Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''பிழைக்க ரஜினி... பழிக்கவும் ரஜினியா?''

Featured Replies

மனதில் என்ன நினைக்கிறாரோ... அதனை வெளிப்படையாகப் போட்டு உடைத்துவிடும் வழக்கம்

உள்ளவர் இயக்குநர் அமீர்! ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட விவகாரத்தில் கர்நாடகாவைக் கண்டித்துத்

தமிழ் சினிமா உலகத்தினர் ஆவேசமாக உண்ணாவிரதம் நடத்தி முழங்கிக்கொண்டு இருக்கையில்,

இயக்குநர் அமீர் உண்ணாவிரதம் குறித்து தனது கருத்தாக தொலைக்காட்சிக்காக பேசிய பேச்சு,

பலரையும் சலசலக்க வைத்தது. நடிகர் ரஜினிகாந்த்தைக் குறிவைத்து மேடையில் பேசி, சிலர் பரபரப்பு

கிளப்பியபோது, அதற்குஆட்சேபணை தெரிவிக்கும் விதமாக அமீர் சொன்ன சில கருத்துக்களும்

அவரைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன

p43rh8.jpg

அமீரை நேரில் சந்தித்தோம். ''உண்ணாவிரதப் போராட்டத்தில் உங்கள் பேச்சு சர்ச்சைக்குள்ளாகி யிருக்கிறதே...

நீங்க மட்டும் ஏன் இப்படி உங்கள் சினிமா உலகத்தினரின் கருத்தோடு ஒட்டாமல் சர்ச்சையில் சிக்குறீங்க?''

என்றதுதான் தாமதம்... பொல்லாக் கோபத்தோடு பொளந்து கட்டத் தொடங்கினார் அமீர்-

'என் மனசுல பட்டதைச் சொன்னது தப்பா? யாரும் ஏதும் நினைச்சுக்குவாங்கன்னு உஷாராப் பேச இது

ஒண்ணும் சினிமா பிரச்னை இல்லை, ஜீவாதாரப் பிரச்னை!

கர்நாடகா இன்றைக்கு நேற்றைக்கா நம்மைச் சீண்டுகிறது? கர்நாடகத்தில் இருக்கும் சில ஓட்டுப் பொறுக்கிகளின்

தேர்தல் தேவைக்கு நம் உரிமைகள் ஊறுகாயாகத் தொட்டு நக்கப்படுகின்றன. ஒகேனக்கல் தமிழகத்துக்குச்

சொந்தமா, கர்நாடகத்துக்குச் சொந்தமானு அங்கே கர்நாடகக் கலைஞர்களும் இங்கே நம்ம கலைஞர்களும்

சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க. ஒகேனக்கல் இந்தியாவுக்குச் சொந்தமானதுன்னு ஏன் யாரும் சொல்ல

மாட்டேங்குறீங்க?

மனதளவில் நாம் இந்தியன் என்கிற உணர்வுடனேயே இந்தப் பிரச்னையை எதிர்கொள்வோம். சேது

சமுத்திரத் திட்டம், காவிரி, இப்போ ஒகேனக்கல்னு வரிசையா தமிழகத்தின் வளர்ச்சிக்கான விஷயங்கள்

அடுத்தடுத்துத் தடுக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன. கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்பதற்காக,

தமிழகத்தின் உயிரை நசுக்குகிற வேலையை சில கட்சிகள் அரங்கேற்று கின்றன. இதைக் கண்டித்துத் தமிழ்த் திரையுலகத்தினர் 'ஆப்சென்ட்'டே ஆகாமல் கைகோத்து உண்ணாவிரதம் நடத்தி இருக்கிறார்கள்.

