Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சரத் பொன்சேகாவின் புதுடில்லி பயணம்: இந்திய அரசுக்கு பெரியார் திராவிடர் கழகம் கண்டனம்

Featured Replies

சரத் பொன்சேகாவின் புதுடில்லி பயணம்: இந்திய அரசுக்கு பெரியார் திராவிடர் கழகம் கண்டனம்

[வியாழக்கிழமை, 06 மார்ச் 2008, 05:44 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை புதுடில்லிக்கு அழைத்தமைக்கு தமிழகத்தின் பெரியார் திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பெரியார் திராவிடர் கழகத்தின் அதிகார வழி ஏடான புரட்சிப் பெரியார் முழக்கத்தின் இந்த வார வெளியீட்டில் இடம்பெற்றுள்ள தலையங்கம்:

இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா புதுடில்லியில் முகாமிட்டு, இந்தியாவின் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைப் பார்வையிட்டுள்ளார். மத்திய இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, பாதுகாப்புத்துறை செயலாளர், இராணுவ தலைமைத் தளபதி ஆகியோரிடம் முக்கிய ஆலோசனை நடத்திவிட்டு, இந்திய - இலங்கை இராணுவ ஒத்துழைப்பு தொடரும் என்று டெல்லியில் பேட்டியும் அளித்துள்ளார்.

2008 மார்ச் மாதத்துக்குள் ஈழப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று சபதம் போட்டு, ஈழத்தில் வடக்குக் களப் போர் முனையில் - ஒரு அங்குலம் கூட நகரமுடியாத நிலையில் மீண்டும், இந்தியாவுக்கு ஓடிவந்து, கதவுகளைத் தட்டுகிறார் பொன்சேகா.

இந்தியப் பார்ப்பன அரசோ, தமிழர்களின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதிப்பதாகவே தெரிகிறது.

தமிழ்நாட்டு மீனவர்கள் - இலங்கைக் கடற்படையால் கொல்லப்படுவது பற்றிக்கூட - இந்தியப் பார்ப்பன ஆட்சிக்கு கவலை இல்லைப் போலும்!

நிதிநிலை அறிக்கையில், ப. சிதம்பரம், நடப்பு ஆண்டுக்கு, இராணுவத்துக்காக ஒதுக்கிய நிதி ஒரு லட்சத்து அய்யாயிரத்து அறுநூறு கோடி ரூபாய்!

கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்புப் போன்ற மக்களின் அடிப்படைத் திட்டங்களை விட, இராணுவத்துக்குத்தான், இந்தியப் பார்ப்பன ஆட்சி கூடுதல் நிதியை ஒதுக்குகிறது. மக்களின் வரிப்பணத்திலிருந்து பெரும் தொகையை இராணுவத்துக்கு ஒதுக்கி, அந்த இராணுவத்தை, மக்களுக்கு எதிராகவே பயன்படுத்துகிறார்கள். ஜம்மு, காஷ்மீர் மாநில மக்களின் உரிமைகளைப் பறித்து - அங்கே இராணுவ ஆட்சியை நடத்துவதோடு, வட-கிழக்கு மாநில மக்களையும், இந்திய பார்ப்பன வல்லாண்மையின் கீழ் அடக்கி வைக்க, அங்கே இராணுவத்தைக் குவித்து, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.

இந்தியாவில் தேசிய இனங்களின் உரிமைகளை இராணுவத்தால் ஒடுக்குவது போதாதென்று, ஈழத் தமிழர்களின் தேசியப் போராட்டத்தை ஒடுக்கவும், இந்திய இராணுவம் துணைப் போகிறது என்றால், இதை எப்படி சகிக்க முடியும் என்று கேட்கிறோம்.

2006 ஆம் ஆண்டில் உலக நாடுகளின் இராணுவச் செலவு 1204 பில்லியன் டாலர் என்பதனை எடுத்துக் காட்டிய அய்.நா. நிறுவனம், அமைதியை சமாதானத்தை நிலை நாட்டுவதற்கு, இதில் ஒரு சதவீதம்கூட செலவிடப்படவில்லை என்பதை வேதனையுடன் சுட்டிக் காட்டியுள்ளது. "சர்வதேச மனித மேம்பாடு அறிக்கை"யின்படி - இந்தியா, மக்கள் வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிடுவதைவிட 8 மடங்கு கூடுதலாக இராணுவத்துக்கு செலவிடுகிறது.

ஈழத் தமிழர் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு கூடாது என ஒரு பக்கம் கூறிக் கொண்டு இன்னொரு பக்கத்தில் இலங்கை இராணுவத்தை பலப்படுத்திக் கொண்டிருப்பது இரட்டை வேடம் அல்லவா? என்று கேட்கிறோம்.

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் ஊடுருவி விட்டதாகக் கூப்பாடு போடு வோரைக் கேட்கிறோம். இலங்கை இராணுவத்தின் தாக்குதல் நடவடிக்கைகளை இந்தியா, இராணுவ உதவிகளை வழங்கி முடுக்கி விடும் போது, அதனை எதிர்கொள்ள வேண்டிய விடுதலைப் புலிகள் செயல்பாடுகளும் அதிகரிக்கத்தானே செய்யும்? பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் நாடகத்தை இந்தியப் பார்ப்பனிய ஆட்சி அரங்கேற்றுகிறதா?

நாடாளுமன்றத் தேர்தலை விரைவில் சந்திக்கப் போகும் காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களிடம் வாக்குகள் கேட்க வேண்டிய காலம் வரும் என்பதை மறந்துவிட வேண்டாம்!

