Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் ஆக்கள் எல்லாரும் இந்தமுறை வெளிநாடுகளில பொங்கல் கொண்டாடுறீங்களோ?

தமிழ் ஆக்கள் எல்லாரும் இந்தமுறை வெளிநாடுகளில பொங்கல் கொண்டாடுறீங்களோ? 34 members have voted

  1. 1. தமிழ் ஆக்கள் எல்லாரும் இந்தமுறை வெளிநாடுகளில பொங்கல் கொண்டாடுறீங்களோ?

    • ஆம் - விமரிசையா கொண்டாடுறம்
      6
    • ஆம் - சிறிய அளவில அடக்கமா கொண்டாடுறம்
      18
    • இல்லை - இந்தமுறை கொண்டாட இல்லை
      0
    • இல்லை - ஊரைவிட்டு வெளிக்கிட்டபின் ஒருதடவையும் கொண்டாடுவது இல்லை
      9
    • வேறு ஏதாவது பதில்?
      1

Please sign in or register to vote in this poll.

Featured Replies

கிறிஸ்தவர்களை போல், இஸ்லாமியர்கள் போல் இந்துக்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் விட்டு இருந்தார்கள் என்றால், இது தமிழர் பண்டிகையா, தமிழ் இந்துக்களின் பண்டிகையா என்று நாம் வாதம் செய்து கொண்டிருக்க பொங்கல் பண்டிகையே இருந்திருக்காது. தமிழர்களின் வசந்த விழாவை சிலப்பதிகாரத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய நிலை போல் ஏதாவது பழைய ஏடுகளில் இருந்து தான் பொங்கல் பண்டிகையை தெரிந்து கொண்டிருக்க வேண்டும்

அப்ப என்ன பழந்தமிழர்களான இந்துக்களின் பண்டிகை தான் பொங்கல் என்று காவடி ஆடுவமா? :lol:

  • Replies 92
  • Views 12.6k
  • Created
  • Last Reply

அப்ப என்ன பழந்தமிழர்களான இந்துக்களின் பண்டிகை தான் பொங்கல் என்று காவடி ஆடுவமா? :lol:

ம்! காவடியுடன் சேர்த்து கரகாட்டம், கோலாட்டம், கும்மி எல்லாம் ஆடலாம்! மறக்காமல் குளிசை போட்டுக்கொண்டு வாருங்கள் :lol::lol:

Edited by vettri-vel

  • தொடங்கியவர்

கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடுறது இல்லை எண்டு யார் சொன்னது? எனக்கு தெரிந்த ஏராளம் கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடி வருகின்றார்கள். யாழ்ப்பாணத்தில திருமறைக்கலாமன்றம் எண்டு ஒண்டு இருக்கிது. தெரியுமா? அங்கு ஏராளம் கலைநிகழ்ச்சிகள் பொங்கல் தினத்தை ஒட்டி நடைபெறுவதை நான் அறிவேன். தேவாலயங்களில் கூட பொங்கல் செய்யுறவர்கள். பொங்கல் தமிழர் திருநாளாகவே கொண்டாடப்பட்டு வருகிது. இதில் சம்மந்தப்பட்டிருப்பது சூரியன் தானே? சூரியனுக்கு நன்றி செலுத்ததானே பொங்கல் கொண்டாடப்படுகிது? இப்பிடிப் பாத்தால் கிறிஸ்தவர்களிற்கே உரித்தானதுகள இந்துக்க்களும் வேறு மதங்களில் இருப்பவர்களும் செய்யக்கூடாது எண்டு சொல்லவேணும். இஞ்ச கனடாவிலையும், ஏன் தாயகத்திலையும் கூட ஜனவரி முதலாம் திகதி அதிகாலை அண்டு சனங்கள் இந்துக்கோயிலுக்கு போய் சாமி கும்பிடுதுகள். 31ம் திகதி இரவு கோயில் சனங்களால நிரம்பி வழியுது. நீங்கள் சொல்லுறதின்படி பாத்தால் இந்துக் கோயில்களில 31ம் திகதி சாமம் என்ன விசேஷம் இருக்கிது? இது கிறிஸ்தவர்களின் நாள் அல்லவா? மகேஸ்வரன் எம்.பி கூட முதலாம் திகதி ஏன் பொன்னம்பலவானாஸ்வரம் என்ற இந்துக்கோயிலுக்கு போய் இருந்தார். அங்க அன்றைக்கு ஏன் சிறப்பு பூசைகள் நடந்தது? ஏன் அன்றைக்கு கோயில் சனங்களால நிரம்பி வழிஞ்சிது? இந்துக்களுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லையே? அவர்கள் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு போகாமல் ஏன் அன்றைக்கு இந்துக்கோயிலுக்கு போனவேள்??

இப்ப உலகத்தில நான் இந்து நீ கிறிஸ்டியன் எண்டுற நிலமை மறைஞ்சு எல்லாரும் எல்லாத்தையும் கொண்டாடும் வழக்கம் வந்திட்டிது. விரைவில ஒரு காலத்தில கிறிஸ்மஸ் தினம் அன்று இரவைக்குகூட இந்துக்கோயில்களில சிறப்பு வழிபாடுகள் யேசுவின் வருகையை ஒட்டி நடைபெறும் பாருங்கோ. இதமாதிரி தீபாவளி தினத்தையும் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் நிலமை வரலாம்.

ஒவ்வொன்றும் யாரிண்ட பண்டிகை எண்டு அல்லது யாருக்கு சொந்தமானது எண்டு வாதிக்காமல், அவற்றை கொண்டாடுவதன் உள்ளார்ந்த தத்துவங்களை விளங்கிக்கொண்டால் இந்தப் பிரச்சனைகள் வராது. நான் இந்து, நீ கிறிஸ்டியன் எண்டுற பிரிவினையும் இருக்காது.

கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடுறது இல்லை எண்டு யார் சொன்னது? எனக்கு தெரிந்த ஏராளம் கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடி வருகின்றார்கள். யாழ்ப்பாணத்தில திருமறைக்கலாமன்றம் எண்டு ஒண்டு இருக்கிது. தெரியுமா? அங்கு ஏராளம் கலைநிகழ்ச்சிகள் பொங்கல் தினத்தை ஒட்டி நடைபெறுவதை நான் அறிவேன்.

எனக்கும் அதுபோல் பொங்கல் கொண்டாடாத தமிழ் கிறிஸ்தவர்களை ஆயிரக்கணக்கில் தெரியும். சும்மா சப்பை கட்டு கட்டாதீர்கள். :lol:

ஏதோ ஒரு திருமறைகலாமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியை வைத்து கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடுகிறார்கள் என்று சொல்ல நானும் நீங்களும் சிறுவர்கள் இல்லை. பொங்கல் என்ன, தமிழகத்தில் அனேகமான கிறித்தவ தமிழர்கள் பொட்டு கூட வைப்பதில்லை. பொட்டு வைக்க வேண்டாம் என்று அவர்களுக்கு தடை விதித்தது இந்து மதம் அல்ல. நீங்கள் சொல்லும் திருமறை சபைகள் தான்!

ஏன் தமிழ் கிறிஸ்தவர்கள் கோவிலில் பியானோவும் கிட்டாரும் மட்டும் வாசித்து கொண்டிருக்கிறார்கள். தமிழிசை கருவிகளான மேளமும், நாகசுரமும் கேட்டால் யேசு கோபித்துக் கொள்வாரா? ஏன் எல்லா கிறிஸ்தவ கோவில்களையும் றோமன் கட்டிடக்கலையை வைத்தே கட்டிக்கொண்டிருக்கிறீர்கள். தமிழருக்கு சொந்தமான கட்டிடக்கலையின் அடிப்படையில் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தையாவது கட்டி இருக்கிறார்களா நீங்கள் பொங்கல் கொண்டாடுவதாக கூறும் கிறிஸ்தவர்கள்! இன்றும் தமிழிசை கருவிகள் இசைக்கப்படுவதும், தமிழிசை பாடப்படுவதும், தமிழர்களின் கட்டிட சிற்பக்கலையை காப்பதும் இந்துக்களின் கோவில்கள் தான்.

இன்றைய உலகில் ஆங்கில காலண்டரையே எல்லோரும் உபயோகிப்பதால், அதை இறைவணக்கத்துடன் இந்துக்கள் ஆரம்பிக்கிறார்கள். அதில் ஒரு தவறும் இல்லை. அது போல் தமிழர்கள் மட்டும் அல்ல எந்த மொழியை, எந்த மதத்தை சேர்ந்தவர்கள் வேண்டுமானாலும் பொங்கல் பண்டிகையை கொண்டாடட்டும். நல்லது தான். ஆனால் இந்து தமிழர்களின் வானியலுடன் கூடிய தொடர்போடு வகுக்கப்பட்ட ஒரு பண்டிகையின் வரலாற்றையும் பின்னணியையும் மாற்றி எழுத துடிக்கும் பொய்யர்களின் புரட்டுக்களை தான் நாம் எதிர்க்கிறோம்

Edited by vettri-vel

  • தொடங்கியவர்

ஓ உங்களுக்கு பொங்கல் கொண்டாடாத ஆயிரக்கணக்கான தமிழ் கிறிஸ்தவர்களை தெரியுமோ? எனக்கு பொங்கல் கொண்டாடாத ஆயிரக்கணக்கான தமிழ் இந்துக்களையும் தெரியும்.

இப்ப என்ன சொல்லவாறீங்கள்? பொங்கல் திருநாளை ஆரம்பித்தவர்கள் இந்துக்கள் என்ற அங்கீகாரம் பேணப்படவேண்டும் என்றா?

எதிர்காலத்தில் நீங்கள் கேட்டதுபோன்ற மாற்றங்களை கிறிஸ்தவர்கள் தமது தேவாலயங்களில் செய்யக்கூடும்.

மேலும்... ஓ பொங்கல் அன்றைக்கு நீங்கள் பீப்பி, மேளம் கச்சேரிகளும் வீட்டில வைப்பீங்களோ? பீப்பி, மேளம் அடிச்சால்தான் நாங்கள் தமிழரோ?

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்

எதிர்காலத்தை வைத்துத் தீர்மானிக்க வேண்டிய தேவையில்லையே. எதிர்காலம் நிகழ்காலமாகும்போது, அதைப் பற்றிச் சிந்திப்போம்.

வெற்றிவேல் தெளிவாகவே சொல்கின்றார்.வேறுயாரும் கொண்டாடுவதில் தவறில்லை. கிறிஸ்மஸ் எப்படிக் கொண்டாடுவது போல.

இப்போதும் கூட வவுனியா கொன்வன் உற்படப் பலக் கிறிஸ்தவ பாடசாலைகளில் பொட்டு வைத்து நீறு, அணிந்து, கடவுள்படம் போட்ட ஆபரணம் அணிந்து போவதற்கு போவதற்குத் தடை விதிக்கின்றார்கள். ஆனால் குறஸ் அணிந்து வரலாமாம்.

ஓ உங்களுக்கு பொங்கல் கொண்டாடாத ஆயிரக்கணக்கான தமிழ் கிறிஸ்தவர்களை தெரியுமோ? எனக்கு பொங்கல் கொண்டாடாத ஆயிரக்கணக்கான தமிழ் இந்துக்களையும் தெரியும்.

இப்ப என்ன சொல்லவாறீங்கள்? பொங்கல் திருநாளை ஆரம்பித்தவர்கள் இந்துக்கள் என்ற அங்கீகாரம் பேணப்படவேண்டும் என்றா?

எதிர்காலத்தில் நீங்கள் கேட்டதுபோன்ற மாற்றங்களை கிறிஸ்தவர்கள் தமது தேவாலயங்களில் செய்யக்கூடும்.

