Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைவு தெரிந்த நாளிலிருந்து..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டப் என்ற சத்தத்தில் கிணற்றிற்குள்ளிருந்து கேட்குமாப்போல் ஒரு சத்தம் அம்மாவிற்கும் அம்மம்மாவிற்கும் கேட்டிருக்கக் கூடும். எந்தவித அதிர்வினையும் பய உணர்ச்சியினையும் தராத அச்சத்தம் குறித்து அவர்கள் ஒரு சில நிமிசத்துளிகள் அசட்டையீனமாக இருந்திருக்கலாம். அல்லது அவ்வாறெதுவும் கேட்காத அளவில் நித்திரையிலும் இருந்திருக்கலாம்.

ஆனால் தொடர்ந்தெழுந்த மிரட்டும் இரைச்சலும் இரைச்சலின் ஆர்முடுகலும் அவர்களை அல்லோலகல்லோலப்படுத்தத் தொடங்கியிருந்தது. ´´நாசமறுவார் ஏதோ புதுசா அடிக்கத்தொடங்கிட்டாங்கள்´´ அம்மம்மா தலைமாட்டிலிருந்த விளக்கைக் கொழுத்திச் சத்தம் போடத்தொடங்கினா. ´´மருமோள் எழும்பு.. பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு வெளியில வா.. செல்லுகள் அடிக்கிறான் ..´´ சொல்லிக்கொண்டிருக்கும் போதே தலைக்கு மேல் வெடித்தது. அம்மம்மா தொபுக்கென கீழே விழுந்து படுத்தா - ஸ்டீரியோ சிஸ்டத்தில் சத்தம் இடம் மாறுவது போல வெடித்தலின் பின்பும் அவர்களைக் கடந்து இரைச்சல் அமர்முடுகிச்சென்று அடுத்த கணங்களில் நிலம் அதிரச் செய்தது. ´´கடவுளே கிட்ட எங்கேயோ தான் விழுந்து போட்டுது. மருமோள் கெதியில வா பிள்ளை´´

அம்மா இன்னும் வந்த பாடில்லை - நித்திரை கொள்ளும் பிள்ளைகளை எழுப்புவதற்குச் சிரமமாயிருந்திருக்க வேண்டும் அவவுக்கு. மகளை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டா. மற்றவன் சுருண்டு படுத்திருந்தான்.

மீண்டும் டப் என்ற அமுக்கச்சத்தம் - காற்றைக் கிழிக்கும் கூவல் சத்தம் - மகளோடு முற்றத்தின் மாமரத்திற்கு கீழ் ஓடிவந்து மகளை நிலத்தில் வளர்த்தி இரு கைகளாலும் அவளை அணைத்து முழுவதுமாய் தனக்குள் மறைத்த படி கீழே கிடந்து முருகா முருகா என்றா அம்மா. காதுகளை கிழித்துத் தலைக்கு மேல் வெடித்து அவர்களைத் தாண்டிச்சென்றது இரண்டாவது செல். இன்னும் கொஞ்ச நேரத்தில் அது விழும்.

´´மருமோள் தம்பி எங்கை´´ அம்மம்மா நடுங்கும் குரலில் கேட்டவ பதிலை எதிர்பாராமல் உட்சென்று படுத்துக் கிடந்தவனை பாயோடு சுருட்டி தரதரவென்று இழுத்துவந்து முற்றத்தில் போட்டா. ´´மருமோள் தலைக்கு மேலை வெடிச்சு வெடிச்சுப் போகுது. என்ன கோதாரியோ தெரியேல்ல. உங்கை கிட்டடியளிலதான் விழுகுது.´´ அம்மம்மா ஆர்ப்பாட்டங்களில் அணைந்து போயிருந்த மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றினா. அம்மா நிலத்தில் வளர்த்தியிருந்த மகளைத் தூக்கி பாயில் வளர்த்தி தலையணை வைத்து விட்டா. மகன் எழும்பி சப்பாணி கட்டி முழிச்சிருந்தான். இந்தச் சத்தங்களும் இரைச்சல்களும் சாவினை ஏற்படுத்தி விடும் என்பதனையும் சாவு அச்சந்தரக்கூடியது என்பதனையும் அந்த ஆறு வயதுகளில் அவன் அறிந்திருந்தான்.

