Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனுக்கு இந்தியாவில் சிகிச்சை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், இலங்கை விமானத் தாக்குதலில் படுகாயமடைந்திருப்பதால், அவரை இந்தியாவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க விடுதலைப் புலிகள் முயன்று வருவதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

நவம்பர் 26ம் தேதி கிளிநொச்சியில் உள்ள ஜெயந்திநகர் பகுதியில் இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் பிரபாகரன் படுகாயமடைந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை விடுதலைப் புலிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

ஆனால் தாக்குதலில் பிரபாகரன் காயமடைந்தது உண்மைதான், அவர் படுகாயமடைந்திருக்கிறார் என்று சமீபத்தில் மீண்டும் இலங்கை அரசும், பாதுகாப்புப் படையினரும் உறுதியாக தெரிவித்தனர்.

இந் நிலையில் பிரபாகரன் படுகாயமடைந்த நிலையில் இருப்பதாகவும், அவரது உடல் நிலை மோசமடைந்து வருவதாகவும், எனவே வெளிநாடு கொண்டு சென்று அவருக்கு சிகிச்சை அளிக்க புலிகள் முயன்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து கொழும்பிலிருந்து வெளியாகும் தி டெய்லி நியூஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், நவம்பர் 26ம் தேதி நடந்த விமானத் தாக்குதலில், பிரபாகரனுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பணியில் இருந்த 200 மெய்க்காவலர்களில் 116 பேர் இறந்து விட்டனர்.

பிரபாகரன் படுகாயமடைந்துள்ளார். அவரது ஒரு கையும், காலும் பலத்த சேதமடைந்துள்ளது. அவருக்கு தற்போது விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆனால் ஏற்கனவே பிரபாகரனுக்கு சர்க்கரை நோய் இருப்பதால் காயம் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. எனவே ஏதாவது வெளிநாடு ஒன்றுக்குக் கொண்டு சென்று சிகிச்ைச அளிக்க புலிகள் முயன்று வருகின்றனர்.

குறிப்பாக இந்தியாவுக்கு கொண்டு செல்வதையே அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் அதைத் தடுக்கும் முயற்சியில் இலங்கையின் முப்படைகளும் மும்முரமாக இறங்கியுள்ளன என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய தகவல் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

பிரபாகரன் உடல் நிலை குறித்து வெளியாகியுள்ள இந்தத் தகவலால் இலங்கையில் தமிழர் பகுதிகளிலும் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் நிலவுகிறது.

thatstamil.com

இவர்களின் அரசியலுக்கு.. ஊகமாய் செய்திகள்.. விடும்.. தற்ஸ்ரமில்.. ஒத்தூதுகிறது..

இவர்கள் செய்திகளை இவர்களே.. நம்புவதில்லை போல..

  • கருத்துக்கள உறவுகள்

" சிரிப்போம் சிறப்போம்" பகுதிக்குள் வரவேண்டியது.. இடம் மாறிப் பதியப்பட்டுள்ளது. நிர்வாகம் கவனம் எடுப்பார்களா? :(

ஆக பல முறை பிரபாகரன் இந்தியாவில் சிக்கிச்சை பெற்றுக்கொண்டது இதன் மூலம் உருதியாகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:(
:(

116 பேர் ஒரு விமான தாக்குதலில் இறந்து விட்டார்களா???

பொய் சொன்னாலும் பொருந்த ச்சொல்லி பழகுங்கப்பா.......

அவர்கள் ஒரு விமானத் தாக்குதலில் என்று எங்கு சொல்லியிருக்கிறார்கள்? அண்மைக் காலங்களில் நடந்த தாக்குதலில் மொத்தமாக 116 என்ற அர்த்தத்தில் தான் எழுதியிருக்கிறார்கள்.

இந்தச் செய்தியின் அடிப்படையென்ன? இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கைதானே. தமிழ்ச்செல்வன் இறப்பைக் கூட விடுதலைப்புலிகளின் அறிவித்தலின்பின் அறிந்துகொண்டது அரசு. அப்படியிருக்க இந்தச் செய்திக்காக களத்தில் சிலர் சப்பைகொட்டுவது எதற்கு? பிரதானமாக பிரபாகரன் பற்றிய தகவலறிய வெளியிடப்படும் இவ் வதந்திக்கு ஏன் துணைபோக வேண்டும். விடுதலைப்புலிகளின் மறுப்பு உங்களிடம் நம்பகத் தன்மையற்றுவிட்டதா? கருத்துக்கள் எதையும் எவரும் எழுதலாம். ஆனால் வதந்திகளை நிலைநிறுத்துவதற்கு உங்கள் கருத்துக்களைப் பயன்படுத்தாதீர்கள்.

