பாக எமது ஆரம்ப அறிக்கையின் வாயிலாக விடயங்களை முன்வைத்தோம்.

அதன் பின்னர் "யுனிசெப்' நிறுவனத்தின் மூலம் இலங்கைக்கு வரவழைத்திருக்கும் "யுத்தப் பங்கீடு' வகையைச் சேர்ந்ததும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்கு பழுதடையாமல் வைத்திருக்கக்கூடிய 5640 உணவுப்பொதிகள் தொடர்பாக இந்த அதியுயர் சபையின் கவனத்துக்கு கொண்டு வந்தோம். அந்த உணவுப் பொதிகளைத் தற்போது சுங்கத் திணைக்களம் பொறுப்பேற்றுள்ளது. எனக்குக் கிடைத்த தகவலின்படி 1200 கிராம் நிறை கொண்ட உணவுப் பொதிகளுக்குள் நீரைச் சுத்திகரிக்கக்கூடிய வில்லைகளும் இருந்திருக்கின்றன. அவசர நிலைமைகளின்கீழ் ஐ.நா. சபை ஊழியர்களின் பிரயோஜனத்துக்கு எடுப்பதற்காகவே இவை வரவழைக்கப்பட்டதாக யுனிசெப் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால் தண்ணீரை சுத்திகரிக்கும் வில்லைகள் அடங்கிய "யுத்தப் பங்கீடு' வகைச் சேர்ந்த நீண்டகாலமாக கானகப் போர்களில் ஈடுபடும் போர் வீரர்களுக்கு மாத்திரம் தேவைப்படும் இந்த உணவுப்பொதிகள் யுனிசெப் நிறுவனத்தின் மூலம் இலங்கைக்கு வரவழைத்திருப்பது முல்லைத்தீவு, கிளிநொச்சி மோதல்களின்போது பயன்படுத்திக் கொள்வதற்காகவேயன்றி வேறொன்றுக்குமல்ல என்பது சிறு குழந்தைக்குக்கூட தெரியும். எனவே இது தொடர்பாக உடனடி விசாரணையொன்றை மேற்கொண்டு கடுமையான முடிவுகள் எடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

குண்டு துளைக்காத வாகனம் யுனிசெப் நிறுவனத்தின் அதிகாரிகள் புலி பயங்கரவாதிகளுக்காக செய்து கொடுக்கும் மற்றொரு உதவி தொடர்பாகவும் இந்த அதியுயர் சபையின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். அதாவது யுனிசெப் நிறுவனத்தின் பெயர் கொண்ட வாகனங்களில் குண்டு துளைக்காத தகடுகளைப் பொருத்தி புலி பயங்கரவாதிகளின் கைக்குக் கொடுப்பதாகும். யுனிசெப் நிறுவனத்துக்காக வடக்கு, கிழக்கில் சேவையாற்றும் உறுப்பினர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் குண்டுத் தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்கக் கூடியவாறு தயாரித்துக் கொள்ளும் நோக்கத்தில், குண்டுத் துறைக்காத தகடுகளை பொருத்திக் கொள்வதற்கு ஜெனிபர் டேலர் நடவடிக்கை எடுத்துள்ளார். 2006 மார்ச்சில் இலங்கையிலுள்ள ஒரு நிறுவனத்தின் மூலமாக இந்த குண்டுத் துளைக்காத தகடுகளைப் பொருத்திக் கொள்ள ஜெனிபர் டேலர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்காக யுனிசெப் நிறுவனத்துக்குச் சொந்தமான 12,375 அமெரிக்க டொலர் செலவளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணம் கதி/2006/1250090/000,000,0490 இலக்கம் கொண்ட பற்றுச்சீட்டொன்றின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஆச்சரியம் தரக்கூடிய விடயம் என்னவென்றால், இந்தக் குண்டு துளைக்காத தகடுகள் "யுனிசெப் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரேயொரு வாகனத்துக்கே பொருத்தப்பட்டிருக்கிறது என்பதுதான். அது ஙிகஏN 9401 இலக்கம் கொண்ட லேண்ட் கு×சர் வாகனம். அடுத்த கேள்வி என்னவென்றால், இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்தி மேற்படி தகடு இந்த வேண்டு கு×சர் வாகனத்துக்கு மாத்திரம்தான் பொருத்தப்பட்டதா என்பதுதான். இந்தக் தகடுகள் பொருத்தப்பட்ட ஏனைய வாகனங்கள் "யுனிசெவ்' நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனங்கள் இல்லையா? இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஐ.நா. அதிகாரிகள் விசாரணை நடத்தாமலிருப்பது அது அவர்களுக்குத் தெரியாமல் நடந்தது என்பதாலா?

