Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் மீது சிறீலாங்காவின் பொருளாதாரத் தடை

Featured Replies

வன்னி மீது இறுகி வரும் சிறீலாங்காவின் பொருளாதாரத்தடை. அத்தியாவசிய உணவுப் பொருட்களிற்கு அதிகரித்து வரும் தட்டுப்பாடு.

http://www.ltteps.org/?view=2129&folder=2

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மீது இறுகி வரும் சிறீலாங்காவின் பொருளாதாரத்தடை. அத்தியாவசிய உணவுப் பொருட்களிற்கு அதிகரித்து வரும் தட்டுப்பாடு.

http://www.ltteps.org/?view=2129&folder=2

புறக்கணி சிறீலங்கா கொழும்புக்கு கேட்டிட்டோ. யாழில கட்டின பனருக்கு.. மகிந்த ரியாக்சன் காட்டிட்டார் போல..! அதுதான் போய்கொட் வன்னி ஆரம்பிச்சிட்டாராக்கும்..!

கொழும்பில ஒரு இறாத்தல் பாண் 60 ரூபா என்றால் வன்னியில் 100 ரூபா.. ஆக சிறீலங்காவின் பொருளாதார நலிவு யுத்தத்தை நிறுத்தவில்லை மாறாக மக்களின் வயிற்றில அடிச்சிருக்குது. அதில தமிழ் மக்களும் அடங்குவார்கள். போய்கொட் சிறீலங்கா...???! :D:):):D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுங்காலபோவன்

புறக்கணி சிறிலங்கா என்பதை இங்கே இழுத்துக் கதைக்கின்ற அளவு அது தனிப்பட்ட உங்களிருவருக்குமான பிரச்சனையல்ல.

அதில் பலருக்குத் தெளிவில்லை என்பது குறித்து வருந்துகின்றேன்.

இலங்கையரசுக்கு கிடைக்கின்ற வெளிநாட்டு வருவாயில் புலம்பெயர் எம்மவர்கள் வாங்குகின்ற பொருட்களும் அடங்கும். இலங்கையரசுக்கு அவ்வாறன பொருளாதாரத்தை வன்னி மக்கள் வழங்கப் போவதில்லை. எனவே தான் புலப்பெயர் மக்களுக்குமான புறக்கணிப்பு என்ற பிரச்சாரம் வன்னிமக்களுக்காக முன்னெடுக்கப்படவில்லை.

சிறிலங்கா அரசின் பொருளாதார மையங்களை தகர்த்தால் எம் மக்களும் கஸ்டப்படுவார்கள் என்பது புறக்கணி சிறிலங்காவால் மட்டும் ஆகிவிடப் போவதில்லை. கட்டுநாயக்கா மீது முன்பு நடந்த தாக்குதல், சு;றுலாத்தலங்கள் மீதான தாக்குதல்கள், போன்றவைகளாலும் தமிழ்மக்களின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தத் தான் போகின்றது. அதற்காக அதை வேண்டாம் என்று தடுப்பீர்களா?

இலங்கையின் பொருளாதாரத்திற்கு கிடைக்கின்ற பணங்களால் தான் எம்மவர்களைக் கொல்ல ஆயுதம் வாங்குகின்றது. இந்த நிலையையில் இப்படியான புறக்கணிப்பு அவசியமகின்றது.

மக்கள் பட்டினியால் தவிர்க்கின்றதைப் பார்த்தால், கொல்லப்படுவதைத் தவிர்க்க முடியாமல் போகும்.

என்னுமொரு விடயத்தையும் புரிந்து கொள்ளுங்கள். நம்மவர்கள் இங்கிரு;நது அனுப்புகின்ற பணம் தொடர்பாக எவ்விதமான புறக்கணிப்பையும் யாரும் செய்யவில்லை. ஏனென்றால் அந்தப் பணம் அனுப்பாவிட்டால் பாதிக்கப்படப் போகின்ற மக்கள் எம்மவர்களாக மட்டும் தான் இருப்பார்கள். ஆனால் புறக்கணி சிறிலங்கா என்பது ஒட்டுமொத்த இலங்கையாகவும் இருக்கும்.

