Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல்லூடக பரப்புரைகளில் நம்பிக்கை அற்ற புலத்து ததே செயற்பாட்டாளர்கள்!

Featured Replies

கடந்த மாதம் லண்டனில் தமிழ் தேசியத்தின் இரு முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின.

1. சுப தமிழ்ச்செல்வனின் அஞ்சலிக் கூட்டம்.

2. மாவீரர் நாள்

இவ்விரு நிகழ்விலும் யாரும் எதிர் பாராத அளவில் மக்கள் வெள்ளம் அலை மோதியது. குறிப்பாக சுப தமிழ்ச்செல்வனின் நினைவு விளம்பரப்படுத்தாத நிலையில், அதுவும் வேலை நாளில், இரவு நேரத்தில் ஹரோ லெஷர் சென்ரரில் நடை பெற்றது. பொல்லத குளிரிலும் கைக்குழந்தைகளை காவியபடி பெற்றோர்களும், தள்ளாத வயதில் வயோதிபர்கள் என்று கூட்டம் அலை மோதியது. மண்டபத்திற்கு முன் சென்றவர்கள் வெளியேற்றப்பட்டு பின் வந்தவர்களுக்கு இடமளிக்கப்பட்டது. மண்டபத்தை சூழ உள்ள வீதிகள் வாகனங்கள் நகர முடியாத அளவில் நிரம்பி இருந்தது. பலர் மண்டப வாசலுக்கே வரமுடியாமல் திரும்பவும் நேர்ந்தது.

இவ்வளவு எழுச்சியான நிகழ்வை ஒரே ஒரு கமரா மாத்திரம் படமாக்கிக் கொண்டிருந்தது. எந்தத் தொலைக்காட்சி என்று கேட்டால் "தரிசனம்" என்றார்கள். ஏன் வேறு தொலைக்காட்சிகள் வரவில்லையா? என்று கேட்க மற்றவர்களை அனுமதிக்கவில்லை! என்றார்கள்.

முதலாவது இந்நிகழ்வைபடமாக்கிய தரிசனம், அதனை ஒளி பரப்பியதோ தெரியவில்லை?? அதற்கு மேல் இந்த தரிசனம் எத்தனை பேர் வீடுகளில் உள்ளது?? தரிசனம் எவ்வளவு பிரபல்யமானது?? இல்லை இந்த பிரபல்யமில்லாத தரிசனமே ததே பரப்புரைகளுக்கு போதுமானதா??

இன்னுமே பாடங்களைப் படியாத ததே புலத்து செயற்பாட்டாளர்கள்!!

ஓரூட பலத்தில் நம்பிக்கை கொண்டு ரி.ரி.எனை வளர்ந்து இன்று ரி.ரி.என்னுக்கு மூடுவிழா நடைபெற்ற பின்பும் எம்மவர்கள் பாடங்களை படிக்கவில்லை. திரும்பத் திரும்ப அதே பிழைகளை விட்டு வருகிறார்கள். இல்லை ரீ.ரி.என் மூடப்பட்டு ஒரு வருடம் ஆகிய நிலையிலும் அதற்கு மாற்றீடாக இன்னொரு தொலைக்காட்சியை உருவாக்க முடிந்ததா???

இல்லை தரிசனமும், ஐபிசியும் மட்டும் போதுமானது என்று நினைத்தால், ரி.ரி.என்னுக்கு நிகழ்ந்தது இவற்றிற்கு நடைபெற மாட்டாது என்பதற்கான உத்தரவாதம் உள்ளதா??

இல்லை, எங்கே போய் விட்டார்கள் ரி.ரி.என் அறிவிப்பாளர்களும் கலைஞர்களும்? ஏன் அவர்களைக் கொண்டு சிறப்பாக தரிசனத்தை இயக்கி இருக்கலாமே??

இக்கேள்விகளுக்கான பதில்கள் எவரிடமிருந்தும் வரப்போவதில்லை!!

மற்றைய ஊடகங்களையும் அரவணைத்து செல்வதில் என்ன பிரட்சனை எழப் போகிறது?? பல்லூடகப் பரப்புரைகள் ததேயை பலப்படுத்துமே ஒழிய பலவீனப்படுத்தாது!

Edited by சோழன்

ஐயா புலத்தில் இயங்கும் தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்கள் உண்மையிலேயே தமிழ்தேசியத்தை வளர்பதற்காகத்தான் உழைக்கின்றன என்று கூறினால் சிறீலங்கா அரச ஊடகமான ரூபவாகினி சிறந்த நடுநிலையான ஊடகம் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும்.

