Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்திசாலித்தனத்துடன் பூணைபோல அமெரிக்க-இந்திய-பாக்கிஸ்தானிய சார்பு ஐ,நா படைகள்.

Featured Replies

Friday, January

4, 2008, தமிழர் பூங்கா

புத்திசாலித்தனத்துடன் பூணைபோல நடந்து ஈழப்போரில் காலூன்றப்போகும் அமெரிக்க-இந்திய-பாக்கிஸ்தானிய சார்பு ஐ,நா படைகள்.

ஒரு புறம் ஆயுதத்தினை வழங்கியபடியும் என்னுமொரு புறத்தில் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு ஆதரவு வழங்குவதுபோல இதுவரை நடந்த உலக பொலீஸ்காரன், நேற்றுவரை உண்மையில் ஈழத்தின் நடந்துமுடிந்த போர்களில் இலங்கை இராணுவதினை தன் அதி நவீன இராணுவ வசதிகள், தொழில்நுற்பத்தினூடு பலப்படுத்தி, வெற்றிபெற உதவி செய்தது.

இன்று ஈழத்தில் புலிகளை ஈழத்தில் அவர்கள் இன்று இருக்கும் மையப்பகுதியில் அமைத்திக்காலத்தில், வலிய தாக்குதல்கள் மூலம் இலங்கை இராவணத்தினை முனோக்கி நகரப்பண்ணிவிட்டு, இதோ அமைதிக்கான காரணியாக இருந்த ஒப்பந்தத்தினை சிறீலங்காவின் துணையுடன் இல்லாமல் செய்துவிட்டான்.

எனிஎன்ன அமெரிக்கா அறிக்கை விடும் தான் இதனால் வேதனைப்படுகிறேன் என்று. அதன்பின்பு இலங்கையில் ஏற்படப்போகும் பாரீய சண்டைகளை, குண்டுவெடிப்புகளைக்காட்டி, தன் நாட்டிற்கு சார்ப்பாக இருக்கக்கூடிய நாடுகளின் துணையுடனும், இந்தியாவின் துணையுடனும், ஈழத்தில் பிரவேசித்து, புலிகளை அழிக்க இலங்கை இராணுவத்துடன் செயற்படப்போகின்றது. இதற்காக்ன் ஆரம்ப வேலைகள் நடந்துமுடிந்துவிட்டன. ஆப்கானிஸ்தானில்-தலபான்போல....இலங்கையில்-புலிகள்.....பொறுத்திருந்து பார்ப்போம்!!!

சிறிலங்காவின் முடிவு மிகுந்த கவலையளிக்கிறது: கனடா

வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2008, 03:57 பி.ப ஈழம்] [அ.அருணாசலம்]

போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் தன்னிச்சையாக வெளியேறியது தமக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மக்சீம் பெர்நியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து சிறிலங்கா அரசு தன்னிச்சையாக வெளியேறியது மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.

மிகவும் முக்கியமான இந்த உடன்பாட்டில் இருந்து சிறிலங்கா வெளியேறியது அரசியல் தீர்வு காணும் முயற்சிகளை மேலும் கடினமாக்கி உள்ளது. இரு தரப்பினாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வன்செயல்களை மட்டுமே இது மேலும் அதிகரிக்கும். பொதுமக்கள், மனிதாபிமான பணியாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளை இட்டும் நாம் மிகுந்த கவலை கொண்டுள்ளோம். வன்முறைகள் தீர்வை தருவதில்லை அது சிறிலங்கா மக்களுக்கு மேலதிக அழிவுகளையே தரும். மனித உரிமைகளை மதித்து, அரசியல் தீர்வை நோக்கி செயலாற்ற வேண்டும் என நாம் எல்லாத்தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றோம். அதுவே அமைதியை ஏற்படுத்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசின் முடிவால் எமக்கு நெருக்கடி: அமெரிக்கா

[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2008, 04:14 பி.ப ஈழம்] [க.திருக்குமார்]

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் தன்னிச்சையாக வெளியேறியது தமக்கு மிகுந்த நெருக்கடியை கொடுத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

2002 ஆம் ஆண்டு நோர்வேயின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து சிறிலங்கா அரசு ஜனவரி 2 ஆம் நாள் வெளியேறியது பெரும் நெருக்கடிகளை கொடுத்துள்ளது.

சிறிலங்காவில் நடைபெற்று வரும் மோதல்களுக்கு அமைதி வழியிலான தீர்வைக்காண்பதை இது மேலும் கடினமாக்கி உள்ளது.

விடுதலைப் புலிகளும், அரசும் பொதுமக்களின் இழப்புக்களை தவிர்க்கும் நோக்குடன் மோதல்களை நிறுத்த வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

சிறிலங்காவில் வாழும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் மோதலில் ஈடுபடும் எல்லாத்தரப்பிற்கும் பங்குண்டு. எனவே அரசியல் தீர்வை நோக்கி செயற்பட்டு, சிறுபான்மை இனங்களின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என நாம் அவர்களை கேட்டுக்கொள்கின்றோம்.

சிறிலங்காவில் தற்போது நடைபெற்று வரும் மோதல்களுக்கு அமைதி வழியிலான தீர்வே காணப்பட முடியும், இராணுவத் தீர்வு அல்ல என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 16 ஆம் நாள் கண்காணிப்புக்குழு வெளியேறுகிறது

வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2008, 05:08 மு.ப ஈழம்] [க.திருக்குமார்]

சிறிலங்கா அரசாங்கம் ஒருதலைபட்சமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதனைத் தொடர்ந்து போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் ஜனவரி 16 ஆம் நாள் இலங்கையில் இருந்து வெளியேறவுள்ளதாக போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கண்காணிப்புக்குழு நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

2002 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து ஒருதலைபட்சமாக வெளியேறுவதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவித்தல் எதிர்வரும் 16 ஆம் நாள் மாலை 7:00 மணியுடன் நடைமுறைக்கு வருகின்றது.

