Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முழு அளவில் யுத்தத்தை முன்னெடுக்க முனையும் இலங்கை அரசு..?

Featured Replies

இலங்கை டெய்லிநியூஸ் பத்திரிக்கைக்கு கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொட்டபாய ராஜபக்ச '' I think the most sensible thing is that we must end this Ceasefire Agreement by officially declaring there is no Ceasefire Agreement. Why should we hoodwink the people by saying there is a Ceasefire Agreement?,” என்றார்.

அவரது இந்த அறிவிப்பு அடுத்த ஆண்டு முழு அளவில் அரசு போரை முன்னெடுக்கவுள்ளதையே காட்டுகிறது. புலிகள் மீதான தடையை அரசு அறிவிக்குமானால் இலங்கையில் இருக்கும் உள்ளூர், சர்வதேச ஊடகவியளாளர்கள் புலிகளை நேரடியாக இலங்கையில் இருந்து தொடர்புகொள்ளமுடியாத நிலையேற்படும். இது ஈழப்போர்-4 குறித்த உண்மை நிலவரம் வெளிவருவதை தடுக்கும் அல்லது தாமதப்படுத்தும்.

டெய்லிநியூஸ் செய்தி: http://www.dailynews.lk/2007/12/29/sec01.asp

இன்னமும் கால தாமதமாகவில்லை. புதுவருடத்தை ஒட்டியோ தைப்பொங்கலை ஒட்டியோ புலிகள் ஒரு தலைப்பட்சமாக யுத்தநிறுத்த அறிவுப்புச் செய்யலாம்.அதன் அடுத்த கட்டமாக கனரக ஆயுதங்களை பாசறைகளில் வைப்பதற்கு ஆர்வம் தெரிவிக்கலாம். இதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் உழைக்க வேணும்.

இந்த முழுஅளவு என்பதற்கு என்ன அளவுகோல். தற்போது இலங்கையரசு தனது அனைத்து வளங்களையும் பயன்படுத்திக் கொண்டுதான் பேரை நடத்திக் கொண்டிருக்கிறது. கடும் உக்கிரநிலையில் போரை நடத்திக்கொண்டு யுத்தநிறுத்தம், ஒப்பந்தங்களைச் செய்தலென்பதெல்லாம் இனிப் போர் செய்ய முடியாது என்ற தோற்றப்பாட்டைத்தான் வெளிப்படுத்துகிறது .

கடந்த கால அளவீடுகளில் ஒப்பிடும் போது இலங்கை அரசு அனைத்து வளங்களையும் பயன்படுத்தித்தான் போரை நடத்துவதாக தென்படுகிறது. ஆனால் சிறீலங்கா அரசு சர்வதேச உதவிகள் நேச நாட்டு உதவிகளிற்கு அப்பால் சிங்கள தேசத்தின் முழுப்பலத்தோடும் போரிடவில்லை. தமிழர்களும் அப்படிப்பட்ட போரை இதுவரை எதிர்கொள்ளவில்லை. தமிழீழம் என்று ஒன்று உருவாகும் முன்னர் அப்படி ஒரு போரை தமிழர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

  • தொடங்கியவர்

தமிழர்களின் தலைமை 2001 நத்தார்காலத்தில் அறிவித்த ஒரு தலைப்பட்சமான யுத்தநிறுத்த அறிவிப்புதான் 2002இல் முழுமையான ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்தமாக மாறியது. இதன் பின்புலத்தில் இருந்த சர்வதேச நாடுகளின் வெளிப்படையான ''ஈடுபாடு'' சமாதான காலத்தில் இருந்ததைவிட அதிகமாக யுத்தகாலத்தில் மறைமுகமாக செயலாற்றுகிறது.

அரசின் யுத்த முனைப்பை சர்வதேசம் பாராமுகமாக இருப்பதை மாற்றியமைக்கக்கூடிய மூலோபாயம் போரைத்தவிர்த்து சமாதான பேச்சுக்கான முன் சூழலை மீளஉருவாக்குவதே ஆகும்.

