Jump to content

மிளகு ரசம்


Recommended Posts

தென்னிந்தியா முழுவதும் பிரபலமான உணவு வகை இது. தமிழர் உணவு பழக்கத்தில் சாம்பாருக்கு அடுத்தபடியாக ரச உணவு என்பது எழுதப்படாத விதி. நேரம் கிடைக்காதவர்கள் அவசரத்திற்கு ஒரு ரசம் வைத்தேன் என்று சொல்லுமளவிற்கு செய்வதற்கு மிகவும் எளிமையானது. அதிக மூலப் பொருட்கள் தேவையில்லை. தக்காளி வதக்கி புளிக்கரைசலில் மிளகு சீரகம் தட்டிப்போட்டு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து எளிய முறையில் சுவையான ரசம் தயாரித்துவிடலாம்.

உணவு செரிமானத்திற்கு ரசம் அவசியமாகின்றது. பல நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது ரச உணவுதான். திரவ உணவு என்பதால் எளிதில் ஜீரணம் ஆவதுடன், இதில் சேர்க்கப்படும் மிளகு, சீரகம் போன்றவை உடல் நலத்திற்கும் பெரிதும் உதவுகின்றன. மிளகு ரசம், பருப்பு ரசம், பூண்டு ரசம் ஆகியவை ரச வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

மிளகு ரசம்

தேவையானப் பொருட்கள்

மிளகு - ஒரு மேசைக்கரண்டி

சீரகம் - ஒரு மேசைக்கரண்டி

துவரம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி

மல்லிவிதை - ஒரு தேக்கரண்டி

மிளகாய் - இரண்டு

புளி - சிறு எலுமிச்சை அளவு

உப்பு - ஒரு மேசைக்கரண்டி

கடுகு - ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், துவரம் பருப்பு, மல்லி விதை, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அனைத்தையும் அம்மியில் வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

புளியைக் கரைத்து எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு மேசைக்கரண்டி உப்பு மற்றும் அரைத்தவற்றைச் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கொள்ளவும்.

நன்றாக கொதி வந்தவுடன் கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டி கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு இறக்கவும்.

Link to comment
Share on other sites

நுணாவிலான் நன்றி உங்களுடைய மிளகுரச செய்முறைக்கு,

இதை செய்வதற்கு அரைமணியாவது எடுக்கும், ஆனால் இப்ப திடீர் ரசம் பொடியாகவோ அல்லது பெஸ்ட்டாகவோ கிடைக்கிறது அதை வாங்கி தண்ணியை கொதிக்கவிட்டு 1- 2 மேசைக்கரண்டி ரசமிக்ஸை போட்டு, சுவைக்கேற்ப உப்பை போட்டால் சுவையான ரசம் 5 நிமிடத்தில ரெடி. சில பிராண்டுகளில புளி இல்லை அவற்றிற்கு புளி போட வேண்டும்.

புளியுள்ள மிக்ஸ் என்றால் இன்னும் வேலை சுலபம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி!!!

Link to comment
Share on other sites

பைனாப்பிள் ரசம்

தேவையானப் பொருட்கள்

துவரம்பருப்பு - 100 கிராம்

புளி - 10 கிராம்

அன்னாசி - 4 துண்டுகள்

உலர்ந்த மிளகாய் - 6

தனியா - 5 கிராம்

கொத்தமல்லி - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

கடுகு - அரைத்தேக்கரண்டி

எண்ணெய் - 10 கிராம்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் தனியா இரண்டையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்து அம்மியில் வைத்துப் பொடித்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் இருநூறு மில்லி தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள். தண்ணீர் சூடானதும் பருப்பைப்போடுங்கள்.

பருப்பு நன்றாக வெந்ததும் புளி, உப்புப் பொடி, மிளகாய்ப்பொடியையும் போட்டுக் கலந்து விடுங்கள்.

எல்லாம் நன்றாக கொதித்ததும் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக்கிப் போடுங்கள்.

மேலும் நன்றாகக் கொதித்ததும் மேலும் இருநூறு மில்லி தண்ணீர் விட்டுச் சிறிது நேரம் அடுப்பிலேயே வைத்திருந்து இறக்குங்கள்.

கடுகைத் தாளித்துக் கொட்டுங்கள். கொத்தமல்லி, கறிவேப்பிலையையும் போட்டு உபயோகியுங்கள்.