எனவே நாம் அன்று எமது பணிகளை நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Here we are!!; Step 1

இலங்கைக்கு ஐ.நா. கண்காணிப்பாளர்களை அனுப்ப வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2008, 06:22 பி.ப ஈழம்] [பி.கெளரி]

இலங்கையில் இடம்பெற்று வரும் மோதல்களை கண்காணிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தனது கண்காணிப்பாளர்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் கடந்த 2 ஆம் நாள் தன்னிச்சையாக வெளியேறியதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 16 ஆம் நாள் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் தமது பணிகளில் இருந்து வெளியேற உள்ளனர். இந்த நிலையில் மனித உரிமை கண்காணிப்பகம் ஐ.நாவின் கண்காணிப்பாளர்கள் சிறிலங்காவிற்கு அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளது. இது தொடர்பில் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த எலைன் பேர்சன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இலங்கையின் போர் நிறுத்த கண்காணிப்புக்குழு மிகவும் பலவீனமானது. எனினும் பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளை குறைப்பதற்கு அவர்கள் உதவி வந்துள்ளனர். ஆனால் தற்போது போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் வெளியேறும் நிலையில் ஐ.நாவின் கண்காணிப்பாளர்களின் தேவை மிகவும் அவசியமானதாக உள்ளது என தெரிவித்துள்ளார். கடந்த இரு வருடங்களாக விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல்களினால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

1987 ஆம் ஆண்டு புலிகள் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தம் ஆதிக்கத்தினை நிலைநாட்டி, இலங்கை இராணுவத்தினை முகாம்களுக்குள் முடக்கி, சுற்றிவர பாதுகாப்பு சென்றிகள், பங்கர்கள் அமைத்திருந்து போராடியவேளை ஒரு கட்டத்தில் இலங்கை இராணுவத்திற்கு முகாம்களுக்குள் உணவு போடுவதே பெரிய பிரச்சனியாக இருந்துவந்தது.

அன்றைய காலங்களில் இலங்கை இராணுவம் பெரிய அளவிலான யுத்தம் ஒன்றும் நடாத்தியதில்லை. ஆனாலும் ஒரே நேரத்தில் இன்று மாதிரி பல முகாம்களில் இருந்து வெளியேற முற்படும். அதை புலிகள் வெற்றிகரமாக பின் தள்ளிவிடுவார்கள். இரு பக்கமும் அப்போது இழப்புக்கள் இருக்கும். அதில் இலங்கை இராணுவம் பெருவாரியாக இறக்கும். புலிகளிலும் வீரமரணம் நடக்கும். இப்படி வளர்ந்து கொண்டு புலிகள் இலங்கையில் உயர்வது சர்வதேச சக்திகளுக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக இந்தியாவுக்கு. ஆகவே இலங்கையில் படுகொலை செய்யப்படும், தமிழர்களுக்காகவும், சிங்கள் மக்களுக்காகவும், என்றுமில்லாதவாறு நீலக்கண்ணீர் வடித்தது உலக நாடுகள். அண்மையில் இந்தியா இருப்பதால் அமெரிக்காவினால் நேரடியாக இதிலே தலையிடமுடியவில்லை.

அமெரிக்க உளவு நிறுவனங்களுக்கும், இந்திய உளவு நிறுவனங்களுக்கும் இடையே போட்டி இருந்தது. அமெரிக்காவின் ஆயுத உதவியுடனும், இஸ்ரேலின் வழிநடத்தலுடனும், இலங்கை இராணுவம் வடபகுதியில் உள்ள தம் இராவணவ முகாம்களை காப்பாற்றவும், அங்கிருக்கும் இராணுவத்தினருக்கு உணவு, ஆயுத அணி வகைகளை சுலபமாக வழங்க ஒரு பாதையினை அமைத்துக்கொடுக்கவும், வடமராட்ச்சி என்ற இலங்கையின் வடபகுதியில், ஒப்பரேசன் லிபிரேசன் என்ற பெரும் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு ஒரு பட நடவடிக்கையினை ஆரம்பித்தது. அன்று புலிகள் இப்படி ஒரு பெரும் மரபுச்சண்டையினை எதிர்கொள்ளும் வகையில் இருக்கவில்லை.ஆகவே ஒரு இரவுக்குள் வடமாராட்ச்சி சுற்றி வளைக்கப்பட்டது.

இதை தடுத்து அமெரிக்கா இலங்கையில் தன் காலை அன்று ஊன்ற தடை செய்ய, இந்தியா உபயோகித்த ஆயுதமே "ஒப்பரேசன் பூமாலை" , அன்று இலங்கை இராணுவம் இந்தியாவினை மதிக்கவில்லை. வெளிநாடுகளை மதித்தது. ஆகவே இந்திய தமிழ்நாட்டு மக்களின் ஆதரவின் எதிரொலிப்பு என்று காட்டிக்கொண்டு, கப்பலில் உணவுப்பொருள்களை ஏற்றி இந்தியா, ஈழதமிழர்களைக்காப்பாற்ற அனுப்பியது தன் கடற்படையின் உதவியுடனும், செஞ்சிலுவைச்சங்கத்தின் உதவியுடனும். இலங்கை கடற்படை கடும் உத்தரவு போட்டது, இலங்கை-இந்திய கடல் எல்லையினைத்தாண்டவே கூடாது என்று. இந்திய ஆக்கிரமிப்பாக இதை தாம் கருதுவோம் என்றும் கூறியது. ஆனால் இந்தியாவிற்கு தெரியும், தமிழர்போராட்டத்தினை தனதாக்கிக்கொண்டுதான் இலங்கையில் தன்னால் கால் ஊன்ற முடியும் என்று.

