Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அநுராதபுரத்தில் கிளைமோர் வெடித்து 13 பேர் பலி

Featured Replies

Take a look at the picture in www.defence.lk.

Look at the killed .. Most of them are males, well dressed and wearing belts. Good Body structure. Typical for a Soldier. ( No country side farmers are in the photos ). Even the three ladies are in the Army / Police age - not a normal village sinhale girl / Lady look.

Even the wounded who were carried to the hospital are males and in the same style clothing and age group. No villages there.

The photoes were taken today in day light - Why didnt they take the photo immediatly after the blast - Last night 8 pm. Dont they have a flash ??

Why the claymore blast didnt break the Front Windows of the bus ? But managed to destroy the Name Board on the top. ( It must have broken by someone after the blast - When Army takes a normal CTB bus, they leave the hanging sign but put ARMY on the Name Board., this is usual in SL.

Even the lady who is comforting someone today.. Not on the blast site, but somewere in a hospital premises is wearing sunglasses ?? ( This picture doesnt belong there, Thats why )

Now its upto you peple to decide, who these civillians were !! And where they were heading !!

Make up your own mind.

Edited by rajasinl

  • கருத்துக்கள உறவுகள்

கெப்பிடிகொல்லாவ சம்பவத்தை யாரும் கண்டனம் செய்ய முன்வரவில்லையே: சிறிலங்கா அமைச்சர்

கண்டணத்துக்காகவே நடந்தது போல் அல்லவா இவரன் கருத்து இருக்கின்றது.

விடுதலைப் புலpகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளை சர்வதேசம் கண்டு கொள்ளமலிருப்பதையிட்டு கடும் கண்டனத்தை வெளியிட்டிருக்கும் அரசாங்கம் புலிகளுக்காகப் பேசுகின்ற தொண்டர் அமைப்புகள் கூட மௌனம் சாதிப்பதாக விசனம் தெரிவித்துள்ளது.

கெப்படிகொல்லவ தாக்குதல் புலிகளின் பாரிய பின்னடைவின் வெளிபாடு எனவும் அப்பாவி பொதுமக்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தும் புலிகளை தேடி அழிக்கும் கடும் நடவடிக்கைகளை படைத்தரப்பு முடுக்கிவிட்டிருப்பதாகவும் அரசு அறிவித்துள்ளது.

படையினரதும், பொதுமக்களதும் ஆத்ம பலத்தையும் நம்பிக்கையும் பலவீனப்படுத்தும் விதத்தில் ஊடகங்கள் செயற்பட முனையக் கூடாதெனவும் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று வியாழன் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத் துறை அமைச்சரும் ஆன பிரயதரஷன யாப்பா மேற்கடண்ட தகவல்களை வெளியிட்டார்;.

நேற்று முன் தினம் புதன்கிழமை இரவு கெப்படி கொல்லாவையில இடம் பெற்ற கிளைமோர் தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறியதாவது :-

விடுதலைப் புலிகள் கெப்படிகொல்லவையில் இரண்டாவது தடவையாகவும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 15பேர் பலியாகியுள்ளனர். 23 பேர் காயமுற்று அநுராதபுரம், கெப்படிக்கொல்லாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.

இதற்கு முன்னர் கடந்த 2006 ஜூன் 15ம திகதியும் கெப்பிட்டிகொல்லாவையில் பயணிகள் பஸ் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதே போன்று ஏற்கனவே நிட்டம்புவ, அம்பலாந்தோட்டை போன்ற இடங்களில் பயணிகள் பஸ்கள் மீது தாக்குதல்கள் இடம் பெற்று பலர் கொல்லப்பட்டனர். கடந்த 28ம் திகதி நுகேகொடவில் வர்த்தக நிலையத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 20ம் மேற்பட்டோர் கொல்லப்படனர்.

இந்த ஒவ்வொரு சம்பவமும் பொதுமக்களை இலக்கு வைத்ததாகவே அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. போர் முனையில் புலிகள் தொடர்ச்சியாக பின்னடைவைக் கண்டு வருவதன் வெளிப்பாடே பொதுமக்கள் மீதான தாக்குதல்களாகும்.

பயங்கரவாதிகளை தேடி அழிப்பதில் அரச படையினர் ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை. அடுத்தடுத்து கடும் நடவடிக்கைகள் முனனெடுக்கப்படும். இராணுவ நடவடிக்கைகள் கடுமையாகவே இருக்ககும். இதனால் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படலாம். அவற்றை பொறுமையுடன் சமாளித்து படை நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் கடப்பாட்டை அரசு கொண்டிருக்கின்றது. அதற்குரிய நடவடிக்கைகள் உறுதியாக முன்னெடுக்கப்படும்.