சுவீடனை தளங்கொண்டியங்கும் சிறீலங்கா அரச மற்றும் இந்திய ரோ கூட்டமைப்பின் ஊடக மையமொன்றின் தகவலாளர்களும் செயற்பாட்டாளர்களும் நமது புலம்பெயாந்த ஊடகத்துறைக்கு திரை மறைவு ஆலோசகசர்களாக இருக்கும் நிலை மாற்றப்படும் வரை எந்த மாற்றத்தையும் எதிர்பாக்க முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா புலத்தில் இயங்கும் தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்கள் உண்மையிலேயே தமிழ்தேசியத்தை வளர்பதற்காகத்தான் உழைக்கின்றன என்று கூறினால் சிறீலங்கா அரச ஊடகமான ரூபவாகினி சிறந்த நடுநிலையான ஊடகம் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும்.

சுவீடனை தளங்கொண்டியங்கும் சிறீலங்கா அரச மற்றும் இந்திய ரோ கூட்டமைப்பின் ஊடக மையமொன்றின் தகவலாளர்களும் செயற்பாட்டாளர்களும் நமது புலம்பெயாந்த ஊடகத்துறைக்கு திரை மறைவு ஆலோசகசர்களாக இருக்கும் நிலை மாற்றப்படும் வரை எந்த மாற்றத்தையும் எதிர்பாக்க முடியாது

அதுமட்டுமில்்லை நவம் மாற்்று இயக்கங்களிலை இருந்தவையளையும் தேசியத்துக்குள்ளை உள்வாங்கிறம் எண்டு ஒட்டுக்குழுகாரர்களையும் உள்ளை எடுத்துபரப்புரை பொறுப்பையும் குடுத்து விட்டிருக்கிறதும் இப்படியான சீரழிவுகளிற்கு காரணம்.

  • தொடங்கியவர்

இங்கு பல தொலைக்காட்சிகள், வானொலிகள் இருக்கின்றன. அவற்றில் ஓரிரண்டைத் தவிர மற்றையவைகள் ததே இற்கு எதிரானவைகளல்ல. அந்த ஓரிரண்டும் துரோகக் கூட்டங்களினால் தமது எஜமானர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடத்தப்படுபவை.

இங்கு புலத்துப் பூசாரிகளுக்கு துரோகிகளின் ஊடகங்கள் கண்ணுக்குப் படாது!! அதை ஒண்றுமே செய்யவும் மாட்டார்கள், செய்யவும் நினைக்கவும் மாட்டார்கள்!!

ஆனால் இவர்களின் கண்ணுக்குள் குடைவது மற்றைய ஊடகங்களே!! எங்கு, எப்படி, எவ்வாறு அவற்றை நிறுத்துவது என்பதே இவர்களின் பிரட்சனை!! ஒரு பழமொழி இருக்கின்றது "தானும் ..... தள்ளியும் ...." என்பார்கள்!! அதேதான் இவர்களின் நிலையும்!!!!

முதலில் அவ்வூடகங்களை நிறுத்தும் படி கோருவார்கள், அதுவும் சரிவரவில்லையாயின் இல்லாத பொல்லாத கதைகளை கிளப்பி விடுவார்கள், இறுதியில் துரோகியாக்கி துரோகிகளின் கூட்டத்துக்கு தள்ளியும் கொண்டு சென்று விட்டு விடுவார்கள்!!!

அண்மையில் ஐரோப்பவிலிருந்து "ஒரு வானொலி" ஒலிபரப்பாகத் தொடங்கியது! அதன் துவக்க விழாவில் சில ஊடகத்துறை சார்ந்தவர்கள் சென்றிருக்கிறார்கள்!! அங்கு சென்றவர்களுக்கு ஏன் சென்றீர்கள்? யாரைக் கேட்டு சென்றீர்கள்? ... என்று குடைந்தெடுத்தார்களாம் உந்த "தானும் ... தள்ளியும் ... " கோஸ்டி!!! ஏன்?????????????????????????????

Edited by சோழன்

முதலில் ரி.ரி.ன் மூடுவிழா வைக்க கவலையீனமாக இருந்தவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லாட்டி இப்படி ஒரு பரிதாப நிலைக்கு வருவோமா.

தரிசனம் மேல் அக்கறை இல்லாமல் இருப்பதற்கு ரி.ரி.ன் நிர்வாகம் நடந்து கொண்ட விதம் வெறுப்படைய வைத்து விட்டது.