சமாதான பேச்சுகள் குழம்பினால் தோற்றது சமாதானமாக இருப்பினும் எம்முன்னுள்ள தேர்வு இருவழிப்பாதையாகும். ஆனால் யுத்த வழிமுறையில் முடிவு மிக ஆபத்தான ஒரு வழிப்பாதையில் பயணிப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் நகர்வுகள் வெறுமனவே சிறீலங்கா அரசின் அணுகுமுறைகளை முன் வைத்து இருக்கவில்லை. அல்லது சர்வதேச சமூகத்தின் ஆதரவு கிடைக்கும் என்ற நிலையில் இருக்கவில்லை. மாறாக விடுதலைப்புலிகளின் நகர்வுகள் சர்வதேசத்தின் எண்ணத்திலும் சிறீலங்காவின் எண்ணத்திலும் மாறுதல்களை ஏற்படுத்தத் தூண்டும் விதமாக அமைந்திருக்கின்றன..! இந்த நிலையை விடுதலைப்புலிகளும் தமது காலத்தோடு எழுந்துள்ள எதிர்பார்ப்புக்கள் பூர்த்தியாகும் நிலைவரை எடுத்துச் செல்வர்...! காலமாற்றங்கள் நிச்சயம் புலிகளின் அணுகுமுறைகளை மாற்றி அமைக்கும்..!

அரசு முழுமையான போர் என்று அச்சுறுத்தினால் என்ன சமாதானம்.. சர்வகட்சி.. கிழக்கின் தேர்தல் என்று புலிகளைச் சீண்டினால் என்ன.. புலிகள் தங்களின் நிகழ்ச்சித்திட்டத்துக்கு அமையவே நகர்வுகளைச் செய்வதுடன் அரசின் சர்வதேசத்தின் திரைமறைவுச் சூழ்ச்சிகளில் இருந்து தம்மைப் பாதுகாத்தபடியே நகர்வர்..! அதுதான் தற்போதைக்கு தமிழ் மக்களின் பேரம் பேசும் வலுவைத் தக்க வைக்க உதவியாகவும் அமையும்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

அரசினது இருதோற்றப்பாடுகள் வெளிப்படையாகவே தெரிகின்றன. சர்வதேச ஆதரவு இருப்பதினாலேயே அரசு தொடர்ந்து போரைச் செய்கின்றது. சிங்கள தேசத்தின் முழு ஒத்துழைப்பும் போருக்கான ஆதரவுக் கணிப்பீட்டில் வெளிப்படுத்தப்பட்டுவிட்டது. அது ஒரு முறையல்ல. இரு முறை நடத்தப்பட்ட கணிப்பீடுகளும் அதைச் சொல்லி நிற்கின்றது.

கிழக்கில் புலிகளைத் தோற்கடித்துவிட்டோம், இனி வடக்கில் துடைத்து விடுவோம் அவ்வாறு அரசு சொல்கின்றது. இந்தச் சொயற்பாடுகளுக்கெல்லாம் சர்வதேசம் பதில் கூறுவதைத் தவிர்க்கின்றது. அப்படியெனில் சர்வதேசத்தின் போருக்கான ஆதரவை இலங்கையரசு பெற்றுள்ளது.

என்னைப் பொறுத்தவரை இலங்கையரசு தனது முழு வளத்தையும் வன்னியைச் சுற்றி வர நிறுத்தி போரிடுகிறது. இந்த நிகழ்வில் பெற்போகும் வெற்றிதான் தமிழர் தலைவிதியைத் தீர்மானிக்கும். இந்தப்போர் ஒட்டு மொத்தமாக முட்டிமோதுவதாக இருக்காது. தமது பலத்தைத் தக்கவைத்துக் கொண்டு, எதிரியைப் பலவீனப்படுத்தும் நிகழ்வினாலேயே அது வெற்றிகொள்ளப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்காக வி.புலிகள் தமது பலத்தையும் ,தந்துரோபாயத்தையும் தமது பாணியிலேயே மேற்கொள்கிறார்கள்.சாதாரண கணக்கெடுப்பின் படி நூற்றுக்கு மேலான படையினர் காயமடைந்தோ அல்லது இறந்தோ உண்ளார்கள் என்பது கண்கூடு.சர்வதேசம் என்பது இற்றை வரை தமிழ் மக்களுக்காக செயற்படவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.