தமிழர்களின் உணர்வுகளை கிள்ளுக் கீரையாக கருதிடவும் வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

உவர் ஈவோரா நாயக்கர் பகுத்தரிவு எண்டு எங்கடை மணிகளை அரியாமல் விட்டிருந்தால் எல்லா இந்துக்களையும் கூட்டிக் கொண்டு ஸ்ரீராமன் படையெடுத்த மாதிரி படையெடுத்து வந்து எல்லா மோட்டுச் சிங்களவருக்கும் சங்குதியிருப்பார்கள் எமது இந்துக்கள்.

தமிழீழமும் எப்பவே கிடைச்சிருக்கும் வெள்ளையள் வந்து எங்கடை காலை நக்கிக் கொண்டிருந்திருப்பங்கள் இப்ப. என்ன செய்யிறது குடுத்து வைக்கேல்லையாக்கும் அது தான் அவங்களுக்கே கு*டி கழுவிக் கொண்டு இப்பிடி கனவு காண வேண்டியிருக்கு.

நாங்களாவது வஞ்சகமில்லாமல் கனவு காண்கிறம் ஆன உவை கைய்யாலாகத பகுத்தரிவாளிகள் செய்யிறது எல்லம் மிஞ்சி மிஞ்சிப் போன அறிக்கை விடுறது தான் அதுவும் சுய அரசியலுக்காக.

இந்தியாவின் இந்துக்கள் எல்லாரும் வர வேண்டும் எண்டது இல்லை... தமிழக பெரிய இரண்டு திராவிட (பெரியாரின் சீடர்கள்)கட்சிகளின் அங்கத்துவர்கள் மட்டும் வந்தால் போதும்...

ஆறு கோடி பேரிலை ( அறுனூறு லட்சம் பேரிலை) ஒரு லட்சம் பேரின் ஆதரவு நல்லாத்தான் இருக்கு ஆனா மிச்சம் எங்கை ஐநூற்று தொண்ணூற்று ஒம்பது லட்சமும் ( ஐந்து கோடி தொண்ணூத்து ஒன்பது லட்சமும்) பெரியாரை மதிச்சதாயும் காணம் கண்டு கொண்டதாயும் காணம்......??

நாங்கள் எப்பவுமே தோல்வி அடைஞ்ச வளிகளைத்தான் தூக்கி வச்சு இருப்பம்... புதுசா வளி காட்ட பிரபாகரன் எண்ட பெரிலை இருக்கிற ஒருத்தர் வந்து செய்து காட்ட வேணும்...!

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்னே....ஒங்கட பதிலுகள வாசிக்க "புல்" அரிக்கிது வீட்டிலயும் அடிக்கேலாது....... ஒருக்கா வெளியில போட்டு வாரன்.............. :rolleyes:

இனம் சார்ந்து தான் கட்சிகளிட்டை ஆதரவு கேட்டது மதம் சார்ந்து கேட்கவில்லை கேட்டிருந்தால் வெட்டிப் புடுங்கியிருப்பினம். கேட்ட உதவிக்கும் கேக்காமல் கிடைக்கிற உதவிக்கு வித்தியாசம் இருக்கு எண்டு ஒரு வாதம்.

ஆறு கோடி (60 லட்சம்) மக்களில் ஆதரவாக இருப்பது திராவிட உணர்வாளர்கள் பெரியாரின் கொள்கைகளை நம்பும் 1 லட்சம் பேர்தான். ஆனா மிச்ச 5.9கோடியும் பெரியாரையும் திராவிடத்தையும் கண்டு கொள்ளவில்லை என்றும் ஒரு இந்து மதவெறி புளிச்சல் நக்கல்.

இப்புடி 1 லட்சம் பேர் பின்பற்றும் கொள்கை மூலம் ஆதரவு தேட முயற்சிப்பது தோல்வி கண்ட முறை என்று புலம்பல்.

இவற்றில் இருந்து என்னு தெரியுது?

இனம் சார்ந்து கேட்ட ஆதரவிற்கு பதில் தந்தவர்கள் இனம் சார்ந்து இயங்க முற்படும் உணர்வாளர்கள் பொரியார் திராவிட கொள்கைகளை நம்பும் சிறுபான்மையினர்தான். எனவே மதம் சார்ந்து அல்லது சினிமா சார்ந்து உதவி கேட்பது பெரும்பான்மையினரை பதில் தரவைத்து வெற்றி தரும் வழியாக இருக்குமா?

கேட்ட ஆதரவிற்கு இந்தியாவில் "வெறும்" அறிக்கைவிட்டதும் "சுய அரசியலிற்காக" கவனயீர்ப்பு நடத்தியவர்களில் கூட்டங்களில் பங்கு பற்றியவர்களும்; இதுவரை பிரபாகரனை சென்று சந்தித்து உறவுகளை புதுப்பிக்க பலப்படுத்த உதவியவர்களும் திராவிட பெரியார் கொள்கைகளின் படி இயங்குபவர்கள் தான். அப்ப இனி என்;ன பிரபாகரன் காஞ்சி காமகோடி, சயிபாபா, ஆர்எஸ்எஸ் மற்றும் ஆதீனங்கள் சங்கராச்சாரியார்கள் அசின் திரிசா நயாந்தரா என்று சந்திப்புகள் நடத்தி வெறி வழிகாட்டிறதுக்கு தற்பொழுது சிந்திக்கிறாரோ?

