Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனத்துவமும் தேசியமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

150 வது நிலவரம்.. யாழில் இனத்துவம், தேசியம்.. தொடர்பாக விதண்டாவாதம் செய்பவர்கள் குறிப்பாக.. மதமற்ற இனத்துவம் .. தேசியம் என்ற நிலைப்பாட்டோடு இருப்பவர்கள்.. கேட்பது சிறப்பானது. குறிப்பாக யாழ் கள நிர்வாகத்தில் உள்ளவர்கள் இதன் ஆழத்தன்மையை விளங்கிக் கொள்ள வேண்டியதும் அவசியம்..!

தமிழர்களின் இனத்துவம் தனி மத நிலையில் இருந்து.. கூட்டு மத நிலைக்கு வந்திருப்பதை (மத விரிவாக்கள் உலகில் ஏற்பட்ட பின்) ஏற்றுக் கொண்டு.. மதங்களையும் இனத்துவ அடையாலத்திலிருந்து விலக்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்கின்றனர். பிரதிவாதங்களின் நிலையை சொல்லி சிறப்பாக இதை எமது கவிஞர் புதுவை அவர்கள் விளக்கியுள்ளார்...! பல மதங்கள் உள்ள ஒரு இனத்துவத்தில் மதங்களைக் கையாள்வதில் உள்ள சிக்கல் தன்மை கருதி அவர்கள் சில எச்சரிக்கைகளை சொல்லி இருப்பினும்.. மதங்கள் பண்பாட்டின் ஒரு அம்சமாகியுள்ளது என்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். மத ஒழிப்பை.. அவர்கள் வலியுறித்தி.. இனத்துவம்.. தேசியம் பற்றிப் பேசவில்லை என்பதையும் கருத்தில் கொள்வது முக்கியம்.

சுருங்கக் கூறின்.. மதம் இனத்துவ.. தேசிய அடையாளமாக இருப்பதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளனர். இருந்தாலும் அவற்றில் உள்ள (மதங்களில் மதம் பிடித்தவர்கள் உள்ளதால்.. அதில் உள்ள தற்போதைய வடிவில் இருக்கும்) சிக்கல் தன்மை.. என்பனவற்றையும் சுட்டிக்காட்டி உள்ளனர்..!

பண்பாடு.. கலை.. அதன் விழுமியம் (மூடநம்பிக்கைகள் சார்ந்தல்ல) சார்ந்து எம்மோடு வரவேண்டும் என்பதும்.. நவீனத்துவத்தோடு அவையும் தனித்து எம்மைத் தொடர வேண்டும் என்பதும்.. முன்னிறுத்தப் பட்டிருக்கிறது. இவற்றைத்தான் யாழில் நாமும் இணைந்த காலந்தொடக்கம் வலியுறுத்தி வருகின்றோம்..! அடுத்த இனங்களின் பண்பாடு.. கலைகளை எமதாக்கி அவற்றுக்குள் எமது தனித்துவத்தை இழந்து விடுவது.. ஆபத்தானது... என்றுமே கூறிவருகின்றோம்..! இதற்காக எமக்களிக்கப்பட்ட பட்டம்.. கலாசாரா பண்பாட்டுக் காவலர்கள் மதவெறியர்கள் போன்றனவே. இப்படியான எமக்கெதிரான உச்சரிப்புகளை இங்கு அனுமத்தித்ததுடன்.. பல தடவைகள் ஒரு பக்கச்சார்பான நிலையில்.. யாழ் கள நிர்வாகமும்.. எமக்கெதிராக செயற்பட்டதை இங்கு குறிப்பிட்டுக் கூறலாம்..! அந்த நிலையை அவர்களும் மீளாய்வு செய்ய இந்த நிலவரம் உதவியளிக்கும்.. ஒரு தெளிவான பார்வையை வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம்..!

150 வது நிலவரத்தை யாழில் காணலாம்..!

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry401752

150 வது நிலவரத்தை பதிவிலும் பார்க்கலாம்.. (நிலவரத்தின் மீதி பின்னர் தொடரும்..)

http://www.pathivu.com/?ucat=nilavaram&file=130408

Edited by nedukkalapoovan
நிலவரம் நிகழ்ச்சி நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது - மோகன்

சுருங்கக் கூறின்.. மதம் இனத்துவ.. தேசிய அடையாளமாக இருப்பதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளனர். இருந்தாலும் அவற்றில் உள்ள (மதங்களில் மதம் பிடித்தவர்கள் உள்ளதால்.. அதில் உள்ள தற்போதைய வடிவில் இருக்கும்) சிக்கல் தன்மை.. என்பனவற்றையும் சுட்டிக்காட்டி உள்ளனர்..!