அண்ணா குறுக்ஸ்

அவர்கள்.. 200 மெய்ப்பாதுகாவலரில் 116 பேர் அழிக்கப்பட்டதாக சொன்னது நம்பக்கூடியதாக இருக்கிறதா

உங்களுக்கு.. இந்தமாதிரி செய்திகளை நம்புவதாலோ என்னமோதான் நீங்கள் முரண்பாடாகவே.. எழுதியிருக்கிறீங்க என்ன.. :(

இந்த செய்தி உண்மையானால் DBS ஜெயராஜ் :( அண்ணர்தான் ஸிங்கள தலமை பீடத்தின் தலைவர் ஆவர்.

இந்த செய்தி உண்மையானால் DBS ஜெயராஜ் :( அண்ணர்தான் ஸிங்கள தலமை பீடத்தின் தலைவர் ஆவர்.

உண்மைதான் ஆனால் அந்த DBS ஜெயராஜ் யின் முகவராகத்தானே சிலர் இங்கு கருத்து வைக்கின்றார்கள்.

அய்யா இறைவனின் சொந்தக்காரன் சிவபெருமான், தமிழ்செல்வன் அண்ணா சர்வதேசத்தோடு ஊடகங்களோடு பல்வேறு பட்ட அரசுசார அமைப்புகளோடு தொடர்ச்சியாக தொடர்பில் இருந்தவர். அப்படிப்பட்ட ஒருவர் தற்காலிகமாக கூட தனது கடமைகளை செய்ய முடியாத அளவிற்கு காயமடைந்தாலும் அதை மூடி மறைப்பது என்பது இயலாதது. இப்படி இருக்க இறந்ததை எத்தனை மணத்தியாலங்கள் தான் மறைக்க முடியும்?

புலிகள் அறிவிக்காவிட்டாலும் சிறிலங்கா அறிவிச்சிருக்கும். கடற்புலிகளின் தளபதி காயமடைந்ததை புலிகளிற்கு முதல் அறிவிக்கவில்லையா? எங்கடை பிறப்புச் சான்றிதள் அடையாள அட்டை கடவுச்சீட்டு என்று எல்லாத்தையும் தாற அவங்களிற்கு உதுகள் அறியிறது அறிவிக்கிறது பெரிய விடையமா?

தமிழர் எல்லாம் வதந்தியை கேட்டு புலிகளை விட்டுட்டு ரஜனிகாந்திற்கும் அஜித்துக்கு பின்னுக்கும் ஓடப்போயினம் எண்டு பயமா கிடக்கோ? :(

  • கருத்துக்கள உறவுகள்

LTTE denies Prabhakaran was injured

T V Sriram in Colombo | December 22, 2007 15:41 IST

The Liberation Tigers of Tamil Eelam on Saturday denied that its leader Vellupillai Prabhakaran was injured in a Sri Lankan Air Force attack late in November in Killinocchi.

"Our leader (Prabhakaran) is like a sun. Can anybody even think of extinguishing him? Do you think we will ever keep our leader in such a place where he is vulnerable to attacks? He is leading us from the front. He is not injured," an LTTE spokesman said following reports quoting the government as claiming that the elusive leader was wounded in raids by the country's air force.

When asked about the state of health of Prabhakaran, the spokesman merely said, "He is eating well. I met brother (Prabhakaran) three days ago."

http://ia.rediff.com/news/2007/dec/22ltte.htm

தலைவர் நல்லாச் சாப்பிடுகிறாராம். நாங்கள் அவல் சாப்பிடுகிறோம். :(

உதில மேற்கோள் காட்டப்படுற பேச்சில கூட முரண்பாடுகள் இருக்கு. முன்னரங்கத்தில இருந்து வழி நடத்தினா எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்? போர்க் களத்தில் "முன்னரங்கும்" "பாதுகாப்பும்" முரணான சொற்கள்.

வேறு ஒரு சூழ்நிலையில் வாழ்த்தாக புகழ்பாடுவதாக சூரியனோடு ஒப்பிட்டு சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம். காயம் அடைந்தது உண்மையா நலனோடு இருக்கிறாரா என்று ஒரு குறித்த வதந்தியை பின்னணியாக கொண்டு ஊடகங்கள் கேட்கும் போது உப்பிடி கவிநயத்துடன் சூரியன் ஒருவராலும் அணைக்க முடியாது என்ற சினிமா டயலக் பதில் கொடுப்பது சரியா?

