Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் மழையினால் 156,000பேர் பாதிப்பு 9,355 குடும்பங்கள் நலன்புரி முகாம்களில் தஞ்சம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் மழையினால் 156,000பேர் பாதிப்பு 9,355 குடும்பங்கள் நலன்புரி முகாம்களில் தஞ்சம்

[Monday December 24 2007 04:34:31 PM GMT] [யாழினி]

அடை மழைகாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 56 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக 9355 குடும்பங்களைச் சேர்ந்த 35650 பேர் 38 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் 211 குடும்பங்களைச் சேர்ந்த 865 பேரும் கோறளைப் பற்று மத்திய பிரிவில் 2100 குடும்பங்களைச்சேர்ந்த 8475 பேரும், ஓட்டமாவடி பிரிவில் 2631 குடும்பங்களைச் சேர்ந்த 10231 பேரும், கிரான் பிரிவில் 895 குடும்பங்களைச் சேர்ந்த 3169 பேரும், செங்கலடிபிரிவில் 2114 குடும்பங்களைச் சேர்ந்த 8289 பேரும், மண்முனை வடக்கு பிரிவில் 943 குடும்பங்களைச் சேர்ந்த 3530 பேரும், காத்தான்குடியில் 461 குடும்பங்களைச் சேர்ந்த 1152 பேரும், நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.

மேற்படி பிரிவுகளில் முறையே 2,5,4,9,12,3,3 ஆக 38 நலன்புரி நிலையங்களும் இயங்குகின்றன. வாகரை பிரிவில் பாதிக்கப்பட்ட மேலும் 718 குடும்பங்களைச் சேர்ந்த 2893 பேரும் வாழைச்சேனை பிரிவில் 786 குடும்பங்களைச் சேர்ந்த 12107 பேரும் ஓட்டமாவடி பிரிவில் 2395 குடும்பங்களைச் சேர்ந்த 16420 பேரும் கிரான் பிரிவில் 3350 குடும்பங்களைச் சேர்ந்த 14765 பேரும், செங்கலடி பிரிவில் 12518 குடும்பங்களைச் சேர்ந்த 47790 பேரும் ஏறாவூர் நகரப் பிரிவில் 1734 குடும்பங்களைச் சேர்ந்த 3112 பேரும் மண்முனை வடக்கு பிரிவில் 2100 குடும்பங்களைச் சேர்ந்த 7513 பேரும் ஆரையம்பதி பிரிவில் 5641 குடும்பங்களைச் சேர்ந்த 21435 பேரும் காத்தான்குடி பிரிவில் 9238 குடும்பங்களைச் சேர்ந்த 23270 பேரும், களுவாஞ்சிகுடி பிரிவில் 1705 குடும்பங்களை சேர்ந்த 7039 பேரும் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். இதேவேளை திங்கட்கிழமை மாலை தொடக்கம் மழை பெய்ந்துள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்துக்குள் 81 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு காலநிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எஸ். சூரியகுமாரன் தெரிவித்தார்.

போக்குவரத்து துண்டிப்பு வெள்ளம் காரணமாக பல கிராமங்களுக்கான போக்குவரத்துக்களும் பல வீதிப்போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. வெலிக்கந்த மன்னம்பிட்டி வீதி வாழைச்சேனை, சித்தாண்டி வீதி ஆகியவற்றில் வெள்ளம் பாய்கிறது. வாகரை வாழைச்சேனை வீதியில் பனிச்சங்கேணி மாங்கேணி ஆகிய இடங்களில் வெள்ளம் பாய்கிறது. உன்னிச்சை குளம் கதவுகள் திறப்பு உன்னிச்சை குளம் உடைப்பெடுப்பதை தவிர்ப்பதற்காக அதன் 3 கதவுகளும் திறந்து விடப்பட்டு 4 அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனாலும், வெள்ளம் அதிகரித்துள்ளது.

வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு கொழும்பு ரயில் சேவையும் வழமைக்கு திரும்பவில்லை. இந்த ரயில் சேவை திங்கட்கிழமை தொடக்கம் இடை நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் மட்டக்களப்பு திருகோணமலை நெடுஞ்சாலையிலும் வாகனங்கள் பயனளிக்க முடியவில்லை. டம்புள்ள வழியõகவே வாகனங்கள் செல்கின்றன.

விஷேட கூட்டம் இதேவேளை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை ஆராய்வதற்கான ஒரு கூட்டம் நேற்று காலை பதில் அரசாங்க அதிபர் மகேசன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. பிரதேச செயலாளர்கள் திணைக்களங்களின் தலைவர்கள் அரச மற்றும் அரச சாபர்ற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இக்கூட்டங்களில் கலந்து கொண்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குமாறு பதில் அரசாங்க அதிபர் தொண்டு நிறுவனங்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இது இவ்வாறிருக்க மட்டக்களப்பு, வாழைச்சேனை, கருவாஞ்சிக்குடி, காத்தான்குடி, செங்கலடி ஆகிய நகரங்களில் நத்தார் வியபாரம் களை கட்டியிருந்தது. வங்கிகளில் மக்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று பணம் மீளப்பெற்றதை காணமுடிந்தது.

http://tamilwin.net/article.php?artiId=588...;token=dispNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.