Jump to content

சிட்னி டெஸ்டில் ஏற்பட்ட சர்ச்சையால் எனது பெற்றோருக்கு தொலைபேசி மிரட்டல்


Recommended Posts

பதியப்பட்டது

சிட்னி டெஸ்டில் ஏற்பட்ட சர்ச்சையால் எனது பெற்றோருக்கு தொலைபேசி மிரட்டல்

[12 - January - 2008] [Font Size - A - A - A]

* கப்டன் பொண்டிங் கூறுகிறார்

சிட்னி டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து தனது பெற்றோருக்கு, பல மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக அவுஸ்திரேலிய அணிக்கப்டன் ரிக்கி பொண்டிங் குற்றம் சாட்டியுள்ளார்.

கப்டன் ரிக்கி பொண்டிங் அங்குள்ள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;

"சிட்னி டெஸ்ட் போட்டி வெற்றியைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையால் எனது பெற்றோரின் வீட்டுக்கு கடந்த சில நாட்களாக மர்மத் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அதில் பேசியவர்கள் என்னையும் அணியினரையும் வசைபாடியிருக்கிறார்கள். இது எனக்கு வருத்தமளிக்கிறது. இதனால் எனது பெற்றோர் தொலைபேசி இலக்கத்தை மாற்ற வேண்டியதாகிவிட்டது.

சிட்னி டெஸ்ட் போட்டியின் `வீடியோ ரேப்'பைப் போட்டுப் பார்த்து எங்களது செயல்பாடுகளை திருத்திக் கொள்ள முயற்சிப்போம். அந்தப் போட்டி ரேப்பைப் பார்த்தால் களத்தில் நாங்கள் செய்த தவறுகளை உணர முடியும் என்று நினைக்கிறேன்.

நான் களத்தில் எதிரணியினருடன் பேசுவதை தொலைக்காட்சியில் பார்ப்பவர்கள் அவர்களை நான் வசைபாடுவதாக தப்பாக நினைத்திருக்கலாம். ஆனால், அப்படி நாங்கள் எதுவும் செய்யவில்லை.

நாட்டிலுள்ள அனைவராலும் நேசிக்கப்படக்கூடியதாகவும், மதிக்கப்படத்தக்கதாகவும் அவுஸ்திரேலிய அணி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எப்பொழுதும் எனது குறிக்கோள்களில் ஒன்றாக இது தொடரும்.

எனது மனைவி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நீங்கள் கப்டன் பதவியிலிருக்கிறீர்களா? உங்களுக்குப் பிரச்சினை எதுவும் இல்லையே என்று கேட்டார். அப்போதுதான், ஹர்பஜன் சிங் சர்ச்சையால் ஏற்பட்ட தாக்கத்தின் தீவிரம் எனக்குப் புரிந்தது.

முதல் இனிங்ஸில் எனக்கு எல்.பி.டபிள்யூ. கொடுக்கப்பட்டதும் நான் வெளியேறாமல் நின்றதும், ஓய்வு அறைக்குச் சென்றதும் துடுப்பு மட்டையை தூக்கி வீசியதும் தவறாகும். அதற்காக நான் வருத்தப்படுகிறேன்.

போட்டி முடிந்ததும் எங்கள் அணியின் சில வீரர்கள் கப்டன் கும்பிளேக்கு கைகொடுக்கவில்லை. அவர் களத்தை விட்டு விரைவில் வெளியேறிவிட்டதால் கைகொடுக்க முடியவில்லை. எங்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் நாங்கள் ஆணவமாக நடக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் எங்கள் கொண்டாட்டம் வேறுவிதமாக இருந்திருக்கு"மென்றார்.

thinakural.com

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.