Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்சியாவின் ஏவுணைகள் ரஷ்சியாவுக்கே ஆபத்தாகியுள்ள விநோதம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_44422428_russiaiskanderafp203i.jpg

உலக உருண்டையில் பெரிய வல்லரசுகளுக்கு உள்ள பிரச்சனையே தனி. அமெரிக்கா என்ற ஏகாதிபத்திய வல்லரசு தனது நலனை நேட்டோ என்ற அமைப்பு விரிவாக்கத்தின் மூலம், ஏனைய நாடுகளை பொருளாதார பலவீனப்படுத்தி பின் உதவுவது போல உதவி தன்னை நோக்கி ஈர்த்து வருகிறது.

இதன் தொடர்சியாக மேற்கு ஐரோப்பா எங்கும் நேட்டோவின் விரிவாக்கத்தின் கீழ் அமெரிக்க அதிகாரம் கோலோஞ்சிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் முன்னாள் சோவியத் யூனியனின் கூட்டாளிகளையும் தற்போது ரஷ்சியாவுக்கு எதிராக செயற்படுத்த நேட்டோவுக்குள் உள்வாக்கும் செயலை அமெரிக்க செய்ய ஆரம்பித்துள்ளது.

அதன் கீழ் போலந்து மற்றும் செக் குடியரசு போன்றவை நேட்டோவுக்குள் உள்வாங்கப்படுவதுடன் அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு கவசத்திட்டத்தின் கீழ் இடைமறிப்பு ஏவுகணைகளை அந்த நாடுகளில் நிறுத்தவும் முனைகின்றனர். இறுதியாக ரஷ்சியாவின் தொப்புள் கொடி என்று சொல்லக் கூடிய உக்ரைனும் அமெரிக்காவின் பார்வையில் விழுந்திருக்கிறது. அதனையும் நேட்டோவுக்கு எடுத்துவிட்டால் உக்ரைன் வைத்துள்ள ரஷ்சிய தொழில்நுட்ப ஏவுகணைகளைக் கொண்டே ரஷ்சியாவை அச்சுறுத்த நினைக்கிறது அமெரிக்கா..!

ரஷ்சியாவோ பதிலுக்கு எரிவாயுவை வைத்து அண்டை நாடுகளை ஆட்டிப்படைக்க முனைவதுடன்.. தனது இராணுவத் தொழில்நுட்பத்தை நவீனப்படுத்துவதுடன் அமெரிக்கா, நேட்டோ விரிவாக்கத்தின் மூலம் ரஷ்சியாவை அச்சுறுத்த நினைப்பதை முறியடிக்க புதிய ஆயுதப் போட்டிக்கு தன்னை தயார் செய்ய ஆரம்பித்திருக்கிறது.

இதன் முதற்கட்டமாக ரஷ்சியாவின் நீண்ட தூர பறப்பு உளவு மற்றும் தாக்குதல் வானூர்திகள் நேட்டோ நாடுகளை உளவு பார்க்கும் பறப்புக்களை ஆரம்பித்துள்ளன. இந்த நடைமுறை சோவியத் உடைவுக்குப் பின்னர் நின்று போனது.

நேற்றைய தினம் பசுபிக் கடலில் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பலை இலக்கு வைத்து பறந்த ரஷ்சிய போர் விமானங்கள் அமெரிக்க எப் 18 ரக வானூர்திகளால் இடைமறிக்கப்பட்டு ரஷ்சியாவின் எல்லைக்குள் துரத்தப்பட்டன என்று அமெரிக்கா குற்றம் சாட்டி இருக்கிறது. சமீபத்தில் நிகழ்ந்த இதேபோன்ற இன்னொரு நிகழ்வில் ரஷ்சியாவின் இன்னொரு பரம எதிரியான ஜப்பானின் வான் எல்லைக்குள் நுழைந்த ரஷ்சிய போர் விமானங்களை ஜப்பான் 22 சண்டை விமானங்களைப் பயன்படுத்தி விரட்டியதாக செய்திகள் கூறுகின்றன.

மீண்டும் உலகப் பந்து ஆயுதப் போட்டா போட்டி நோக்கி நுழையும் வகையில் அமெரிக்காவின் நேட்டோ விரிவாக்கமும் அதன் ஏவுகணை பாதுகாப்பு கவசத் திட்டமும் விளங்குவதோடு உலக ஒழுங்கிலும் பல மாற்றங்களை உண்டு பண்ணலாம் என்று தெரிகிறது.

இதன் முதற்கட்டமாக சீனாவும் ரஷ்சியாவும் இணைந்து விண்வெளியில் ஆயுதப் பாவனையை இல்லாது செய்யும் ஒப்பந்த வடிவம் ஒன்றை முன்வைத்துள்ளன. ஆனால் அமெரிக்கா அதை நிராகரிப்பதோடு ஏற்கனவே உள்ள சுமார் 41 வருடங்கள் பழைமையானதும் தனக்கு சாதகமானதுமான ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்கப் போவதாகக் கூறி வருகிறது..!

இதற்கிடையே ரஷ்சியாவும் அமெரிக்காவின் நெருங்கிய ஐரோப்பிய கூட்டாளியான பிரிட்டனும் இராஜதந்திர மட்டத்தில் மோதிக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இவையெல்லாம் மீண்டும் ஒரு புதிய பனிப்போருக்கான ஆரம்பத்தை உலகப் பந்து சந்தித்து நிற்கிறதா என்ற கேள்வியை உலக மக்கள் மத்தியில் எழுப்பி நிற்கின்றன.

Russia in Ukraine missile threat

Russia has warned that a new arms race is unfolding around the world

Russia has said it may target its missiles at Ukraine if its neighbour joins Nato and accepts the deployment of the US missile defence shield.

http://news.bbc.co.uk/1/hi/world/europe/7241470.stm

தமிழில் செய்திகளின் தொகுப்பு: நெடுக்ஸ். Exclusive for Yarl. All rights reserved

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ் உங்களின் தமிழாக்கத்துக்கும், செய்திக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நெடுக்கு சாமி!

இப்படியான தமிழாக்கங்கள் உண்மையிலேயே யாழ்களத்திற்கு பெருமைசேர்க்கும்.

வாழ்த்துக்கள்.இப்படியான தமிழாக்கங்களை வரவேற்கின்றேன் :lol::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.