Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் I.C.R.Cயின் பணிகள்

Featured Replies

ஐ.சி.ஆர்.சி- இலங்கை

செய்தி மடல் 01/2008

வன்முறைகளின் தீவிரத்தினால் பாதிக்கப்படும் பொதுமக்கள்

ஐ.சி.ஆர்.சி யின் கள நடவடிக்கைகள் பற்றிய பிந்திய நிலவர அறிக்கை

இந்த வருடத் தொடக்கம் முதல் நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் இடம்பெறும் கண்மூடித் தனமான வன்முறை சம்பவங்களினால் பொதுமக்களுக்கு அதிகளவான இழப்பு ஏற்பட்டிருப்பது ஐ.சி.ஆர்.சி யினால் அவதானிக்கப்பட்டுள்ளது. அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் தொடர்ச்சியாக இடம்பெறும் அதிகரித்த மோதல்களும் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்குக் காரணமாகி உள்ளன.

அதிகரித்துச் செல்லும் வன்முறைகள் பொதுமக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையிட்டு நாம் அதிக கரிசனம் கொண்டுள்ளோம். என்று ஐ.சி.ஆர்.சியின் கொழும்புப் வதிவிடப் பிரதிநிதி டூன் வன்டன்ஹோவ் தெரிவிக்கின்றார். மோதல்களில் பொதுமக்களும் தனிநபர்களும் நேரடியாகப் பங்கேற்பதில்லை, அவ்வாறேதான் நோயாளர்கள், காயப்பட்டவர்கள் அல்லது கைது செய்யப்பட்ட படை வீரர்கள் போன்றவர்களும் மோதல்களில் நேரடியாகப் பங்குபெறாதவர்களே. இவர்கள் சர்வதே மனிதநேயச் சட்டத்தின் கீழ் எச்சந்தர்ப்பத்திலும் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்

சமச சட்டத்தின் கீழ் எப்பொழுதும் ஒரு புறத்தே பொதுமக்களையும் பொதுமக்களின் இலக்குகளையும் மறுபுறத்தே போரிடுபவர்களையும் இராணுவ இலக்குகளையும் வேறுபடுத்தி இனங்காணும் கடப்பாடு மோதலில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உண்டு. பின்னைய தரப்பை மட்டும் குறிக்கோளாகக் கொண்டே தாக்குதல்கள் இடம்பெறலாம். அவை பொதுமக்களுக்கு அல்லது பொது மக்களின் இலக்குகளுக்கு எதிராக இருக்கக் கூடாது. இதற்கு மேலாக இராணுவ நடவடிக்கைளின்போது பொதுமக்கள் மீதும் பொதுமக்களின் இலக்குகள் மீதும் தொடர்ச்சியான கவனிப்பு செலுத்தப்படவேண்டும்.

வடக்கில் அதிகரித்து வரும் மோதல்கள் மனிதநேயப் பணியாளர்களர்களுக்குப் பெரும் ஆபத்தை விளைவித்திருப்பதுடன் நிவாரண உதவி வினியோகத்தையும் நெருக்கடிக்குள் இட்டுள்ளது. மனிதநேய உதவிகளை இறுக்கமாக மேற்கொள்ளும் ஒரு நடுநிலையான தொண்டு நிறுவனம் என்ற பெயரை நீண்டகாலமாகக் கொண்டிருக்கும் ஐ.சி.ஆர்.சி, பாதுகாப்பு முன்னரங்க எல்லையின் இருபுறத்திலும் உள்ள உதவியும் பாதுகாப்பும் தேவைப்படும் மக்களிடம் சென்று மேற்கொள்ளும் பணிகள் பாராட்டப்படவேண்டியவை.

இதேநேரம், கடந்த டிசம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் வடக்கு கிழக்குப் பருவ மழை வழமைக்கு மாறாக அதிகமாகப் பெய்தமையினால் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுர மாவட்டத்தில் 6,100 பேர் (கிட்டத்தட்ட 1700 குடும்பங்கள்) இடம்பெயர்ந்திருப்பதாக உள்@ர் அதிகாரிகளின் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. சனசமூக நிலையங்கள், பாடசாலைகள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் இடம்பெயர்ந்தோர் தற்காலிகமாகத் தங்கியுள்ளார்கள். ஆயுதமோதலினால் அல்லது வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதும் அதற்கு உதவியளிப்பதுமே ஐ.சி.ஆர்.சியின் ஆணையதிகாரமாக இருந்தபோதிலும் அனுராதபுரத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டது. தேசிய அனர்த்த மீளளிப்புச் சங்கமானது ஜேர்மன் மற்றும் பிரித்தானிய செஞ்சிலுவைச் சங்கங்களின் ஆதரவுடன் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்தவர்களுக்கு வேண்டிய உணவு, விரிப்பு, பாய், சமையலறை உபகரணங்கள், சுகாதாரப் பொருட்கள், அரிக்கன் லாந்தர் போன்றவற்றை ஐ.சி.ஆர்.சி வழங்கி உதவியிருந்தது.

