Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோத்தபாயவின் முகத்தில் ரத்வத்த.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாயவின் முகத்தில் ரத்வத்த.

10.02.2008 / நிருபர் எல்லாளன்

"எனது பதவிக்காலத்தை நிறைவுசெய்யும்போது சிறந்த இராணுவத்தளபதி என்ற நிலையுடன் பதவி விலகுவேன்" என ஜெனரல் பொன்சேகா கொழும்பிலிருந்து வெளியாகும் லக்பிம சிங்கள நாளேட்டிற்கு (10-02-2008) வழங்கிய செவ்வியில் தெரிவித்திருக்கிறார்.

இக்கருத்து சிலவாரங்களிற்கு முன்னர் தனது உத்தியோக பூர்வ வாஸ்தல் தலத்திற்கு பத்திரிகையாளர்களை அழைத்துப்பேசியபோது அவர்தெரிவித்த, "எனக்கு அடுத்துவரும் தளபதிக்கு போரை விட்டுச்செல்லமாட்டேன்" என்ற கூற்றுக்கு மாறானாதாகும். ஏன் ஜென்ரல் பொன்சேகாவின் சுருதி இவ்வாறு குறைந்துபோனது?

"கிளிநொச்சியை மார்ச்மாதத்திற்கு இடையில் படையினர் கைப்பற்றிவிடுவர்" என்ற தகவல் அரசவிரோத சக்திகளால் பரப்பப்பட்ட ஒன்று எனவும் ஜெனரல் பொன்சேக லக்பிம செவ்வியில் தெரிவித்திருக்கிறார். ஆனால் சிறிலங்காவின் சுதந்திரதினத்தன்று அரசவானொலி இத்தகவலை அரசின் ஒரு நம்பிக்கைக்குரிய கூற்றாக அல்லது எதிர்கால இலக்காக வெகுதுல்லியமாக பிரகடனப்படுத்தியிருந்தது.

ஏறக்குறைய ஒருவாரத்தின்பின் சிறிலங்காவின் இராணுவத்தளபதி அக்கருத்தை மறுத்துரைத்திருப்பது ஏன்? அரசினதும் அதன் தளபதியினதும் நோக்குநிலைகளில் இடைவெளி திடீரென ஏற்படக்காரமென்ன?

விடுதலைப்புலிகளை வருகின்ற ஒகஸ்ட் மாதத்திற்குள் ஒழித்துவிடப்போவதாக சிலவாரங்களிற்கு முன்னர் ஜெனரல் பொன்சேகா சூளுரைத்திருந்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு.கோத்தபாய ராஜபக்சவும் இக்கருத்தை அப்போது ஊடகமொன்றிற்கு பேசும்போது பலமாக ஆதரித்திருந்தார். ஆனால் வெகுசில நாட்களிற்கு முன் பத்திரிகையொன்றிற்குவழங்கிய பேட்டியில் திரு.கோத்தபாய புலிகளை அழிப்பதற்கு காலக்கெடு எதுவும் விதிக்கமுடியாது என மிகத்தெளிவாக வலியுறுத்தியுள்ளார்.

திரு.கோத்தபாய ராஜபக்ச ? ஜெனரல் பொன்சேகா ஆகிய இருவரும் மிகக்கடும்போக்காளர்கள் என மேற்கு ஊடகங்களாலும் இராஜதந்திரவட்டாரங்களாலும் பகிரங்கமாகவே குறித்துரைக்கப்படுபவர்கள். சிறிலங்காவின் தற்போதைய ஆட்சிபீடத்தின் யுத்தமுனைப்பிற்கும் யுத்தத்தின் மீதான நம்பிக்கைக்கும் இவ்விருவருமே அச்சாக விளங்குகிறார்கள். இவர்கள் இருவரும் ஜெனரல் கொப்பேக்கடுவவின் கீழ் முறையே கஜபா, சிங்க றெஜீமென்ற்களின் பற்றாலியன்களை முதலாம் இரண்டாம் ஈழப்போர்களில் பல்வேறு களமுனைகளிலும் வழிநடத்திய இராணுவத்தோழர்கள் ஆவர். அந்த அடிப்படையில் இருவரிடையேயும் ஆழமான புரிந்துணர்வும் நட்பும் பரஸ்பரநம்பிக்கையும் வேரூன்றியுள்ளன.

இவை நன்கு பளிச்சிடும்வகையில் இவர்கள் வெளியிடுகின்ற கருத்துக்களும் வழங்குகின்ற செவ்விகளும் அமைந்திருப்பது வழமை. ஆட்சிப்பீடத்திற்கும் பொதுமக்களுக்கும் யுத்தத்திலும் யுத்தத்தின்வழி புலிகளை அழிக்கமுடியும் என்பதிலும் நம்பிக்கையேற்படுத்தும் முகமாக இவர்கள் இருவரும் தொடர்ந்து பேசிவருவார்கள்.

ஆனால் இருவரதும் தொனி இப்போது குறைவடைந்துவருகிறது. வெகு தெனாவெட்டாக தாங்கள் இதுவரையும் விதித்துவந்த காலக்கெடுக்களை சந்தடிசாக்கில் தாங்களே மிகமெதுவாக கீழே நழுவவிடுகின்றபோக்கை பாதுகாப்புச் செயலாளரும் அவரது தளபதியும் கடைப்பிடிக்கிறார்கள். ஏன்?