விடுதலைப் புலிகளுக்காகப் பேசும் அரச சார்ப்பற்ற தொண்டர் நிறுவனங்கள் தெற்கில் அப்பாவிப் பொதுமக்கள் தாக்கப்படும் போதும் சொத்துக்கள் அழிக்கப்படும் போதும் ஏன் மௌனம் காக்கின்றன, என கேட்க விரும்புகின்றோம். இந்த தொண்டர் நிறுவனங்கள் பாரபட்சமான போக்கை கடைப்பிடிப்பது விசனிக்கத்தக்கதாகும்.

வடக்கில் இடம் பெறும் படை நடவடிக்கைகளின் போது அரசைக் குறை கூறமுற்படும் சர்வதேசம் தெற்கில் புலிகளின் அடாவடித்தனம் குறித்த பேச மறுப்பது ஏன்? புலிகள் அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடும் போது அதனை சர்வதேசம் கண்டு கொள்ளத் தவறுகின்றது.

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவானது அதன்பணியை பாரபட்சமின்றியும் நேர்மையுடனும் செயற்படுமென எதிர்பார்க்கின்றோம். என அவர் குறிப்பிடடார்.

புலிகனின் இத்தகைய செயற்பாடுகள் எதிர்கால சமாதான முயற்சிகளை கேள்விக்குறியாக்குமா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது பதிலளித்த அமைச்சர் யாப்பா கூறியாதாவது :

"இனப்பிரச்சினைத. தீர்வு தமிழ் மக்களுக்கானது. அதனை அரசு ஒருபோதும் கைவிடப் போவதில்லை. புலிகளின் பயங்கரவாதம் சமாதானப் பேச்சுக்களை தடுக்காது. புலிகள் ஒருபோதும் பேச்சு மூலம் தீர்வு காண்பதை விரும்பவில்லை. ஆனால், தமிழ் மக்களுக்குத் தீர்வு பெற்றுக் கொடுத்தேயாக வேண்டும்.

சர்வகட்சி மாநாடடில் யோசனைகள் விரைவில் முன்வைக்கப்பட்டு அனைத்தக்கட்சிகளுடன் உடன்பாடு கண்டு தீர்வைக் காண்போம். தமிழ் மக்களுக்கு எதிராக அரசு ஒருபோதும் செயற்படப் போவதில்லை.அதே போன்று எந்தச் சமூகத்தையும் ஒதுக்கி வைத்துத் தீர்வு காணப்போவதில்லை.

படையினரதும் பொதுமக்களதும் ஆத்ம பலத்தை குறைக்கும் விதத்தில் ஊடகங்கள் செயற்படக் கூடாது. சில ஊடகங்கள் சிறிய குறைபாடுகளைக் கூட பெரிதுபடுத்திக் காட்டி படையினரின் மனோபலத்தை சீர்குலைக்க முற்படுகின்றன. தயவு செய்து படைத்தரப்பின் செயற்பாடுகள் விடயத்தில் பொதுமக்களை தவறாக வழி நடத்த முற்படவேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.' எனவும் பிரியதர்ஷன தெரிவித்தார்.

நன்றி தினக்குரல்

எல்லா தமிழனையும் பூசாவில் கொண்டுபோய் அடைத்து வைத்த தீர்வைத் தருவார்கள் அது வரை பொறுமை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளை சர்வதேசம் கண்டு கொள்ளா மலிருப்பதையிட்டு கடும் கண்டனத்தை வெளியிட்டிருக்கும் அரசாங்கம் புலிகளுக்காகப் பேசுகின்ற தொண்டர் அமைப்புகள் கூட மௌனம் சாதிப்பதாக விசனம் தெரிவித்துள்ளது.

கெப்பிட்டிகொல்லாவ தாக்குதல் புலிகளின் பாரிய பின்னடைவின் வெளிப்பாடு எனவும் அப்பாவிப் பொதுமக்களை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்தும் புலிகளை தேடி அழிக்கும் கடும் நடவடிக்கைகளை படைத்தரப்பு முடுக்கிவிட்டிருப்பதாகவும் அரசு அறிவித்துள்ளது.

படையினரதும், பொதுமக்களதும் ஆத்ம பலத்தையும் நம்பிக்கையையும் பலவீனப்படுத்தும் விதத்தில் ஊடகங்கள் செயற்பட முனையக் கூடாதெனவும் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.

நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு கெப்பிட்டி கொல்லாவையில் இடம் பெற்ற கிளேமோர் தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது;

`விடுதலைப் புலிகள் கெப்பிட்டி கொல்லாவையில் இரண்டாவது தடவையாகவும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இத்தாக்குதலில் அப்பாவிப் பொது மக்கள் 15 பேர் பலியாகியுள்ளனர். 23 பேர் காயமுற்று அநுராதபுரம், கெப்பிட்டி கொல்லாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமானதாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.