ஓமந்தை நுழைவாயிலில் ஐ.சி.ஆர்.சியின் பிரசன்னம்

அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கும் இடையே போய் வரவிரும்பும் பொதுமக்களுக்கு உதவுவதற்காக ஐ.சி.ஆர்.சி தொடர்ந்தும் ஓமந்தை நுழைவாயிலில் பிரசன்னமாகி உள்ளது. நடுநிலையான பணியை மேற்கொண்டு வரும் ஐ.சி.ஆர்.சி வடபகுதியிலிருந்து தென்பகுதிக்கு மருத்துவ சிகிச்சைக்காகப் பயணித்த 275 நோயாளர்கள் உள்ளடங்கலாக 62,000க்கு மேற்பட்ட பொதுமக்களினதும் 6,800 வாகங்களினதும் போக்குவரவிற்கு உதவியுள்ளது. அரசாங்கத்தினதும் விடுதலைப்புலிகளினதும் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கிடையில் மரணமடைந்த 40 போர் வீரர்களின் உடலங்களைக் கையளித்திருந்ததுடன் வவுனியா மருத்துவமனையின் பிரேத அறையில் இரண்டு குளிர்பதன வசதி கொண்ட பிரேத அறையைப் புதுப்பிருந்தது அல்லது புதிதாகக் கட்டியது.

1999ம் ஆண்டு முதல் வௌ;வேறு நுழைவாயில்களில் ஐ.சி.ஆர்.சி தனது பிரசன்னத்தை மேற்கொண்டு வருகின்றது என்று கூறினார் வன்டன்ஹோவ். நுழைவாயில்களைத் திறப்பதும் மூடுவதும் மோதல்களில் சம்பந்தப்பட்டுள்ள தரப்பினர் மட்டுமே ஆனாலும் இவற்றைக் கடக்க வேண்டிவரும் பொதுமக்களிற்குப் பாதுகாப்பான பயணத்தை ஐ.சி.ஆர்.சி பணியாளர்களின் பிரசன்னமே உறுதி செய்கிறது.

மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொதுமக்களினதும் தனிநபர்களினதும் பாதுகாப்பு

நாடளாவிய ரீதியில் மனிதநேயச் சட்டங்களின் மீறல்கள் பொதுமக்களை எவ்விதம் பாதிக்கின்றது என்பதைக் கண்காணித்து அவை பற்றி மோதலில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்ந்தும் ஐ.சி.ஆர்.சி கலந்துரையாடி வருகின்றது. கடந்த காலங்களைப் போன்றே காணமல் போன உறவினர்கள், கைதுகள், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், பொதுமக்களைத் தரக்குறைவாக நடத்துதல் போன்ற சம்வங்கள் தொடர்பாக முறையிட்டவர்களுடனும் பாதிக்கப்பட்டவர்களுடனும் ஐ.சி.ஆர்.சி சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றது.

அரச அதிகாரிகளினதும் விடுதலைப்புலிகளினதும் ஒத்துழைப்புடன் பாதுகாப்புக் காரணங்களுக்காக அதிகளவில் கைது செய்யப்பட்டு வருபவர்களை ஐ.சி.ஆர்.சி சென்று பார்வையிட்டு மனதை மகிழ்விக்கும் உபகரணப் பொருட்கள், உடுபிடவைகள், குளியல் சாதனப் பொருட்கள் வழங்கியிருந்தது. 55 வௌ;வேறு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 884 கைதிகளுடன் தனிப்பட்ட சந்திப்புகளை மேற்கொண்டுள்ளது அல்லது பதிவு செய்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்ட 370 கைதிகளின் குடும்பத்தவர்கள் தமது அன்புக்குரியவர்களைச் சென்று பார்வையிடுவதற்கு வேண்டிய நிதியுதவியைப் பெற்றிருந்தார்கள். இதேவேளை, விடுவிக்கப்பட்ட 170 கைதிகளுக்குத் தமது வீடுகளுக்குச் செல்வதற்கான போக்குவரத்துக் கட்டணமும் வழங்கப்பட்டது.

குடும்பங்களை மீள இணைத்தல்

ஐ.சி.ஆர்.சி இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து மோதல்களால் பிரிந்துள்ள குடும்பங்களின் தொடர்புகளைப் பேணுவதிலும் அவர்களை ஒன்றிணைப்பதிலும் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது. இந்த அறிக்கையிடும் காலத்தில் பெற்றுக் கொண்ட 290 குடும்ப செய்திகளில் 220 க்கு மேற்பட்டவற்றை வினியோகித்துள்ளது.