உப்படி பதில்களை புலிகளின் பேச்சாளர்கள் கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே.

" brother Prabakaran" என்றும் அவல் இடிக்கிறாங்கள். எங்கட சனத்துக்கு வாய் உழையப் போகுது. :(

  • கருத்துக்கள உறவுகள்

தேவையில்லாமல் அதிகமாக அலட்டுவதாகவே இத்தலைப்புத் தெரிகின்றது.

பிரபாகரனுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பணியில் இருந்த 200 மெய்க்காவலர்களில் 116 பேர் இறந்து விட்டனர்.

எப்படி இப்படி வாய்கூசாம பொய் சொல்ல முடிகின்றது எப்படி வானத்தில இருந்து எண்ணினவயளோ

  • கருத்துக்கள உறவுகள்
<_< சிங்களவன் பொய் சொல்வது தெரிந்தும் அதை பெரிய விவகாரமாக்கி குட்டையைக் குழப்புவதற்கு இங்கு ஒரு கூட்டமிருக்கு !!!!

விமானத்தாக்குதலில் தலைவர் பிரபாகரன் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்டுவதை விடுலைப் புலிகள் உறுதியாக நிராகரித்துள்ளனர்.

எமது தலைவரை அழிக்க முடியுமென யாராவது ஒருவாரல் நினைத்துப் பாhக்கவும் முடியாது. தாக்குதல்களுக்கு இலக்காகக் கூடிய இடங்களில் எமது தலைவரை நாங்கள் வைத்திருப்போமென நினைக்கறீர்களா? அவர் மன்னணியில் நின்று எம்மை வழி நடத்துகிறார். அவர் காயமடையவில்லை என்று விடுதலப்புலிகளின் பேச்சாளர் தெரிவித்ததாக என்.டி.ரி.வி. இணையதளம் நேற்றுத் தெரிவித்தது.

தலைவர் பிரபாவின் ஆரோக்கியம் குறித்து கேட்டபோது, அவர் நன்றாகவே இருக்கின்றார். மூன்று தினங்களுக்கு முன்பு தான் அவரைச் சந்தித்தேன் என்று பேச்சாளர் தெரிவித்ததாக என்.டி.வி செய்திகள் தெரிவிக்கின்றன.

நன்றி தினக்குரல்

இது பயங்கர வாத சிங்கள அரசின் கூலி ஊடகங்கைள நம்பி தமிழரின் மன உறுதியை உடைக்க நினைக்கும், தமிழர் என்று சொல்லி தமிழனை அவமானனப்பட வைக்கும் தமிழ்க் கைக்ககூலிகளுக்கு சமர்ப்பணம்

சரி ஒரே தாக்குதலில் இல்லாவிட்டாலும் தலைவரின் மெய்க்காவலர்களில் 116 பேரை கொல்ல முடிந்தவர்களுக்கு வன்னிக்குள் நுழைந்து கிளினொச்சி வரை போவது ஒன்றும் கடினம் அல்லவே பின் ஏன் பயந்து போய் ஒவ்வொரு கள முயற்சியிலும் தர்ம அடி வாங்கி பின் வாங்குகின்றனர்???

கள முகப்புக்ளில் எல்லாம் என்ன தலைவரின் மெய்ய்க்காவலர்களா போரிடுகின்றனர்???

  • கருத்துக்கள உறவுகள்

வருடா வருடம் புலிகள் மீதான தடையை நீடிப்பதற்குக் காரணம் தேடுகின்ற இந்தியாப் புலனாய்வுப்பிரிவினர் தமிழ்நாட்டில் புலிகளின் நடமாட்டம் அதிகரிக்கின்றது என்ற தோற்றத்தை ஏற்படுத்த முனைகின்றார்கள் என்ற செய்திகளின் தொடர்ச்சியாகவே இச் செய்தியும் வெளிப்பட்டிருக்கலாம் என நான் நம்புகின்றேன்.

தேசியத் தலைவர் தமிழ்நாடு வந்திருப்பதாகச் சொல்லித் தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு ஏதோ நடப்பதாகவும், ஐயோ, குய்யோ என்று குழறி ஈழத்தமிழரையும், தமிழக மக்களையும் பிரிக்கின்ற நாடகத்தின் அடுத்த காட்சி நடந்தேறும். அதற்குத் தான் சிங்கள அரச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து இச் செய்தியை வெளியிட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் எடுத்துத் தான் காயம் பற்றிய தகவல்களை அறிந்திருக்கின்றார்களாம்.