வழங்கியவர்

திருமதி. ராஜம், தஞ்சை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒம். உண்மை தான் ஆனால்  ஜேர்மனியன்.  ஆள்வான்    ஆளப் போகிறாரன். 🤣😂
    • இங்க இப்படி நடந்து கொள்வது பாகிஸ்தானிகள். அண்ணன், தம்பி, மச்சான், மாப்பிள்ளை, மகன் என கூட்டாக சேர்ந்து அரசின் பராமரிப்பில் இருக்கும் 12-19 வயது சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பல சம்பவங்கள் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக விசாரிக்க படுகிறது. ஏனைய கலாச்சார பெண்கள் என்றால் போக பொருட்கள் என சொல்லி கொடுக்கும் மதம், கலாச்சாரம், சமூகம்தான் காரணம். நீங்கள் ஆறரை அடி உயரத்தில், எம் ஜி ஆர் கலரில் தக தக என மின்னுவதால் உங்களை ஆப்கானி என நினைக்கிறார்கள் போலும்🤣. 
    • இல்லை நுணாவிலான் வீடியோவில் 4:40 லிருந்து, போதியளவு பொலிஸ் இல்லையாம் மூன்றே மூன்று கார்கள் மட்டும்தான் நின்றிருக்கின்றன, இல்லையென்றால் எல்லோரையுமே விலங்கடிச்சு ஏத்தியிருப்பான். இதில் உலகின் பெரும் நகரமொன்றின் பாதுகாப்பு குறைபாடும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. நான் நினைக்கிறேன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சத்தமில்லாமல் அடையாளம் காணும் வேலையில் பொலிஸ் இப்போது இறங்கியிருக்கலாம். அப்படியே விடமாட்டாங்கள். குமாரசாமியண்ணை,  ஜேர்மனி மட்டுமல்ல ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா உட்பட  உலகின்  அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்பு விசா, மாணவர்கள் விசா ,அகதி அந்தஸ்து கோருவோர் அனைவருக்கும் பெரும் நெருக்கடி நெருங்கி வந்துவிட்டது, இனிவரும் காலங்கள் இவர்களுக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
    • இரெண்டு வருடத்தில் இனி போட்டி இல்லை என சொல்லி இருந்தால், கவின் நீயூசம் அல்லது இன்னுமொரு வெள்ளை ஆண் போட்டியிட முடிந்திருக்கும். அவரால் டிரம்பை வெல்லவும் முடிந்திருக்க கூடும். ஒரு அதிபராக டிரம்ப் எப்படி தகவல்களை ரஸ்ய உளவாளிகளுக்கு அவரின் கோல்ப் ரிசார்ட்டில் வைத்து கொடுத்தார் என்பதை இதை விட கடுமையான ஆதாரங்களை பைடன் அறிந்திருப்பார். இருந்தும் கமலா போல சோப்பிளாங்கியை அதுவும் அமெரிக்கர்கள் ஹிலரி போன்ற இயலுமை மிக்க பெண்ணையே நிராகரித்த பின், வேறு தெரிவின்றி வேட்பாளர் ஆக்கும் வரைக்கும் காலம் தாழ்த்திய பதவி வெறியர் பைடன். டிரம்பை விட மோசமான சுயநலமி பைடன். ஓபாமா கூப்பிட்டு சொல்லி இராவிட்டால், அந்த மொக்கேனப்பட்ட டிபேட்டுக்கு பின்னும் போட்டியில் இருந்து விலகி இருக்க மாட்டார். அமெரிக்காவின் மைத்திரிபால சிறிசேனதான் பைடன். அநேகமாக மகனை பொது மன்னிப்பில் விடுவார் என்றே நான் நினைக்கிறேன்.
    • தேர்தல் நேரம் பல காரணங்களை சொல்லி பிரிவதும். தேர்தல் முடிய. அதே கட்சிகள்  இரண்டு மூன்று  மாதங்கள் பேச்சுவார்த்தை வைத்து ஆட்சி அமைப்பதும். வழமையான ஒரு நிகழ்வு  தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்கிறீர்கள்  ஆனால்  வேலைவாய்ப்புக்கு ஆள்கள். வேண்டும் என்கிறார்கள்    வேலையில். சேர்ந்தால்.  500. .....1000,.......2000. யூரோக்கள்.  நன்கொடை. தரலாம். என்கிறார்கள்    இந்த தொழிலாளர்கள் ஏன்??   ஆரமப சம்பளம்  15 யூரோ   நான் வேலை செய்த காலத்தில் இப்படி இல்லை   சும்மா  9,....10,.யூரோக்கு    உடம்மை  முறித்துக்கொண்டது தான்   கண்ட பலன். வேலை எடுப்பது கூட கடினம்    இப்போது மிகச் சுலபம்    🙏
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.