இழப்புக்களின்போது மருத்துவமனைகளுக்கு உதவுதல்

ஜனவரி 16 அன்று மெனராகலை மாவட்டத்தில் ஒக்கம்பிட்டியவுக்கு அண்மையில் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகியதால் 27 பேர் கொல்லப்பட்டும் 70 வரையானோர் காயப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து 200 நோயாளர்கiளுக்குத் தேவையான பன்டேஜ், அயடீன் கரைசல் மற்றும் காயத்திற்கு சிகிச்சை அளிக்க வேண்டிய மருந்துகளை ஐ.சி.ஆர்.சி வழங்கியிருந்தது.

இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் மோதலினால் ஏற்படக்கூடிய மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான மருந்துப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றுடன் தொடர்ந்தும் சுகாதார வசதிகளை ஐ.சி.ஆர்.சி வழங்கி வருகின்றது. வவுனியா, மன்னார் மருத்துவ மனைகளுக்கு மருத்துவ உபகரணங்களையும் எக்ஸ்-றே கதிர் உபகரணத்தையும் வழங்கியுள்ளதுடன், அனுராதபுர மாவட்டத்திலுள்ள சம்பத்நுவர மருத்துமனைக்கும் மட்டக்களப்பு பொது வைத்தியசாலைக்கும் காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் மருந்துப் பொருட்களையும் வழங்கியுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவி

மோதலில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் பணியின் ஒரு கட்டமாக மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த தம்முடைய வீடுகளுக்கு மீளத்திரும்ப முடியாதுள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கும் மீளத்திரும்பியவர்களுக்கும் ஐ.சி.ஆர்.சி தொடர்ந்தும் உதவி வருகின்றது. தங்குமிட, சுகாதர உதவிகள், உணவு, வீட்டுப் பாவைனப் பொருட்கள், நுளம்பு வலைகள், சிறுவர்களுக்கான உபகரணப்பொதிகள் மற்றும் சுகாதாரப் பொதிகளை ஐ.சி.ஆர்.சி வினியோகித்திருந்தது.

2007 டிசம்பர் 20 முதல் 2008 ஜனவரி 31 வரையான இடைப்பட்ட காலத்தில் பின்வரும் பணிகளை ஐ.சி மேற்கொண்டது.

சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் அதிகளவில் வழங்கப்பட்டன:

யாழ் மாவட்டம்: 30க்கு மேற்பட்ட நோயாளர்களுக்கு நடமாடும் வசதிகள் அல்லது செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்டன. இதில் 26 பேர் கால் துண்டிக்கப்பட்டவர்கள். 50 நோயாளிகள், அவர்களின் 40 பராமரிப்பாளர்கள், யாழ் போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த 12 மருத்துவ அதிகாரிகள் ஆகியோர் ஐ.சி.ஆர்.சியினால் விமானம் மூலம் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குக் கூட்டி வரப்பட்டனர். அதேபோன்று 180 ஆய்வுகூட மாதிரிகள், தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள அரசாங்க சுகாதார நிலையங்களுக்கு வாராவாரம் விமானத்தில் கொண்டு செல்லப்படுகின்றன.

வவுனியா மாவட்டம்: வவுனியா வடக்கில் பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் சுகாதர அமைச்சின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஐ.சி.ஆர்.சி தொடர்ந்தும் அனுசரணை வழங்கியது. 250க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டன. 65 தாய்மாருக்கு குழந்தை பிறப்பின் பின்னான பராமரிப்பு வழங்கப்பட்டது.

இடம்பெயர்ந்தவர்களும் மீளத்திரும்பியவர்களும் தொடர்ந்தும் உதவி பெறுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டம்: மீளத்திரும்பிய 8.300 பேருக்கு, 790 சுகாதாரப் பொதிகள், 100 சிறுவர்க்கான பொதிகள், 770 அவசிய வீட்டுப் பாவனைப் பொருட்கள் அடங்கிய பொதிகள், 1000க்கு மேற்பட்ட நுளம்புவலைகள், 600 வரையான விவசாய உபகரணங்கள் மற்றும் 1,310 பிற உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் ஆகியவை வழங்கப்பட்டன.

