Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளை எதிர்த்து ஒரு சினிமா!

Featured Replies

காட்சி : 1

வகுப்பில் பாடம் எடுத்துகொண்டிருக்கிறார் ஆசிரியர். மாணவர்கள் அதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறன்றார். திடீரென துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சில நபர்கள் வகுப்பறைக்குள் ஆவேசமாக நுழைகின்றனர். அதே வேகத்தில் அங்கிருந்த மாணவர்களை இழுத்துக்கொண்டு வெளியேறுகிறார்கள். பதறிய ஆசிரியர் அவர்களைத் தடுக்க முயல, தாக்கப்படுகிறார். சாய்ந்து விழுகிறார்.

காட்சி 2

வாகனம் ஒன்றில் வலுக்கட்டாயமாகத் திணிக்கபடுகிறான் ஒரு சிறுவன் ஆழுதபடியே அதில் அமர்கிறான் புழுதியைக் கிளப்பியபடி வாகனம் புறப்படுகிறது மின்னல் வேகத்தில் புறப்பட்ட வாகனம் ஒரு காட்டுப் பகுதியை நோக்கி விரைகிறது.

காட்சி 3:

அதிகாலை நேரம் சிறுவர்களுக்கு ஆயுதப்பயிற்சி நடந்து கொண்டிருக்கிறது. நடுநாயமகாக அமர்ந்திருக்கும் சிறுவன் தூக்கத்தைக் கட்டுபட்படுத்த முடியாமல் அமர்ந்தபடியே சாய்கிறான். சட்டென விழித்துக் கொண்டு பயிற்சியில் மூழ்குகிறான்.

காட்சி 4 :

சிறுவன் ஒருவன் மீது வெந்நீரைக் கொட்டி அடித்து மிரட்டுகின்றனர். தூங்கியும் அரைத்தூக்கத்திலும் பயிற்சியில் ஈடுபடுகிறான். கொஞ்சமும் விருப்பமில்லாமல் அழுதபடியே துப்பாக்கி சுடுவதற்குக் கற்றுக் கொள்கின்றான். கண்ணை மூடியபடியே இலக்கை நோக்கி சுட்டும் காட்டுகிறான்.

காட்சி 5

ஒரு பெண்ணை தற்கொலைப்படைக்குத் தயார் படுத்துகிறார், ஒர் இளைஞர். கொஞ்சமும் விருப்பமில்லாமல் விம்மி வெடித்து அழுதபடியயே தற்கொலைப்படை வீரங்கனைக்கான ஆடையை அணிந்து கொள்கிறார் அந்தப் பெண்.

மேலே இருக்கும் காட்சிகள் எல்லாம் சிங்கள மொழித் திரைப்படம் ஒன்றில் இடம் பெறும் காட்சிகளே. படம் இன்னும் தியோட்ர்களில் திரையிடப்படவில்லை. முழுக்க முழுக்கத் தீவிரவாத செயல்களைப் பற்றியே எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை நன்றாகப் பார்த்துவிட்டு, 'வெளியிடலாம் தாராளமாக' என்று இலங்கை சென்சார் போர்டு அனுமதிச் சான்றிதழ் வழங்கியிருக்கிறது.

அது எப்படி தீவிரவாதத்தைக் காண்பிக்கும் படத்துக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கலாம்?

இங்குதான் சூட்சுமம் ஒளிந்திருக்கிறது ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக நீடித்துவரும் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி இதுவரை ஆறு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அத்தனையும் விடுதலைப் புலிகளின் ஆதரவோடு அல்லது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வெளியானவை.

ஆனால், மேலே இருக்கும் படம் முழுக்க முழுக்க இலங்கை அரசின் பார்வையில் இருந்து எடுக்கபட்ட படம். ஆகவே, சென்சர் போர்ட்டு தாம்பூலத்தட்டில் வைத்து அனுமதிச் சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் பெயர் 'பிரபாகரன்'.

'நம்முடைய அன்னை பூமியில்?? தொலைந்து போன அமைதியை மீட்டெடுக்க எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் தொடர்ந்து யுத்த பூமியாகவே நீடிக்கறது. உயிர்ப்பலிகள் தொடர்கதையாக இருக்கின்றன. இந்த தொடர் சோகத்ததுக்கு யாரை குற்றம் செர்ல்வது? நிச்சயமாக சிங்கள மக்களோ அல்லது தமிழ் மக்களோ அல்ல. அவர்கள் இருவருமே நடுவில் சிக்கிக் கொண்டு தவிப்பவர்கள். என்ற அறிமுக உரையோடு இந்தப் படம் தொடங்குகிறது.