இதற்கு முன்னர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதியும் கெப்பிட்டிகொல்லாவையில் பயணிகள் பஸ் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதேபோன்று ஏற்கனவே நிட்டம்புவ, அம்பலாந்தோட்டை போன்ற இடங்களிலும் பயணிகள் பஸ்கள் மீது தாக்குதல்கள் இடம் பெற்று பலர் கொல்லப்பட்டனர். கடந்த 28 ஆம் திகதி நுகேகொடையில் வர்த்தக நிலையத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 20 க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

இந்த ஒவ்வொரு சம்பவமும் பொதுமக்களை இலக்கு வைத்ததாகவே அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. போர் முனையில் புலிகள் தொடர்ச்சியாக பின்னடைவைக்கண்டு வருவதன் வெளிப்பாடே பொதுமக்கள் மீதான தாக்குதல்களாகும்.

பயங்கரவாதிகளை தேடி அழிப்பதில் அரச படையினர் ஒரு போதும் பின்வாங்கப்போவதில்லை. அடுத்தடுத்து கடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இராணுவ நடவடிக்கைகள் கடுமையாகவே இருக்கும். இதனால் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படலாம். அவற்றை பொறுமையுடன் சமாளித்து படைநடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் கடப்பாட்டை அரசு கொண்டிருக்கிறது. அதற்குரிய நடவடிக்கைகள் உறுதியாக முன்னெடுக்கப்படும்.

விடுதலைப் புலிகளுக்காகப் பேசும் அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் தெற்கில் அப்பாவிப் பொதுமக்கள் தாக்கப்படும் போதும் சொத்துக்கள் அழிக்கப்படும் போதும் ஏன் மௌனம் காக்கின்றன எனக் கேட்க விரும்புகின்றோம். இந்த தொண்டர் நிறுவனங்கள் பாரபட்சமான போக்கை கடைப்பிடிப்பது விசனிக்கத்தக்கதாகும்.

வடக்கில் இடம்பெறும் படை நடவடிக்கைகளின்போது அரசைக் குறைகூறமுற்படும் சர்வதேசம் தெற்கில் புலிகளின் அடாவடித்தனம் குறித்து பேச மறுப்பது ஏன்! புலிகள் அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடும் போது அதனை சர்வதேசம் கண்டுகொள்ளத் தவறுகின்றது.

போர் நிறுத்தக்கண்காணிப்புக்குழு

  • கருத்துக்கள உறவுகள்
:unsure: தமிழர் தாயகத்தில் நாள்தோறும் கட்டவிழ்த்து விடப்பட்டு வரும் மனிதப் படுகொலைகளைக் கண்டும் சர்வதேசம் பாராமுகமாக இருந்தபோது நீங்கள் எக்காலமிட்டுச் சிரித்தீர்கள். இப்போது அழுவது உங்களின் முறை. யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். நன்றாக அழுங்கள்.

இராணுவச் செயற்பாட்டிற்கு புலிகள் கொடுக்கப்போகும் பதிலைத்தான் சார்வதேசம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து தப்பித்துக் கொளவதற்காக அரசாங்கம் இப்போதே சர்வதேசத்தைத் துணைக்கழைக்கத் தொடங்கிவிட்டது என்பதுதான் உண்மை. அது சர்வதேசத்திற்குப் புரியும். அதனால் மௌனம் சாதிக்கப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்தக் கவலை?

'கெப்பிற்றிக்கொலாவத் தாக்குதல் சம்பவத்தை எந்தவொரு அமைப்பும் அல்லது நிறுவனமும் கண்டிக்க முன்வரவில்லை" என்று அமைச்சர் பிரியதர்சன யாப்பாவின் கூற்றுக்கள் கவலையின் வெளிப்பாடல்ல. அது ஒரு குற்றச்சாட்டாகும்.

அதாவது, விடுதலைப் புலிகளின் வானொலி நிலையமான புலிகளின் குரல் வானொலி நிலையத்தைச் சிறிலங்கா வான்படை தாக்கி அழித்தமைக்கு யுனஸ்கோ அமைப்பு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் கெப்பிற்றிக்கொலாவத் தாக்குதல் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை என்பதே அமைச்சரின் இவ் விசனத்திற்குக் காரணமாகும்.

இதனை அமைச்சரின் கூற்றுக்களில் வெளிப்படும் ஒரு விடயமே உறுதி செய்வதாகவுள்ளது. அதாவது, அமைச்சர் நாடுகள் குறித்து எதையும் கூறாது, அமைப்புக்கள், நிறுவனங்கள் கண்டிக்க முன்வரவில்லை எனக் குறிப்பிட்டதில் இருந்தே இதனைப் புரிந்து கொள்ளமுடியும்.