இனம் சாந்து ஆதரவு எண்டா சிங்கள ஆரியனுக்கு எதிராகவோ...?? அப்பிடி எண்டா கன்னடத்தான்,, தெலுங்கன் , மராத்தியன் எண்டு எல்லாரும் ஆதரவு குடுக்கினமோ...??

போராட்டம் தமிழனின் விடுதலை... அதுவும் ஈழத்தமிழனுக்கான விடுதலை.. இதிலை தமிழகத்தான் பிரச்சினையை விளங்கி ஆதரவு கிடைச்சாலே பெரிய விசயம்... !

ஆனா ஆதரவு குடுக்க நினைச்சாலும் சிலர் விடாயினம்....

அதில் முக்கியமா, ஏதோ எங்களை மத நம்பிக்கை எதிரிகளாக காட்டி கொண்டு போராட்டம் எதை நேக்கியது எண்டதை குழப்புவதுதான் அடிப்படை நோக்கம்...

இலங்கை பிரச்சினை மதப்பிரச்சினையா , மொழிப்பிரச்சினையா, இல்லை இனப்பிரச்சினையா இதிலை தமிழகத்தான் பலருக்கே குழப்பம் இருக்கு ஆனா நாங்கள் பௌத்தம் மட்டும் இல்லை இஸ்லாம், இந்து மதங்களுக்கும் எதிரி எண்டு காட்டி கொள்ளுறதிலை (புலிகளுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை எண்டாலும் ) நாங்கள் ஆர்வமாகத்தான் இருக்கிறம்...

எங்களுக்கு எங்கட பிரச்சினையை விட மற்ற(வையின்) பிரச்சினைகளிலைதான் ஆர்வம் அதிகம்...

ஆறு கோடி (60 லட்சம்) மக்களில் ஆதரவாக இருப்பது திராவிட உணர்வாளர்கள் பெரியாரின் கொள்கைகளை நம்பும் 1 லட்சம் பேர்தான். ஆனா மிச்ச 5.9கோடியும் பெரியாரையும் திராவிடத்தையும் கண்டு கொள்ளவில்லை என்றும் ஒரு இந்து மதவெறி புளிச்சல் நக்கல்.

:huh::huh::)

என்ன ஒரு ஆழ்ந்த அறிவு. பத்து லட்சம் ஒரு கோடிங்களா.? அதாகப்பட்டது அண்ணை சொல்லுகிறார் 10 லச்சம் = 1 கோடி , நான் பத்து லட்சம் ஒரு மில்லியன் எண்டுதான் கேள்விப்பட்டன். பத்து மில்லியன் 1 கோடி இதுதான் நான் படிச்ச கணக்கு. :wub:

அண்ணை ஜெயலலிதா எண்டு ஒருத்தர், கருணாநிதி எண்ட ஒருத்தர். இப்ப அடிக்கடி சீனுக்கை வருகினமே அவர்கள் பெரியாரின் சீடர்களா இல்லையா.? அவர்கள் திராவிட உணர்வாளர்களாக இருந்தால் இவ்வளவு காலமும் அவைதான் தமிழக ஆட்ச்சியாளர்கள். அவை நினைச்சு இருந்தால் ஈழத்தமிழர் நிலை இது இல்லை.

கலைஞர் கவிதை எழுதுகிறார் எண்டு போட்டு அவரின் இயலாமை அது இது எண்டு குழப்பி கொள்ளாதேங்கோ. அவர் வராலாறில் பழி தன்மீது வராமல் தடுக்கிறார். அவ்வளவுதான்.

திராவிட கட்சிகளின் வாக்கு வங்கி எண்டது தமிழக மக்களின் பெருண்பாண்மை யானது. அவர்களை திராவிட கட்ச்சிகள் என்னும் பெயருக்குள் இருப்பதால் அவர்கள்தான் பெரியாரின் சீடர்கள் எண்டுறீங்களா ? .

திருமா பெரியார் தொண்டன் இல்லை, ரமதாஸ் அவர்களும் பெரியார் தொண்டன் இல்லை. ஏன் நெடுமாறன் அண்ணாவுக்கும் பெரியாருக்கும் தொடர்பு இல்லை(பெரியாருக்கும் காமராஜருக்கும் இருந்த தொடர்பை தவிர).

இதிலை யார்தான் திராவிடர்கள். கீ. வீரமணி அவர்களா? இல்லை கொளத்தூர் மணி அவர்களா ? அவர்கள் இருவரும்தான் இருவேறு திசைகளில் வேறு கட்சிகளில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா..

பெரியாரின் உண்மை தொண்டர்கள் ஏன் பிரிந்து நிக்கிறார்கள் ? பெரியாரை உண்மையில் பின் தொடர்ந்தால் கருத்து வேறு பாடு வருமா ? ஒருவேளை கருத்து வேறுபாடுகளும் பிரிவினையும் தான் பேரியாரின் கொள்கைகளோ என்னவோ ?

மன்னிக்கவும் எனது தவறு தான் 10 லட்சம் 1 மில்லியன், 10 மில்லியன் 1 கோடி.

--

அடிக்கடி சீனுக்கை வரும் அந்த 2 பேரும் தழிழ்நாட்டிலுள்ள 2 பெரும் - முன்னணிக்கட்சிகளின் தலைவர்கள். ஒப்பீட்டளவில் ஜெயலலிதாவை விட கலைஞர் கருணாநிதிக்கு தமிழ் உணர்வு திராவிட உணர்வு அதிகம் இருக்கிறது என்பதை கடந்தா கால நிகழ்வுகளை வைத்து அறிந்து கொள்ளலாம். எல்லோரிற்கும் சுயநலம் இருக்கிறது. இதில் கலைஞரும் விதி விலக்கல்ல.