திரையுலகத்தினருக்கு இருக்கும் இந்த உணர்வும் ஒற்றுமையும் நம் அரசியல் கட்சிகளிடம் இருந்திருந்தால்,

கர்நாடகத்தின் உச்சந்தலையைப் பிடித்து உலுக்கியிருக்க முடியும். அதேசமயம், தமிழகத்து மக்கள் தங்கள்

ரசனைக்குக் கூலியாகக் கொடுக்கும் பணம்தான் திரையுலகை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. வயிற்றுக்கும்

வாழ்க்கைக்கும் படியளக்கும் மக்களுக்குக் கைம்மாறு செய்யும்விதமாகத்தான் உண்மையான உணர்வோடும்

உணர்ச்சியோடும் நடிகர்கள் சங்கம் உண்ணாவிரதத்தை நடத்தியிருக்கிறது. கலை உலகம் உணர்ச்சியையும்

கொந்தளிப்பையும் காட்டி மக்கள் கவனத்தை ஈர்க்க முடியும். ஆனால், தண்ணீரைப் பெற்றுக் கொடுக்கிற சக்தி,

மக்களின் ஓட்டுக்களை வாங்கிய பிரதிநிதிகளுக்குத்தான் இருக்கிறது. 234 எம்.எல்.ஏ-க்களும் சேர்ந்தல்லவா

ஒன்றாக உட்கார்ந்திருக்க வேண்டும்? அதுதானே மத்திய அரசின் கவனத்தில் வலுவாக உறைத்திருக்கும்!

'கூழு ஊத்துற ஆயா கொண்டைய சிங்காரிச்சாளாம். ஆட்டக்கார மயிலு கேப்பை அறுத்தாளாம்'னு ஒரு

சொலவடை சொல்வாங்க. கூழ் ஊற்றும் கிழவி ஆடவும் முடியாது. ஆட்டக்காரப் பெண் ஆகாரத்துக்கு

வழிப்பண்ணவும் முடியாது. திரைக் கலைஞர்களால் மக்களை சிரிக்கவோ சிந்திக்கவோ செய்ய முடியும்.

அவர்களின் கண்ணீரை நடைமுறையில் நேரடியாகத் துடைத்துவிட முடியாது.

இந்த இடத்தில் முக்கிய ஒரு விஷயத்தை நாம் எல்லோரும் மறந்து விட்டுப் பேசிக் கொண்டிருக்கிறோம்...

ஒகேனக்கல் என்பது கன்னட பெயர். இன்றளவிலும் அந்த பெயரை நாம் தமிழ் பெயராக்கம் செய்யாமல்

இருக்கிறோம் என்பது நம் அசமந்தத்தின் உச்சம். முதலில் தமிழக அரசு ஒகேனக்கல்லுக்கு தமிழ்ப் பெயர்

சூட்டவேண்டும். இதனை அரசுக்கு நான் வேண்டுகோளாகவே வைக்கிறேன்''

'உண்ணாவிரத மேடையில் சிலர் பேசிய பேச்சுகளிலும் உங்களுக்கு உடன்பாடு இல்லையாமே?'

'ஒவ்வொருவரின் மனதிலும் கொந்தளிப்பும் ஆதங்கமும் பொங்குவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால், இதன் விளைவு என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள். மானமுள்ள தமிழன், வீரமுள்ள தமிழன்னு

சொல்லிக்கிட்டு அதே தமிழன் பொதுமேடையில கெட்ட வார்த்தை சொல்லித் திட்டுறதைப் பார்த்து நான்

கைதட்டத் தயாரா இல்லை. பண்பான தமிழனுக்கு இதெல்லாம் அழகில்லை. அரசாங்கமும் அரசியல்

தலைவர்களும் சேர்ந்து எடுக்க வேண்டிய தீர்வை ஆளாளுக்கு கையில் எடுத்துக் கொண்டு, 'அடிப்பேன்...

உதைப்பேன்' என்பது எப்படி நியாயமாகும்? அதேநேரம் 'அடிக்கு அடி' என்பதில் எனக்கு மாற்றுக்

கருத்தில்லை. ஆனால், அடித்தவனைத்தானே திருப்பி அடிக்கணும்? முப்பது வருடங்களுக்கும் மேலாக நம்மை

நம்பி உடுப்பி ஹோட்டல் நடத்திக்கொண்டிருப்பவனைக் குறிவைத்து அடிக்கலாமா? ஒகேனக்கல்

பிரச்னைக்காக இன்னிக்கு நாம நாகரிகமில்லாம கோபத்தைக் காட்டினா நாளைக்கு ஒண்ணுமில்லாத