´´பிள்ளை . பஞ்சு எடுத்தந்து ரண்டின்ரை காதுக்குள்ளையும் வைச்சு விடு. உந்த இரைச்சலும் சத்தமும் கூடாது´´ செல் அடிக்கும் போது வீடுகளிற்குள் இருக்கக் கூடாது.வெளியான இடங்களில் குப்புறப்படுத்துவிட வேண்டும். பதுங்கு குழிகள் இன்னும் பாதுகாப்பானவை. செல் தலைக்கு மேல் விழும் சந்தர்ப்பங்கள் தவிர (விழுந்தால் விதியெனச்சொல்லி விட்டு போய்ச் சேர வேண்டியதுதான்) மற்றைய பொழுதுகளில் உயிர்ச் சேதத்தைத் தடுக்கக் கூடிய நிறைய வழிகள் இருந்தன.

பதுங்கு குழியொன்றை வெட்டச்சொல்லி அம்மம்மாவின் வளர்ந்த பேரனொருவன் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான். இரண்டு பனைமரங்களை அதற்காக தறித்து விழுத்த வேண்டுமேயென்ற காரணத்திற்காக அம்மம்மா பெரிதும் அக்கறையெடுத்திருக்கவில்லை. தவிர மடத்துப் பிள்ளையார் அந்த அளவிற்கு விட மாட்டார் எனவும் அவர்கள் நம்பத் தலைப்பட்டார்கள். ´´நீ இருந்து பாரடா பிள்ளையாரைத் தாண்டி ஒரு துண்டுச் சன்னம் கூட வர அவர் விடமாட்டார்´´

தன்னைத் தாண்டி இரண்டு செல்களை அனுமதித்த மடத்துப் பிள்ளையார் அடுத்ததாக மூன்றாவதற்கு அனுமதியளித்தார்.

´´டப்´´ காதைக்கிழிக்கும் இரைச்சல். அம்மம்மா நிலத்தில் விழுந்து கிடந்தபடி விளக்கை ஊதி அணைத்தா. பாவம். ஏவப்பட்ட செல்லுக்கு விளக்கின் ஒளிபார்த்து விழும் வல்லமை இருக்கும் என அவ நினைத்திருக்கலாம். இரைச்சல் அதிகரித்துக்கொண்டேயிருந்த

Edited by sayanthan

இக்கதை உண்மைச் சம்பவமா?

இக்கதையை வாசிக்கும் போது கடந்தகாலங்கள் மனதில் வந்து போகின்றன.

அதுசரி ஏன் செல்லடிகும் போதும் விமானத்தாக்குதலின் போதும் வீட்டுக்குள் இருக்காது பரந்த வெளியிடங்களுக்கு செல்வது ஏன்?

ஏதாவது விஞ்ஞானரீதியான காரணமா இல்லை... வேறேதும் காரணமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வெண்ணிலா

நினைவு தெரிந்த நாட்களிலிருந்து தொடராக எழுதலாம் என ஒரு எண்ணம்.

மற்றது கொங்ரீட் குவியலுக்குள் அகப்பட்டுச் சாவதன் வீதத்தை குறைக்கவே அப்படி செய்கிறார்கள். அல்லது செய்தோம் :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

எம் நிஜங்களை உலகம் எப்பத்தான் கண்டுகொள்ளபொகிறதோ?