இப்ப தீபம் முழு அளவில் சந்தாதாரரை பெற்றுக்கொண்டு விட்டது..

நோர்வேயில் இதுவரை தரிசனதிற்கு தொடர்பே கிடையாது.... மற்றைய நாடுகளில் ரி.ரி.ன் சந்தாதாரர் தொடர்புகள் பேணப்பட்டு ஓரளவு தரிசனம் அவர்களை தனது சந்தாதாரர் ஆக்கி கொண்டது. நோர்வே சந்தாக்காரர் நட்டாற்றில் விடப்பட்டார்கள். தீபம் உடனடியாக இடைவெளியை நிரப்பிக்கொண்டது.

பிழைகள் முழுவதும் ஒருமுகப்படுத்தப்பட்ட நிர்வாக ஒழுங்கு இன்மை தான் காரணம்.......

பல்லூடக பரப்புரையில் நம்பிக்கை உண்டு எந்த ஊடகம் தமிழர் சார்பாக இயங்க வருகின்றது? எல்லாம் நடுநிலைமை என்ற மதில் மேல் படுத்திருந்துஎங்கள் நிகழ்ச்சிகளையும் செய்திகளாக சொல்ல வருகின்றார்கள்.

மாவீரர் நிகழ்வு நிகழ்ச்சிகளை அனைத்து ஊடகங்களும் எடுக்க விட்டால் எடுத்து கொண்டு முதலில் போவது சிரிலங்கா தூதரகத்திற்காகதான் இருக்கும். அனால் ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சி ஒளிவடிவை தாங்கள் எடுத்து நேர்த்தி செய்து அனைத்து தமிழ் ஊடகங்களுக்கும் வழங்கலாம்... அதை அவர்கள் ஒளிபரப்புவது அவர்களது முடிவு.

நத்தார் தினத்தன்று தீபம் இரவு செய்தியில் முதல் செய்தியாக தமிழர்களையே அடித்து கொலை செய்யும் ஒரு பாதகனின் நத்தார் வாழ்த்துச்செய்தியுடன் அவரது படத்துடன் தொடங்குகிறது. அவர்தான் ராய்பக்சே. வாழ்த்துச்செய்தி முழுவதும் வாசிக்கப்பட்டு விபரணம் கொடுக்கப்பட்டது. நாங்களும் புலம்பெயர் நாட்டில் ஒரு மூலையில் இருந்து கொண்டு எட அவரும் இப்படி சொல்கிறார். எங்கட பெடியலும் சொல்லுக்கேளாதுகள் என்ற முனகலுடன் அடுத்த வேலைக்கு போய்விடுவோம். ராயபக்சே வலு ஈசியா தமிழன்ர ஊடகத்தால உலகம் முழுக்க பரப்புரை செய்கிறார். என்ன செய்வது?

இப்படியான ஊடகங்கள் இருக்கும் போது எப்படி பல்லூடக பரபுரை செய்வது.

ஒரு சிலர் விடும் தவறுகளால், தேசியத்திற்கும் பின்னடைவு வருகிறது என்பது வேதனையான விடயம். இவர்களைச் சீர்படுத்துவதற்கு அக்கறையுள்ளவர்கள்தான் முன்வரவேண்டும். இந்நிலை மாறவேண்டும். சிறீலங்காவின் பிரச்சாரத்திற்கு முகங்கொடுக்கவேண்டுமென்றால் நாமெல்லோரும் ஒற்றுமையாகச் சேர்ந்து செயற்படவேண்டும். எமது சொந்தப் பகைகளை மறந்து தேசியத்திற்காக ஒன்று சேர்ந்து உழைப்பதே எம்முன்னுள்ள முக்கிய கடமையாகும். குறைகளைப் பற்றிக் கதைக்கத்தான் வேண்டும். அதற்காக நாமே அதனைப் பெரிதுபடுத்தி, எதிரிக்கும் துரோகிகளுக்கும் வழிவகுக்காமல், அதற்குரிய மாற்றுவழியைச் சிந்திக்கவேண்டும்.

ஒருவர் போட்ட கோட்டைச் சிறிதாக்கவேண்டுமாயின், நாம் அதைவிடப் பெரிய கோட்டைப் போடவேண்டும்.

Edited by Thamilachchi

  • தொடங்கியவர்

நேசன்

1. முதலில் ரி.ரி.ன் மூடுவிழா வைக்க கவலையீனமாக இருந்தவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

2. ரி.ரி.ன் நிர்வாகம் நடந்து கொண்ட விதம் வெறுப்படைய வைத்து விட்டது.