ஆகவே மிராஜ் என்ற தன் ரஸ்ஸ விமானங்களின் உதவியுடன், இலங்கை விமானப்படையின் ராடர்களுக்கு தெரியாதபடி, ஈழப்பிரதேசத்தினுள் உள்புகுந்து உணவுப்பொட்டலங்களைப்போட்டது. இலங்கையினை வெடுட்டியது. என்னுமொரு பங்களாதேஸ் உருவாகலாம் என்ற ஒரு உணர்வினை இலங்கை ஜனாதிபதிக்கு உள்ளார உணர்த்தியது. இதனால் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினை உடனடியாக நிறைவேற்றியது. ஈழதமிழர்களுக்கு உரிமைகள் இந்த ஒப்பந்தத்தில் இருக்கிறதா அல்லது இல்லையா என்பது அன்று இந்தியாவிற்கு பிரச்சனையில்லை. அமெரிக்கா இலங்கையில் நுழைந்துவிடக்கூட்டாது என்பதே இந்தியாவின் நோக்கம்.

ஆகவே புலிகளுக்கும்-இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் முறுகல்கள் ஏற்பட்டு ஈழ-இந்திய யுத்தம் நடைபெற்றது. எப்படி

இலங்கை இராணுவத்தினைரை முடக்கி வெற்றிகரமாக புலிகள் கைப்பற்றி வைத்திருந்த முகாம்களை முதலில், ஒப்பந்தத்தினைக்காட்டி விடுவித்துக்கொடுத்துவிட்டு அதற்குப்பதில் தன் இராணுவத்தினை போட்டது. இலங்கை இராணுவத்திற்கு விடுமுறை கொடுத்துவிட்டு, தான் வந்ததால் ஏற்பட்ட இலங்கை மக்களின் மனவுடைவை சீர்செய்ய உதவிசெய்தது. ஆனால் இலங்கை இராணுவமோ அங்கிருந்துவெளியேறி புதிய புதிய இடங்களில், சிங்கள மக்களைக்குடியேற்றி, அவர்களை பாதுகாப்பதாக இராண்வ முகாம்களை அமைத்தது.

இதுவரை நான் ஏன் எழுதினேன் என்பதை போகப்போக பார்ப்போம்.

கனடா அறிக்கைவிட்டுவிட்டது. அதனைத்தொடர்ந்து முந்திக்கொன்டு அமெரிக்கா அறிக்கைவிடுகிறது. இது தனக்கு சில சங்கடங்களை விளைவிக்கிறது என்று. இரண்டு நாடுகளும் விடுதலைப்புலிகளை தடை செய்த நாடுகள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதன் பின்பு மனித உரிமைகள் அமைப்பு அறிக்கை விட, நோர்வேயின் அறிவிப்பினைத்தொடர்ந்து கண்காணிப்பாளர்கள் குழு வெளியேறுகின்றது. காரணம் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவின் கண்காணிப்பாளர்கள் தொடர்ந்து வரப்போகும் புதுமையான அமெரிக்க இராணுவ சிந்தனைகளௌக்கு இவர்கள் தடையாக இருக்கலாம் என்பதே.

அனைத்துலக மனித உரிமை கண்காணிப்பாளர்கள் அவசியம்: சிறுபான்மை இனங்களின் அனைத்துலக மனித உரிமை குழு

[சனிக்கிழமை, 05 சனவரி 2008, 07:54 பி.ப ஈழம்] [க.திருக்குமார்]

சிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து வெளியேறியது ஆழ்ந்த வருத்தத்தை தருவதாக சிறுபான்மை இனங்களின் மனித உரிமைகளுக்கான அனைத்துலக குழுவின் தலைவர் மார்க் லற்றிமர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவைத் தளமாக கொண்ட இந்த அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பு நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் அதன் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஒரு தலைபட்சமாக அரசு போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து விலகிக்கொண்டது மோதல்களை அதிகரிக்கவே வழிவகுக்கும். இது தமிழ்- முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை மேலும் அதிகரிக்கச் செய்யும். அரசின் இந்த அறிவித்தலைத் தொடர்ந்து ஸ்கன்டிநேவியன் கண்காணிப்புக் குழுவினர் தமது கண்காணிப்புப் பணிகளை எதிர்வரும் 16 ஆம் நாள் நிறுத்திக்கொள்ள உள்ளனர். மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் இடம்பெற்று வரும் வரும் மனித உரிமை மீறல்களை அவதானிப்பதற்கு அனைத்துலக மனித உரிமை கண்காணிப்பாளர்களின் தேவை தற்போது அவசியமாகின்றது.