நிஜங்களை கதையாக தந்த சயந்தனுக்கு நன்றிகள்

வண்ணத் தமிழ் வணக்கம் சயந்தன் அண்ணா..(கொஞ்சம் ஓவரா இருக்கோ கண்டுகாதையுங்கோ என்ன :wub: ).."நினைவு தெரிந்த நாளிலிருந்து" என்ற உண்மை கதை பல நிஜங்களை சொல்லி செல்கிறது கதையை நகர்த்தி சென்ற விதம் உங்கள் "நினைவு தெரிந்த நாளை" எம் கண்ணேதிரே கொண்டு வந்து செல்கிறது.. :wub:

ஆனா மிகுதி நினைவுகளை விரைவில் தொடருங்கள் பிகோஸ் நேக்கு பொறுமையா இருக்க ஏலாது சொல்லிட்டன்.!! :(

அப்ப நான் வரட்டா!!

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைவழியா நாட்கள் - 2

அடுத்த நாள் வெள்ளனவே அப்பையாண்ணை வீட்டை வந்திட்டார். அப்பையாண்ணை எண்ட பெயர் எனக்குச் சிரிப்பாக் கிடக்கும். அதென்ன அப்பு பிறகு ஐயா பிறகு அண்ணை எண்டு நான் அம்மாட்டைக் கேட்பதுண்டு. ஆனா அவாவும் அப்பிடித்தான் கூப்பிடுறவ. அவரை மட்டுமில்ல அவரின்ர மூத்த மகளையும் நான் தங்கச்சியக்கா எண்டுதான் கூப்பிடுறனான். அப்பையாண்ணை வீட்டை வரேக்கையே எங்கையெங்கை செல் விழுந்தது எண்ட விபரங்களோடைதான் வந்தார். மொத்தம் மூண்டு செல். ஒண்டு மாயவர் வீட்டுக்கு பக்கத்திலும் மற்றது முங்கோடையிலும் இன்னொண்டு எங்கேயோவும் விழுந்ததெண்டு சொன்னார்.

அண்டைக்கு நான் ஏன் பள்ளிக்கூடம் போகேல்லையெண்டு எனக்கு சரியான ஞாபகம் இல்லை. ஒண்டில் சனி அல்லது ஞாயிறாக இருக்க வேணும். இல்லாட்டி செல் விழுந்த பயத்தில போகாமல் இருந்திருக்க வேணும். அப்பையாண்ணை என்னை செல்விழுந்த இடங்களைப்பாக்க வரச்சொல்லிக் கேட்டார். அவருக்கு சைக்கிளின் முன் பாரில் Bar இல் வைத்து டபிள் ஏத்த தெரியாது. நான் பின் கரியரில ஏறி இருந்து காலை நீட்டி குதிக்காலை சில்லினின்றும் தள்ளி வைத்தேன். எப்பிடித்தான் அவதானமா இருந்தாலும் சில நேரங்களில கதையோடை கதையா குதிக்கால் சில்லுக்கை அகப்பட்ட சம்பவங்களும் உண்டு. அப்பவெல்லாம் செருப்பு போடுற பழக்கம் என்னட்டை இல்லை. பள்ளிக்குடத்துக்கே செருப்பில்லாமல்த்தான் போறனான்.

அப்பையாண்ணை சைக்கிளை மிதிக்கத்தொடங்கி கொஞ்ச நேரம் பலன்ஸ் இல்லாமல் அப்பிடியிப்பிடி உலாஞ்சி பிறகு ஒரு நிலையெடுத்தார். “எங்கை போறம்´´ ஒற்றை விரலால் அவரது முதுகில் படம் வரைந்து கொண்டே கேட்டேன் நான். அப்பையாண்ணை இந்தக் கேள்விக்கு சில நேரம் எரிச்சல்ப் படக்கூடும். “இவனோடை மனிசர் பயணம் போகேலாது“ என என்னை எங்காவது ஏற்றிச் செல்பவர்கள் சொல்லுறது வழமைதான். எப்போது பார்த்தாலும் எதையாவது கேட்டுக்கொண்டும் அலட்டிக் கொண்டும் அல்லது கை விரல்களால் காற்றில் படம் வரைந்து கொண்டும் நான் இருப்பது அவர்களிடம் ஒரு சலிப்பான கோபத்தை உண்டாக்கும்.