இந்த விடயத்தில் மகிந்த கொண்டிருக்கின்ற பொருளாதாரத் தடை தொடர்பாகப் பிரச்சாரம் செய்வதற்கான ஒத்துழைப்பை வழங்குங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுங்காலபோவன்

புறக்கணி சிறிலங்கா என்பதை இங்கே இழுத்துக் கதைக்கின்ற அளவு அது தனிப்பட்ட உங்களிருவருக்குமான பிரச்சனையல்ல.

அதில் பலருக்குத் தெளிவில்லை என்பது குறித்து வருந்துகின்றேன்.

இலங்கையரசுக்கு கிடைக்கின்ற வெளிநாட்டு வருவாயில் புலம்பெயர் எம்மவர்கள் வாங்குகின்ற பொருட்களும் அடங்கும். இலங்கையரசுக்கு அவ்வாறன பொருளாதாரத்தை வன்னி மக்கள் வழங்கப் போவதில்லை. எனவே தான் புலப்பெயர் மக்களுக்குமான புறக்கணிப்பு என்ற பிரச்சாரம் வன்னிமக்களுக்காக முன்னெடுக்கப்படவில்லை.

குறுக்காலபோவன் என்ன என்னோட முற்புறவி எனிமியா.. அவரோட தனிப்பட்ட பிரச்சனை வைக்கிறதுக்கு.

புறக்கணி சிறீலங்கா என்ற கோசம் எழுப்பேக்கேயே இங்கு சிலர் எச்சரித்தார்கள்.. ஒருவேளை யுத்தம் ஆரம்பமாகி வன்னி மீது இதே உச்சரிப்பை ஜே வி பி அல்லது சிறீலங்கா அரசு செய்யின் பாதிக்கப்படப் போவது எமது வன்னி மக்கள் தான் என்று.

இதனால் அரசுக்குத்தான் பலன் அதிகம். மக்களை இராணுவ நெருக்குவாரத்தாலும் பொருளாதார நெருக்கடியாலும் வதைத்து வன்னியை விட்டு ஓட வைத்தல். அதன் மூலம் புலிகளை ஆட்பல ரீதியாகவும் நெருக்கடிக்குள் தள்ளுதல் என்று பல பரிமான வெற்றியை அரசு இதனூடு எதிர்பார்க்கும்..!

சிறீலங்காவின் இராணுவ பொருளாதாரம் இன்னும் வலுவாகவே இருக்கிறது. இலவச மற்றும் பெரும் முன்வருதல் கடன் கொடுப்பனவோடு சர்வதேச அரசுகளின் வலிந்த உதவிகளோடு இன்னும் சுரண்டல்களூடு அது நலமாவே இருக்கிறது. அதுவே யுத்தத்தை நடத்த, தொடரப் போதுமானது.

ஆனால் சிறீலங்காவில் மக்களின் பொருளாதாரம் மட்டுமே மோசமாகியுள்ளது. ஒரு இறாத்தல் பாணுக்கு மக்கள் அல்லாட வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறது.

வன்னி மீதான பொருளாதாரத் தடை சந்திரிக்கா காலத்திலும் பிரேமதாச காலத்திலும் இருந்தனதான். ஆனால் எனி வரும் பொருளாதாரத்தடை மக்களை இரண்டு வகையில் பாதிக்கும். ஒன்று பொருட்களுக்குத் தட்டுப்பாடு. இரண்டு கிடைக்கும் பொருட்களும் அசுர விலையில் இருப்பதால்.. ஏற்படும் தட்டுப்பாடு.

ஏன் வன்னி மக்களால் மலிபன் விசுக்கோத்தும்.. யானை மார்க் சோடாவும் குடிக்கப்படுவதில்லையா. மாறாக கொக்கோ கோலாவும் பெப்சியும் செவின் அப்புமா குடிக்கிறார்கள்..???!