கடந்த ஜனவரி 1 ஆம் நாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது. சிறுபான்மை அரசியல் தலைவர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மகேஸ்வரனின் கொலைக்கு அரசே காரணம் என்று எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. மேலும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் உட்பட பல சிறுபான்மை அரசியல் தலைவர்களின் பாதுகாப்புக்களை அரசு குறைத்துள்ளதாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் அரசிற்கான ஆதரவை விலக்கிக்கொண்டதற்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் பாதுகாப்பை அரசு குறைத்துக் கொண்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சிறுபான்மை மக்களின் மனித உரிமை செயற்பாட்டாளர் மனோ கணேசனின் பாதுகாப்பும் குறைக்கப்பட்டதுடன், அவர் தனது பாதுகாப்புக் கருதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். 2006 ஆம் ஆண்டில் உக்கிரமடைந்த மோதல்கள் மற்றும் அரசினால் கொண்டுவரப்பட்ட தீவிரவாத தடுப்புச் சட்டங்கள் தமிழ்- முஸ்லிம் மக்களின் மனித உரிமைகளை கடுமையாக பாதித்துள்ளதன என்று சிறுபான்மை இனங்களின் உரிமைகளுக்கான அனைத்துலக குழு தனது 2007 டிசம்பர் மாத அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் மீதான படுகொலைகள் அதிகரித்துள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு சாத்தியமற்றது: பிரித்தானியா

[சனிக்கிழமை, 05 சனவரி 2008, 04:46 பி.ப ஈழம்] [க.திருக்குமார்]

இலங்கையில் இடம்பெற்று வரும் இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு சாத்தியமற்றது. போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் விலகிக்கொண்டது கவலை தருகின்றது என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் மலோச் பிறவுண் தெரிவித்துள்ளதாவது:

இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு சாத்தியமற்றது. எல்லாத்தரப்பும் அமைதியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம். சிறிலங்கா அரசும், விடுதலைப் புலிகளும் போர் நிறுத்த உடன்பாடு தொடர்பில் நேர்மையுடன் நடந்து கொள்ளாதது வருத்தம் தருகின்றது.

நோர்வே அனுசரணையாளர்களும், கண்காணிப்புக் குழுவினரும் ஒய்வின்றி உழைத்ததற்கு நான் எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றேன். வழமையாக மிகவும் கடினமான சூழ்நிலையிலேயே அவர்கள் பணியாற்றி வந்தனர்.

தமிழ் மக்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும், அனைத்து கட்சி குழு தனது இறுதியான தீர்வுத்திட்டத்தை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும். அரசியல் தீர்வை காண்பதற்கான துணிச்சலான முடிவுகள் விரைவில் எடுக்கப்பட வேண்டும். தமது குறுகிய அரசியல் இலாபங்களை விடுத்து அமைதியை நிலைநாட்டுவதற்கு எல்லா அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களை பாதுகாத்த முக்கிய உடன்பாடு முறிவடைந்துள்ளது: நோர்டிக் நாடுகள்

[சனிக்கிழமை, 05 சனவரி 2008, 05:15 மு.ப ஈழம்] [பி.கெளரி]

போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து சிறிலங்கா வெளியேறியது பொதுமக்களை பாதுகாப்பதற்கு ஆதரவான முக்கிய உடன்பாடு ஒன்று முடிவுக்கு வந்ததாகவே அர்த்தம் என்று நோர்வே, சுவீடன், டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய நோர்ட்டிக் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவில் நோர்ட்டிக் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நோர்டிக் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2002 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து சிறிலங்கா அரசு வெளியேறியது மிகவும் கவலை அளித்துள்ளது.

சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் உக்கிரமான மோதல்களில் ஈடுபட்டு வரும் வேளையில் அரசின் இந்த முடிவு வெளிவந்துள்ளது. இந்த மோதல்கள் அதிக இழப்புக்களையும், பெருமளவிலான இடப்பெயர்வுகளையும், தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களையும் எற்படுத்தி வருகின்றது. சிறிலங்காவில் தோன்றியுள்ள மோசமான நிலை குறித்து நோர்ட்டிக் நாடுகள் அதிக கவலை கொண்டுள்ளன. வன்முறைகளின் மொத்த விளைவுகள் தற்போது ஒரு புள்ளியை அடைந்துள்ளது. அதாவது ஒரு தரப்பு உடன்பாட்டில் இருந்து வெளியேறியுள்ளது. 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உருவான போர் நிறுத்த உடன்பாடு ஆறு வருடங்கள் வரை நீடித்திருந்தது. அது அமைதி முயற்சிகளுக்கும், இலங்கையின் அமைதி முயற்சிகளில் அனைத்துலகத்தின் பங்களிப்புக்கும் அடிப்படையாக விளங்கியது. இருதரப்பின் வேண்டுகோளுக்கு இணங்க போர் நிறுத்தத்தை அவதானிக்கும் பொது அமைப்பும், நோர்ட்டிக் நாடுகளினால் உருவாக்கப்பட்டிருந்தது. மோதல்களை நிறுத்தி இயல்பு நிலையை எற்படுத்துவதே இந்த இரு குழுக்களினதும் நோக்கம். போர் நிறுத்த உடன்பாடு பல அனுகூலமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது. அதன் முதல் ஆண்டில் மோதலில் ஏற்படும் இழப்புக்கள் ஏறத்தாழ பூச்சியத்தை அடைந்திருந்தது. அதாவது 10,000 உயிர்கள் காப்பாற்றப்பட்டிருந்தன.

இந்த உடன்பாடு மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு வழி ஏற்படுத்தியதுடன், பொருளாதார அபிவிருத்திக்கும் கதவைத் திறந்திருந்தது.

மனித உரிமை மீறல்கள் குறைவடைந்ததுடன், பொதுமக்களும் பாதுகாக்கப்பட்டனர். எனினும் உடன்படிக்கையை மீறும் வன்முறைகளும் பின்னர் அதிகரித்திருந்தன. கடந்த இரு வருடங்களாக அது மிகவும் அதிகரித்திருந்தது.