ஆனால் நாங்கள் ஆதரவு தேவையானவர்கள் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தினோமா என்பது தான் கேள்வி? இல்லை அவர் தன்னில பழிவராமல் இருக்க கவிதை எழுதுறார் இவர் சுயஅரசியலுக்காக கவனயீர்ப்பு கூட்டம் வைக்கிறார் என்று வியாக்கியானம் செய்ததைத் தவிர? கடசியில் இவ்வளவு காலமும் ஆட்சியாளர்களாக இருந்த கருணாநிதியும் ஜெயலலிதாவும் உண்மையான திராவிட உணர்வாளர்களாக இருந்திருந்தால் ஈழத்தமிழர் இப்ப எங்கையோ இருந்திருப்பினம்.

பெரியாரின் கொள்கைகளை விளங்கியவர்கள் தம்மை தொண்டன் சீடன் என்று கூறிக் கொள்ளமாட்டார்கள். பெரியாரும் அந்த நோக்கில் இயங்கவில்லை. அப்படி பார்த்தால் பிறகு பிரபாகரன் சீடன் பிரபாகரன் தொண்டன் என்று பலரை அழைக்க வேணும்.

தமிழீழ மக்கள் இந்து மதத்துக்காக சண்டை பிடிக்க இல்லை... அதாலை இந்துத்துவ தலைவர்களின் ஆதரவை கேட்க்கவும் இல்லை, மதசாயம் பூசி கொள்ள விரும்பவும் இல்லை...

ஆனா தமிழர் தலைமை எண்டு திராவிடர் தலைவர்களுக்கு எல்லாம் ஆதரவு கரம் வேண்டி கேட்டும் சிலரால்தான் கை கொடுக்க கொஞ்சம் மனம் வைத்து இருக்கிறார்கள்... ( நெடுமாறன் அண்ணா காங்கிரஸ், திருமா தாழ்த்த பட்ட தமிழர் தலைவர்)

கேட்டும் கொடுக்காத ஆதரவுக்கும், வேண்டாம் எனும் ஆதரவுக்கும் வித்தியாசம் இருக்குங்கோ...!

இந்தியாவின் இந்துக்கள் எல்லாரும் வர வேண்டும் எண்டது இல்லை... தமிழக பெரிய இரண்டு திராவிட (பெரியாரின் சீடர்கள்)கட்சிகளின் அங்கத்துவர்கள் மட்டும் வந்தால் போதும்...

ஆறு கோடி பேரிலை ( அறுனூறு லட்சம் பேரிலை) ஒரு லட்சம் பேரின் ஆதரவு நல்லாத்தான் இருக்கு ஆனா மிச்சம் எங்கை ஐநூற்று தொண்ணூற்று ஒம்பது லட்சமும் ( ஐந்து கோடி தொண்ணூத்து ஒன்பது லட்சமும்) பெரியாரை மதிச்சதாயும் காணம் கண்டு கொண்டதாயும் காணம்......??

நாங்கள் எப்பவுமே தோல்வி அடைஞ்ச வளிகளைத்தான் தூக்கி வச்சு இருப்பம்... புதுசா வளி காட்ட பிரபாகரன் எண்ட பெரிலை இருக்கிற ஒருத்தர் வந்து செய்து காட்ட வேணும்...!

இனம் சாந்து ஆதரவு எண்டா சிங்கள ஆரியனுக்கு எதிராகவோ...?? அப்பிடி எண்டா கன்னடத்தான்,, தெலுங்கன் , மராத்தியன் எண்டு எல்லாரும் ஆதரவு குடுக்கினமோ...??

போராட்டம் தமிழனின் விடுதலை... அதுவும் ஈழத்தமிழனுக்கான விடுதலை.. இதிலை தமிழகத்தான் பிரச்சினையை விளங்கி ஆதரவு கிடைச்சாலே பெரிய விசயம்... !

ஆனா ஆதரவு குடுக்க நினைச்சாலும் சிலர் விடாயினம்....

அதில் முக்கியமா, ஏதோ எங்களை மத நம்பிக்கை எதிரிகளாக காட்டி கொண்டு போராட்டம் எதை நேக்கியது எண்டதை குழப்புவதுதான் அடிப்படை நோக்கம்...

இலங்கை பிரச்சினை மதப்பிரச்சினையா , மொழிப்பிரச்சினையா, இல்லை இனப்பிரச்சினையா இதிலை தமிழகத்தான் பலருக்கே குழப்பம் இருக்கு ஆனா நாங்கள் பௌத்தம் மட்டும் இல்லை இஸ்லாம், இந்து மதங்களுக்கும் எதிரி எண்டு காட்டி கொள்ளுறதிலை (புலிகளுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை எண்டாலும் ) நாங்கள் ஆர்வமாகத்தான் இருக்கிறம்...

எங்களுக்கு எங்கட பிரச்சினையை விட மற்ற(வையின்) பிரச்சினைகளிலைதான் ஆர்வம் அதிகம்...

