Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக சாதனை படைத்த தடகளவீரர் மாரிஸ் கிரீன் ஓய்வுபெற்றார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

040709_greene_file_7a.hmedium.jpg

உலக சாதனை படைத்த தடகளவீரர் மாரிஸ் கிரீன் ஓய்வுபெற்றார்

[06 - February - 2008] [Font Size - A - A - A]

உலகசாதனை படைத்த அமெரிக்க ஓட்டப்பந்தய வீரர் மாரிஸ் கிரீன் தடகளத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல தடகள வீரர் மாரின் கிரீன். 33 வயதான கிரீன் சமீபகாலமாக காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் பீஜிங் ஒலிம்பிக் போட்டிக்கான வசதிகளை நேரில் பார்வையிடச் சென்றுள்ள கிரீன், தடகளத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அங்கு அறிவித்துள்ளார்.

இது குறித்து மாரிஸ் கிரீன் கூறுகையில்;

`கடந்த சில வருடங்களாக எனக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட காயம் எனது பயிற்சியை தடுத்தது. எனவே ஓய்வு பெற இது சரியான நேரம் என்று ஓய்வு முடிவை எடுத்தேன். ஓய்வு முடிவு லேசான வருத்தமளித்தாலும், நான் செய்த சாதனைகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது' என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கான்சாஸ் நகரைச் சேர்ந்த கிரீன் 1999 ஆம் ஆண்டில் 100 மீற்றர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்தார். 2000 ஆம் ஆண்டில் சிட்டினியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். 1997, 1999, 2001 ஆம் ஆண்டுகளில் உலக தடகள போட்டியில் 100 மீற்றர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார். அதில் 1999 ஆம் ஆண்டில் 200 மீற்றர் மற்றும் 4ஙீ100 மீற்றர் ஓட்டத்திலும் தங்கம வென்றார்.

1999 ஆம் ஆண்டில் 100 மீற்றர் ஓட்டத்தில் கிரீன் 9.79 வினாடியில் இந்தத் தூரத்தை கடந்தது 2002 ஆம் ஆண்டு வரை உலக சாதனையாக இருந்தது. அதனை ரிம் மான்ட்கொமெரி 9.78 வினாடியில் கடந்து தகர்த்தார். ஆனால், அவர் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் அவரது சாதனை அழிக்கப்பட்டது.

2005 ஆம் ஆண்டில் அசபா பொவல் 9.77 வினாடியில் ஓடி கிரீனின் சாதனையை முறியடித்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

thinakural.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.