ஆனால் அப்பையாண்ணை கோபப்படவில்லை. “மாயவர் வீட்டுக்கு ´´ என்றார் அவர். மாயவரை எனக்குத் தெரியும். உண்மையில அவரின்ரை பெயர் மாயவரில்லை. அவர் ஒரு சின்ன மாயவர் கோயில் வைச்சிருந்தவர். சில நேரங்களில அவரே மாயவராயும் மாறுவார். ஒரு முறை எனக்குக் காய்ச்சல் வந்திருந்த போது அம்மம்மா இவரிட்டைத்தான் கூட்டி வந்திருந்தா. ஞாயிற்றுக் கிழமைப் பின்னேரமொன்றில் அந்தச் சிறு கோயிலில் மாயவராய் மாறிய இவர் என்ர முகத்துக்கு நேர வீபூதியை ஊதி தலையில தண்ணியத் தெளிச்சு வாய்க்குள்ளை ஏதேவெல்லாம் சொல்லி தட்டொன்றை நீட்ட அம்மம்மா என்ரை கையைப் பிடிச்சு இரண்டு ரூபாக் குற்றியொன்றை அதில் போட வைத்தா. கொக்கச் சத்தகத்தில் கட்டியிருக்கிற மாதிரியான ஒரு கத்தியின் நுனியில் எலுமிச்சை பழத்தைக் குத்தி என் தலையைச் சுத்தி சுத்தி மருத்துவம் பார்த்தார். என்றாலும் காய்ச்சல் பட்டினி வைத்தியரிடம் போன பிறகுதான் நின்றது.

மாயவர் அவருக்குள்ளை இறங்கிற நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில அவர் சாதாரணமாத்தான் திரிவார். அழுக்கு ஏறத்தொடங்கிய வேட்டியும் சட்டை போடாத தேகமுமாய்த்தான் அவரைக் கண்டிருக்கிறேன். ஒருக்கா கடைக்குப் போட்டு நடந்து வரேக்கை மாயவரை பத்தானைக் கேணியடி கள்ளுக்கொட்டில்ல பிளாவும் கையுமா இருந்ததைக் கண்டுவிட்டு வந்து “அம்மா மாயவர் கள்ளுக்குடிச்சதை கண்டனான்“ எண்டு சொல்லி ஏச்சு வாங்கியிருக்கிறேன்.

அப்பையாண்ணை மாயவர் வீட்டடியில் சைக்கிளை மெதுவாக்கி நிறுத்த நான் குதித்து இறங்கினேன். உள்ளே நடந்து போனோம். வேறும் சிலர் மாயவரைப் பார்க்க வந்திருந்தார்கள். மாயவரின் ஒரு கையில் தோள் மூட்டிலிருந்து முழங்கை வரை வெள்ளைத்துணியால் கட்டிடப்பட்டிருந்தது. அவர் வெளி விறாந்தையில் ஒரு நீண்ட வாங்கில் அமர்ந்திருந்தார். விறாந்தையின் ஒரு பக்கச் சுவர் உடைந்து போய் கூரை அந்தப் பக்கத்தினால் கீழே இறங்கிக் கிடந்தது. அந்த இடத்திலிருந்து சற்றுத் தூரே கிணற்றடியிலும் கொஞ்சப் பேர் நின்றார்கள். செல் அங்குதான் விழுந்திருக்க வேண்டும். அங்கு நின்ற மரங்கள் முழுதும் பாதியுமாக முறிந்திருந்ததைக் கண்டேன்.