மேலும்... ஓ பொங்கல் அன்றைக்கு நீங்கள் பீப்பி, மேளம் கச்சேரிகளும் வீட்டில வைப்பீங்களோ? பீப்பி, மேளம் அடிச்சால்தான் நாங்கள் தமிழரோ?

பொங்கல் பண்டிகை கொண்டாடுபவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், அடுத்த பொங்கலுக்கு தமிழகத்தில் ஒரு கிறித்தவ கிராமத்துக்கும், இந்துக்களின் கிராமத்திற்கும் சென்று பாருங்கள். வித்தியாசம் தெரியும்

கிறித்தவ தேவாலயங்கள் முக்கியமான எதை மாற்றுவதற்கும் வத்திக்கானையோ, அல்லது மேற்கத்திய நாடுகளில் உள்ள தலைமையகங்களையோ கேட்காமல் செய்ய முடியாது என்பதை கூட அறியாத அப்பாவியாக இருக்கிறீர்கள். கிறித்தவம் வந்து 500 வருடங்களாக செய்யாத கட்டிடக்கலை, இசை சம்பந்தப்பட்ட மாற்றங்களை அடுத்த ஐந்து ஆறு வருடங்களில் செய்யப் போவதாக சொல்கிறீர்கள் :lol: . கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!

ஒரு வெள்ளையுடன் பேசும் போது உன் கட்டிடக்கலை எது என்று தமிழனை பார்த்து கேட்டால் இந்து கோவில்களை தான் காட்ட வேண்டும். கிறித்தவ தேவாலயங்களை காட்ட முடியாது.உன் இசை எதுவென்று கேட்டால் மேளத்தையும் நீங்கள் பீப்பீ என்று ஏளனமாக கூறும் நாகசுரத்தையும் தான் காட்டவேண்டி இருக்கும். பியானோவையும் கிட்டாரும் உங்கள் பரம்பரை இசைக்கருவி என்று சொன்னால் அந்த வெள்ளை உங்களை பார்த்து சிரிக்கும், ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்

Edited by vettri-vel

  • தொடங்கியவர்

நீங்கள் விடுற பிழை இதுதான்...

முதலில ஒரு கேள்வி: இந்து என்பவன் யார்? கிறிஸ்டியன் என்பவன் யார்?

மற்றது எங்கட பிரச்சனைகளை ஏன் தமிழகத்துக்கு கொண்டுபோறீங்கள்? நான் கதைப்பது ஈழத்து மற்றும் வெளிநாட்டில் உள்ள ஈழத்து தமிழர்பற்றி மாத்திரமே. தமிழகத்தில என்னகூத்து நடக்கிது எண்டு பார்த்தால் பிறகு முழு இந்தியாவையும் கணக்கில் எடுக்கவேண்டும். போறபோக்கை பார்த்தால் யாழ் களத்தில் விஷ்வ ஹிந்து பரிசத், பாரதீய ஜனதா கட்சிகள எல்லாம் துவங்குவீங்கள் போல இருக்கிது?

கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பாராகவா? மிக்க நன்றிகள். உங்களை இந்துமத மதவாதி - வெறிக்குட்டி அத்வானி ஆசீர்வதிப்பாராக! :lol::lol:

கிட்டார், பியானோ பற்றி எல்லாம் கதைக்கிறீங்கள். அப்பிடி என்றால் கம்பியூட்டர், சட்டலைட், தொலைபேசி, ரீவி, ஐபொட் இதுகள் எல்லாம் என்னமாதிரி. தமிழர் கண்டுபிடிச்சதுகளோ?

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் முதலில் நாகரீகமாகக் கதைத்துப் பழகுங்கள். கர்த்தர் ஆசிர்வதிக்கட்டும் என்று அவர் சொன்னது நாகரீகமாகத் தானே சொன்னார்.

அதற்கு ஏன் அத்வானியைப் போட்டுத் தாக்குகின்றீர்ள். அவர் மது அருந்ததாவர் என்று உங்களுக்குத் தெரியுமா? அல்லது உங்களின் இயலாமை தான், அவ்வாறு புலம்ப வைக்கின்றதா?

யாழ்களத்தில் திராவிடக் கும்பலுக்கு ஆதரவாக சிலர் அலைகின்றபோது, விஸ்வ ஹந்துக்கு ஆதரவளிப்பதில் தவறில்லை.

பண்பாடு என்பது எது என்று கூடத் தெரியாமல் இருக்கின்றீர்கள். தொலைபேசி, கணனி எல்லாம் பண்பாட்டு அடையாளம் அல்ல. இயல் இசை, நாடகம், கட்டிடக்கலை, இருப்பு, மொழி, என்று வருகின்றவையே பண்பாடு தவிர, தொலைபேசி எல்லாம் பண்பாடு என்று சொல்கின்ற உங்களின் தெளிவின்னை வெக்கப்பட வைக்கின்றது. அதை யாரும் பண்பாட்டு அடையாளமாகச் சொன்னதுமில்லை.

நமக்கென்று அடையாளங்கள் என்று எதைக் கேட்டால் என்னத்தைக் காட்டப் போகின்றீர்கள் என்று கேட்டதற்கு என்னமோ உளறுpன்றீர்கள். தமிழரின் ஆண்டு கிபி 2008ம் ஆண்டு தொடங்கப் போகுது. அதில் இருந்து தானே எனிப் பாண்பாடு, கலாச்சாரம், இனம் பற்றிச் சிந்திக்க வேண்டும். அதற்கு முன் இருந்தவர்கள் எல்லாம் புல்லுரிவிகள், பார்ப்பானிகள்.

