Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"புலிகளின் குரல்" வானொலி நிலையம் மீது தாக்குதல் நடத்திய வானூர்தி சேதம்

Featured Replies

வன்னியில் உள்ள "புலிகளின் குரல்" வானொலி நிலையத்தின் மீது கடந்த மாதம் நவம்பர் 27 ஆம் நாள் தாக்குதலை நடத்திய சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக தாக்குதல் வானூர்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பாக இக்பால் அத்தாஸ் எழுதியது இப்படி...

"This was after the air raid on the clandestine Voice of Tiger (VoT) radio by Air Force bombers on November 2 7 - minutes before LTTE leader Velupillai Prabhakaran delivered his "Maveerar (Great Heroes) Day" address. A MiG-27 bomber swooped low to bomb the tower at the LTTE broadcast station and was fired upon slightly damaging the tail cone. Did the fire emanate from an anti-aircraft gun or was a Surface to Air missile (SAM) used?

A similar incident on October 23 saw an Air Force bomber over the LTTE airstrip at Iranamadu being fired at. At that time suspicions were whether the guerrillas used a SAM. For a second time Air Force officials are trying to ascertain whether a SAM was used to attack the MiG-27 on November 27. On this occasion, the tenacity and courage of pilot had prevented the MiG-27 from being hit. He had manoeuvred it in such away to get away from guerrilla fire, return to the spot again and drop the bomb. The Commander of the Air Force, Air Marshal Roshan Goonetileke has commended the pilot for his bravery."

http://www.sundaytimes.lk/071216/Columns/sitreport.html

விடுதலைப் புலிகள் மீண்டும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்துவதாக விமானப்படையினர் நம்புகின்றனர்.

கடந்த அக்டோபா மாதம் 23ம் திகதியும் கடந்த நவம்பர் 27ம் திகதியும் வன்னியில் தாக்குதல் நடத்திய விமானப்படை விமானங்கள் மீது புலிகள் பதில் தாக்குத்லை நடத்தியதையடுத்தே புலிகள் விமான எதிர்ப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்கின்றனரா என்ற கேள்வி மீண்டும் விமானப்படையினர் மத்தியில் எழுந்துள்ளது.

அக்டோபர் 23ம் திகதி வன்னியில் இரணைமடுவிலுள்ள புலிகளின் விமான ஓடுபாதை மீது விமானப்படையின் 'மிக்27'' ரக விமானம் குண்டு வீச்சை நடத்தியது.

அவ்வேளையில் அந்த விமானத்தை நோக்கி புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலிலிருந்து 'மிக்27' தப்பிய அதே நேரம், அந்த விமானம் மீது புலிகள் விமான எதிர்ப்பபு ஏவுகணையை (சாம்) பயன்படுத்தினார்களா என்ற கேள்வி படையினர் மத்தியில் எழுந்தது.

இதே நேரதம் மாவீரர் தினமான கடந்த மாதம் 27ம் திகதி மாலை கிளிநொச்சியில் புலிகளின் குரல் வானொலி நிலையம் மீது விமானப்படையின் 'மிக்27' ரக விமானங்க் தாக்குதலை நடத்தின.

இதன் போது அந்த விமானங்கள் மீது தாக்குதல் நடத்தப்படன. இதனால் மிக் விமானத்தின் பின்புறப் பகுதியில் சிறிய சேதமேற்பட்டது. எனினும் அதன் விமானி அதனை திறமையாகச் சமாளித்து விமானத்திற்கு ஆபத்து ஏற்படாதவாறு அதனை காப்பாற்றினார். இவ்விரு தாககுதல்களுக்கும் விடுதலைப் புலிகள் விமான எதிர்ப்பு ஏவுகணையைப் பயன்படுத்தினார்களா அல்லது விமான எதிர்ப்புத் துப்பாக்கியை பயன்படுத்தினார்களா என்பது குறித்து விமானப் படையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

நவம்பர் 27 ஆம் திகதி புலிகளின் தாக்குதலைச் சமாளித்து விமானப்படைத்தளம் திரும்பிய 'மிக் 27' இன் விமானியை பின்னர் விமானப்படைத்தளபதி பாராட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் குரல்" வானொலி நிலையம் மீது தாக்குதல் நடத்திய வானூர்தி சேதம்

வன்னியில் உள்ள "புலிகளின் குரல்" வானொலி நிலையத்தின் மீது கடந்த மாதம் நவம்பர் 27 ஆம் நாள் தாக்குதலை நடத்திய சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக தாக்குதல் வானூர்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

"புலிகளின் குரல்" வானொலி நிலையத்தின் ஒலிபரப்புக் கோபுரத்தை தாக்க முனைந்த மிக்-27 ரக தாக்குதல் வானூர்தி விடுதலைப் புலிகளின் வானூர்தி எதிர்ப்புத் தாக்குதலில் சேதமடைந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தாக்குதலில் வானூர்தியின் வாற்பகுதியே சேதமடைந்துள்ளது.

இந்த சேதமானது விடுதலைப் புலிகளின் வானூர்தி எதிர்ப்பு பீரங்கிகளினாலா அல்லது வானூர்தி எதிர்ப்பு ஏவுகணையினாலா மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பிலான கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

கடந்த ஒக்ரோபர் மாதம் இரணைமடுப் பகுயில் உள்ள விடுதலைப் புலிகளின் வானூர்தி ஓடுபாதை மீது தாக்குதல் நடத்த முயற்சித்த மிக்-27 ரக வானூர்தியின் மீதும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். அந்த சமயம் விடுதலைப் புலிகள் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணையை பயன்படுத்தியிருந்தனர்.

எனவே கடந்த மாதம் நவம்பர் 27 ஆம் நாள் நடைபெற்ற தாக்குதலிலும் விடுதலைப் புலிகள் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணையை பயன்படுத்தியுள்ளனரா என்பது தொடர்பாக வான் படையினர் இரண்டாவது முறையாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே பிரகடனப்படுத்தப்படாத நான்காம் கட்ட ஈழப்போர் தற்போது ஒரு புதிய கட்டத்தை அடைந்துள்ளதால் வான் பாதுகாப்பு பொறிமுறைகளை பலப்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.htn-news.com/frontnews/dec16/news1.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.