மனித உரிமை அமைப்புக்கள் எனப்படுபவை மனித உரிமைகள் மீறப்படும் போதும், சனநாயக அமைப்புக்கள் சனநாயக வழி முறைகள் மீறப்படும் போதும் அவற்றைக் கண்டிப்பதென்பது மரபு ரீதியானது. இந்த வகையிலேயே விடுதலைப் புலிகளின் வானொலி நிலையம் தாக்கப்பட்டது குறித்து யுனஸ்கோ தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தது.

ஜெனீவா விதிகளின் படி பொதுமக்களுக்குத் தகவல்களை வழங்கும் பொது ஊடகங்கள் அவை வெளியிடும் கருத்துக்கள் எந்த வகையில் இருந்தாலும் அதன் மீது இராணுவத் தாக்குதல்களை நடாத்துவதற்கு அனுமதியில்லை. ஊடகங்களும், ஊடக வியலாளர்களும் பொதுமக்கள் சார்ந்தவையாகவே கருதப்படுதல் வேண்டும். இதன் அடிப்படையிலேயே யுனஸ்கோவின் கண்டனம் வெளியிடப்பட்டது.

ஆனால், பிரியதர்சன யாப்பாவின் கருத்துக்களோ கெப்பிற்றிக்கொலாவத் தாக்குதலைக் கண்டிக்காத இந்நிறுவனங்கள் எவ்வாறு புலிகளின் குரல் வானொலி நிலையம் மீதான தாக்குதலைக் கண்டிக்க முடியும்? என்பதாகவேயுள்ளது.

ஆனால், கெப்பிற்றிக்கொலாவத் தாக்குதல் குறித்து சர்வதேச நிறுவனங்களோ, அமைப்புக்களோ, இதுவரை கண்டனங்களோ, கவலையையோ வெளிப்படுத்தவில்லை. சிலவேளை இவ் அமைப்புக்கள் தமது கண்டங்களையோ, கவலையையோ தாமதமாக வெளியிடவும் வாய்ப்புண்டு.

ஆனால், தற்பொழுது எழும் கேள்வியானது, இக்கண்டனங்களையும் கவலையையும் சிறிலங்கா அரசு எதற்காக எதிர்பார்த்திருக்கின்றது? இவ் அமைப்புக்களின் கண்டனங்கள், கவலைகள் குறித்து சிறிலங்கா அரசு அளிக்கும் மதிப்புத்தான் என்ன?

ஏனெனில், ஐ.நா. மற்றும் பொது அமைப்புக்கள் தொடர்பாக இதுவரை சிறிலங்கா அரசு வெளிப்படுத்தி வந்த உணர்வுகள் வெறுப்பின் பாற்பட்டவையே. இவ் அமைப்புக்களின் செயற்பாடுகளைக்கூடக் கட்டுப்படுத்த சிறிலங்கா ஆட்சியாளர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

அத்தோடு, இதுவரையில் அவ் அமைப்புக்கள் அன்றி நிறுவனங்கள் வெளிப்படுத்திய உணர்வுகள், செய்த சிபார்சுகள், விடுத்த கோரிக்கைகள் எவற்றிற்குமே சிறிலங்கா ஆட்சியாளர்கள் செவிசாய்த்ததில்லை. அவற்றை நிராகரித்தும் வந்துள்ளனர். பல தடவை அவற்றைக் கண்டனம் செய்துள்ளனர்.

இறுதியாகப் புலிகளின் குரல் வானொலி நிலையம் மீது நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு யுனஸ்கோ விடுத்த கண்டனத்தைக்கூட சிறிலங்கா ஆட்சியாளர்கள் கண்டிக்கத் தவறவில்லை. இத் தனைக்கும் அக்கண்டனம் ஐ.நா. விதிகளின்படி விடுக்கப்பட்டதொன்றாகும்.

இத்தகையதொரு நிலையில் - அதாவது, பிறர் கருத்தை ஏற்றுக்கொள்ளாத அரசாங்கம், தனக்காகப் பிறர் பேசவேண்டும் என எதிர்பார்ப்பது ஏன்? இலங்கையில் இன்றைய நிகழ்வுகள் சிங்கள ஆட்சியாளர்களின் அராஜகத்தின் எதிர்விளைவு ஆகும். இதைப் புரிந்து கொள்ளாது தமக்காக உலகம் பேசவேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வாறு? தம்மீது கண்டனங்கள் தெரிவிக்கப்படும் போது அதனை நிராகரிப்பவர்கள் மற்றவர்கள் கண்டிக்கப்பட வேண்டுமென எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? ஆனால், இவ் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப உலகில் வலுவுள்ளோர் பேசினால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில், ஒடுக்குமுறைக்கு ஆதரவான சக்திகளே உலகில் மலிந்து போயுள்ளன.

நன்றி: ஈழநாதம்

http://www.tamilnaatham.com/editorial/2007...tham/dec/08.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.