தமிழனாகுவதற்கு எல்லோரும் ஞானஸ்தானம் பெறத் தயாராக இருங்கோ

-----------

வெற்றி

கலைஞன் அத்வானியை மதவெறி- வெறிக்குட்டி எனக் கதைத்தமைக்காக, பரிசுத்த பிசாசு, காட்டேரி என்று பதிலடி கொடுக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

  • தொடங்கியவர்

ஐயோடா சாமி.. அநாகரிகமாக கதைச்சுப்போட்டனோ. மன்னிச்சுகொள்ளுங்கோ. வெற்றிவேல் பகிடியாக ஏதோ சொல்லி இருந்தார். நானும் திருப்பி பகிடியாக சொல்லி இருந்தேன்.

ஐயோ பாவமே அத்வானி மச்சம் சாப்பிடாதவர், மது, மாது புகை பழக்கம் எல்லாம்இல்லாதவரா? இந்தக்காலத்தில மாமிசம் சாப்பிடாமல் மரக்கறி சாப்பிடுபவர்கள்தான் அடிப்படையில் கொலைவெறியர்களாக இருக்கின்றார்கள். பல பிரச்சனைகளிற்கு மரக்கறி சாப்பிட்டுக்கொண்டு அம்சமாக இருந்து குழப்பம் செய்பவர்கள் காரணமாக இருக்கிறார்கள்.

யாழ் களத்தில திராவிடத்துக்கு ஆதரவான ஒரு கும்பல் இருக்கிதோ? ஓகோ இது எல்லாம் எனக்கு தெரியாமல் போச்சிது. அப்ப இப்போதைக்கு யாழுக்க எத்தின மத, சாதிப் பிரிவுகள் இருக்கிது? ஒவ்வொன்றுக்கும் யார் யார் தலைவர்கள்?

அடப்பாவமே, நான் மனிதபண்பாடு, மனித நாகரீகம் பற்றி கதைக்கிறன். கம்பியூட்டர், தொலைபேசி, ஐபொட், ரீவி எல்லாம் பண்பாட்டு வடிவங்களில அடக்கம் இல்லையோ? எனது சிற்றறிவுக்காக வருந்துகின்றேன். எதுக்கும் நாளைக்கு ஹிஸ்ரி புரபசரிட்ட இது உண்மைதானோ என்று கேட்டுப்பார்க்க வேணும்.

இஞ்ச இப்ப என்ன நடக்கிது? நமக்கென்று அடையாளங்கள் என்று எதைக் கேட்டால் என்னத்தைக் காட்டப் போகின்றீர்கள் என்று யார் கேட்டார்கள்? நான் எனது கருத்தை இதன் அடிப்படையில் எழுதவில்லை. தமிழ் ஆக்கள் எல்லாரும் இந்தமுறை வெளிநாடுகளில பொங்கல் கொண்டாடுறீங்களோ? எண்ட பொதுக்கருத்தாடல் தலைப்பில் எழுதிக்கொண்டு இருக்கிறன்.

வெற்றி, தூயவன் சொன்னமாதிரி என்னை பரிசுத்த பிசாசு, காட்டேரி என்று பேசிபோடாதிங்கோ. பிறகு நான் அழுதிடுவன் சொல்லிப்போட்டன். ஆம்பளை நான் ஆக்களுக்கு முன்னால அழுதால் உங்களுக்குத்தான் வெக்கக்கேடு!

அப்ப தமிழனுக்கு ஒரு சனியனும் தனித்துவமாக கிடையாதோ?

தமிழீழம் கிடைத்தால் 3 புதுவருடம் கொண்டாடலாம்.

இந்து கிறிஸ்தவம் இஸ்லாம்

  • கருத்துக்கள உறவுகள்

தினகரனிலும், பஸ்சிலும் பொதுமக்களை எரித்தவர்கள் தொடர்ந்து அத்வானியைப் பற்றி மூளைச்சலவை செய்ததால் தான் உங்களின் கருத்து அப்படியிடிருக்கின்றது. ஆனால் உண்மையான கொலைககாரர்....

பரிசுத்த ஆவி, காட்டேரி என்று உங்களை நான் சொல்லவில்லை. அதற்கான தேவையுமில்லை.

அதனால அழாதையுங்கோ... என்ர கண்ணுல்ல

கோட்டை கட்டிய தமிழன் எப்ப கோயில் கட்டத் தொடங்கினானே அன்றே அவனது அழிவுகாலம் தொடங்கியது இன்றும் தொடர்கிறது இனியும் தவறை உணர்ந்து திருந்தாதவரை தொடரும்.

தமிழனது அழிவு காலம் தொடங்கிய (தமிழன் வெற்றி கொள்ளப்பட்ட) பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டவற்றை வைத்துத்தான் இன்று தமிழனின் பண்பாடு கலாச்சாரம் கட்டக்கலை என்பதற்கு சான்றுகளாக காட்டுவோம் தமிழனின் தனித்துவத்தைப் பேணுவோம் தமிழீழம் காண்போம் நாளை.

இந்து மதம் போல் தான் இந்திய சினிமா கூட தமிழனை வென்றுவிட்டது. இந்தியச் சினிமாவை எமது கலாச்சார இலக்கிய படைப்புகளாக வெள்ளையளுக்கு காட்டலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டை கட்டிய தமிழன் எப்ப கோயில் கட்டத் தொடங்கினானே அன்றே அவனது அழிவுகாலம் தொடங்கியது

இந்தச் பஞ் அற்புதமான கண்டு பிடிப்பின் எடுத்துக்காட்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன் இசை எதுவென்று கேட்டால் மேளத்தையும் நீங்கள் பீப்பீ என்று ஏளனமாக கூறும் நாகசுரத்தையும் தான் காட்டவேண்டி இருக்கும்.