வன்னி தன்னை சுயசார்புப் பொருளாதாரத்துக்குள் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை முன்னைய பொருளாதாரத்தடைகளூடு உணர்ந்திருக்கும். எனினும் இயற்கை காலநிலை பிரச்சனைகள் மற்றும் எரிபொருட் தடைகள், போர் நடவடிக்கைகள் என்று இன்னோரென்ன செயற்கைக் காரணிகளால் மக்களால் பயிர் செய்கைகளைக் கூட கவனிக்க முடிவதில்லை. இந்நிலையில் வருமானம் இழந்திருக்கும் அப்பாவி ஏழை மக்களுக்கு மலிபன் விசுக்கோத்துக் கூட கிடைக்க முடியாததாக விட்டது..! அந்தளவுக்கு விலையுயர்வுகள் மட்டுமன்றி தடைகளும்.

அந்த விலை உயர்வில்.. புறக்கணி சிறீலங்காவின் பங்களிப்பை நீங்கள் இலகுவாக மறந்திடச் சொல்லுறீங்க.

சிறீலங்காவின் மொத்த வருமானத்தில் புறக்கணி சிறீலங்காச் செயற்பாட்டூடு இழக்கப்பட்ட தொகையென்ன. அதனால் இராணுவ செலவீனத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி என்ன..???!

கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்து பிள்ளையானை விலைக்கு வாங்க அரசு தயாராக இருக்கும் போது.. புறக்கணி சிறீலங்கா.. பாதிப்பது யாரை.. மலிபன் விசுக்கோத்துச் செய்யிறவனையும்.. அதை வாங்கிச் சாப்பிடவனையும் தான் அதிகம் என்றால் அதை ஏற்றுக் கொள்ள நாம் தயார் இல்லை..! ஏன்னா.. நாங்க வெளிநாட்டில ஒன்றில் அரச காசில வாழிறம் அல்லது கூலியான அடிமை வாழ்வு வாழத்தயாராகிட்டம்..! :D:D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னதைப் புரிந்து கொள்ளாமல் மீண்டும் கதைக்கின்றீர்கள்

புறக்கணிப்பு சிறிலங்கா மட்டுமல்லாமல், இலங்கையின் பொருளாதார இலக்குகள் தாக்கப்பட்டாலும் பொருளாதாரம் பாதிக்கத் தான் போகின்றது. அங்கே அதற்காக மக்கள் துன்பப்படுவதைத் தவிர்க்க முடியாது.

புறக்கணி சிறிலங்காவை மறக்கச் சொல்லி யார் சொன்னது. ஆனால் இதற்காகத் தான் சிறிலங்கா அரசு பொருளாதார முடக்கம் செய்வதாகச் சொல்லிச் சிறிலங்கா அரசை நியாயப்படுத்தாதீர்கள் என்பது தான் என் வேண்டுகோள்.

சந்திரிக்காவும் ஒரு காலத்தில் யாழ்ப்பாணம் மீது கடுமையான பொருளாதாரத் தடை வித்தித்தவர் தான்.அப்போதும் என்ன புறக்கணி சிறிலங்காவா நடந்தது.

எனவே சிறிலங்கா செய்கின்ற கொடுமைகளை மற்றவர்கள் தலையில் கட்டி அந்த அரசை நியாயப்படுத்தாதீர்கள்.

உங்களு;ககு முற்பிறப்பு எதிரியோ இல்லையோ என்பது பற்றி ஆராய்வு தேவையில்லை. ஆனால் தேவையில்லாமல் புறக்கணி சிறிலங்காவைச் சொல்லி சிறிலங்காவை நியாயப்படுத்த முனைவது பழைய கறளின் அடிப்படை என்பதை மட்டும் தான் மறுக்கமுடியவில்லை.

உணவை ஆயுதமாக‌ப் பய‌ன்படு‌த்து‌ம் ‌சி‌றில‌ங்க அரசு: ‌விடுதலை‌ப் பு‌‌லிக‌ள் கு‌ற்ற‌ச்சா‌ற்று!

செவ்வாய், 25 மார்ச் 2008( 13:39 IST )

இல‌ங்கை‌த் ‌த‌மிழ‌ர்களை அட‌க்‌கி ஆ‌‌ள்வத‌ற்கான ஆயுதமாக உணவை ‌சி‌றில‌ங்க அரசு பய‌ன்படு‌த்‌தி வரு‌கிறது எ‌ன்று த‌மி‌‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌‌ள் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி உ‌ள்ளன‌ர்.