நெடுக்கலபோவான்,

எங்கள் எல்லோருக்கும் பார்க்கக் கண்ணும் கேட்க் காதும் புரிந்து கொள்ள தமிழ் மொழியும் தெரியும் அதற்கு நீங்கள் இடையில் அவசியம் அல்ல.மேலும் நீங்கள் எந்த நிலவரத்தைப் பார்த்து விட்டு இப்படி எழுதி இருகிறீர்கள் என்று தெரியவில்லை.

இனத்தை அடையாளம் செய்பவையாக மொழியும் பண்பாடும் பிரதானமாக இருப்பதாகவே கூறப்பட்டது.முதலில் ஒரு மதம் என்று இருந்தது இன்று பல் மதங்களாக இருப்பதாகக் கூறப்பட்டது.

//மதங்கள் பண்பாட்டின் ஒரு அம்சமாகியுள்ளது என்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளனர்//

மதமும்,பண்பாடும் ஒன்றல்ல.அதனாலேயே அவை வெவ்வேறாக இனத்துவ அடையாளாமாகக் கூறப்பட்டன.மதம் பண்பாட்டின் ஒரு அம்சம் என்று எங்கே கூறப்பட்டது?மதம் அற்ற ஒருவர் தமிழப் பண்பாட்டின் படி வாழ முடியும்.மதத்தை மறுதலிப் பதும் தமிழப் பண்பாட்டின் ஒரு அம்சமாக தொன்று தொட்டே சிதர்கள் காலம் முதல் இருந்து வந்திருக்கிறது.

மத்தைப் பற்றிய விமரிசனத்தைத் தனியாக வைப்போம் என்றும் அது வெடி பொருள் எனவும் அதனால் அதனைப்பற்றி அவர்கள் அதிகம் பேசவில்லை.இன்று மததிற்கு மதம் பிடி திருக்கிறது என்றும் கூறப்பட்டது.

//சுருங்கக் கூறின்.. மதம் இனத்துவ.. தேசிய அடையாளமாக இருப்பதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளனர்.//

இப்படி எங்கே கூறி இருந்தனர்? மதங்கள் என்று தான் கூறப்பட்டது..முன்னர் ஒரு மதமாக இருந்தது இன்று பல மதங்களாக இருப்பதாகக் கூறப்பட்டது.தேசிய இனத்தின் பிரதானமான அடையாளம் மொழி மற்றும் பண்பாடு எனவே கூறப்பட்டது.

மேலும் நீங்கள் எவ்வகையான கருதாடல்களை யாழ்க் களத்தில் நடாதினீர்கள் என்பதை எல்லோரும் அறிவோம்.ஆகவே மேலும் மேலும் உங்களைப் பாதுகாக்கும் இவ்வாறான திருவுகளை எழுதி நகை பொருள் ஆகாதீர்கள்.இவ்வளவு அவசரப்பட்டு நீங்கள் இப்படியான ஒரு திரிபை எழுத வேண்டிய அவசியம் எனோ? :D

///மதமற்ற இனத்துவம் //

மத அடையாளம் அற்ற தேசியம், அதாவது ஒரு குறிப்பிட்ட மதத்தால் அடையாளப் படுத்தப்படாது பல மதங்களால் அடையாளப்படுத்தப்படும் தேசியம்.

அதாவது தமிழர் என் போருன் மதங்களாக சைவமும்.கிருத்துவமும் இசுலாமும் இருக்கின்றன என்பதே சொல்லப்பட்டது.ஒரு குறிப்பிட்ட மதத்தைக் கொண்டு தமிழ்த் தேசியம் அடையாளப் படுத்தப் படவில்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விளக்கம் நெடுக்ஸ். மதங்கள் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று ஏமாற்றிச் சமத்துவம், சகிப்புத்தன்மை, முன்னத்துவம், பின்னத்துவம், பிச்சைத்துவம் பேசி இன அடையாளங்களை அழிக்கக் கூடாது என்பதற்கு நல்லதொரு விளக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத் தலைவரின் மாவீரர் அறிக்கையை சாதாரண மக்களுக்கு விளங்க வைக்க காலஞ்சென்ற அரசியல் ஆலோகர் அன்ரன் பாலசிங்கம் பெரிய விளக்கவுரையை ஆற்றுவார். அதுபோல அதிகாரப்பற்றற்ற விளக்கவுரையை நெடுக்ஸ் தந்துள்ளார்.. இதனைப் பாராட்டி அவரை அதிகாரப் பற்றுள்ள விளக்கவுரையாளாராக நியமிக்க பரிந்துரைப்போம் :D