பறைதான் தமிழாpன் வாத்திய கருவிஎன்று எங்கேயோ படித்தேனே.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பறைதான் தமிழாpன் வாத்திய கருவிஎன்று எங்கேயோ படித்தேனே.. :lol:

அது தான் படிப்பில் பெயிலு ஆகிட்டியளே! :lol:

மதம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது. பல்லாண்டு காலமாக இருக்கும் ஒன்றை ஓரிரு வருடங்களில் அழித்து விடமுடியாது. அதற்கான அதனை தொடர்ந்தும் பேணமுடியாது. உலகத்தின் அறிவாளிகளாக இருப்பவர்கள்கூட இன்னும் மதத்தைப் பேணித்தான் வருகிறார்கள் என்பது வேதனையான விடயம். அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டியவர்களில் பலரே இன்னும் மதவாதிகளாக இருக்கிறார்கள். ஆனால், மதமின்றி, வாழுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மகிழ்ச்சியான விடயம். நாம் பிறந்தது, வாழ்வது, சாவது. இதுதான் உண்மை. நாம் பிறந்ததும், சாவதும் எம் கையில் இல்லை. ஆனால் நாம் வாழ்வது எம் கையில் உள்ளது. அதை எமக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக ஆக்குவதே சிறந்தது. மதங்கள் எமக்கு வாழிகாட்டிகளாக இருப்பதற்கு உருவாக்கப்பட்டவை. ஆனால், காலப்போக்கில் எம்மை அழிப்பதற்காகப் பயன்படத் தொடங்கிவிட்டது என்பதே உண்மை. எமது காலத்திற்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப, நாம் மதங்களைப் பயன்படுத்துகிறோமே தவிர, அதனைப் பின்பற்றுவதில்லை. அனைத்து மதங்களையும் உற்று நோக்கினால், எல்லா மதமுமே ஒரே கருத்தைத்தான் சொல்கின்றன.

பண்டிகைகள் எமது உறவுகளோடு கூடிக் கழிப்பதற்காக உருவாக்கப்பட்டவை. புவியியல் நிலைக்கேற்ப பண்டிகைகளை உருவாக்கினார்கள். தாயகத்தில் இருந்து கொண்டாட வேண்டிய பொங்கலை அதே நேரத்தில் அதே முறையில் புலம்பெயர் நாடுகளில் கொண்டாட முடியுமா? பொங்கலைச் சரியான முறையில் கொண்டாடுவதாக இருந்தால், நாம் தாயகத்திற்குச் சென்றுதான் கொண்டாட முடியும். ஆகவே தாயகத்திற்குச் செல்லும்போது, அதைச் சரியான முறையில் கொண்டாடுவோம்.

கோட்டை கட்டிய தமிழன் எப்ப கோயில் கட்டத் தொடங்கினானே அன்றே அவனது அழிவுகாலம் தொடங்கியது இன்றும் தொடர்கிறது இனியும் தவறை உணர்ந்து திருந்தாதவரை தொடரும்.

தமிழனது அழிவு காலம் தொடங்கிய (தமிழன் வெற்றி கொள்ளப்பட்ட) பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டவற்றை வைத்துத்தான் இன்று தமிழனின் பண்பாடு கலாச்சாரம் கட்டக்கலை என்பதற்கு சான்றுகளாக காட்டுவோம் தமிழனின் தனித்துவத்தைப் பேணுவோம் தமிழீழம் காண்போம் நாளை.

தமிழனின் அழிவுக்காலத்தில் கட்டப்பட்டதல்ல தஞ்சை பெரிய கோவில், வடக்கே மகாராஷ்டிரத்தின் துங்கபத்ரா நதிவரையிலும் தெற்கே இலங்கை வரையிலும் கிழக்கே கடாரம் வரையிலும் தமிழன் வைத்திருந்த அகன்ற சாம்ராஜ்யத்தின் அடையாளமாக கட்டப்பட்டது தஞ்சை பெரிய கோவில்.

நாடு பிடிக்கும் வஞ்சக எண்ணத்தோடும் மதம் பரப்பும் கிறிஸ்தவ வெறியுடனும் வியாபாரிகள் போல் வேடமிட்டு வந்த ஐரோப்பிய திருடர்களால் தான் தமிழன் நாடும், ஆட்சியும் இழக்க வேண்டி வந்ததே ஒழிய இந்து மதத்தால் அல்ல.

இந்து மதம் என்று ஒன்று இருந்து கிறித்தவ, இஸ்லாமிய மதப்பரப்பலை தடுத்து நிறுத்தி இருக்காவிட்டால், இன்று எஞ்சி இருக்கும் கலாச்சார அடையாளாத்தையும் தமிழர்கள் இழந்து விட்டு எங்களில் கொஞ்சம் பேர் தொப்பி போட்டு மசூதிகளுக்கு சென்று அரபியில் தொழுது கொண்டிருப்போம், மீதம் பேர் தேவாலயங்களில் தேவனின் இரத்தத்தை குடித்து. உடலை தின்று (அப்பமாக) விட்டு ஆலேலுயா பாடிக் கொண்டிருப்போம்.

மதம் பரப்ப வந்த இஸ்லாமிய, கிறித்தவ ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கலையையும் கலாச்சாரத்தையும் காப்பாற்ற அன்று எத்தனை தமிழர்கள் உயிரை கொடுத்தார்கள் என்ற சரித்திரம் தெரியுமா? அப்படி அன்று அவர்கள் உயிர் கொடுத்து காத்திருக்காவிட்டால் பொங்கல் என்றால் என்ன? சும்மா போங்கள் என்று சொல்லும் நிலையில் தான் தமிழர்கள் இன்று இருந்திருப்பார்கள்

Edited by vettri-vel

  • தொடங்கியவர்

பறைதான் தமிழாpன் வாத்திய கருவிஎன்று எங்கேயோ படித்தேனே.. :lol:

அது தான் படிப்பில் பெயிலு ஆகிட்டியளே! :lol:

ஹாஹா :lol::lol: உந்த அறுவைகளுக்கு மாத்திரம் குறைச்சல் இல்ல. நானும் பறைதான் அல்ல பறையும் தமிழரனிண்ட வாத்தியகருவி எண்டு படிச்சு இருக்கிறன். தவில் தமிழரிண்ட வாத்திய கருவி எண்டு படிச்சதா நினைவு இல்ல. அப்ப பறைய ஏன் இன்னும் தமிழர் பண்பாட்டில பேண இல்ல. அதை ஏன் ஒதுக்கி வச்சு இருக்கிறீங்கள்? செத்தவீட்டுக்கு மாத்திரம்தான் பறை அடிக்கிறாங்கள். அப்பிடி என்றால் செத்தவீடு மாத்திரமா தமிழர் கொண்டாடுற பண்டிகை? இல்லாட்டி தவில், மேளம் அடிக்க ஆக்கள் கிடைச்சமாதிரி பறை அடிக்க ஆக்கள் கிடைக்க இல்லையோ?

