Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெர்த் டெஸ்டில் வெற்றி பெறுவதற்கு அவுஸ்திரேலிய அணிக்கு 413 ஓட்டங்கள் இலக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெர்த் டெஸ்டில் வெற்றி பெறுவதற்கு அவுஸ்திரேலிய அணிக்கு 413 ஓட்டங்கள் இலக்கு

[19 - January - 2008] [Font Size - A - A - A]

* 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்

இந்திய அணியுடனான பெர்த் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 413 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அவுஸ்திரேலிய அணி தனது 2 ஆவது இனிங்ஸில் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டை இழந்துள்ளது.

இந்திய அணி தனது 2 ஆவது இனிங்ஸில் 294 ஓட்டங்களைப் பெற்றதுடன் முதல் இனிங்ஸில் கூடுதலாக 118 ஓட்டங்களையும் பெற்றிருந்தது.

இந்திய - அவுஸ்திரேலிய அணிகளிடையே 3 ஆவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இனிங்ஸில் இந்தியா 330 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய அவுஸ்திரேலிய அணி முதல் இனிங்ஸில் 212 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியா முதல் இனிங்ஸில் 118 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.

அடுத்து 2 ஆவது இனிங்ஸில் ஆடும் இந்திய அணி நேற்று முன்தினம் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 52 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஷேவாக் 29 ஓட்டங்களுடனும், பதான் 2 ஓட்டங்களுடனும் களத்திலிருந்தனர்.

நேற்று 3 ஆவது நாள் ஆட்டம் நடந்தது. ஷேவாக் 43 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது கிளார்க்கின் பந்தில் கிளீன்போல்டாகி ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த டிராவிட் நிலைத்து நிற்க முடியாமல் 3 ஓட்டங்களில் வீழ்ந்தார். பிரெட் லீ பந்தில் கில்கிறிஸ்டிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து வந்த டெண்டுல்கர், கங்குலி ஆகியோராலும் நிலைத்து நிற்க முடியவில்லை. டெண்டுல்கர் 13 ஓட்டத்தில் பிரெட் லீ பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார். கங்குலி ஒரு ஓட்டம் கூட எடுக்காமல் வெளியேறினார். ஜான்சன் பந்தில் கிளார்க்கிடம் பிடிகொடுத்து அவர் அவுட்டானார்.

அப்போது இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ஓட்டங்களாக இருந்தது.

இத்தனை வீரர்கள் அவுட்டானபோதும் எதிர்முனையில் நின்ற பதான் நிலைத்து நின்று ஆடி 40 ஓட்டங்களை எடுத்தார். அவருடன் லட்சுமணன் ஜோடி சேர்ந்து ஆடினார்.

மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பதான் 45 ஓட்டங்களுடனும் லட்சுமன் 18 ஓட்டங்களுடனும் களத்திலிருந்தனர்.

மதியபோசன இடைவேளையின் பின் பதான் 46 ஓட்டங்களில் ஆட்டமிழந்தபோது அணியின் ஓட்ட எண்ணிக்கை 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ஆக இருந்தது.

இந்த நிலையில் லட்சுமனுடன் தோனி ஜோடி சேர்ந்து ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தார். இந்த ஜோடி 7 ஆவது விக்கெட்டுக்கு 75 ஓட்டங்களை எடுத்த நிலையில் தோனி 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ஆக இருந்தது.

அடுத்து வந்த கப்டன் கும்பிளே ஓட்டமெதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த ஆர்.பி.சிங் லட்சுமனுடன் ஜோடி சேர்ந்து ஓட்டங்களை குவித்தார்.

இதன் பின் லட்சுமன் 79 ஓட்டங்களுடனும், சிங் 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க இந்திய அணி 2 ஆவது இனிங்ஸில் 294 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் ஸ்ருவர்ட் கிளார்க் - 4, சைமண்ட்ஸ் -2, பிரட்லீ 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்த நிலையில் 413 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியென்ற நிலையில் துடுப்பெடுத்தாடத் தொடங்கிய அவுஸ்திரேலிய அணி 3 ஆம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டை இழந்து 47 ஓட்டங்களைப் பெற்றது.பதானே இரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

thinakural.com

  • கருத்துக்கள உறவுகள்

சற்று முன்னர் இந்தியா அவுஷ்திரேலியாவை 73 ஓட்டங்களால் தோற்கடித்தது. ஆட்ட நாயகனாக இர்பான் பத்தான் தெரிவு செய்யப்பட்டார். இவர் முதலாம் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்ததுடன், ரெண்டாம் இன்னிங்சில் 45 ஒட்டங்களை எடுத்திருந்ததுடன் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