  • கருத்துக்கள உறவுகள்

நடேசன் அண்ணாவின் கருத்துக்கு ஒருவர் விளக்கம் கொடுத்ததுமில்லாமல், இளைஞர்கள் பொங்கி எழுந்தார்கள் என்று பறைஞ்சாரே அதை விட இது பரவாயில்லை

ஒரு இனம் ஒரு மதமாக இருந்த கல்தோன்றி மண்தோன்றா காலத்தில இருந்தே இந்து மதம் தமிழரோடை பிறந்த ஒரு இனத்துவ அடையாளம் எண்டு தானே சொல்லுப்படுகுது.

இன்று புலம்பெயர்ந்தவர்கள் விடுமுறை ஓய்வு நேரங்களில் ஒன்றாக சங்கமிக்க மதம் தேவை தானே. தாயக நாட்காட்டி விக்கவும் தேவை எண்டும் சொல்லாம்.

எனவே மதமும் எங்கடை அடையாளத்துக்கு முக்கிய காரணம். பழந்த தமிழர்களான இந்துக்கள் தான் தூய்மையான தமிழர்கள் தமிழ் தேசியத்துக்கு உரித்துடையவர்கள் என்று நிறுவலாம்.

தமிழரின் இனத்துவ அடையாளத்துக்கு தேவையானவை:

-1- இந்து மதம்

-2- சோம்போறி வாழ்வு முறை

-3- சினிமா சின்னத் திரை போன்ற கலைகள்

-4- சமஸ்கிருதம் கலந்த ஸ்தமிழ் மொழி

நேற்றும் கூப்பிட்டவை கோயில் வாசலிலை வெண்புராவு்க்கு உண்டியல் தூக்குவம் வாங்கோ எண்டு. நான் போக இருந்தவங்களையும் அடக்கிபோட்டன்.. இங்கை குறுக்காலை ஒண்டு வந்து நிண்டு கோமாணம் பன்னாடை எண்டு பல்லுகூட விளக்காமல் விளக்கம் தர வெளிக்கிடும் எண்ட பயத்திலை....!

யாழிலை காடூண் போட்டு, புறக்கணி லங்காவவை மட்டும் கணணிக்கு முன்னாலை இருந்து செய்தா தேசியம் பலப்படும் எண்ட நம்பிக்கை வந்துட்டுது...

மேலதிகமா யாராவது சந்தோசமா ஒரு கருத்தை எழுதினால் அதுக்கு கோணத்தை கொடிகட்டி பறக்கவிடுகிற கதையை சொல்லியும் தேசியத்தை பலப்படுத்தலாம்....

நான் முந்தி எல்லாம் எல்லாரும் சேர்ந்ததுதான் தேசியம் எண்டு நினைச்சனான் ஆனால் எனக்கு பிடிச்சமாதிரி மற்றவை நடக்கிறது தானே தேசியம், அதுதான் அதை வளர்க்கும் வளி எண்டதையும் இங்கைதான் அறிந்து கொண்டு திரிந்தினான்....!

சக மனிதனை(தமிழனை) மதிக்க தெரியாதவன்தான் இப்போதைக்கு சிறந்த தேசியவாதி....

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சா.. மதங்களைப் பற்றின அறிவு உள்ளவர்கள் உண்டியல் குலுக்க வரவில்லை என்று தெளிவாகத் தெரிஞ்சுது.. "பொங்கல் வாழ்த்துக்கள்" என்று சொல்லிக் குலுக்கிக்கொண்டிருந்தார்கள

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் இனத்துவ அடையாளத்துக்கு தேவையானவை:

-1- இந்து மதம்

-2- சோம்போறி வாழ்வு முறை

-3- சினிமா சின்னத் திரை போன்ற கலைகள்

-4- சமஸ்கிருதம் கலந்த ஸ்தமிழ் மொழி

தமிழரின் இனத்துவ அடையாளத்தை இனங்காட்டுவதில் சைவ - இந்து மதத்தின் பங்களிப்பும் இருந்திருக்கிறது.. இருக்கிறது. இதை மேலுள்ள விவாதத்தில் தெளிவாகக் குறிப்பிட்ட புதுவை அவர்கள்.. ஒரு தேவாரத்தை உதாரணமாகக் கையாண்டு.. தமிழ் மொழியின் செல்வாக்கு இந்து மதத்துள் எவ்வகையில் நிலைத்திருந்தது என்பதையும் சுட்டிக்காட்டினார். அதேபோல்... பிற மதங்களின் பங்களிப்பையும் அவர் சுட்டிக்காட்டினார். மடுமாதா பற்றிய விடயத்தை உதாரணமாகக் காட்டியிருந்தார்.

கலாநிதி சோமஸ்காந்தன்.. மதங்கள் தமிழர் பண்பாட்டின் ஒரு கூறாக இருக்கின்றன என்பதை வெளிப்படுத்தினார். இருப்பினும்.. அவர் குறித்த விவாதத்தில் மதங்கள் பற்றி அதிகம் பேசுவது சரியல்ல என்று குறிப்பிட்டார். புதுவை மதம் தொடர்பான தனது கருத்தின் இறுதியில்.. மதங்கள் தொடர்பான விமர்சனங்கள் எவ்வகையாக இருப்பினும்.. அவற்றுக்கு அப்பால் மதங்களும் இனத்துவத்தில் முக்கியமானது.. மொழி பண்பாட்டோடு என்று குறிப்பிட்டிருந்தார்...!

ஆக இருவரும்.. மதங்கள் மக்களின் மீது செய்யும் செல்வாக்கை உணர்ந்து கருத்துச் சொல்லி இருக்கின்றனர். அதேவேளை ஒரு மதத்துக்கு என்று சாராது.. எல்லா மதங்களையும் அரவணைக்கும் தன்மையையும் வெளிப்படுத்தி இருக்கின்றனர். அதேவேளை மத ஒழிப்பு.. அழிப்பு.. மதம் சார்ந்த சமூக அழிப்பு.. அடையாள அழிப்பு.. பண்பாட்டு அழிப்பு.. என்பவற்றை அவர்கள் ஒரு வரிக்குத்தானும் உச்சரிக்கவில்லை. மதங்களை நிந்திப்பதை.. அதன் மூலம் மக்களின் உணர்வுகளை சீண்டி பகைமை வளர்ப்பதை அவர்கள்... செய்ய முனையவில்லை..! ஆனால் யாழ் களம்.. மத நிந்திப்புக்கு.. அல்லது துவேசத்துக்கு அதிகளவு இடம்கொடுத்து வருவது கவலைக்குரியதுடன்.. குறிப்பாக தேர்ந்தெடுத்து இந்துமதத்துக்கு எதிராக கடைந்தெடுத்த.. பாசிசவாதத்தை அனுமதிக்கிறது. அதற்கு ஒரு வியாக்கியானமான விளக்கமும்.. அளிக்கிறது. இந்துமத்தை இந்துக்கள் தூசிக்கலாமாம் எங்கிறார்.. யாழின் நிர்வாகத்தில் உள்ள ஒருவர். நாத்திகன் எப்படி இந்துவானானோ தெரியவில்லை..! இவை எல்லாம் எமது தேசியத்தைப் பலப்படுத்தும் பணிக்கு எவ்வகையில் உதவி செய்கிறது என்பதுவும் கேள்விக்குரியதா இருக்கிறது..! இது கூட மோகன் எதிர்பார்க்கும்.. யாழை தமிழ் தேசியத்துக்கான செயற்பாட்டுக்கு அர்ப்பணிப்பதில் தடங்கல்களை உண்டு பண்ணி இருக்கலாம்..!

தாயக மண்ணில் உழவுத் தொழிலை பிரதானமான தொழிலாகக் கொண்டிருந்த தமிழன் சோம்பேறியா..??!