திருகோணமலை மாவடம்: 920 சுகாதாரப் பொதிகள், 370 சிறுவர்க்கான பொதிகள், 130 அவசிய வீட்டுப் பாவனைப் பொருட்கள் அடங்கிய பொதிகள், 655 தார்பொலின்கள் மற்றும் 1,465 பிற உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் ஆகியவை மீளத்திரும்பிய 15,000 பேருக்கு வழங்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டம்: 65 சமையலறைப் பொருட்கள் அடங்கிய பொதிகள், 60 சுகாதாரப் பொதிகள், 20 சிறுவர்க்கான பொதிகள், 65 தார்பொலின்கள், 85 நுளம்புவலைகள், 65 அவசிய வீட்டு உபகரணங்கள் அடங்கிய பொதிகள் ஆகியவற்றைக் கிட்டத்தட்ட 260 இடம்பெயர்ந்த மக்கள் பெற்றுக் கொண்டனர். மேலும் 70 மீன்பிடி வலைகள் உள்ளடங்கலாக வெளியிணைப்பு இயந்திரங்கள் 380க்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டன.

வவுனியா மாவட்டம்: 110 இடம்பெயர்ந்த மக்களுக்கு 40 தார்பொலின்கள், 15 சுகாதாரப் பொதிகள், 10 சிறுவர்க்கான பொதிகள், 15 அவசிய வீட்டுப் பாவனைப் பொதிகள், 15 சமையலறைப் பொதிகள் ஆகியவை வழங்கப்பட்டன.

யாழ் மாவட்டம்: 7,000க்கு மேற்பட்டோருக்கு விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன.

அனுராதபுர மாவட்டம்: 1060 அவசிய வீட்டுப் பாவனைப் பொதிகள், ஒரு தொகுதி சுகாதாரப் பொதிகள், தார்பொலின்கள் மற்றும் 1200 சமையலறைப் பொதிகள் ஆகியவை வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த 4,400 பேருக்கு வழங்கப்பட்டன.

வதிவிடம் மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்தல்

மட்டக்களப்பு மாவட்டம்: செங்கலடிப் பிரதேசத்தில் உள்ள 690 குடும்பங்களுக்கு தார்பொலின்கள் வழங்கப்பட்டன. கோப்பாவெளி மற்றும் றுகம் கிராமங்களைச் சேர்ந்த 320 மீளத்திரும்பியோருக்கு வதிவிட உபகரணங்கள் ஐ.சி.ஆர்.சி யினால் வழங்கப்பட்டன.

யாழ் மாவட்டம்: கிரு~;ணன் கோவிலில் 16 மலசல கூடங்களும் மூன்று மலக் குழிகளும் நிர்மாணிக்கப்பட்டன அல்லது திருத்தி அமைக்கப்பட்டன. கோப்பாய் பிரிவில் அமைந்துள்ள யோகபுரத்தில் இன்னொரு 12 மலசல கூடங்களும் இரண்டு மலக் குழிகளும் நிர்மாணிக்கப்பட்டன அல்லது திருத்தி அமைக்கப்பட்டன.

திருகோணமலை மாவடம்: சிறிமங்கல்புரவில் 25க்கு மேற்பட்ட கிணறுகளை ஐ.சி.ஆர்.சி சுத்திகரித்திருந்தது. மூதூரிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு 7 மலசல கூடங்கள் அமைக்கப்பட்டன. உப்பூறல் மற்றும் சீனன்வெளி பிரிவில் உள்ள மீளத்திரும்பியோருக்குத் தேவையான வதிவிட உபகரணங்களும் தார்பொலின்களும் வழங்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டம்: முழங்காவில் பிரதேச வைத்தியசாலையில் 5 மலசல கூடங்கள் திருத்தி அமைக்கப்பட்டன. ஆறு கிராமங்களிலும் இரண்டு பாடசாலைகளிலும் 8 கைப்பம்பிகள் ஐ.சி.ஆர்.சி யினால் திருத்தியமைக்கப்பட்டன.

மன்னார் மாவட்டம்: முசலியிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்காகக் கிட்டத்தட்ட 90 தற்காலிக வதிவிடங்கள் 50 கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச மனிதநேயச் சட்டத்திற்கு மதிப்பளிப்பது பற்றி அறிவூட்டல்

சர்வதேச மனிசேயச் சட்டங்கள் மற்றும் ஐ.சி.ஆர்.சி யின் செயற்பணி பற்றிய கருத்தமர்வில் பல்கலைக்கழக மாணவர்கள், அரச சார்பற்ற ஊழியர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் உள்ளடங்கலாக 235க்கு மேற்பட்ட பொது மக்களும் 95 கடற்படை அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.

அனர்த்தத்திற்கு தயார்படுத்தும் தேசிய சங்கத்திற்கு ஆதரவும் உதவியும் வழங்கல்

அனர்த்தத்தை தடயமிடும் பணியில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் முல்லைத்தீவுக் கிளையைச் சேர்ந்த 30 தொண்டர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 12 தொண்டர்களுக்கு கிணறுகளைத் துப்பரவு செய்வதிலும் வதிவிட நிர்மாணத்திலும் பயிற்சி வழங்கப்பட்டன.

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி! :lol::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.