Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நுரையீரல் புற்றுநோய் - anatomy & Risk factors

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நுரையீரல் புற்றுநோய் - anatomy & Risk factors

புற்றுநோய் வகைகளை அறிந்து கொள்ளும் முன் நுரையீரலின் அனாடமி எப்படி செயல் படுகிறது போன்றவை பற்றி அறிதல் முக்கியம்.

நுரையீரல் உடலுக்கு சக்தியை தரும் ஆக்சிஜனை எடுத்துக்கொள்வதிலும் கரியமிலவாயுவை வெளியேற்றுவதிலும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது.ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடும் நாம், கிட்டதட்ட 9000 cubic feet காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம்.

மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று, காற்று குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. காற்றுக்குழாய் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரலுக்கு செல்கிறது. வலது நுரையீரல் மூன்று பாகமாகவும் (lobes)இடது நுரையீரல் இரண்டு பிரிவாகவும் உள்ளது. இரண்டாக பிரியும் பிரான்கியல் குழாய்கள் பல நுண் கிளைகளாக பிரிந்து அல்வியோல் எனப்படும் காற்றுப்பைகளில் முடியும். கீழ்க்கண்ட படத்தில் இருப்பது போல பல நுண்ணுயிர்க்குழாய்களாக பிரிந்து இருக்கும்.

lungscastsb9815gask1.th.jpg

அல்வியோலை எனப்படும் காற்றுப்பைகள் மிக மென்மையான தசைகளை கொண்டது. இதில் பல நுண்ணிய இரத்தக்குழாய்கள் இருப்பதால், நுரையீரல் தமனி மூலமாக வந்த கரியமிலவாயு நிறைந்த இரத்தத்தில் உள்ள கரியமிலவாயு வெளியேறி, ஆக்சிஜனை ஏற்றுக்கொண்டு, நுரையீரல் சிறைகள் மூலமாக இதயத்திற்கு செல்கிறது.

ஆல்வியோலை சுருங்கி விரிதலையும் சில நோய்களால் நுரையீரல் பாதிக்கப்படும் போது எப்படி சுருங்கி விரியும் என்பதை கீழ்க்காணும் படம் சொல்கிறது.

lungcomparisonig7.th.png

பொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற திரவம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். காற்றுக்குழாயில் உள்ள சீலியா மேல் நோக்கி தூசுகளை கொண்ட மியுக்கஸை வெளியேற்ற, நாம் அறியாமலே அவற்றை விழுங்கிவிடுகிறோம். உடல் நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கிலேயே உள்ள ரோமம் கூட தூசுகளை வடிகட்டும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள் நுழைந்தால் இருமல், தும்முதல் ஆகியவை நீக்குதலிலும் ஈடுபடும்.

புற்றுநோய்க்கான புற காரணிகள்:External Risk Factors காற்றில் உள்ள மாசு, இயந்திரங்கள் வெளியேற்றும் புகை, சிகரெட் புகை ஆகியவை ஆச்பெச்டாஸ் போன்றவை நுரையீரல் புற்றுநோய் வர முக்கிய காரணிகளாக இருக்கின்றன. சில வீடுகளில் புகை நிறைந்த எரிபொருள் சமைக்க பயன்படுத்துவது காற்றினை மாசுபடுத்துகிறது. குளிர்காலத்தில் இது போன்ற புகை வீட்டிற்குள்ளேயே சுற்றுவதால் குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கிறது.

எனக்கு நினைவுதெரிந்த வரையில் என் வீட்டிலேயே பலவகை எரிபொருட்களை பயன் படுத்தி இருக்கிறோம். காகிதம், மரத்தூள், விறகு, வரட்டி பின் கெரோசின் என்று பல பொருட்களை பயன் படுத்தி இருக்கிறோம். இன்னும் சில பெண்கள் புகையை ஊதுகுழலை வைத்து ஊதி கண்சிவக்க இருமுவதையும், புகையை உள்ளிழுப்பதையும் காணலாம்.

இதற்கு அடுத்த படியாக கட்டிடங்கள் கட்டிய பின் வரும் தூசிகள், ஆஸ்பெஸ்டாஸ் கூரை துணுக்குகள் என்று பலவும் உடல் நலத்தை பாதிக்கிறது.