சிறிலங்காவின் 60வது சுதந்திரதினத்திற்கு முன்பாக மடுத்திருப்பதியை கைப்பற்றிவிடுவோம் என்பது இந்த இணை வடபோர் அரங்கு தொடர்பாக முன்வைத்திருந்த முதலாவது காலக்கெடுவாக இருந்தது. இதற்காக இவர்கள் தமது தளபதிகளையும் அதிகாரிகளையும் சிப்பாய்களையும் பிழிந்தெடுத்தார்கள். ஓடவிரட்டினார்கள். அவர்களது சடலங்களை மல்வத்து ஓயாவின் தீரத்திலே புதைத்தார்கள். சிங்களவர்கள் நம்புகின்ற விஜயனின் வருகை நிகழ்ந்த இடமாகிய அப்பகுதியில் விஜயனின் வாரிசுகளை பெயரற்ற பிணங்களாக பெயர்குறிப்பிடாத புதைகுழிகளில் புதைத்தார்கள். ஆனால் மன்னார் களமுனை அசைந்துகொடுக்கவில்லை.

ஒன்றுக்கிரண்டு டிவிசன்களை களமிறக்கியபோதும் அவர்களிற்கு அளவுகணக்கின்றி வெடிபொருட்களை அள்ளிவழங்கியபோதும் படையினரது உயிரைப்பற்றி அக்கறையில்லை வெற்றியே முக்கியமென முழங்கியபோதும் எதுவுமே நடந்துவிடவில்லை.

அடம்பனையோ பண்டிவிரிச்சானையோ தாண்டமுடியாமல் முறையே 58,57வது படையணிகள் திணறிக்கொண்டிருக்க காட்சிமாறிவிட்டது. தம்புள்ளவிலும் கோட்டை ரயில்நிலையத்திலும் யாலவிலும் புத்தளவிலும் கொப்பேக்கடுவ சந்தியிலும் குண்டுகளும் கிளேமோர்களும் அடுத்தடுத்து வெடிக்க தென்னிலங்கை கதிகலங்கி சுதந்திர தின நிகழ்வுகளே நடந்தேறுமோ என்கின்ற சந்தேகம் அனைத்துமட்டத்திலும் புற்றுநோய் என பரவியிருந்தது.

தென்னிலங்கையின் பாதுகாப்புக்குறித்து ஆழமான அச்சமும் ஐயமும் பொதுமக்களிடமும் அதிகாரிகளிடமும் அரசாங்கத்தினுள்ளும் பரவிவிட்டன. வடக்கில் யுத்தத்தில் வெற்றி கிட்டாவிட்டாலும் பரவாயில்லை தென்னிலங்கையில் பாதுகாப்பு நிலைநாட்டப்படவேண்டும் என்ற ஆதங்கம் அனைத்துவட்டாரங்களிலும் விழுதெறிந்துவிட்டது.

சிங்களப் போர் இயந்திரத்தின் முதன்மைக்கவனம் தென்னிலங்கையின் பாதுகாப்பாக மாறிவிடக்கூடிய நிர்ப்பந்தம் காணப்படுகிறது. எனவேதான் சிங்களப் போர்க்குதிரையின் சவாரிவீரர்கள் சற்று அடக்கிவாசிக்கத் தலைப்படுகிறார்கள்.

ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இவர்களை விடவும் பலமடங்காக எகிறிய எள்ளல்விட்ட ஜெனரல் ரத்வத்த ஒன்றுக்கு பத்தாக காலக்கெடுக்களை விதித்தார். விடுதலைப்புலிகளை அழித்துவிட்டதாக வீதாசாரக் கணக்குகளை அள்ளிவீசினார். அவரது தகவல் திணைக்களம் வரைபடங்களிலும் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகள் தொடர்பாக பெரும் புரட்சியையே செய்தது. 1997 வெசாக் பண்டிகைக்கிடையில் மாங்குளத்தை கைப்பற்றிவிடுவோம் என ஜெனரல் ரத்வத்த விதித்த காலக்கெடு மிகப்புகழ்பெற்றது. ஆனால் அதுவே அவருக்கு காலக்கேடாக மாறியதையும் உலகம் வெகுவிரைவிலேயே கண்டது.

தனது காலக்கெடுக்களுள் தானே சிக்கி தனது துருப்புக்களை தானே பலியிட்ட அபவாதத்திற்கு ஆளானார் ஜெனரல் ரத்வத்த. அவர் ஆடிய பேயாட்டத்தின் விளைவாக அவரது மருமகளான திருமதி சந்திரிகா அம்மையார் ஆட்சியை இழந்தார்.

இப்போது சுதந்திரதினத்திற்கிடையில் மடு என்ற தங்களது முதலாவது காலக்கெடுவை தோற்றுவிட்டு நிற்கிறார்கள் திரு.கோத்தபாயவும் ஜெனரல் சரத்பொன்சேகாவும். அவர்களது தளபதிகள் தலையால் கிணறுதோண்டியும்கூட புலிகளின் நிலைகளை குறிப்பிடத்தக்களவிற்கு பின்தள்ளவோ கைப்பற்றவோ முடியாமல் வாயிலே நுரைதள்ள கைகளைப் பிசைகிறார்கள். ஏனென்றால் வாரம் ஒருதடவையாவது வவுனியாவிற்கு வருகின்ற ஜெனரல் பொன்சேகா சவாரிக் காளைகளை தார்க்குச்சியால் குத்துவதுபோல அவர்களை விரட்டிக்கொண்டிருக்கிறார்.

ஆனால் ஆய்வாளர்கள் என்னவோ ஜெனரல் பொன்சேகாவின் முகத்தில் ஜெனரல் தளுவத்தவும் திரு.கோத்தபாயவின் முகத்தில் ஜெனரல் ரத்வத்தவும் காணப்படுவதாக கூறுகிறார்கள்.

வரலாறு தொடர்பாக முதுமொழியொன்றுண்டு. History repeats itself.

பு.சத்தியமூர்த்தி

http://www.sankathi.com/content/report_ful...amp;ucat=5&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.