பெரியாரின் வளியில் பார்த்தால் இண்று ஈழத்தவன் சண்டை பிடிப்பது தீய செயல்...! . வாழ்க்கை வாழ்வதுக்கே... உயர்வு தாள்வு இல்லாத இனம், அதை மட்டுமே பிடியாக வைத்து இருந்தவர் பெரியார்.. கலாச்சாரம் ( முக்கியமாக உடை , உணவு பழக்க வழக்கங்களை எதிர்த்தவர், இலகுவானா வளியியில் வாழச்சொன்னவர்) தமிழ் தேசியத்தை அண்ணா துரை அவர்கள் முழங்கியபோது அதை கடுமையாக எதிர்த்தவர் பெரியார்... இந்திக்காறனுக்கு அடிமையாக இருந்தாலும் பறவாய் இல்லை எல்லாரும் இந்திக்காறனாய் மாறி இந்தியனாக வாழ வேணும் எண்டு விரும்பியவர்...

அப்படியான பெரியாரின் கொள்கையின் கீழ் தமிழீழம் எனும் நாடும், தமிழ் தேசிய இனமும் என்பது கேலி கூத்தானது....

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி சீனுக்கை வரும் அந்த 2 பேரும் தழிழ்நாட்டிலுள்ள 2 பெரும் - முன்னணிக்கட்சிகளின் தலைவர்கள். ஒப்பீட்டளவில் ஜெயலலிதாவை விட கலைஞர் கருணாநிதிக்கு தமிழ் உணர்வு திராவிட உணர்வு அதிகம் இருக்கிறது என்பதை கடந்தா கால நிகழ்வுகளை வைத்து அறிந்து கொள்ளலாம். எல்லோரிற்கும் சுயநலம் இருக்கிறது. இதில் கலைஞரும் விதி விலக்கல்ல.

ஆனால் நாங்கள் ஆதரவு தேவையானவர்கள் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தினோமா என்பது தான் கேள்வி? இல்லை அவர் தன்னில பழிவராமல் இருக்க கவிதை எழுதுறார் இவர் சுயஅரசியலுக்காக கவனயீர்ப்பு கூட்டம் வைக்கிறார் என்று வியாக்கியானம் செய்ததைத் தவிர? கடசியில் இவ்வளவு காலமும் ஆட்சியாளர்களாக இருந்த கருணாநிதியும் ஜெயலலிதாவும் உண்மையான திராவிட உணர்வாளர்களாக இருந்திருந்தால் ஈழத்தமிழர் இப்ப எங்கையோ இருந்திருப்பினம்.

அப்படியென்றால் பேச்சுக்குப் பிராமணிகளின், இந்துக்களின் சுயநலத்தை ஏன் இவர்கள் பயன்படுத்திக் கொள்ள முன்வரவில்லை. பாஜக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் கதைத்தால் உடனே "அவர்களை நம்பாதையுங்கோ" என்று எல்லாம் ஏன் பாய்ந்தடித்து சிலர் அறிக்கை விடவேண்டும். அவர்கள் இந்திய முழுக்க இருப்பவர்கள். அவர்களுக்கும் வெளிப்படையாகப் புலிகளை ஆதரிப்பது என்பது, கருணாநிதிக்குள்ள சுயநலம் ஏன் இருக்கக் கூடாது.

ஏனென்றால் அங்கே தங்களுடைய உழுத்போன கொள்கைகளைப் பரப்ப இவர்கள் தமிழீழப் போராட்டத்தைப் பயன்படுத்த முனைவது தான்.

திராவிட அமைப்புக்கள் ஒழுங்காக நடந்து கொண்டிருந்தால் இந்துக்கள் நோக்கிக் கையைக் காட்ட உரிமையிருக்கின்றது. ஆனால் தேவையிருந்திருக்காது

இன்றைக்குத் தமிழக அமைப்புக்களால் வாயைத் தவிர, அல்லது கண்ணீர் அஞ்சலி செலுத்துவதைத் தவிர, வேறு வழியில்லை என்றும், சட்டத்திற்கு அமைவாக நடக்க வேண்டியிருக்கின்றது என்றும் யாரும் சொல்ல முனைந்தால், ... அந்த நிலையைத் தமிழகத்திற்கு வருந்தித் தருவித்தது திராவிட அமைப்புக்கள் தான். அவர்களின் வாய் தான்.

நாத்திகம் பேசும் காங்கிரஸ் பிரிகேடியர். தமிழ்செல்வனின் மரணத்தின் போது இனிப்புக் கொடுத்து மகிழ்ந்தது போலக் கேவலம் கெட்ட செயலை எந்த இந்து அமைப்புக்களும் செய்யவில்லையே.

இந்திய அரசு ஏதும் செய்தால் உடனே பார்ப்பானி, இந்து வெறியர்கள் என்று திட்டுகின்றவர்கள், அமெரிக்காவோ, பிறநாடுகளோ, ஏன் சீனாவோ செய்தால் கூட அவர்களை மத, இன அடையாளங்களை வைச்சுச் சாடுவதில்லையே ஏன்.

அப்படியென்றால் பேச்சுக்குப் பிராமணிகளின், இந்துக்களின் சுயநலத்தை ஏன் இவர்கள் பயன்படுத்திக் கொள்ள முன்வரவில்லை. பாஜக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் கதைத்தால் உடனே "அவர்களை நம்பாதையுங்கோ" என்று எல்லாம் ஏன் பாய்ந்தடித்து சிலர் அறிக்கை விடவேண்டும். அவர்கள் இந்திய முழுக்க இருப்பவர்கள். அவர்களுக்கும் வெளிப்படையாகப் புலிகளை ஆதரிப்பது என்பது, கருணாநிதிக்குள்ள சுயநலம் ஏன் இருக்கக் கூடாது.

ஏனென்றால் அங்கே தங்களுடைய உழுத்போன கொள்கைகளைப் பரப்ப இவர்கள் தமிழீழப் போராட்டத்தைப் பயன்படுத்த முனைவது தான்.