இது தொட‌ர்பாக ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் வெ‌ளி‌யி‌ட்ட அ‌றி‌க்கை‌யி‌ல், "தமிழ‌ர்க‌ள் மீதான முதலாவது தடையாக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாவது தடையாக உணவு, மருந்து, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் உள்ளது. மூன்றாவது தடையாக வெளி உலகத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இத்தடைகள் சிறுவர்களை அதிகம் பாதித்து வருகின்றது. ச‌த்து‌க் குறைவு, சிறார் தொற்று நோய்கள் போ‌ன்றவை அதிகரித்துள்ளன. அதை‌ப் போர் நிறுத்த காலத்தில் சு‌ற்று‌ப் பயணம் செய்தவர்கள் அ‌றி‌ந்‌திரு‌ந்தன‌ர்.

இ‌ந்த ‌நிலை ஒவ்வொரு வாரமும் மோசமடைந்து வருகிறது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட ‌நி‌ர்வாக‌ங்களு‌ம், ஐ.நா. சபையின் உலக உணவு நிறுவனமும், ச‌ர்வதேச நாடுகளு‌ம் இதை சிங்கள அரசிடம் எடுத்துச் சென்று‌ம் எந்த‌ப்பயனும் இல்லை

"பிரி‌ட்ட‌னிட‌ம் இருந்து அதிகாரத்தைப் பெற்ற சிங்கள அரசுகள் தமிழ‌ர்க‌ள் வாழும் பகு‌திக‌ளி‌ல் இராணுவ சோதனைச் சாவடிகளை அமைத்து அவ‌ர்களை அடக்கி ஆண்டு வருகின்றன.

த‌ங்க‌ளி‌ன் உரிமைகளுக்காக தமிழ‌ர்க‌ள் குரல் கொடுக்க‌த் துவ‌ங்‌கியது‌ம் சிங்களப் படையினரின் இந்தச் சோதனை சாவடிக‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அதிகரித்துள்ளன.

இது தமிழ‌ர்களின் மனித நேயத்தின் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தலாகும். இச்சோதனைச் சாவடிகளில் விசாரணை செய்யப்பட்ட பல தமிழ‌ர்கள் காணாமல் போய் உள்ளனர். இது தமிழ‌ர்களுக்குப் பெரும் உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தி உ‌ள்ளது.

மேலு‌ம், சில சோதனைச் சாவடிகளை மூடுவதன் மூலம் தமிழ‌ர்களை வெளியுலகத்தில் இருந்து ‌சி‌றில‌ங்க அரசு அன்னியப்படுத்தி வருகிறது. கடந்த 18 மாதங்களாக யாழ். குடாநாட்டில் இந்நிலை நீடிக்கிறது. இதனா‌ல் அங்கு உணவு, அத்தியாவசியப் பொருட்களுக்கு‌த் த‌ட்டு‌ப்பாடு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

யாழ். குடாநாடு வெளியுலகத்தில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள போதும் அது தொடர்பாக யாரும் எழுதுவது கிடையாது. சிங்கள அரசின் கொலை ‌மிர‌ட்ட‌ல்க‌ள் காரணமாக யாழ். குடாநாட்டில் இருப்பவர்களாலும் பேச முடிவதில்லை.

கட‌ந்த 2006 ஆம் ஆண்டில் இருந்து தமிழ‌ர் பகுதிக‌ளி‌ல் எரிபொரு‌ள் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. இத்தடைகளால் சுனா‌மி ‌நிவாரண உதவிகளை வழங்கி வந்த பல த‌ன்னா‌ர்வ‌த் தொ‌ண்டு நிறுவனங்களும் வெளியே‌ற்ற‌ப்ப‌ட்டு உ‌ள்ளன. இக்கட்டுப்பாடுகளை வன்னி மூன்றாம் ஈழப் போரில் இருந்து எதிர்கொண்டு வருகின்றது.