கதை? அதுவும் புலிகளிடம் இருந்தே தொடங்குகிறது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆர்வத்தின் காரணமாக இணைந்து தற்கொலைப்படை வீரனாக வளர்ந்த ஒருவன், எப்படி அந்த அமைப்பின் பிடியிலிருந்து விலகி வெளியே வருகிறான்? அதற்காக அவனைத் தூண்டியவை எவை? என்பதை அடிப்படையாக வைத்துக் கொண்டு நகர்கிறது கதை. இலங்கையின் குடியிருப்புப் பகுதிகள், வன்னி, வவுனியாப போன்ற காட்டுப் பகுதிகள்தான் கதைக்களம்.

பெரும்பாலும் இலங்கைச் சூழலிலேயே எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் இடம் பெறும் ஒவ்வோரு காட்சியும் புலிகளின் முகத்தைக் கோரமாக வெளிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக யுத்தக் காட்சிகளில் நிஜமான போர்க்கருவிகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. உபயம்: இலங்கை இராணுவம்.

நான் ரோமில படித்துக் கொண்டிருந்த போதும் சரி, இலங்கையிலும் சரி நிறைய விடுதலைப்புலிகளைச் சந்தித்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். பழகியிருக்கிறேன். அவர்கள் எல்லோரும் கீழ்மட்டத்தில் இருப்பவர்கள். அவர்கள் யாருமே யுத்தத்தை விரும்பவில்லை'. என்கிறார் துஷாரா பெயரிஸ் என்ற சிங்கள இளைஞர். இவர்தான் படத்தின் இயக்குநர். ரோம் நகரில் இருக்கும் 'சினி சிதே' திரைப்படக் கல்லூரியல் படித்த இவருடைய முதல் படமே 'பிரபாகரன்' தான்.

ஜனநாயக அரசு ஒன்றின் பார்வையில் இருந்து தீவிரவாதத்தைப் பார்க்கும் வகையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. ஆனால் கண்டிப்பாக அரசியல் பேசாது. என்று கூறும் துஷாரா, நான் படித்த பாடம் இலங்கை அரசு கொடுத்த இலவசக் கல்விதான். ஆகவே நான் ஒருபோதும் அரசுக்கு எதிராக நடந்துகொள்ளமாட்டேன்' என்று பேசி உள்ளே ஒளிந்திருக்கும் பூனைக்குட்டியை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

இவரை விட ஒரு படி மேலே போய் பேசுகிறார் 'பிரபாகரன்' தயாரிப்பாளர் ஓஸ்மன் டி சில்வா இவரும் சிஙகளவனே. 'இலங்கை இராணுவ அமைச்சகம் மற்றும் ராணுவத்தின் அபரிதமான உதவியுடன் படப்பிடிப்பு நல்லவிதமாக முடிந்துவிட்டது எங்களுடைய நோக்கம் புலிகளின் கொடூர குணத்தையும் குழந்தை வீரர்களைப் பயன்படுத்தும் விதத்தையும் உலகுக்கு அம்பலப்படுத்துவது தான்'. என்கிறார் சில்வா. படத்துக்கான மொத்த செலவு ரூபாய் மூன்று கோடி.

இந்தத் திரைப்படம் பற்றிய குறிப்புகளுக்காகவும் டிரைலருக்காகவும் தனியே இணையதளம் ஒன்றை வடிவமைத்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்ட விதத்தை சிடியில் பதிவு செய்து விற்பனை செய்யபடுகிறது. விலை நுாறு யூரோக்கள்.

அரசியல் விஷயங்களைப் பற்றி படத்தில் பேசப் போவதில்லை. ஆனால் பெயர் மட்டும் பிரபாகரன். இலங்கை ராணுவத்தின் உதவியோடு படப்பிடிப்பு நடத்தபட்டது என்ற தாயாரிப்பாளரின் கருத்தும், இயக்கநரின் தாய் நாட்டுப் பற்றும் நிச்சயமாக படத்தின் மீதான நம்பகத்தன்மையை சந்தேகத்துக்குரியதாக்கியுள

Edited by Janarthanan

ஓ இவ்வளவு விசயம் இருக்கிதோ? பிரபாகரன் எண்டு யாழில வண்ணத்திரை பகுதியில ஏதோ ஒட்டி இருந்தார்கள். நானும் ஏதோ சும்மா பொழுதுபோக்கு தமிழ்படம் எண்டு நினைச்சு அந்த செய்திகளை பார்க்க இல்லை.