ஆனால் தற்போதைய நிலையில் வன்முறைகள் மேலும் அதிகரிக்கலாம் என நோர்ட்டிக் நாடுகள் கவலை கொண்டுள்ளன. போர் நிறுத்த கண்காணிப்பு குழு வெளியேறுவது பொதுமக்களை பாதுகாக்கும் உடன்பாடு முடிவுக்கு வருவதற்கு இணையானது. இந்த உடன்பாடு பாதிக்கப்பட்ட மக்களுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பேசும் சுதந்திரத்தை வழங்கியிருந்தது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வே சாத்தியமானது என நோர்ட்டிக் நாடுகள் நம்பிக்கை கொண்டுள்ளன. ஆனால் போர் நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வந்தது பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புவதை கடினமாக்கி உள்ளது. இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் பணியாற்றிய அனைத்துலக மற்றும் உள்ளூர் கண்காணிப்பாளர்களுக்கு நோர்ட்டிக் நாடுகள் தமது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசின் முடிவு வன்செயல்களை அதிகரிக்கச் செய்யும்: ஜப்பான்

[சனிக்கிழமை, 05 சனவரி 2008, 03:50 மு.ப ஈழம்] [க.திருக்குமார்]

போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் வெளியேறியது கவலையை தோற்றுவித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த முடிவு வன்செயல்களை அதிகரிக்கச் செய்யும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் மசாகிகோ கொமுரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா அரசின் முடிவு மோதல்களை உக்கிரமடையச் செய்வதுடன், அதிக வன்முறைகளுக்கும் வழிவகுக்கும். எனவே பொதுமக்கள் பேரழிவுகளை சந்திப்பதுடன், அமைதிமுயற்சிகளும் பாதிக்கப்படும். இனப்பிரச்சினையை இராணுவ வழிகளில் தீர்க்க முடியாது. இனப்பிரச்சனைக்கு வன்முறைகளினூடாக ஒரு தீர்வை அடைவதை விடுத்து எல்லாத் தரப்பினரும் பேச்சுக்களின் மூலமான அரசியல் தீர்வை காண முன்வர வேண்டும் என ஜப்பான் கேட்டுக்கொள்கின்றது. அமைதி முயற்சிகளுக்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்படும் என நாம் வலுவாக நம்புகின்றோம். அதிகாரப்பகிர்வுத் தீர்வுதிட்டம் விரைவாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். நாம் அமைதி முயற்சிகளில் தொடர்ந்து ஒத்துழைப்புக்களை வழங்கி வருவோம், இணைத்தலைமை நாடுகளுக்கும் எமது ஆதரவுகளை வழங்குவோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கிய ஒரு விடயத்தினைப்பார்ப்போமானால், இந்தியா, பாக்கிஸ்தான், அவுஸ்திரேலியா நாடுகள் இன்னமும் இலங்கை அரசினது இந்த ஒரு தலைப்பட்சமான முடிபை கண்டித்தோ அல்லது ஒரு அறிக்கையினை விட்டோ தம் வருத்தத்தினை தெரிவிக்கவில்லை. குறிப்பாக இந்தியா....ஆகவே இந்தியாவின் இந்த மௌனம் எதற்காக??? அமெரிக்கா துள்ளிக்குதித்து அறிக்கை விட்டது எதற்காக???? எதோவொன்றை நினைத்து இவர்கள் இலங்கையினை இப்படிச்செய் என்று சொல்லிவிட்டு ஆட்டம் போடுகின்றார்கள்.

அல்கைதாவின் பயங்கரவாத நடவடிக்கைகளினை அடக்க வேளிக்கிட்டு பாக்கிஸ்தானில் கால் வைத்து, இந்தியாவினையும், சீனாவினையும் கண்காணிக்கும் அமெரிக்காவுக்கு, இலங்கையும் தேவைப்படுகிறது. இதை அறியாத தல்ல இந்தியா ஆனாலும் புலிகளை நிர்மூலமாக்கி, சனியன் பிடித்த பெரியார் கொள்கைகளினை முன்னிலைப்படுத்தி போராட புறப்பட்ட ஈழ தமிழர் இயக்கங்களை நசுக்கி, பெரியாரின் கொள்கைகள் செயல் உருவம் பெற்று, இந்தியாவினை அது பாதித்துவிடக்கூடாது என்பதே இந்தியாவின் இன்றைய பிரச்சனை.

ஆக ஈழதமிழர்களில் வெறுப்பு வைத்து இந்தியா, இலங்கை இராணுவத்திற்கு உதவி செய்யவில்லை. புலிகளின் சோசலிச தமிழீழமும், அதனை அவர்கள் வகுக்க பாவித்த பெரியார் திராவிட கொள்கைகளினை சுக்கு நூறாக்க்கவே இந்தியா இப்படி குரோதமான ஒரு நடவடிக்கையில் ஈடுபடுகின்றது என்பதையும் கருத்திற்கொள்க.