மனிதர்களை அடிமையாக்கி.. அகதியாக்கி.. தான் போடும் ஊதியப் பிச்சைக்கு உழைக்க வைத்துப் பிச்சை போடும்.. மேற்குலகத்துக்கு வந்து கூலிக்கு மாரடிக்கும்.. கூலிகள் சோம்பேறிகளா..??! குந்தி இருந்து குதர்க்கம் பேசுவது போன்றதல்ல.. உழைப்பு என்பது. எவனோ மண்டை பிச்சு.. கண்டுபிடிச்சதுகளை..அனுபவிக்க

.. கூலிக்கு மாரடிச்சு.. அடிமை வாழ்வு வாழ்ந்து.. சோம்பேறித்தனம் வளர்க்க.. மேற்குலக நாடுகளில் பதுங்கின கூட்டம்.. சோம்பேறித்தனம் பற்றிப் பேசுவது.. கேவலமான தன்னிலை அறியாத ஒரு நிலை.. சுயசார்பை தூக்கி எறிந்த சோம்பேறிகள்.. அடுத்தவனைப் பார்த்து சோம்பேறி என்பதற்கு என்ன தகுதி இருக்குது..!

சினிமா சின்னத்திரை.. பண்பாடு கலை இவற்றினை குறைந்தது 10% மாவது வெளிப்படுத்தும் ஊடகங்களாக உள்ளன. இன்றைய புலம்பெயர் சூழலில்... சின்னத்திரையும் சினிமாவும் தான் தமிழை அறியாததுகளும் தமிழை உச்சரிக்க.. காரணமாகியுள்ளன. இங்கு கணணியில் குந்தி இருப்பவர்கள் செய்யும் விதண்டாவாதமல்ல.. தமிழை அறியாத தமிழ் வாரிசுகளுக்கு சொற்களஞ்சியத்தை (அவை தரமானவையா இல்லையா என்பது வேறுவிடயம். தரமில்லை என்றால்.. தரமானதை வழங்க ஊக்கு விக்க வேண்டும்.. அல்லது அழுத்தங்களை அறிவுரைகளை.. வழிகாட்டல்களைக் கொடுக்க வேண்டும்.) வழங்கிக் கொண்டிருக்கிறது.

சினிமா.. சின்னத்திரை.. 100% தமிழர் பண்பாடு கலைகளை தாங்கி வருகின்றது என்பதல்ல எமது வாதம். அவை தாங்கி வரும் ஒரு 5% மான தமிழர் கலை பண்பாடு என்பதாவது.. மக்களிடம் போய்ச் சேர்கிறது என்பது என்னவோ உண்மைதான்.

காப்பிலி ராப்பைக் காட்டிலும்.. தமிழ் சினிமா... அதிக அளவில்.. தமிழர் பண்பாடு.. கலைகளை இனங்காட்டுகிறது என்றால் அது மிகையல்ல..! இன்றும் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை.. தங்கப்பச்சான் சேரன் சீமான் மற்றும் தமிழுணர்வுள்ள இயக்குனர் போன்றவர்கள்.. தமிழர் பண்பாட்டின் கலையின் ஒரு பிரச்சார வடிவமாக திரையைப் பாவிக்கலாம் என்று எண்ணிச் செயற்படுகின்றனர்..! இவற்றை எல்லாம் இலகுவில் புறக்கணித்துவிட்டு.. இங்கு அடுத்தவர்களை "பன்னாடைகள்" "பனங்கொட்டைத்தலை" என்று விளிக்கும்..நிலை.. தான் தமிழர் பண்பாட்டை.. கலையை வெளிப்படுத்துகிறது என்று சிலர் கருதுகின்றனர் போலும்..???! :icon_mrgreen:

தமிழ் தனக்கென்று அனைத்தையும் கொண்டிருக்கிறது. அது அடுத்த மொழி சார்ந்திருக்கவில்லை என்று அழகுற தமிழின் தனித்தன்மையை மேற்படி நிலவரத்தில் புதுவை அவர்கள் விளக்கியுள்ளார். கலாநிதி சோமஸ்காந்தன் அவர்கள் கூட தமிழ் தனது தனித்துவத்தோடு.. அதன் அடிப்படை மாறாத வகையில்.. நவீனங்களையும்.. தனக்கென்ற வகையில் நடைமுறை உலகுக்கு எதிர்கால உலகுக்கு ஏற்ற வகையில் உருவாக்கி உள்வாங்கிக் கொண்டு நகர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இது 80 களில் கணணிப் பயன்பாடு அதிகரித்த காலத்திலேயே உருப்பெற்ற ஒரு கருத்து அதை அவர் மீண்டும்.. தெளிவுறுத்தி இருக்கிறார். அவர்கள் தமிழை அடுத்த மொழிகளை இட்டு அஞ்சச் சொல்லவில்லை.