பாஜக ஈழத்தமிழருக்கு ஆதரவாக கதைத்தால் அதை நம்ப வேண்டாம் என்று எந்த திராவிட அமைப்பு அறிக்கைவிட்டது?

இன்றைக்குத் தமிழக அமைப்புக்களால் வாயைத் தவிர, அல்லது கண்ணீர் அஞ்சலி செலுத்துவதைத் தவிர, வேறு வழியில்லை என்றும், சட்டத்திற்கு அமைவாக நடக்க வேண்டியிருக்கின்றது என்றும் யாரும் சொல்ல முனைந்தால், ... அந்த நிலையைத் தமிழகத்திற்கு வருந்தித் தருவித்தது திராவிட அமைப்புக்கள் தான். அவர்களின் வாய் தான்.

இதற்கு புலம்பெயர்ந்த தமிழரின் செயற்பாடுகளிற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? அதையும் விடுவம் யாழ்களத்திற்கு வருபவர்களின் செய்ற்பாடுகள் எப்படி இருக்கிறது? இந்துமதத்தை நியாயப்படுத்தவும் "பாதுகாக்கவும்" பந்தியாக பக்கம் பக்கம்மாக எழுதுபவர்கள் மற்ற முயற்சிகளில்?

நாத்திகம் பேசும் காங்கிரஸ் பிரிகேடியர். தமிழ்செல்வனின் மரணத்தின் போது இனிப்புக் கொடுத்து மகிழ்ந்தது போலக் கேவலம் கெட்ட செயலை எந்த இந்து அமைப்புக்களும் செய்யவில்லையே.

காங்கிரஸ் எங்கே நாத்திகம் பேசுகிறது? காங்கிரஸ் எப்போ திராவிடக் கட்சி -அமைப்பு ஆனது?

இந்திய அரசு ஏதும் செய்தால் உடனே பார்ப்பானி, இந்து வெறியர்கள் என்று திட்டுகின்றவர்கள், அமெரிக்காவோ, பிறநாடுகளோ, ஏன் சீனாவோ செய்தால் கூட அவர்களை மத, இன அடையாளங்களை வைச்சுச் சாடுவதில்லையே ஏன்.

ஏன் வெள்ளையளை இனவாதிகள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று திட்டுவது இல்லையோ? அதுவும் அவங்கட நாட்டில வந்து சிங்களவன் (எங்கடை நிறத்தில இருக்கிறவன் மதம் மொழிக்குடும்பம் என்பவற்றால் தூர என்றாலும் ஒரு உறவை ஒப்பீட்டில் கொண்டவன்) அடிக்கிறான் வெட்டிறான் எண்டு அழுது குழறி அசைலம் அடிச்சு வதிவிட உரிமை குடியுரிமை பெற்று அவங்களையே சுறண்டிக் கொண்டு அவங்களையே வெள்ளை இனவெறியன் என்பதில்லையா?

நேர்வேய கூட பச்சை மீன்தின்னிகள் என்று சிறீலங்கா அரசு போல் புலிகள் தான் திட்டவில்லை ஆனால் திட்டாத தமிழர்கள் இருக்கினமோ?

  • கருத்துக்கள உறவுகள்

பாஜக ஈழத்தமிழருக்கு ஆதரவாக கதைத்தால் அதை நம்ப வேண்டாம் என்று எந்த திராவிட அமைப்பு அறிக்கைவிட்டது?

சமீபத்தில் பாஜகவினர் பொருள்பண்டம் சேர்த்தபோது அறிக்கை விட்ட சிலருடைய கருத்துக்களை விரும்பினால் படிக்கவும்.

இதற்கு புலம்பெயர்ந்த தமிழரின் செயற்பாடுகளிற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? அதையும் விடுவம் யாழ்களத்திற்கு வருபவர்களின் செய்ற்பாடுகள் எப்படி இருக்கிறது? இந்துமதத்தை நியாயப்படுத்தவும் "பாதுகாக்கவும்" பந்தியாக பக்கம் பக்கம்மாக எழுதுபவர்கள் மற்ற முயற்சிகளில்?

நிச்சயமாக. போராட்டத்திற்கு சகோதரங்களை, குடும்பத்தை இழந்தவர்கள் எழுதுகின்றார்கள். அதில் இந்து மதத்தைக் காப்பாற்ற முனைவர்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல. அவ்வாறே இந்து மதத்தைச் சாடுவர்கள் தங்களுக்கு என்ன தகுதியளிருக்கின்றது என்பது பற்றிக் கதை்ததாலும் நியாயமாக இருக்கும். யுரியுப்பில் வீடியோ, போடுவதும், மற்றவர்களைத் தரக்குறைவாகத் திட்டுவதையும் தவிர....

காங்கிரஸ் எங்கே நாத்திகம் பேசுகிறது? காங்கிரஸ் எப்போ திராவிடக் கட்சி -அமைப்பு ஆனது?

தன்னை மதச் சார்பற்ற அமைப்பாகவே அது காட்டி வந்ததோடு, எவ்வித இந்து அமைப்புக்களோடும் அது கூட்டணி வைக்காத, அவற்றை எதிர்க்கின்ற அமைப்பாகவே தன்னைக் காட்டி வந்திருக்கின்றது.