நாடு பிடிக்கும் வஞ்சக எண்ணத்தோடும் மதம் பரப்பும் கிறிஸ்தவ வெறியுடனும் வியாபாரிகள் போல் வேடமிட்டு வந்த ஐரோப்பிய திருடர்களால் தான் தமிழன் நாடும், ஆட்சியும் இழக்க வேண்டி வந்தது.

வெற்றிவேல் இந்தக்கருத்தாடல் இப்ப வேற திசையில போய்க்கொண்டி இருக்கிது. எண்டாலும் நீங்கள் சொன்ன இந்த விசயத்தில எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. இந்த விசயம் உண்மை. எவராலும் மறுக்கமுடியாது.

நாடு பிடிக்கும் வஞ்சக எண்ணத்தோடும் மதம் பரப்பும் கிறிஸ்தவ வெறியுடனும் வியாபாரிகள் போல் வேடமிட்டு வந்த ஐரோப்பிய திருடர்களால் தான் தமிழன் நாடும், ஆட்சியும் இழக்க வேண்டி வந்தது.

ஆனா ஒரு திருத்தம் செய்யவேணும்.

இப்ப பிரச்சனை என்ன என்றால், வெள்ளைக்காரன் தண்ட வேலையில் வெற்றிபெற்றுவிட்டான். நாங்கள் இன்னும் பிரிஞ்சு போய் நிலமைகள் மோசமாக போகக்கூடாது. கிறிஸ்தவமதம் மாத்திரம் அல்ல இஸ்லாம் மதம் கூட உலகம் எங்கனும் அவ்வப்போது ஆக்கிரமிப்பாளர்களினால் பரப்பப்பட்டு வந்துள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களின் மதமாக இருந்தாலும், தற்போது எமது உடன்பிறப்புக்கள் பின்பற்றும் மதம் என்று பார்க்கவேண்டிய நிலையில் கிறிஸ்தவ மதத்தை நாம் மதிக்கவேண்டிய நிலையிலும் கூட இருக்கின்றோம்.

கிறிஸ்தவ மதத்தை பலர் விரும்பிச்செல்ல காரணம் இந்துமதத்தில் இருந்த சாதிப்பிரிவினைகள், கொடுமைகள், ஏற்றத்தாழ்வுகள், இந்துமதத்தில் இருந்த கோளாறுகளே என்பதை உங்களால் மறுக்கமுடியுமா?

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், நான் கூட பிறப்பில் இந்துவாக இருந்தாலும் (ஆனால் சமயதீட்சை ஒண்டும் எடுக்கவில்லை) இந்துமதத்தைவிட கிறிஸ்தவமதத்தை அதிகளவில் விரும்புகின்றேன்.

வேண்டுமாக இருந்தால் அல்லது தேவை என்றால் எதிர்காலத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு தாவுவதற்கு கூட நான் தயங்கமாட்டேன். இதற்கு எல்லாம் காரணம் எனது சுயநலம் என்று நீங்கள் கூறலாம். என்னை சுயநலவாதி என்றுகூட கூறலாம். இதற்காக நான் வெக்கப்படவில்லை. ஆனால், வசிதிகள், வாய்ப்புக்கள் கிடைக்கும்போது அவற்றை பெறாமலும் 'நான் ஒரு கேவலமானவன்' என்ற இந்துத்துவ வியாக்கியானங்களை கேட்டுக்கொண்டும் இருக்கும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல.

எளியவர்கள், சாதி குறைந்தவர்கள், வசதி அற்றவர்கள் என்று சனங்களை இந்துமதம் ஒதுக்கியபோது அவர்களை எல்லாரும் மனிதர் என்றவகையில் ஆதரித்து வாழ்வு கொடுத்தது கிறிஸ்தவமதம் என்பதை உங்களால் மறுக்கமுடியுமா? ஒருவனை நீ மனிதன் ஆண்டவனின் பிள்ளை என்று உயர்த்திவிடும் ஒரு மதம் எமக்கு தேவையா இல்லாவிட்டால் நீ எளியவன் கோயிலுக்கு வெளியால நிக்கவேணும் எண்டு சொல்லி ஒதுக்கிவைக்கும் ஒரு மதம் எமக்கு தேவையா?

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், நான் கூட பிறப்பில் இந்துவாக இருந்தாலும் (ஆனால் சமயதீட்சை ஒண்டும் எடுக்கவில்லை) இந்துமதத்தைவிட கிறிஸ்தவமதத்தை அதிகளவில் விரும்புகின்றேன்.