ச்கோர் விபரம்:

இந்தியா முதலாவது இன்னிங்ச் :330

அவுஷ்திரேலியா முதலாவது இன்னிங்ச் : 212

இந்தியா ரெண்டாம் இன்னிங்ச் : 294

அவுஷ்திரேலியா ரெண்டாம் இன்னிங்ச் :340

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவுஸ்திரேலியர்களின் அடாவடி வெற்றித்தொடருக்கு ஒரு முற்றுப்புள்ளி. அவர்கள் சிறுபிள்ளைகள் போல் அழுகுணி ஆட்டம் ஆடி வெற்றிகளை பெற்று இறுமாப்புடன் வலம் வந்து கொண்டிருந்தனர் . நடுவர்களை சரிகட்டி கேவலமான விளையாட்டில் ஈடுபட்வர்கள்.

இதற்காக இந்தியாவை நான் ஆதரிக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

அகம்பாவம் கொண்ட ஆசி அணி வீழ்த்தப்பட்டதில் மகிழ்ச்சிதான், ஆனால் இந்தியா வெல்ல வேண்டும் என்று நானும்தான் விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நடுவர்களின் இரண்டு பிழையான தீர்ப்பினால் அவுச்திரெலியா அணி தோல்வியுற்றது. தாங்கள் தோக்கும் போது நடுவர்கள் மீது பாயும் இந்தியா அணியும் அவர்களின் ஊடகங்களும் இம்முறை மவுனம சாதிக்கின்றது. கசி, சைமன் இருவரும் ஆட்டமிழக்கவில்லை. நடுவரின் பிழையான தீர்ப்பினால் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

44.6 Singh to Hussey, OUT, and thats given! Last ball of the over, RP gets Hussey playing forward, missing the line, and the ball hits him on the knee roll just about in line with middle stump, Asad Rauf has a think and then decides thats out

MEK Hussey lbw b Singh 46 (165m 113b 5x4 0x6) SR: 40.70

Commentator's curse again ... Hussey departs for 46. RP gets a big, big wicket. Clarke will be joined by the in-form Symonds. Replays show that ball to Hussey was going over the stumps. Hawk-Eye says not out. Hmmm.

49.4 Kumble to Symonds, OUT, gone! Kumble fires one in flat, and quick, at 102ks, pushing a surprised Symonds back in the crease and he's a sitter in front of middle and leg, Billy Bowden has no doubts and up comes the finger in a flash

A Symonds lbw b Kumble 12 (18m 14b 1x4 1x6) SR: 85.71

Another big wicket and its the captain who gets into the action. Adam Gilchrist in.

49.5 Kumble to Gilchrist, no run, spins in from outside off stump, he gets across and defends

Well, well, well .... replays show Symonds got an inside-edge onto pad. Another poor call. Symonds has reason to feel aggrieved.

http://content-aus.cricinfo.com/ausvind/en...tch/291353.html

  • கருத்துக்கள உறவுகள்

:D:D:D

இந்தியாவுக்கு நான் ஆதரவில்லை. ஆனால் அவூஸ்திரேலியாவுக்க்உ எதிராக எந்தக் குரங்கு விளையாடினாலும் என் ஆதரவு அந்தக் குரங்குக்குத் தான். (ஆனால் இலங்கை :huh: ) ஆஸ்திரேலியர்கள் ஆட்டத்தில் கெட்டிக்காரர்கள்தான். ஆனால் அவர்களின் ஆடுகள நடத்தை கேள்விக்குரியது. :o மற்றும்படி கோலியாத்தை தாவீது வீழ்த்தும்போது எப்போதும் சந்தோசம்தானே.. :D

கந்தப்பு சொன்னதுபோல சில தீர்ப்புகள் இந்தமுறை இந்தியாவுக்கு சாதகமாக வந்துள்ளதுபோல தெரிகிறது. இப்ப ஆஸி வீரர்கள் புளுங்குவினம்தானே.. :(

சின்ன வயசிலை இருந்து இந்திய அணி பக்கம் ஆதரவு கொடுத்ததாலையோ என்னவோ இந்தியா வெண்றதில் சின்ன மகிழ்ச்சி.. :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.