ஏன் வெள்ளையளை இனவாதிகள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று திட்டுவது இல்லையோ? அதுவும் அவங்கட நாட்டில வந்து சிங்களவன் (எங்கடை நிறத்தில இருக்கிறவன் மதம் மொழிக்குடும்பம் என்பவற்றால் தூர என்றாலும் ஒரு உறவை ஒப்பீட்டில் கொண்டவன்) அடிக்கிறான் வெட்டிறான் எண்டு அழுது குழறி அசைலம் அடிச்சு வதிவிட உரிமை குடியுரிமை பெற்று அவங்களையே சுறண்டிக் கொண்டு அவங்களையே வெள்ளை இனவெறியன் என்பதில்லையா?

வெள்ளையனைத் திட்டுவது என்பது பற்றி பொதுப்படையாக நான் சொல்லவரவில்லை. ஆ, ஊ என்றால் கம்னூசியக்காரர் அமெரிக்காவைத் திட்டுவது என்பது சகஜம் தானே.

நான் முக்கியப்படுத்திக் கேட்டது மதரீதியான ஒப்பாரிகள் வைக்கப்படுகின்றனவா என்று.

------------------------------------

கருணாநிதியின் சுயநலத்தை ஈழத்தமிழருக்குப் பயன்படுத்துவது அவசியம் என்றால், ஏன் இந்து அமைப்புக்களின் சுயநலத்தைப் பாவித்துக் கொள்ளத் தாங்கள் முன்வரவில்லை என்ற கேள்விக்குப் பதில் தேடுகின்றேன்.

சமீபத்தில் பாஜகவினர் பொருள்பண்டம் சேர்த்தபோது அறிக்கை விட்ட சிலருடைய கருத்துக்களை விரும்பினால் படிக்கவும்.

ஆதாரங்களை தரவும். எல்லோரும் படிக்கலாம். முடிவுகளை வாசகர்களிற்கு விட்டுவிடுவோம்.

நிச்சயமாக. போராட்டத்திற்கு சகோதரங்களை, குடும்பத்தை இழந்தவர்கள் எழுதுகின்றார்கள். அதில் இந்து மதத்தைக் காப்பாற்ற முனைவர்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல. அவ்வாறே இந்து மதத்தைச் சாடுவர்கள் தங்களுக்கு என்ன தகுதியளிருக்கின்றது என்பது பற்றிக் கதை்ததாலும் நியாயமாக இருக்கும். யுரியுப்பில் வீடியோ, போடுவதும், மற்றவர்களைத் தரக்குறைவாகத் திட்டுவதையும் தவிர....

போராட்டத்திற்கு சகோதர சகோதரிகளை குடும்ப அங்கத்தவர்களை இழந்தவர்கள் போராட்டத்திற்கு இந்தளவு பங்களித்தவர்கள் என்பவற்றை நிறுத்து அளந்து வைத்துக் கொண்டு போராட்டத்தின் பெயரால் ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட நலன்களை நம்பிக்கைகளை முன்னெடுக்கலாம் என்பதற்கு இன்னொரு பெயர் கூழல். போராட்டத்திற்கு பங்களித்ததன் பெயரால் ஒவ்வொருவரும் போராட்டத்தை குடும்பச் சொத்தாக்கி அவரவரின் தனிப்பட்ட நம்பிக்கை நலன்களை முன்னெடுக்க வெளிக்கிட்டால் அதற்கு பெயர் தேசிய விடுதலைப் போராட்டம் அல்ல. ஒருவர் போராட்டத்திற்கு இந்தளவு பங்களித்துவிட்டார் அது மற்றவர்களை விட அதிகமானது எனவே அவரது தனிப்பட்ட நம்பிக்கைகளை கட்டிக்காப்பது ஒத்து ஊதுவது தான் போராட்டத்தின் வேலை என்று வெளிக்கிட முடியாது கொள்கைப் பிரகடனம் செய்ய முடியாது. இங்கு யாரும் தமிழ்த் தேசியவிடுதலைப் போராட்டத்தின் கொள்கைகளை வகுக்கும் படியும் அதற்கான தகுதி என்ன என்று கேக்கவில்லை. உங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த பங்களிப்பிற்கான பற்றுச் சீட்டை காட்டுங்கள் நடவடிக்கைகளை பட்டியல் ஈடுங்கள் தாயகத்தில் யார் யாரோடு நின்று படம் எடுத்தனீங்கள் எந்தெந்தப் புள்ளிகள் விருந்தோம்பல் செய்தார்கள் என்றும் கேட்கவில்லை. இங்கு கருத்தாடும் எல்லோருக்கும் பொதுவான யாழ்களத்தில் எப்படியான முயற்சிகளில் விடையங்களில் உங்கள் நேரத்தை இதுவரை செலவிட்டீர்கள் தற்பொழுது செலவிடுகிறீர்கள் ஆவர்வம் காட்டுகிறீர்கள் என்பதன் அடிப்படையில் மாத்திரம் கேட்க்கப்படுகிறது.

தன்னை மதச் சார்பற்ற அமைப்பாகவே அது காட்டி வந்ததோடு, எவ்வித இந்து அமைப்புக்களோடும் அது கூட்டணி வைக்காத, அவற்றை எதிர்க்கின்ற அமைப்பாகவே தன்னைக் காட்டி வந்திருக்கின்றது.

ஆகவே காங்கிரஸ் உம் ஒரு பெரியார் அமைப்பு அல்லது திராவிடக் கட்சி என்று நிறுவலாமோ?