வேண்டுமாக இருந்தால் அல்லது தேவை என்றால் எதிர்காலத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு தாவுவதற்கு கூட நான் தயங்கமாட்டேன். இதற்கு எல்லாம் காரணம் எனது சுயநலம் என்று நீங்கள் கூறலாம். என்னை சுயநலவாதி என்றுகூட கூறலாம். இதற்காக நான் வெக்கப்படவில்லை. ஆனால், வசிதிகள், வாய்ப்புக்கள் கிடைக்கும்போது அவற்றை பெறாமலும் 'நான் ஒரு கேவலமானவன்' என்ற இந்துத்துவ வியாக்கியானங்களை கேட்டுக்கொண்டும் இருக்கும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல. :lol::lol::lol:

இது இந்து தத்துவங்களை பற்றிய உங்கள் அறியாமையை காட்டுகிறது. மற்ற மதங்கள் போல் மதத்திற்குள்ளே மட்டும் கடவுள் இருப்பதாக இந்துமதம் சொல்லவில்லை. ஏன் கர்மயோகம் என்று ஒன்று கீதையிலே உள்ளது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது என்ன சொல்கிறது என்னை வணங்க கூட தேவையில்லை, உன் கடமையை சரிவர செய்வது என்னை வணங்குதலுக்கு சமனே என்று சொல்கிறது.

2 அடி தோண்டிவிட்டு தண்ணீர் கிடைக்கவில்லை என்று போகிறவன் பைத்தியக்காரன். தண்ணீர் கிடைக்கவேண்டும் என்றால் ஆழமாக தோண்டவேண்டும். அது போன்றவை தான் இந்து மத தத்துவங்களும். பூந்தோட்டம் பார்க்க அழகாக இருக்கும். காடு கரடு முரடாகத்தான் தோன்றும் அனுபவம் அற்றவனுக்கு. ஆனால் அபூர்வ மூலிகைகள் காட்டில் தான் கிடைக்கும். . காலாற நடை பயில்வோம் என நினைப்பவனுக்கு காட்டில் முட்கள் தான் குத்தும். அது போல் தான் இந்து மதமும். தேடுபவனுக்கு பொக்கிசம் கிடைக்கும்

Edited by vettri-vel

அப்ப இந்துக்கள் தான் அடுக்குமாடி விமானத்தின் முன்னோடிகள் மாதிரி பொங்கல் இந்து மதப் பண்டிகை என்று சொந்தம் கொண்டாடலாம் என்று நிறுவலாம் போல கிடக்கு.

தமிழை தமிழரின் கலாச்சாரம் பண்பாட்டை அழிக்க முயன்ற கிறீஸ்தவம் இஸ்லாம். அன்று இந்து மதம் தமிழை காப்பாற்றியிருக்கா விட்டால் இன்று தமிழீழம் என்று ஒரு போராட்டமே நடந்தேயிருக்காது. எனவே ஈழப்போராட்டத்திற்கும் தமிழீழத்திற்கும் இந்து மதம் சொந்தம் கொண்டாடலாம். அத்தோடு கிறீஸ்தவத்தை கொண்டுவந்த ஐரோப்பியர்களால் தான் தமிழன் நாடுகளையும் ஆட்சிகளையும் இழக்க வேண்டி வந்தது. எனவே கிறீஸ்தவர்கள் தமிழீழத்தின் எதிரிகள் என்று பிரகடனம் செய்யலாம் போல கிடக்கு.

அது சரி பழந்தமிழர்களான இந்துக்கள் பெரிய சாம்ராச்சியங்கள் எல்லாம் வைத்திருந்தார்கள் அடுக்குமாடி விமானத்தின் முன்னோடிகள் ஏவுகணைகளின் முன்னோடிகள். ஆனால் இவ்வளவு கெட்டித்தனமானவர்கள் கோவணம் உட்பட பல விடையங்களிற்கு முன்னோடியானவர்கள் எப்படி நாடு பிடிக்க மதம் பரப்ப வந்த கிறீஸ்தவர்களின் நயவஞ்சகத்திற்கு 1...2 சமர்களில் அல்ல முழுப் போரிலுமே தோற்று எல்லாத்தையும் இழந்து அம்மணமானார்கள்?

ஓ இந்துமதம் சொல்லிற மாதிரி உலகம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருக்கால் முழுக்க அழிந்து மீண்டு உருவாகிறது. முன்பு அழிந்து போன உலகத்தில் இருந்த பழந்தமிழர்களான இந்துக்கள் முன்னோடிகளாக இருந்தவர்கள். அவற்றின் நினைவுகளை இந்த உலகில் உள்ள பழந்தமிழர்களான இந்துக்கள் ஞாபகப்படுத்தி இலக்கியமாக கவிதையாக வடிக்கிறார்கள் போல கிடக்கு.

  • தொடங்கியவர்

இது இந்து தத்துவங்களை பற்றிய உங்கள் அறியாமையை காட்டுகிறது. மற்ற மதங்கள் போல் மதத்திற்குள்ளே மட்டும் கடவுள் இருப்பதாக இந்துமதம் சொல்லவில்லை. ஏன் கர்மயோகம் என்று ஒன்று கீதையிலே உள்ளது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது என்ன சொல்கிறது என்னை வணங்க கூட தேவையில்லை, உன் கடமையை சரிவர செய்வது என்னை வணங்குதலுக்கு சமனே என்று சொல்கிறது.

2 அடி தோண்டிவிட்டு தண்ணீர் கிடைக்கவில்லை என்று போகிறவன் பைத்தியக்காரன். தண்ணீர் கிடைக்கவேண்டும் என்றால் ஆழமாக தோண்டவேண்டும். அது போன்றவை தான் இந்து மத தத்துவங்களும். பூந்தோட்டம் பார்க்க அழகாக இருக்கும். காடு கரடு முரடாகத்தான் தோன்றும் அனுபவம் அற்றவனுக்கு. ஆனால் அபூர்வ மூலிகைகள் காட்டில் தான் கிடைக்கும். . காலாற நடை பயில்வோம் என நினைப்பவனுக்கு காட்டில் முட்கள் தான் குத்தும். அது போல் தான் இந்து மதமும். தேடுபவனுக்கு பொக்கிசம் கிடைக்கும்

ஓ அப்ப நாலு சாதிகளாக பிரிச்சுவச்சு நிருவாகம் செய்தது இந்துமதம் இல்லையா?