யுனிசெப் நிறுவனம், தனக்குச் சொந்தமான வாகனமொன்றை புலிகள் சார்பு தமிழர் புனர்வாழ்வுக் கழக அமைப்புக்குப் பெற்றுக் கொடுத்திருப்பதாக இதற்கு முன்னர் நாம் இந்த சபையின் கவனத்துக்கு கொண்டு வந்தோம். இப்படியான நிலைமையின்கீழ் இந்த குண்டு துளைக்காத வாகனங்கள் புலிகள் அமைப்புக்குக் கிடைத்திருக்காது என கூறுமளவுக்கு எந்தக் காரணமும் எம்முன்னால் இல்லை. இது ஒரு பயங்கர நிலைமையாகும் என்பதை புதிதாக சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லை. மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக இலங்கைக்குப் படிப்பிப்பதற்கு தயாராகும் ஐ.நா. சபையின் கொழும்பு அதிகாரிகளின் செயல்கள் இவ்வாறு இருக்கும்போது வெளிநாட்டமைச்சு மௌனம் சாதிப்பதன் காரணம் என்ன? இலங்கைச் சிறுவர்களின் நன்மைக்காக கிடைக்கும் பணம், புலி பயங்கரவாதிகளின் பிரயோஜனத்துக்கு பயன்படுத்துவது சர்வதேச சட்டத்துக்கு ஏற்பட்ட கடுமையான குற்றம். அதனை நிரூபிப்பதற்கு நாங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த தகவல்கள் மாத்திரம் போதுமானதாகும். ஆனால், பாகிஸ்தான் இலங்கையின் நண்பனா? எதிரியா என்பதைக்கூட அறிந்து கொள்ள முடியாமல் இருளில் தடுமாறும் வெளிநாட்டு அமைச்சு, தொடர்ந்தும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கின்றது. இப்போது செய்ய வேண்டியதென்னவெனில் மத்திய வங்கி, வெளிநாட்டு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றை ஒன்றிணைத்து விசாரணையொன்றை நடத்தி, இந்த புலிகள் சார்பு விளையாட்டை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான உறுதியான தீர்மானங்களை எடுத்து அதனைச் செயல்படுத்துவதுதான். ஆனால் இது தொடர்பாக அவ்வாறாக இணைந்த தலையீடொன்று நடப்பதாக எமக்குத் தெரியவில்லை.

ஜெனிபர் டெய்லர்களை போன்றே அவர்களின் உயரதிகாரிளுக்கும் ஆபிரிக்காவின் ஒரு இருண்ட மூலையில் இருக்கும் ஒரு நாடாகவே இலங்கையை எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது அவ்வாறல்ல என்பதை நிரூபித்துக் காட்டுவதற்காக நாம் செயல்பட வேண்டும். அதற்காக கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு, உண்மையான அனைத்து தேசாபிமான சக்திகளிடமும் நாம் கேட்டுக் கொள்கின்றோம். புலி பயங்கரவாதிகளுக்குச் சார்பான இந்தக் கும்பலை நாங்களே தோற்கடிக்க வேண்டும். பாதுகாப்புப் படைகள் புலிகளைத் தோற்கடிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். புலிகளின் சர்வதேசக் கும்பலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து அவர்ளைத் தேற்கடிக்க வேண்டியது எமது பொறுப்பு, அதனை நாங்கள் சரியான முறையில் பூர்த்தி செய்யத் தவறினால் புலிகளைத் தோற்கடிப்பது பாதுகாப்பு படைகளுக்கு இலேசாக இருக்காது. எனவே, நாம் எமது முன்னணியினால் எமக்குரிய கடமையைச் செய்வோம். அதற்காக முன்வருமாறு அனைத்து தேசாபிமான சக்திகளிடமும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

JVP யினர் இப்போது மிகவும் கோமாளிகளாக மாறிவிட்டனர் !என்ன பேசுவதென்று தெரியாமல் ஏதோ வாய்க்கு வந்தமாதிரியெல்லாம் நடக்குது. பாவம், ஆட்சி கலைந்தால் பதவி போய்விடும் என்ற கவலை. இவர்களை நம்பி வாக்குப் போட்ட மக்களை என்னவென்பது ? தாடியும் மீசையும் வைத்தால் எல்லாரும் ஷேகுவேரா ஆகிவிடலாம் என்று நினைக்கிற கூட்டம்.

மொரட்டுவையில் என்னுடன் பொறியியல் படித்த பல வறுமைப்பட்ட தென்பகுதி சிங்கள நண்பர்களைப் பார்த்திருக்கிறேன். எப்போதுமே, ஷர்ட்டை வெளியே விட்டபடி, கையில் ஒரு சிகரெட்டை பத்திக் கொண்டு சோஷலிசம் பேசுவார்கள். எங்கேயொ வாசித்து விட்டு வந்து கதைப்பது அப்படியே தெரியும். சொந்தமாக ஆங்கிலத்தில் ஒரு வசனம் பேச முடியாதவர்கள். ஆங்கில விரிவுரைகளை சிங்களத்தில் எழுதிப் படிப்பவர்கள். ஆனாலும் மிக அருமையாக சோஷலிசம் பேசுவார்கள். புலிகள் ஒரு முதலாளித்துவ அமைப்பு, நீங்கள் எல்லாரும் எங்களுடன் இணைந்து உலக முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராகப் போராட வேண்டும் என்று மணிக்கணக்கில் இருந்து பேசுவார்கள். பல்கலைக்கழகத்தின் சுவரெல்லாம் இவர்களின் கைவண்ணம் தான். இறுதியாண்டுப் பரீட்சையில் இவர்களில் பலரைக் காணவில்லை. அடுத்தமுறைப் பரீட்சையில் பார்கலாம் என்று இருந்து விட்டர்களாம்.

இப்போது சிவப்பு நிறம் மாறி பச்சை வந்து விட்டது. சோஷலிசத்தை மருந்துக்கேனும் காணோம். இனவாதம் தான் தாரக மந்திரமாகிவிட்டது. பாவம் கொள்கையற்ற, சுய சிந்தனை அற்ற, கனவுலகில் வாழும் கூட்டம் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.