மிகவும் திட்டமிட்டு பிரச்சாரம் செய்யுறீனம் போல இருக்கிது.

எது எப்படி இருந்தாலும் ஏப்பில் மாதத்தில் வெளியாக இருக்கும் இந்தப் படம், நிச்சயம் இலங்கையில் பதற்றத்தை பற்ற வைப்பதோடு உலகம் முழுக்க ஓர் அதிர்வினை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இருக்கும் என்பதை இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் வார்ததைகள் பட்டவர்ததனமாகச் சொல்கின்றன.

இத வாசிக்க சிரிக்கிறதா அழுவுறதா எண்டு தெரிய இல்லை. இலங்கையில பதற்றத்த பற்ற வைக்கப்போகிதாம். உலகம் முழுக்க அதிர்வினை ஏற்படுத்தப்போகிதாம். :lol: இயக்குனரும், தயாரிப்பாளரும் உடனடியாக அங்கோடைக்கு போய் மனநிலையை ஒருக்கால் செக் பண்ணிக்கொள்ளுறது நல்லது. :lol::lol::D

கடைசியில குமுதத்திண்ட உள்நோக்கமும் என்ன எண்டு விளங்கிது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளை ராணுவத்தில சேர்க்கிறதாக இருந்தா ஒரு நூறு இரு நூறு பேரை அவையின்ர தாய்தகப்பன்களுடைய விருப்பத்துக்கு மாறாகச் சேர்க்கலாம். ஒரு முழுப்படையையும் அப்பிடிச் சேர்க்க ஏலாது. எதிர்ப்புரட்சி கிளம்பி போராட்டமே ஆட்டம் காணத் தொடங்கிரும். ஈழ விடுதலைப் போராட்டம் அப்படிப்பட்டதல்ல. அதுக்கு வேறு பரிமாணங்கள் இருக்குது. புலம்பெயர்ந்த மக்களும் ஈழம் வாழ் மக்களும் அதுக்குக் குடுக்கிற நேரடி முறைமுக ஆதரவுகள் எல்லாத்தையும் உலகம் நல்லா அறியும். உவன் சினிமா எடுத்து உலகத்தை மடையராக்க ஏலாது. தன்னைத்தானே காட்டிக் குடுக்கத்தான் உந்த வேலை பார்க்கிறான். நமக்கென்ன மூண்டு கோடி ரூபாயில இலவசமா ஈழ ஆரவுப் பிரச்சாரத்தை எதிரியே நடத்திறான் நடத்தட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோசமான கருத்துப் பிம்பம் படைக்கும் நஞ்சு எண்ணம் இதனுள் இருப்பது தெளிவாகிவிட்டது- அம்பலமாகியும் இருக்கிறது.

இப்போது இதன் பின்னணியில் இருக்கும் மூளை எங்கு உள்ளதென்பதும். இதை யாருக்காகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதும், இதன் வெளியிடுதலுக்கான இந்தக் காலகட்டத்தின் முக்கியத்துவம் என்ன என்பதையும் கண்டறிவதே நாம் செய்ய வேண்டியது.

உலகத்தமிழினத்தின் தலைவராக மதிக்கப்படும் தலைவரின் பெயரிலான சிங்களச் சினிமாவான இத்தயாரிப்பு பற்றி (தமிழ்நாட்டுக்கு வெளியே தயாரிக்கப்பட்ட சினிமா) தமிழ்நாட்டில் இப்படியாக பரபரப்புடன் வெளியிடப்பட முயற்சிப்பது ஏன்?

தமிழக மக்களின் மனதில் பிம்பக் கட்டமைப்பை ஏற்படுத்துவதில் கடந்த பல தசாப்தங்களாக வெற்றிகண்டு மயக்கத்தில் கிறங்கடத்தது சினிமா என்றால் மிகையில்லை.

இன்று ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் முயற்சியில் பேரினவாத சிங்களதுடன் கைகோர்தத்தவாறு செயற்படுகிறது.

இதைத் தோலுரித்து அம்பலப்படுத்தவேண்டியது ஊடகங்களின் கடமை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.