-1- தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்டதற்கு சிற்றுன்டிகள் பகிர்ந்து கொண்டாட்டம் நடத்தியர்களிற்கும்

-2- காங்கிரஸ் தன்னை மதச்சாரப்பு அற்ற அமைப்பாக காட்டிக் கொள்வதற்கும்

-3- திராவிட மற்றும் பெரியார் அமைப்புகளிற்கும்

என்னவென்று சம்பந்தம் வருகிறது ? அதாவது கொண்டாட்டம் நடத்திய காங்கிரஸ்காரர்கள் எப்படி திடீர் என்று பெரியார் திராவிட அமைப்பின் வடிவமானவர்கள்? இந்து மதவெறி சிந்தனைக்கும் பிரச்சாரத்திற்கும் வசதியாக இருப்பதைத் தவிர?

வெள்ளையனைத் திட்டுவது என்பது பற்றி பொதுப்படையாக நான் சொல்லவரவில்லை. ஆ, ஊ என்றால் கம்னூசியக்காரர் அமெரிக்காவைத் திட்டுவது என்பது சகஜம் தானே.

நான் முக்கியப்படுத்திக் கேட்டது மதரீதியான ஒப்பாரிகள் வைக்கப்படுகின்றனவா என்று.

ஈழவிடுதலைப் போராட்டம் சார்பாக மேற்குலகம் கொண்டுள்ள நிலைப்பாட்டை மதரீதியாக பார்க்க வேண்டிய தேவை என்ன? அதற்கான ஆதாரங்கள் என்ன? மேற்குலகத்தின் நிலைப்பாட்டிற்கு மதரீதியாக காரணம் இல்லை என்பதற்காக இந்தியாவின் ஆழும்வர்க்கம் நோக்கி வைக்க காரணம் இல்லை என்று பொதுப்படையாக முடிவுகட்ட முடியாதே? எமது வரலாற்று அனுபவங்கள் ஆதாரங்கள் என்ன சொல்கிறது என்பதன் அடிப்படையில் தான் ஒன்றைக் கூற முடியும் நியாயப்படுத்த முடியும். அதன் படிதான் இந்தியாவின் ஆழும்வர்க்கம் எமது போராட்டம் நோக்கி காட்டும் எதிர்ப்புகளிற்கு விமர்சனம் விளக்கங்கள் இந்து மதம் சார்ந்து வருகிறது. இந்தியாவில் எமது போராட்டத்தை மூர்க்கமாக எதிர்த்தவர்கள் இன்று எதிர்ப்பவர்களில் அறுதிப் பெரும்பான்மையானவர்கள் என்ன பின்னணியைக் கொண்டிருக்கிறார்கள் அவர்களது எதிர்ப்பிற்கான காரணங்கள் என்ன அவர்கள் மத்தியில் உள்ள ஒற்றுமை என்ன என்பதற்கு இந்து மதம் காரணம் இல்லை என்றால் அதை என்னவென்று சொல்லாமே?

கருணாநிதியின் சுயநலத்தை ஈழத்தமிழருக்குப் பயன்படுத்துவது அவசியம் என்றால், ஏன் இந்து அமைப்புக்களின் சுயநலத்தைப் பாவித்துக் கொள்ளத் தாங்கள் முன்வரவில்லை என்ற கேள்விக்குப் பதில் தேடுகின்றேன்.

தாராளாமா! எவ்வாறு திராவிட மற்றும் பெரியார் கட்சிகள் தமது "உழுத்துப் போன" கொள்கைகளை பரப்பும் முயற்சிகளும் கருணாநிதியின் சுயநலன் ஈழத்தமிழருக்கு உதவுவது போல தெரியுதோ (குறைந்தபட்சம் அப்படி ஒரு தோற்பாடு ஆகுதல் இருக்கு என்று வைத்துக் கொள்வோம்) இந்து அமைப்புகளின் சுயநலனை பாவித்து ஈழத்தமிழரின் நலன்களை காப்பாற்ற முயற்சிக்க உங்களைப் போன்ற இந்து ஈழத்தமிழ் உணர்வாளர்கள் முன்வர வேண்டும்.

அவ்வாறு முயற்சிப்பதை விட

-1- கருணாநிதியை சுயநலவாதி என்பது,

-2- வைகோ என்ன ஜெயலலிதாவிற்கு விளக்கு பிடிக்கிறாரோ என்பது

-3- பெரியார் மற்றும் திராவிடக் கட்சிகள் என்று ஒருவரும் குளறுபடி பண்ணாவிட்டால்....

-4- நீங்கள் என்ன யூரியூப்பில் வீடியோ போடுவதும் கருத்துப்படம் போடுவதும் பெரிய விசையமோ...

என்பவை எல்லாம் இலகு.

இந்து மதத்தில் நம்பிக்கையும் மரியாதையும் உள்ளவர்கள் அதனால் ஒன்றிணையும் இந்து அமைப்புகளை ஈழத்தமிழர் நலனிற்காக இயக்க முயற்சியுங்கள். ஒப்பீட்டளவில் திராவிடம் பெரியார்கொள்கைகளால் ஒன்றிணைபவர்கள் குறைந்த பட்சம் அதையாகுதல் செய்கிறார்கள் தற்பொழுது. ஆனந்தசங்கரி போல் பிரபாகரன் துப்பாக்கியை தூக்காவிட்டால் இப்ப எங்களுக்கு தமிழீழம் கிடைத்திருக்கும் என்பது போல் பெரியாரும் திராவிட அமைப்புகளும் இல்லாவிட்டால் வெட்டி விழுத்தியிருப்பம் எண்டு வெறுவாய் சப்பி விபச்சாரம் செய்வதை நிறுத்துங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.