உண்மையான கடவுளை தேடுவதென்றால் மதங்கள் என்ற பிரிவினை தேவை இல்லை. உண்மையான ஆன்மீகவாதிக்கு மதமாற்றங்கள் தேவை இல்லை.

ஆனா இப்ப பிரச்சனை என்ன என்றால் நடைமுறை வாழ்வில் ஆக்களுடன் ஆக்களாக சேர்ந்து வாழும்போது மதத்தை எப்படி கையாள்வது என்பதுதான்.

நான் என்ன சொல்லவாறன் என்றால் இந்துமதத்தைவிட கிறிஸ்தவமதம் ஆக்களுடன் ஆக்களாக சேர்ந்து வாழ எனக்கு உதவியாக இருக்குமாக இருந்தால் இந்துமதத்தில் இருந்து கிறிஸ்தவமதத்திற்கு தாவுவதற்கு பயப்படமாட்டேன் என்பதை.

ரெண்டு விசயங்கள்.

1. வெளியாருடனான நடைமுறைவாழ்வில் நாங்கள் எந்தமதம் சார்ந்து இருக்கிறம் என்பது.

2. உண்மையான எங்கள் இதயத்தில் என்ன நடைபெறுகின்றது என்பது. ஆண்டவன் இதயத்தில் இருப்பதை அல்லது இல்லாதுவிடுவதை அல்லது எமக்குள் நடைபெறும் உண்மையான ஆன்மீக அனுபவங்களை மதபீடங்கள் கட்டுப்படுத்தமுடியாது.

இன்னும் தெளிவாகச் சொன்னால் அடிப்படையில் கடவுள் பற்றிய இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் மத தத்துவங்கள் ஒன்றாக இருக்கலாம். நாம் அதை எப்படி வெளியாருடன் சேர்ந்து அணுகுகின்றோம் என்பதில்தான் சிக்கல் உள்ளது.

ஓ அப்ப நாலு சாதிகளாக பிரிச்சுவச்சு நிருவாகம் செய்தது இந்துமதம் இல்லையா?

இது நிச்சயமாக இல்லை. வேதங்களை நேரடியாக படித்து விளங்கிக் கொள்ள என்னால் முடியும் என்பதால் இதை உறுதியாக சொல்ல முடியும். இந்து மதத்தில் சொல்லப்பட்ட 4 வர்ணங்கள் சாதி பாகுபாடுகளுமல்ல. பிறப்பால் வருவதும் அல்ல. A tool can be used and misused too. Same goes with religious philosophies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோராலும் எதிருக்கெதிராக கருத்துகள் எழுத முடியும்.ஆனால் நிஜம் ஒன்று இருக்கின்றது.

இங்கே கருதெழுதுபவர்கள் பலர் ஏனோ விதண்டாவாதமும் தமக்கு அதிகம் தெரியுமென்பதையே காட்ட முனைகின்றனர்.

பொதுவாக மதம் சார், மதம் சாரா, தமிழரது கலாச்சாரம் எது, எது இல்லை எனும் விவாதங்களில் கலந்து கொள்வதில் ஆர்வமில்லை. அத்தோடு ஒரு கருத்தை சொல்லியபின் அதன் பதில் கருத்துக்கு பதில் எழுத போதிய நேரம் கிடைக்காவிட்டால் விவாத்தை தொடர்ந்து கொண்டு செல்ல முடியாது இதனாலேயே விவாதாங்களில் கலந்து கொள்வதில்லை.

இந்த பகுதியில் ஆரம்பித்த பிரதான கருத்தில் இருந்து விலகி சில கருத்துக்கள் மத மற்றம் பற்றி சுட்டி நிற்கிறன. அதே போன்ற கருத்துக்கள் இன்னும் பல இடங்களில் வெவ்வேறு தலைப்புக்களில் சொல்லப்பட்டே இருக்கிறன.

அதாவது மத மாற்றம் என்பது இந்து மதத்தின் அநீதிகளில் இருந்து மீட்சியடைய ஏனைய மதங்கள் உதவுகிறன என்பது.

இஸ்லாமிய மத மக்களுடன் பழக சந்தர்ப்பம் இல்லை. அதே போல இஸ்லாமுக்கு மதம் மாறுவதும் குறைவு.

இன்றும் இலங்கையில் இருந்து வரும் பத்திரிகையில் வரும் மணமக்கள் தேவை விளம்பரங்களில் ......... கிறிஸ்தவ பிரிவு ....... சாதி எனும் விளம்பரங்களை நிறைய கணலாம். போர்த்துகேயர் வருகையுடன் ஆரம்பிக்கப்பட்ட 400 வருடங்களாக நிலைபெற்ற ஒரு மதத்தால் இன்று வரை தன் மதத்துக்கு மாறியவர்களிடையே சாதிய அடையாளத்தை களைய முடியவில்லை என்பதும், அதற்கு இப்போதும் காரணமாக இந்து மததை கைகாட்டி நிற்பதையும் என்ன என்பது?

மதமாற்றம் சாதியத்தை அழிக்க ஒரு வழிமுறை என்றால் ஏன் இன்றும் அப்படியான விளம்பரங்கள் வருகிறன.

அடுத்தது

அம்பேத்காரும், ஒரு தொகுதி மக்களும் பவுத்த மதத்தை தளுவியவர்களை உதாரணம் காட்டவும் பட்டது.

பவுத்தர்களுக்கு என்றே அர்பணிக்கப்பட்டதாக உரிமை கொன்டாடும் சிறிலங்கா பவுத்த சிங்களவரிடையே சாதி இல்லையா என்று கெட்டால் ? இல்லை என்று யாராலும் பதிலளிக்க முடியாது.

இங்கு சொல்ல வருவது சாதியை நியாய படுத்துவதல்ல. சாதி ஒழிக்கப்பட வேண்டியது தான்.

ஆனால் மதம் மாறுவது மட்டும் சாதியை நீக்க உதவாது என்பது மட்டுமே.

Edited by KULAKADDAN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.