வீடுகளில் உள்ள காற்றில் கலந்திருக்கும் பொருட்களில் கார்பன் டை ஆக்ஸைடு, பார்மால்டிஹைட், நைட்ரஜன் பெராக்சைடு, கார்பன் மோனோ ஆக்சைடு, ரேடான் எனப்படும் ரேடியோ கதிர்வீச்சு, பாசி, இன்னும் நுண்ணுயிர் கிருமிகளின் முட்டைகள் என்பன சில முக்கியமானவை ஆகும்.

ஒருவர் புகை பிடிக்கும் போது அதிலிருந்தும், புகப்பவரின் சுவாச காற்றிலும் இருந்த்து வெளிப்படும் புகை second hand smoke என்று அழைக்க படுகிறது. இதன் விளைவால் வருடத்திற்கு 150, 000 குழந்தைகள் முற்றிய நுரையீரல் நோயால் பாதிக்கப் படுவதோடு ஆண்டொன்றுக்கு 3000 குழந்தைகள் இறக்கிறார்கள். உலகளைவில் இது இன்னமும் அதிர்ச்சியூட்டும் எண்களைத்தரலாம்.

புகைபிடிப்பவரின் அருகில் இருப்போருக்கு கண் எரிச்சலும், இருமலும் ஏற்படுகிறது. இவர்களையும் மருத்துவ உலகு passive smokers என்றே அழைக்கிறது. சிகரெட் புகையில் 4000 விதமான புற்று நோய், மற்றும் வெகு துன்பம் தரக் கூடிய உடல் நலனுக்கு பாதகம் விளைவிக்கை கூடிய வேதி பொருட்கள் கலந்திருக்கின்றன. அடிக்கடி காது வலி, ஆஸ்த்மா என ப்படும் மூச்சிழுப்பு, பொதுவான அலர்ஜி,இருமல், நுரையீரல் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகிறது.

கருவுற்ற பெண்மணியின் அருகில் புகை பிடிப்பதால், வருடத்திற்கு அமெரிக்காவில் 18, 600 குழந்தைகள் குறைபாட்டுடன் பிறக்கின்றன. 300000 குழந்தைகளுக்கு இருமலும், bronchitis உம் வருகின்றது. 1.6 மில்லியன் குழந்தைகள் காதில் கிருமிகள் வளர்வதால், காது வலியும் சீழும் ஏற்படுவதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. வெளியே பால்கனியில் புகை பிடித்தாலும், கார் கராஜில் பிடித்தாலும் உள்ளே வந்த 5 மணித்துளிகளில் புகைப்பவரின் சுவாசத்திலிருந்து இந்த வேதி பொருட்கள் வெளிப்படுகிண்றன. இப்போதெல்லாம் இங்கு குழந்தைகள் காப்பகத்தில் புகைப்பது குற்றம். சட்டப்படி அது தடை செய்ய பட்டு விட்டது. இதை விட காரில் நெடுந்தூரம் பயணிப்பவர்கள் புகைக்கும் போது பின் இருக்கையில் உள்ள குழந்தை அந்த காற்றை சுவாசிக்க நேருகிறது.

இதை தடுக்க காரில், வீட்டில் புகைக்காதீர்கள். புகைப்பதை நிறுத்துவது மிகவும் நல்லது. முடியாதவர்கள் குறைந்த அளவில் குழந்தைகளின் நலனை கருத்தில் கொள்ளுவது சிறந்தது. புகைப்பவர் அருகில் குழந்தைகளை இருக்க விடாதீர்கள்.

புற்றுநோய்க்கான சில அக காரணிகள் (internal risk Factors): 1. நுரையீரலில் உள்ள அல்வியோலையை சுருங்கி விரிய செய்ய உதவும் எலாச்டின் எனப்படும் பொருள் குறைவு

2.அதன் பசைத்தன்மையை குறையாமல் வைத்திருக்கும் ஈச்ட்ரோஜனின் ரிசப்டார் அளவு குறைதல்

3.தோல் வளர்ச்சி புரதம் (Epidermal growth factor)ளவில் மாற்றம்

4.மரபணுவால் புற்றுநோய்க்கான susceptibility இருத்தல் ஆகியவை ஆகும்.

http://reallogic.org/thenthuli/?p=259

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.