அதை விட மற்றுமொன்று, வெற்றிச் செய்திக்காக காத்திருக்கின்ற சில போராட்ட ஆதரவாளர்களை மனம் சோரச்செய்து தம் பக்கம் இழுக்கலாம் எனக் கனவு காணுகின்றார்கள் போல.

நாம் எம் கடமைகளை ஒழுங்காகச் செய்து வந்தாலே எம் போராட்டத்தின் பாதி வெற்றியை அடைந்து விடுவோம்.

ஆனால் எதிரிகள் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசியத்தலைவர் பிரபாகரன் என்ற மனிதன் உருவாக்கப்பட்டதே, சிங்கள தேசத்தின் அடக்குமுறைகளால் தான். அந்த அடக்குமுறைகள் இருக்கின்றவரை இப்போராட்டம் ஓயப் போவதில்லை. அவருக்கு ஏதும் ஆகிவிட்டது என்ற செய்திகளைப் பரப்பிச் சந்தோசப்பட்டால் மட்டும் தமிழர் போராட்டம் அடங்கி விடப் போவதில்லை.

என்று தமிழனுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்கின்றதோ அன்று வரையும் இது தொடரத்தான் போகின்றது.

அய்யா இறைவனின் சொந்தக்காரன் சிவபெருமான், தமிழ்செல்வன் அண்ணா சர்வதேசத்தோடு ஊடகங்களோடு பல்வேறு பட்ட அரசுசார அமைப்புகளோடு தொடர்ச்சியாக தொடர்பில் இருந்தவர். அப்படிப்பட்ட ஒருவர் தற்காலிகமாக கூட தனது கடமைகளை செய்ய முடியாத அளவிற்கு காயமடைந்தாலும் அதை மூடி மறைப்பது என்பது இயலாதது. இப்படி இருக்க இறந்ததை எத்தனை மணத்தியாலங்கள் தான் மறைக்க முடியும்?

புலிகள் அறிவிக்காவிட்டாலும் சிறிலங்கா அறிவிச்சிருக்கும். கடற்புலிகளின் தளபதி காயமடைந்ததை புலிகளிற்கு முதல் அறிவிக்கவில்லையா? எங்கடை பிறப்புச் சான்றிதள் அடையாள அட்டை கடவுச்சீட்டு என்று எல்லாத்தையும் தாற அவங்களிற்கு உதுகள் அறியிறது அறிவிக்கிறது பெரிய விடையமா?

தமிழர் எல்லாம் வதந்தியை கேட்டு புலிகளை விட்டுட்டு ரஜனிகாந்திற்கும் அஜித்துக்கு பின்னுக்கும் ஓடப்போயினம் எண்டு பயமா கிடக்கோ? <_<

என்ன குறுக்காலபோவோன் இவ்வளவு உறுதியாக இருக்கிறார். செய்தியின் உண்மைத் தன்மைக்கு ஆதாரம் தேவை. பிரபாகரன் காயமடைந்ததை, அவரது பாதுகாவலர் 116 பேர் இறந்தது இவையெல்லாம் என்ன பூச்சுற்றும் நடவடிக்கை. இவைகளுக்குத் துணைபோனால் நமது பல்லைக் குத்தி நாமே முகர்வது போல்தானே .

Edited by Iraivan

  • கருத்துக்கள உறவுகள்

<_< நாங்கள் விதண்டாவாதத்திற்கு விடையளிக்கப் பாடுபடுகிறோம் என்று நினைக்கிறேன். சில கேள்விகளுக்குப் பதிலில்லை. பதில் தெரியாததினால் அல்ல, அதற்கான பதிலிலும் குறுக்குக் கேள்வி கேட்க சிலர் இருப்பதனால்.

சிலரின் கடந்தகால அநுபவங்களே அவர்களை இவ்வாறு எதிர் மறையாக சிந்திக்கத் தூண்டுகிறது என்று நினைக்கிறேன். அவர்களை அவர்களது பாட்டில் விட்டு விடுவதே நல்லது. <_<

:( ஐய்யா நெடுக்காலபோவான், இந்தத் தலைப்பு இப்போது தேவைதானா ?

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் சரியாகச் சொன்னீர்கள். எதிரிகளின் விருப்பத்தையே தமது விருப்பமாக வரிந்து கொண்டு அலையும் சிலருக்குச் சரியான சாட்டையடி கொடுத்திருக்கிறீர்கள்!