“நான் நித்திரையில கிடந்தன். ஏதோ பெரிசா சத்தம் கேக்கிறதும் கூவிறதும் கனவு மாதிரிக் கிடந்தது. மரங்களை முறிக்கிற சத்தமும் வெடிச்சத்தமும் கேட்கும் போதே என்ரை கையில வெடி பட்டிருக்க வேணும். ஆனால் எனக்குத் தெரியேல்ல. அந்தா அந்த சுவருக்கு கொஞ்சம் தள்ளித்தான் படுத்திருந்தனான். சுவர் இடிஞ்சு கல்லும் மண்ணுமா எனக்கு மேல விழுகுது. கையில ஒரு இறுகின வலி. என்னெண்டு தொட்டுப்பாத்தால் ஈரமாக்கிடக்கு. மாயவரே ரத்தம் எண்டிட்டு தோளில கிடந்த சால்வையால சுத்தினன். பிறகும் செல்சத்தங்கள் கேட்குது. பிறகு ஆட்கள் வந்து ஆஸ்பத்திரிக்குப் போய் காயம் பெரிசா இல்லை. சிராய்ப்புத்தான். மாயவர்தான் கையைக் காப்பாற்றினது´´ மாயவர் சொல்லிக்கொண்டிருந்தார்.

இதையே தான் காலமை அம்மம்மாவும் சொன்னா. ஆனா அவ மாயவருக்குப் பதிலா மடத்துப் பிள்ளையாரைச் சொன்னா. முருகன் பிரம்மனைக் குட்டினார், பிள்ளையார் மாம்பழ விசயத்தில் முருகனை ஏமாற்றினார் என கடவுள்களுக்கிடையிலான கோபங்களையும், சண்டைகளையும், பிடுங்குப் பாடுகளையும் அப்ப பாடப் புத்தகங்களில் படித்துக் கொண்டிருந்ததனால், இவர், மாயவர் என்ற படியால தான் மடத்துப் பிள்ளையார் செல்லை இங்கு விட்டார் என தங்கச்சிக்கு கதையளக்கலாம் என நினைத்துக்கொண்டேன். அதை விட மாயவருக்கு வருத்தம் என்றாலே அவர் ஆஸ்பத்திரிக்குத்தான் போறார். நீங்கள் எதுக்கு என்னை மாயவரிடம் கூட்டிக்கொண்டு போனனியள் எனவும் அம்மம்மாவிடம் கேட்க வேணும்.

அப்பையாண்ணை “என்ன.. வீட்டை போகப்போறியோ´´ என்று கேட்டார். அதுக்குப் பதில் சொல்லாமல் “நீங்கள் எங்கை போகப் போறியள்´´ என்று நான் கேட்டன். “சரி வா மற்றச் செல் விழுந்த இடத்தையும் பாத்துட்டு வருவம். ஆனா உன்ரை கொப்பம்மாட்டைச் சொல்லிப்போடாதை அங்கை போனதெண்டு. பிறகு மனிசி றோட்டுகளில கண்டு திட்டும்´´ உண்மை தான். அவா அப்பிடிப்பட்ட ஆள்த்தான். எங்கையாவது நான் நாலைஞ்சு பேரோடை விளையாடிக்கொண்டிருக்கிறதை

  • கருத்துக்கள உறவுகள்

சயந்தன் உங்கள் எழுத்துக்கள் நாம் கடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது நினைவழியா நாட்களை நெஞ்சில் நிறுத்திவைக்கும் உங்கள் எழுத்து தொடரட்டும்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமரத்தானுக்கு இதயத்தில் ஒப்பிரேசன் செய்ய வேண்டியிருந்தது. யாழ்ப்பாணம் பெரியாஸ்ப்பத்திரியில்த்தான

இப்பிடித்தான் உலங்குவானூர்தி அடிச்சிட்டுப்போனாப் பிறகு கப் பொறுக்கப்போறம் எண்டு கொஞ்சப்பேர் புறப்பட்டுபோவதும் நினைவுக்கு வருகிறது.... தொடருங்கள் அண்ணா....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.