அமெரிக்காவின் கையில் சிக்கிச் சீரழியும் பாகிஸ்தான்

1947 ஆகஸ்ட் 14ல் பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டு, சுதந்திர நாடானது பாகிஸ்தான். அன்று முதல் இன்றுவரை மதவாதம், இனவாதம், பிரிவினைவாதம், ஏகாதிபத்திய ஆதரவு, இராணுவ கலகங்கள், தீவிரவாதம், பயங்கரவாதம் என சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானின் தந்தை என போற்றப்படும் முகமது அலி ஜின்னா, 1948ல் கிழக்கு பாகிஸ்தானின் தலைநகரான (கிழக்கு வங்காளம்) டாக்காவில், பாகிஸ்தானின் ஒரே அதிகாரப்பூர்வமான மொழி உருது மட்டுமே என்று அறிவித்தார். வங்கமொழி பேசும் கிழக்கு பாகிஸ்தான் மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்திய இந்த அறிவிப்பு, மிக நீண்ட நெடிய போராட்டத்தை நடத்துவதற்கும் பிற்காலத்தில் வங்கதேசம் என்ற நாடு உருவாவதற்கும் அடித்தளமிட்டது. 1951. முதல் பிரதமர் லியாகத் அலிகான் மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். 1953-ல் அகமதி இன மக்களுக்கு எதிராக மதவாத கட்சிகள் கலவரத்தை தூண்டின. அகமதி இன மக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். கலவரம் தீவிரமடைந்தது. முதல் முறையாக கலவரத்தை ஒடுக்குவதாக கூறி சிவில் விவகாரத்தில் இராணுவம் தலையிட்டது. படிப்படியாக அரசியல் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்தது. அயூப் கான் 1956 மார்ச் 23ம் தேதி டொமினியன் அரசு (சுயாட்சி அரசு) கீழ் இறக்கப்பட்டு கடைசி கவர்னர் ஜெனரலான இஸ் கந்தர் மிர்ஸா, முதல் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அடுத்த இரண்டே ஆண்டுகளில் இராணுவத்தின் கைகளில் ஆட்சி வீழ்ந்தது. இராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் அயூப் கான், அதிகாரத்தைக் கைப்பற்றி ஜனாதிபதியானார். புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை செயல்படுத்தினார். இவரது ஆட்சியில்தான் பாகிஸ்தான் அமெரிக்காவுடனும், மேற்கத்திய சக்திகளுடனும் நெருக்கம் கொண்டது.

இக்கால கட்டத்தில், பாகிஸ்தான் இரண்டு முக்கிய இராணுவ உடன்பாடுகளில் கையெழுத் திட்டது. ஒன்று ‘சென்டோ’; மற்றொன்று ‘சியாட்டோ’ சென்டோ என்பது, சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக, மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் தனது செல்வாக்கை செலுத்துவதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் பின்னணியில் இருந்து உருவாக்கிய உடன்பாடு. இதில், ஈரான், இராக், துருக்கி, பாகிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகள் கையெழுத்திட்டன. சியாட்டோ என்பது, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான (இந்தியா தவிர்த்து) இராணுவ உடன்பாடு. இந்த காலத்தில், கிழக்கு பாகிஸ்தானில், அயூப் கானின் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஷேக் முஜிபுர் ரகுமான் தலைமையில் மக்கள் எழுச்சி வீறு கொண்டெழுந்தது. மக்கள் எழுச்சி காரணமாக 1969ல் பதவி விலக வேண்டிய கட்டாயம் அயூப்கானுக்கு ஏற்பட்டது. அவர், தன்னைத் தொடர்ந்து வந்த இராணுவத் தளபதி ஜெனரல் யாஹா கானிடம் அதிகாரத்தை ஒப்படைத்தார். யாஹாகான், 1970 இறுதியில் பொதுத் தேர்தலை அறிவித்தார். மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தானில் நடைபெற்ற இத்தேர்தலில், மேற்கு பாகிஸ்தானில், ஜூல்பிக்கர் அலி புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 85 இடங்களில் வெற்றி பெற்றது. கிழக்கு பாகிஸ்தானில் மொத்தமுள்ள 169 இடங்களில் 167 இடங்களை ஷேக் முஜிபுர் ரகுமானின் அவாமி லீக் கைப்பற்றியது. வங்கதேசம் உதயமானது ஆனால் பெரும்பான்மை இடங்களைப் கைப் பற்றிய முஜிபுர் ரகுமானிடம் ஆட்சியை ஒப்படைக்க ஜெனரல் யாஹா கானும், ஜூல்பிக்கர் அலி புட்டோவும் மறுத்தனர். இதைத்தொடர்ந்து கிழக்கு பாகிஸ்தானில் சூழ் கொண்டிருந்த விடுதலைப்போராட்டம் வெடித்துக் கிளம்பியது. இராணுவத்தை அனுப்பி ஒடுக்க முயற்சித்தார் ஜெனரல் யாஹாகான். எனினும், சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை களத்தில் பலி கொடுத்து, 1971ல் கிழக்கு பாகிஸ்தான், வங்க தேசம் எனும் தனி நாடாக உதயமானது. வங்க தேசம் உருவாக இந்தியா துணை நின்றதால், இந்தியா - பாகிஸ்தான் இடையே பகைமை அதிகரித்தது. ஜூல்பிக்கர் அலி புட்டோ வங்கதேசத்திற்கான போரில் தோல்வி அடைந்ததால், ஜெனரல் யாஹாகான், தேர்தலில் 85 இடங்களைப் பெற்றிருந்த ஜூல் பிக்கர் அலி புட்டோவிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு பதவி விலகினார். அதன்பின்னர், 1971 முதல் 1977 வரை ஜனநாயக ஆட்சி நடைபெற்றது. இதன் பின்னர் 1977ல் நடந்த தேர்தலில் புட்டோ மீண்டும் வென்றார், ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக பெரும் கலவரம் ஏற்பட்டது. ஜியா-உல்-ஹக் இச்சூழலை பயன்படுத்தி, இராணுவத் தளபதி ஜெனரல் முகம்மது ஜியா-உல்-ஹக், புட்டோவை கவிழ்த்துவிட்டு ஆட்சியை கைப்பற்றினார்

