Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புவி வெப்பமடைவதால் நீர்கொழும்பு நீரில் மூழ்கிவிடும் அபாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புவி வெப்பமடைவதால் நீர்கொழும்பு நீரில் மூழ்கிவிடும் அபாயம்

[06 - December - 2007

பயங்கரவாதத்தைவிட புவி வெப்பமடைதல் அதி பயங்கரமான விடயமென தெரிவித்த அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா எதிர்காலத்தில் நீர்கொழும்பு நீரில் மூழ்கிவிடும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒதுக்கீட்டுச் சட்ட, குழுநிலை விவாவதத்தில் மேலும் உரையாற்றிய அவர்,

புவி வெப்பமடைதல் உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பயங்கரவாதத்தைவிட புவி வெப்பமடைதலே அதி பயங்கரமானது. புவி வெப்பமடைதலைத் தடுக்க சூழல் பாதுகாப்புத் திட்டங்கள் அவசியமாகும். இவை ஒருபுறமிருக்க அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.

புவி வெப்பமடைதலினால் பல நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயமேற்பட்டுள்ளது. நீர்கொழும்பு நகரமும் இவ்வாறு கடலில் மூழ்கும் அபாயமுள்ளது. இதனை சுற்றாடல் தொடர்பான சஞ்சிகையொன்று உறுதிப்படுத்தியுள்ளது.

ஐந்தறிவு படைத்த வனவிலங்குகள் சுற்றாடலைப் பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன. ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் அவ்வாறு சுற்றாடலைப் பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பு நல்குவதில்லை.

சூழலைப் பாதுகாப்பதில் ஒவ்வொரு தனிமனிதனும் பங்காளராக வேண்டும். புவி வெப்பமடைவதிலிருந்து எமது நாட்டையும் எமது பிரதேசங்களையும் பாதுகாத்து அவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.

http://www.thinakkural.com/news/2007/12/6/...s_page41733.htm

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் எங்கே இருந்தீங்கோ....???! :lol::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் எங்கே இருந்தீங்கோ....???! :lol::)

லண்டனில்ல தாங்கோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில்ல தாங்கோ :)

ஐயோ நான் உங்களைக் கேட்கல்ல. நீங்க தான் எங்க இருக்கீங்க என்று தெரியுமே. நான் கேட்டது சிறீலங்கனை..??! பூமியிலதான் இருக்காங்களா இல்ல வேற்றுக்கிரகத்தில இருந்திட்டு இப்ப சமீபத்திலதான் வந்தாங்களா....??! பூமிவெப்பமடையிற பிரச்சனை இப்ப 10 வருடமா காரசாரமா நடக்குது... பயங்கரவாதத்துக்கு எதிரான போரும் இதே 10 வருசமா நடக்குது..??! இரண்டுமே முடிஞ்ச பாடில்ல. முடியப் போறதுமா தெரியல்ல..! காரணம்.. தீர்வை கையில வைச்சிருக்கிறவங்களே பிரச்சனைக்கும் மூல காரணமா இருக்கிறதுதான்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா அங்கே மகிந்தவின் இடத்தில் அடி விழுது (திஸ்சமகாரகமை) இங்கே ஜெயராஜ்புள்ளேயின் நீர்கொழும்பு கடலுக்கே போக போகுது எல்லாம் கலியுகம் தான் :)

  • கருத்துக்கள உறவுகள்

நீர்கொழும்பு மூழ்கும்போது முதலே யாழ்ப்பாணமும் மூழ்கிவிடும்..

''A major part of Jaffna and other northern areas (of Sri Lanka) will be submerged when the sea-level rises. So people are fighting and dying over areas that may soon not be there,'' Prof. Mohan Munasinghe, vice-chairman of the U.N.'s Intergovernmental Panel on Climate Change (IPCC), told IPS in an interview.

http://ipsnews.net/news.asp?idnews=37463

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடலில் மூழ்குதோ இல்லையோ ஆனால் பலரின் மூழ்கியிருந்த விடுதலைப் புலி எதிர்ப்பு முகங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன யாழ்களத்தில் :):lol:

Edited by tamillinux

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.