என்ன குறுக்காலபோவோன் இவ்வளவு உறுதியாக இருக்கிறார். செய்தியின் உண்மைத் தன்மைக்கு ஆதாரம் தேவை. பிரபாகரன் காயமடைந்ததை, அவரது பாதுகாவலர் 116 பேர் இறந்தது இவையெல்லாம் என்ன பூச்சுற்றும் நடவடிக்கை. இவைகளுக்குத் துணைபோனால் நமது பல்லைக் குத்தி நாமே முகர்வது போல்தானே .

DBS போன்ற ஒரு நல்ல எழுத்தாளர் (அத்தோடு சர்வதேச ஊடகங்களால் சிறீலங்கா expert என்று கருதப்படுபவர்) எழுதினது சிறீலங்கா போன்ற அங்கீகரிக்கப்பட்ட அரசின் அமைச்சர்கள் பேச்சாளர்கள் சொல்லிறது போதாதா? ஆதாரம் என்பதும் ஒருவகையில் அங்கீகரிக்கப்பட்ட மூலங்களில் வருவபைதானே.

அப்படிப்பட்டவர்கள் சொல்வதை மறுதலிக்கும் நீங்கள் தான் அது பொய் என்று ஆதாரம் வைக்க வேணும்.

மனிதன் தனக்கு விருப்பமானதை இலகுவாக நம்புவான். விருப்பமற்றவற்றை பொய் ஆதாரம் அற்றது பிரச்சாரம் என்பான் அல்லது ஒருவகை நம்பிக்கையின் அடிப்படையில் நிராகரிப்பான்.

தமிழர் தரப்பில் இருந்து பார்த்தால்...

DBS கிழக்கில் நடந்த ஆக்கிரமிப்புப் போரின் அவலங்கள் பற்றி எழுதியபோது கடத்தப்பட்ட தபுக ஊழியர்கள் கொலை செய்யப்பட்ட விபரங்களை எழுதிய போது நாம் உண்மைத்தன்மை என்ன ஆதாரம் என் என்று கேள்வி எழுப்பவில்லை. அவற்றை சர்வதேச ஊடகங்கள் சர்வதேச அரசுகள் மனிதஉரிமை அமைப்புகளிற்கு இதோ DBS போன்ற ஒரு புகழ்பெற்ற ஊடகவியலாளர் எழுதியிருக்கிறார் பாருங்கள் என்று அங்கீகாரம் கொடுத்து அனுப்பினம்.

ஆனால் இன்று DBS தனது xmass shopping இக்கு காசு தேவை என்று குளிருக்கு விஸ்கி அடிச்சுப் போட்டு கூடக் குறை எழுதினதுக்கு நீங்கள் அவன் அது இது என்று திட்டி ஆதாரம் இல்லை உண்மைத்தன்மை இல்லை என்றியள்.

சிங்களவர் தரப்பில் இருந்து பார்த்தால்...

முன்னர் DBS கிழக்கின் அவலங்கள், கடத்தல், படுகொலைகள், கருணா குழுவும் சிறீலங்கா படைகளின் தொடர்புகள் பற்றி எழுதியது எல்லாம் பொய் என்பார்கள்.

ஆனால் இன்று xmass shopping bonus இக்கு எழுதினதை உண்மை என்பார்கள்.

3 ஆவது தரப்பின் (இந்தியா, அமெரிக்கா, சர்வதேசம் போன்றோர்) நிலையில் இருந்து பார்த்தால்...

DBS 2 முறை எழுதியதும் ஒரே பெறுமதியைக் கொண்டது தான். அத்தோடு ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு முறையும் கொடுத்த அங்கீகாரத்தை வைத்து (DBS நடுநிலையாக எழுதுகிறார் என்று) பெறுமதியை மேலும் அதிகரித்துக் கொள்வார்கள்.

எனவே உங்கடை நம்பிக்கைகளிற்கும் எதிர்பார்ப்புகளிற்கும் விருப்பங்களிற்கும் மாறாக எழுதினா மண்ணுக்கை தலை ஓட்டி வைச்சுக் கொண்டு உது பொய் உதன் உண்மைத் தன்மை என்ன ஆதாரம் ஆட்டுக் குட்டி எங்கை என்று புலம்பியோ இல்லாட்டி சூரியன் சந்திரன் அவதாரம் பொசுக்க முடியாது பிசுக்க முடியாது என்று டயலக் விட்டோ பயன் இல்லை.

Edited by kurukaalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.