அப்படி இருக்க.. எதற்காக சமஸ்கிரதத்தைப் பார்த்து தமிழ் அஞ்ச வேண்டும். தமிழுக்கு என்று எது தேவையோ அதைச் செய்யுங்கள். சமஸ்கிரதத்தை திட்டினால் தமிழ் வளராது. தமிழ் தனக்கென்று அவசியமான.. அடிப்படை மாறாத.. ஆனால் அவசியமான மாற்றங்களை.. புதிய உருவாக்கங்களை.. உற்பத்தி செய்து.. பூர்த்தி செய்து உள்வாங்க உதவாது..! வெறும் பொழுதுபோக்குக்கு சமஸ்கிரதத்தைத் திட்டி.. பகைமை உணர்வுகளை வளர்ப்பதிலும்.. தமிழுக்கு ஆற்ற வேண்டிய பல பணிகளை ஒரு செயற்திட்டமாக்கி முன்னெடுக்க உதவலாம். அதுதான் தமிழுக்குச் செய்யும் பணி. தமிழனின் தமிழுணர்வின்.. உண்மை வெளிப்பாடு. அடுத்த மொழிகளைப் பார்த்துத் திட்டிட்டு இருப்பது.. சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போன்றது. நாய் குரைப்பதால் சந்திரனுக்கு எதுவும் ஆகப்போவதில்லை. களைக்கப் போவது நாய் தான்..!

எதிர்கால உலகுகில் தமிழின் பயன்பாட்டுக்கு... தமிழின் தனித்துவ மற்றும் அதன் இலக்கண அடிப்படை மாறாத தன்மையுடன்.. புதிய ஒலிவடிவங்கள் அவசியம் என்ற கலாநிதியின் கருத்தை உள்வாங்கிச் செயற்படலாமே.. சமஸ்கிரதத்தைத் திட்டிட்டு.. ராமசாமி.. 1900களில் தனது பத்திரிகை.. விளம்பரத்துக்காக "விடுதலையில்" எழுதிய.. "தமிழன்பர்கள்" முன்மொழிந்த சில எழுத்துச் சீர்திருத்தங்களுக்கு இன்றும் புகழ்பாடிட்டு.. திரிவதிலும்.. உருப்படியா சமகாலத்துக்கு.. எதிர்காலத்துக்கு தேவையானதைச் செய்ய முனையலாமே..! :rolleyes:

Edited by nedukkalapoovan

எங்களுக்கு எல்லாம் தேவை எண்ட காலம் போய் , இது எல்லாம் வேண்டாம் எண்டு சொல்லுகிற கொழுப்பெடுத்த நிலையை தேசியம் அடைந்து விட்டது எண்ட செய்தியை யாழிலை சிலர் சொல்லுகினம்... அது உண்மையோ...??

ஆன்மீகத்தை எப்படியான மக்கள் அணுகுகிறார்கள் எண்டா துன்பத்தில் இருப்பவர்கள் என்கிறார்கள் மனோத்துவ நிபுணர்கள்.... ! புலம்பெயந்து விசா இல்லாதவனும் பிரச்சினைகள் தலைக்குமோல போனவனும், ஊரிலை உறவுகள் நிலையை நினைகிறது்களும் தான், கோயிலுக்கு போறதும், தங்களை மீறி ஒரு சக்தி உதவி செய்யாதா.? எண்று எதிர்பார்க்கிறது இப்ப தேசிய குற்றம் ஆக்கி போடாங்கப்பா...!!

பிரச்சினைக்குள்ள இருக்கும் சனம் கோயிகளை இடிச்சாப்போல தங்கட பிரச்ச்சினைகளை தூக்கி குறுக்கால போவான் போண்றோர் தீர்ப்பார் எண்டு நம்பலாமா....??

தமிழ் மக்கள் தேசியத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதுக்காக குடும்ப தனிப்பட்ட பிரச்சினைகள் தீர்ந்து்விடுமா என்ன..???

மக்களுடைய பிரச்சினைகளுக்கு வடிகாலாக தேசியம் இருக்க வேண்டும் என்பதுதான் யதார்த்தம்... இங்கே தேசியத்தின் பெயரால் பிரச்சினைகள் கூட்டப்படுகிறது...! தடைகள் போடப்படுகிறது... இதை தேசியம் சம்பந்தமான நிலவரம் நண்றாக ஆராய்ந்தது...!

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.