பிரச்னைக்குக்கூட அங்கிருக்கும் தமிழர்கள் தாக்கப்படக்கூடிய சூழ்நிலை வருமே...

p42aje0.jpg

'வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு' என்கிற வார்த் தைகள் இனி கூடாது என்றெல்லாம் மேடையில்

சிலர் கோபப்பட்டார்கள். தமிழனுக்கு இருக்கும் மகத்தான அடையாளமே வந்தாரை வாழவைக்கும்

குணம்தான். இந்தியர்களை செக்குமாடாக சித்ரவதைப்படுத்திய கொடுமைகளை எல்லாம் மனதுக்குள்

பதுக்கிவிட்டு இங்கிலாந்து மகாராணியின் வருகைக்குக் கம்பளம் விரித்து மகிழ்ந்தோமே... தமிழன்

எந்தளவுக்கு உயர்ந்தவன், உறவு பாராட்டுபவன் என்பதை உலகுக்கு உணர்த்திய சம்பவமல்லவா அது!

கர்நாடக மக்களோ, கலைஞர்களோ... நமக்கு எதிரி இல்லை. ராமர் பாலப் பிரச்னையில் தமிழகத்தின்

மூத்த தலைவரும் முதல்வருமான கலைஞரை, வேதாந்தி என்பவர் தலையை வெட்டுவேன் எனச் சொன்னார்.

அப்போதே அவர் மீது கொலை மிரட்டல் வழக்குப் போட்டு அவரை உள்ளே தள்ளியிருக்க வேண்டிய

மத்திய அரசு மௌனமாகவே இருந்தது. அந்தத் துணிச்சலில்தானே மறுபடியும் நம் முதல்வரைப் பற்றியே

வாட்டாள் நாகராஜ் என்கிற கர்நாடக அரக்கனும் தாறுமாறாகப் பேசுகிறான்! கர்நாடக மக்கள்

கொண்டாடும் நடிகர் ராஜ்குமாரை காட்டுக் குள்ளிருந்து மீட்டுக்கொடுத்ததே கலைஞர்தான் என்பது

அவனுக்கு சுலபமாக மறந்துவிட்டது! இப்படி தேர்தல் ஆதாயத்தை மட்டுமே குறிவைத்துக் கண்

மூடித்தனமாக முழங்குகிறவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் வேண்டாமா?

ரத்தக்களறி ஏற்படுத்தும் வேலைகள் நமக்கு வேண்டாம். ரத்தம் பார்க்கத் துடிக்கிற சில கர்நாடகக்

கயவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைப்பதற்குக் குரல் கொடுப்போம்!''

p5ah4.jpg

'ரஜினியைப் பற்றிய சிலரின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறீர்களே..?''

'தமிழ்ப் பெண்ணை மணந்தவர்... தன் மகளை ஒரு தமிழனுக்கு மணமுடித்து வைத்தவர். உள்ளத்து

அளவில் மட்டுமல்லாது வெளிப்படையாகவே 'நான் தமிழ் மண்ணின் பக்கம்தான்' என பட்டவர்த்தனப்படுத்தியிருக்

Edited by vasisutha

  • கருத்துக்கள உறவுகள்

நியாயம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்திலை ஈழத்தமிழன் எல்லாருக்கும் ஊறுகாயாய் இருக்கிறான் நல்ல தொட்டு நக்கிகொள்ளுங்கோ :icon_mrgreen::wub:

  • கருத்துக்கள உறவுகள்
:icon_mrgreen:

Edited by தூயவன்

ஏதோ உதாரணம் சொல்லும் அளவுக்காவது எங்கள பத்தி இந்தியாவில தெரியுதே என்று நினைக்கலாமா?

மொத்தத்திலை ஈழத்தமிழன் எல்லாருக்கும் ஊறுகாயாய் இருக்கிறான் நல்ல தொட்டு நக்கிகொள்ளுங்கோ :wub::wub:

சைட் டிஸ் சரி சாத்திரி அங்கிள் மெயின் சொல்லவில்ல... :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.