. அந்த ஆண்டிலேயே ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி புட் டோவை தூக்கிலிட்டுக் கொன்றார். ஜெனரல் ஜியா-உல்-ஹக்கின் இராணுவ ராஜ்ஜியம் 10 ஆண்டுகள் நீடித்தது. இந்த காலத்தில் பாகிஸ்தான் கிட்டத்தட்ட அமெரிக்காவின் கைக்கூலி நாடாகவே மாறியது. ‘சென்டோ’ உடன்பாட்டின் அடிப்படையில், அமெரிக்காவின் சோவியத் எதிர்ப்பு நடவடிக்கைகளுக் கான மையமாகவே மாறியது. அண்டைநாடான ஆப்கானிஸ்தானில், கம்யூனிஸ்ட் தலைவரும், சோவியத் ஆதரவாளருமான நஜிபுல்லாவின் ஆட்சி அமைந்ததை சகித்துக் கொள்ள முடியாத அமெரிக்கா, நஜிபுல்லாவை தீர்த்துக்கட்டுவதற்கும், சோவியத் ஒன்றியத்திற்கு எல்லையில் குடைச்சல் கொடுப்பதற்கும், ஆப்கானிஸ்தானில் தலிபான்களையும், பாகிஸ்தானில் இராணுவ சர்வாதிகாரத்தையும், மத அடிப்படைவாதிகளையும், ஏராளமாக நிதி உதவி, ஆயுத உதவி செய்து ஊட்டி வளர்த்தது! தலிபான்கள் வளர்ந்து, நஜிபுல்லாவை கொடூரமாக படுகொலை செய்தனர் என்பது ஆப்கானிஸ்தானின் கொடிய வரலாறு. இப்படி வளர்ந்த தலிபான்களும், பின்லேடனின் அல்-கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளும் மத அடிப்படைவாதிகளும் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையை தங்கள் தாயகமாகவே, தங்களுக்கென்ற தனி நாடாகவே ஆக்கிக்கொண்டனர். வசிரிஸ்தான் எனப்படும் இப்பகுதியை, அவர்கள் ‘இஸ்லாமிய வசிரிஸ்தான் எமிரேட்’ என்றுதான் அழைக்கின்றனர். அமெரிக்காவின் அளவற்ற நிதி உதவி, மத அடிப்படைவாதிகளின் ஆதரவு என 1988 வரை சர்வாதிகாரம் செய்த ஜியா-உல்-ஹக், 1988 ஆகஸ்ட் 17ல் ஒருவிமான விபத்தில் மர்மமான முறையில் இறந்தார். பெனாசிர் புட்டோ, நவாஸ் ஷெரீப் அதைத்தொடர்ந்து 1988 நவம்பரில் நடந்த தேர்தலில், பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு தலை மையேற்று 35 வயதே ஆன பெனாசிர் புட்டோ பெரும் வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பேற்றார். இஸ்லாமிய நாடு ஒன்றின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றார். எனினும் இரண்டே ஆண்டுகளில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கின் நவாஸ் ஷெரீப் பிரதமரானார். எனினும் 1993ல் நடந்த தேர்தலில், பெனாசிர் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார். மூன்றே ஆண்டுகளில் மீண்டும் இவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. மீண்டும் நவாஸ் ஷெரீப் பிரதமரானார். முஷாரப் இந்நிலையில் 1999ல், கார்கில் மோதல் சமயத்தில், இராணுவத் தளபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பை பொறுப்பிலிருந்து மாற்ற முயற்சித்தார் பிரதமர் நவாஸ் ஷெரீப். அவரை அதிரடியாக இராணுவக்கலகம் நடத்தி கவிழ்த்துவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றினார் முஷாரப். நவாஸை கைது செய்து சிறையில் அடைத்தார். பின்னர், அமெரிக்காவின் பில் கிளிண்டன் நிர்வாகம் பணித்ததன் பேரில், நவாஸை சவூதிக்கு நாடு கடத்தினார். பெனாசிர் புட்டோவும் நாடு கடத்தப்பட்டார். 1999 முதல் இன்று வரை முஷாரப் பின் சர்வாதிகாரம் தொடர்கிறது.