3. நோர்வே ரி.ரி.ன் சந்தாக்காரர் நட்டாற்றில் விடப்பட்டார்கள்.

யார் இந்த நிர்வாகம்? இவர்களை ஏன் ஒருவரும் கண்காணிக்கவில்லை?? இவர்கள் கட்டுப்பாடற்று இயங்கினார்களா??? ..... பிழையை எம்மகத்தே வைத்துக் கொண்டு பிறரை நோவானேன்!!! அந்த ரிரிஎன் நிர்வாகம் புலத்துப் பூசாரிகளையோ, அவர்களுக்கு நெருங்கியவர்களையோ வைத்துத்தான் இயங்கியது!!!! இயங்கியது என்பதற்கு மேல் கட்டுப்பாடற்று ஓடியது என்பதே பொருந்தும்!!!!

"பொருள் காப்பணம், சுமைகூலி முக்கப்பணம்" என்பது மாதிருதான் இது இயங்கியது!!!! இலண்டனில் ரிரிஎன் என்று ஒரு பெரிய கூட்டமே இருந்தது!! இவர்கள் என்ன சும்மாவா வேலை செய்தார்கள்??? அதைவிட சிலரது துஸ்பிரயோகங்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை தொடர்ந்தது!!!

ஒவ்வொரு நாட்டிலும் அந்ததந்த நாட்டு பூசாரிகளின் கட்டுப்பாட்டிலேயே ரிரிஎன் இருந்ததானால், நோர்வேயில் இன்று சந்தாதாரர் தரிசனத்துக்கு இல்லையாயின், எங்கே நோர்வே பூசாரிகள்?? ஓடி விட்டார்களா????

யுத்தநிறுத்தம் என்று ஒன்று ஏற்பட்டு பலர் பல தடவை புலம் வந்து சென்றார்கள்!! ஆனால் இதுவரை எந்தக் கட்டமைப்புகள் சீராக்கப்படவில்லை!!!! பலதை எதிர் பார்த்தோம், இந்த யுத்த நிறுத்த காலத்தில்!?!? ஆனால் ஒன்றுமே நடைபெறவில்லை!!!!!!!!!!!!

Edited by சோழன்

நன்றி சோழன்,

ரி.ரி.ன் எப்படி ஓடி இருந்தாலும் பரவாயில்லை. மூடும் அளவுக்கு கொண்டு போனது தான் மன்னிக்க முடியாதது... நஸ்டம் வருகிறது நடத்த முடியவில்லை என்றால் அதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன.

சரி சட்ட சிக்கல் என்றால் அதை எதிர் கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் விட்டுவிட்டு நிறுத்தும் அளவுக்கு போனது பிழை.

ஒவ்வொரு நாட்டிலும் இயங்கிய ரி,ரி,ன் அலுவலகங்கள் தங்களது கடமைகளை எந்த எதிர்பார்ப்பும் இன்றி நிறைவாக தாய்கலையகத்துடன் செய்து கொண்டு தான் இருந்தது....

ஆனால் பிரான்ஸ் ரி.ரி.ன் தலைமையகம் தான் முழு பிழையையும் விட்டது. அங்கு தான் தொலைக்காட்சியை நடத்தும் அதிகாரம் , கணக்கு பார்க்கும் பொறுப்பு, நடைமுறையில் வரும் சிக்கலைத்தவிர்க்கும் அலோசனைக் குழு எனபல பிரிவுகளுடன் பொறுப்பு கொடுக்கப்பட்டது.. அப்ப இவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள் என்பது தான் கேள்வி.

ஒன்று உண்மை பல நாடுகளில் இயங்கிய ரி.ரி.ன் கலையகங்களுக்கே தெரியாது ஏன் ரி.ரி.ன் ஒளிபரப்பை நிறுத்தியது என்று.

இவவளவு காலமும் கஸ்டபட்டு வளர்த்த தொலைக்காட்சியை மூடிவிட்டு இப்ப புதுசா தரிசனம் நடத்த போறம் வாருங்கோ கை கொடுங்கோ என்றா என்ன இலகுவான காரியமா? ஏதோ தாயக மக்களின் விடுதலையோடு சேர்ந்து உழைப்போம் என்ற சில சமிங்சைகளை தரிசனம் காட்டி இருப்பதால் பழைய ரி.ரி.ன் சந்தாதாரர் தொடர்ந்து இழுபடுகினம். . சரி பார்ப்பம் எவ்வளவு தூரம் இவையும் போகினம் என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.