வன்னியின் மக்கள் தொகை 4,60,000 ஆகும். இதில் கிளிநொச்சியில் 2,00,000 பேரும், முல்லைத்தீவில் 2,00,000 பேரும், வவுனியாவில் 30,000 பேரும், மன்னாரில் 30,000 பேரும் வசிக்கின்றனர்" எ‌ன்று கூ‌றியு‌ள்ளன‌ர்.

http://tamil.webdunia.com/newsworld/news/i...080325026_1.htm

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னதைப் புரிந்து கொள்ளாமல் மீண்டும் கதைக்கின்றீர்கள்

புறக்கணிப்பு சிறிலங்கா மட்டுமல்லாமல், இலங்கையின் பொருளாதார இலக்குகள் தாக்கப்பட்டாலும் பொருளாதாரம் பாதிக்கத் தான் போகின்றது. அங்கே அதற்காக மக்கள் துன்பப்படுவதைத் தவிர்க்க முடியாது.

புறக்கணி சிறிலங்காவை மறக்கச் சொல்லி யார் சொன்னது. ஆனால் இதற்காகத் தான் சிறிலங்கா அரசு பொருளாதார முடக்கம் செய்வதாகச் சொல்லிச் சிறிலங்கா அரசை நியாயப்படுத்தாதீர்கள் என்பது தான் என் வேண்டுகோள்.

சந்திரிக்காவும் ஒரு காலத்தில் யாழ்ப்பாணம் மீது கடுமையான பொருளாதாரத் தடை வித்தித்தவர் தான்.அப்போதும் என்ன புறக்கணி சிறிலங்காவா நடந்தது.

எனவே சிறிலங்கா செய்கின்ற கொடுமைகளை மற்றவர்கள் தலையில் கட்டி அந்த அரசை நியாயப்படுத்தாதீர்கள்.

உங்களு;ககு முற்பிறப்பு எதிரியோ இல்லையோ என்பது பற்றி ஆராய்வு தேவையில்லை. ஆனால் தேவையில்லாமல் புறக்கணி சிறிலங்காவைச் சொல்லி சிறிலங்காவை நியாயப்படுத்த முனைவது பழைய கறளின் அடிப்படை என்பதை மட்டும் தான் மறுக்கமுடியவில்லை.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லை.

சிறீலங்காவின் பொருளாதாரம் ஒரு தாக்குதலால் நலிவடைவது வேறு. சிறீலங்காவில் உள்ள சிறிய உற்பத்தியாளர்களின் பொருட்களைப் புறக்கணிப்பதால்.. ஏற்படும் விலை குறைந்த பண்டங்களுக்கான விலையுயர்வு என்பது அடித்தட்ட மக்கள் மீது இரட்டிப்புச் சுமையை ஏற்படுத்தும் என்பதைத்தான் குறிப்பிடுகின்றேன்..!

விடுதலைப்புலிகள் மக்களுக்கான உணவு மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் தடைசெய்யப்படுவதை மட்டும் கருத்தில் எடுத்துள்ளனர். ஆனால் வன்னியில் வாழும் ஏழை மக்களின்.. யாழ் குடாவில் வாழும் ஏழை மக்களின் கதி.. விலைவாசி உயர்வால் என்னாகிறது அதுவும் தொழில்வாய்ப்பிழந்துள்ள நிலையில் என்பதையும் கருத்தில் எடுத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களையும் சர்வதேச சமூகத்திடம் கோரி நிற்க வேண்டும்.

குறிப்பாக புறக்கணி சிறீலங்கா என்று குரல் எழுப்புறவை.. சிறீலங்காவால் புறக்கணிக்கப்படுற தமிழ் மக்களின் நலனை எப்படி பூர்த்தி செய்யப் போகினம் என்றதைத்தான் நான் கேட்கிறன். மக்கள் மீது இரண்டு பரிமானங்களூடு திணிக்கப்படும் பொருளாதாரச் சுமையில் இருந்து எப்படி அவர்களை விடுவிக்கப் போறீங்க. சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பிரச்சனை இல்லை. அவர்களை அரசு கவனித்துக் கொள்ளும். தமிழ் மக்களின் கதி என்ன..???! :):wub::wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.