இக்காலத்தில் சுஜாத் உசேன், சவுகத் அஜீஸ் என பல பொம்மை பிரதமர்கள் இருந்தார்கள். முஷாரப்பும், அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளியாக செயல்பட்டு வருகிறார். ஆனால் 2001 செப்டம்பர் 11ம் தேதிக்குப் பின்னர் காட்சி மாறுகிறது. சர்வதேச அளவில் இஸ்லாமிய நாடுகளுக்கும் இஸ்லாமிய மக்களுக் கும் எதிராக அமெரிக்காவின் புஷ் நிர்வாகம் ஏகாதிபத்திய தாக்குதலை தீவிரமாக கட்டவிழ்த்து விட்டதால், அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்களை அல்கொய்தா - தலிபான் பயங்கரவாதிகள் தகர்த்தனர். இதை சாக்காக வைத்துக்கொண்டு, ஆப்கானிய எல்லையில், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ் தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய காஸ்பியன் கடல்பகுதி எண்ணெய் வளத்தை கைப்பற்றும் நோக்கில், ஆப்கன் மீது பெரும் போரை கட்டவிழ்த்துவிட்டு அந்நாட்டை கைப்பற்றியது அமெரிக்கா. சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக எந்த தலிபான்களை வளர்த்துவிட்டார்களோ, அந்த தலிபான்களை, அவர்களின் மையபீடமாக செயல் படும் அல்-கொய்தா அமைப்பை, அதன் தலை வன் ஒசாமா பின்லேடனை அழிக்கப்போவதாக கூறி, ஆப்கனில் நிரந்தரமாக தங்கிவிட்டது அமெரிக்க ராணுவம். பெயருக்கு ஹமீது கர்சாய் தலைமையில் ஒரு பொம்மை அரசு நிறுவப் பட்டுள்ளது. 2001 முதல் இன்றுவரை, ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில், ஆப்கனிலும், ஆப்கன்-பாகிஸ்தான் எல்லையிலும் தினந் தோறும் குண்டு வீச்சு, படுகொலை தொடர்கதை யாகிவிட்டது. இதன் தொடர்விளைவாக பயங்கரவாத சக்திகள் மேலும் மேலும் வலுப்பெற்றுள்ளனர். அவர்களோடு, பாகிஸ்தானில் தொடர்ச்சியாக வந்தஇ ராணுவ அரசுகளால் ஊட்டி வளர்க்கப்பட்ட மத அடிப்படைவாதிகளும் கைகோர்த்துள்ளனர். 2001 வரை அமெரிக்கா சொல்படி, பயங்கரவாதிகளுக்கும், மத அடிப்படைவாதிகளுக்கும் ஆதரவாக இருந்த முஷாரப், செப்டம்பர் 11 நிகழ்வுக்குப்பிறகு, அமெரிக்கா சொல்படி, பயங்கரவாதிகளை ‘அழிக்கப்’ புறப்பட்டுள்ளார். மத அடிப் படைவாதிகளை ‘ஒடுக்கப்’ புறப்பட்டுள்ளார். இதன் தொடர் விளைவாக, தங்களை எதிர்ப் பவர்களை, ‘அமெரிக்க ஆதரவாளர்களை’ அழிப்பது என்றமுடிவுக்கு பயங்கரவாதிகளும், மத அடிப்படைவாதிகளும் சென்றுள்ளனர். முஷாரப்பை கொல்லவும் இரண்டுமுறை முயற்சி நடந்தது. நவாஸ் ஷெரீப்புக்கும் குறி வைத்துள்ளனர். பெனாசிர் கொல்லப்பட்டுவிட்டார். அவரை கொன்றது அல்-கொய்தாவா, இராணுவ சதியா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. எனினும், தனது சுய பாதுகாப்புக்கு முன்னாலும் பின்னாலும் 70 இராணுவ வாகனங்களுடன் அணிவகுக்கும் முஷாரப், பெனாசிருக்கு பாதுகாப்பு அளிக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

1947ல் விடுதலை பெற்றதில் இருந்து இன்று வரை 60 ஆண்டுகளில் 1958-1971, 1977-1988, 1999-2007 என 31 ஆண்டுகாலம் பாகிஸ்தான் இராணுவத்தின் பிடியில்தான் இருக்கிறது. இக் காலம் முழுவதும் அமெரிக்காவின் கைப்பாவையாகவே செயல்பட்டு வருகிறது. இது தொடர வேண்டும் என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் விரும்புகிறது. இது தொடர வேண்டும் என்றால், பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி தொடரவேண்டும். அது தொடர வேண்டும் என்றால், பாகிஸ்தானில் அரசியல் நிலையற்ற தன்மை தொடர வேண்டும். அரசியல் நிலையற்ற தன்மை தொடர வேண்டும் என்றால், தேர்தல் நடத்தக்கூடாது, தேர்தல் நடந்தாலும், மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர் வரக்கூடாது. இதுதான் அமெரிக்காவின் விருப்பம். இந்த விருப்பத்திற்குப் பின்னால், ஆசியாவின் கேந்திரமான பகுதியாக, சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே உள்ள இந்திய துணை கண்டத்தில் தனது நிரந்தர தளமாக பாகிஸ்தானை மாற்ற வேண்டும் என்ற பெரும் அழிவுத்திட்டம் உள்ளது. இதிலிருந்து மீள்வது, பாகிஸ்தானின் மக்கள் கையில்தான் உள்ளது.

இணைத் தலைமை நாடுகள் கூடுகின்றன[ஞாயிற்றுக்கிழமை, 06 சனவரி 2008, 03:41 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சிறிலங்கா அரசாங்கம் விலகியமை குறித்து விவாதிக்க இணைத் தலைமை நாடுகள் கூடுகின்றன.

இணைத் தலைமை நாடுகளில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் சிறிலங்காவின் முடிவுக்கு தங்கள் அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றன.

மேலும் சிறிலங்காவுக்கு போர்த் தளபாட உதவிகளை வழங்குவதனை நிறுத்தவும் அமெரிக்கா மேற்கொண்டிருந்த தீர்மானத்தை விரைவில் செயற்படுத்தவும் அது நடவடிக்கை எடுத்துள்ளது.

வடக்கு-கிழக்கு அபிவிருத்திக்காக இணைத்தலைமை நாடுகள் வழங்கும் உதவிகளும் போர் நிறுத்த ஒப்பந்த சரத்துடன் நிறுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

உலகிலேயே ஆபத்தான பயங்கரவாத இயக்கமா ? புலிகள் மறுப்பு

நியூயார்க் (ஏஜென்சி)இ 11 ஜனவரி 2008 ( 17:45 )அல் காய்தாவைக் காட்டிலும்இ உலகின் மிகவும் ஆபத்தான பயங்கரவாத இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் என அமெரிக்க உளவு அமைப்பான எப்பிஐ கூறியுள்ளதை அந்த இயக்கம் கடுமையாக மறுத்துள்ளது.அமெரிக்க உளவு அமைப்பான எப்பிஐ (ஃபெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்), விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பவர்கள் அந்த அமைப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளது.இது தொடர்பாக எப்பிஐ கூறியிருப்பதாவது :அமெரிக்காவில் அந்த அமைப்பின் ஆதரவாளர்களால் திரட்டப்படும் நிதி புலிகள் அமைப்புக்கு ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் வாங்க பயன்படுத்தப்படுகிறது.தற்கொல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.