Jump to content

சங்கரநயினார் கோவில் - ஓர் ஆய்வு


Recommended Posts

திருச்சிற்றம்பலம்

ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க

சங்கரநயினார் கோவில்

சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை

திருநெல்வேலி பேட்டை

eswaramoorthypillaimoonflag.jpg

Link to comment
Share on other sites

தோற்றுவாய்

சங்கரநயினார்கோவில் என்பது திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள ஒரு நகரம். அதற்கு அப்பெயர் பழம்பெயரா யிருந்துவருகிறது. அவ்வூர்ப் புகைவண்டி, தபால் முதலிய எல்லாச் சர்க்கார் நிலயங்களிலும், கூட்டாவுச் சங்கங்கள், பாங்குகள், பாடசாலைகள் முதலிய எல்லாப் பிற நிலயங்களிலும் அவை தோன்றிய காலமுதல் நாளிதுவரை அவற்றின் பெயர்ப் பலகைகளில் அப்பெயரே ஊர்ப் பெயராகக் குறிக்கப்பட்டுள்ளது. அதுவே சிற்சிலவற்றில் சங்கரன்கோவில் எனச் சுருக்கியும் எழுதப்பட்டிருக்கும்.

சங்கரநயினார்கோவில் அவ்வூரிலுள்ளதொரு பெரிய சிவாலயம். அப்பெயரே அவ்வூருக்குமாயிற்று. அக்கோவில் வெளியீடாகிய 'நாட் குறிப்பு 1963-1964' என்றதில்

'இத்தலம் கோயிலின் பெயரையே கொண்டு அமைந்த சங்கரநயினார் கோயில் என்ற நகரின்....'

என வந்துள்ளது காண்க.

Link to comment
Share on other sites

sankarankoilgopuram.jpg

பசுபதிகோவில், வைத்தீசுரன் கோவில் காளையார்கோவில் என்ற ஊர்ப் பெயர்கள் போலும் அது.

சங்கரன் என்ற பெயர் சிவனுக்குரியது. நாயனார் என்ற சொல் கடவுள் என்ற பொருளுடையது. இராமன்

'நாயனார் தமைப்பூ சித்தான் கொலைப் பாவ நணுகிடாமே'

என்ற சித்தியாரில் அச்சொல் அப் பொருளி லிருப்பதறிக. அந்நாயனார் நயினாரெனத் திர்ந்தது. ஆகலின் சங்கரநயினார் என்றது சங்கரக் கடவுள் என்ற பொருளுடையதாயிற்று.

Link to comment
Share on other sites

அக் கோவிலில் மூலவர் பெயர் சங்கரலிங்கம். தேவியார் பெயர் கோமதி.

gomathi.jpg

அவ்வூருக்கு வடமொழியிலுந் தமிழிலும் புராண முண்டு. அக் கடவுளையுந் தேவியையும் புலவர் பலர் பாடித் துதித்த நூல்களு முள.

Link to comment
Share on other sites

நெல்லைச் சிவன் கோவிலுக்குக் காந்திமதியம்பா சுவாமி நெல்லையப்பர் தேவஸ்தானம் என்பது பெயர். இப்படி மூலவர் பெயரும் தேவியார் பெயருஞ் சேர்ந்து தேவஸ்தானப் பெயராயிருக்கிற கோவில்கள் பல. மூலவர் பெயர் மாத்திரம் தேவஸ்தானப் பெயராயிருக்கிற கோவில்கள் பல.

tirunelveligopuram.jpg

Link to comment
Share on other sites

திருக் குற்றாலநாத சுவாமி தேவஸ்தானம் என்ற பெயர் காண்க.

courtallamgroupram.jpg

அம்பிகை பெயரால் மாத்திரம் சிவன் கோவில்களுக்குப் பெயரிருப்பதாகத் தெரியவில்லை. அம்முறையில் சங்கரநயினார் கோவிலுக்கும் சங்கரநயினார் தேவஸ்தானம் என்றாவது, சங்கரலிங்க சுவாமி தேவஸ்தானம் என்றாவது, சங்கரன் தேவஸ்தானம் என்றாவது, கோமதியம்பா சங்கரலிங்க சுவாமி தேவஸ்தானம் என்றாவது பெயரிருக்க வேண்டும். அதுதான் முற்றிலும் நியாயம். ஆனால் அச் சிவன் கோவிலுக்கு இப்பொழுது சங்கரநாராயண சுவாமி தேவஸ்தானம் எனப்பெய ரிருந்து வருகிறது. அது சரியா? அன்றாயின் சைவப்பெருமக்கள் என்ன செய்ய வேண்டும்? அதனைக் காட்ட எழுந்ததே இந் நூல்.

Link to comment
Share on other sites

சங்கரநாராயணர்

சங்கரன் என்றது ஒரு தெய்வத்தின் பெயர். நாராயணன் என்றது இன்னொரு தெய்வத்தின் பெயர். அவ்விரண்டுஞ் சேர்ந்து சங்கரநாராயணன் எனப்படுகிறது. ஆகலின் அ·தொரு கூட்டுப் பெயர். அது சங்கரநாராயணர் எனவும் படும். சங்கரநாராயணர் என்றது மரியாதை விகுதி பெற்ற ஒருமைச் சொல்லா? அல்லது பன்மைச் சொல்லேயா? ஒருமைச் சொல் லெனின் ஒருமைப் பொருளில் வருகிற வேறு சில கூட்டுப் பெயர்களும் உள. அவற்றின் பொருளைக் காணலாம்.

சிவசங்கரன் - சிவனெனவுஞ் சொல்லப்படுகிற சங்கரன்.

ஹரிநாராயணன் - ஹரியெனவுஞ் சொல்லப்படுகிற நாராயணன்.

சங்கரசுப்பிரமணியன் - சங்கரனுக்கு மகனாகிய சுப்பிரமணியன்.

சிவசுப்பிரமணியன் - சிவனுக்கு மகனாகிய சுப்பிரமணியன்.

ராமலிங்கம் - ராமனாற் பூசிக்கப்பட்ட சிவலிங்கம்.

சங்கரலக்ஷ்மி - சங்கரனுக்குச் சகோதரியாகிய லக்ஷ்மி

சுப்புலக்ஷ்மி - சுப்பிரமணியனுக்கு மாமியாகிய லக்ஷ்மி

ராமலக்ஷ்மி - ராமன் வடிவில் வந்த நாராயணனுக்கு மனைவியாகிய லக்ஷ்மி.

சீதாராமன் - சீதைக்கு கணவனாகிய ராமன்.

ராமகிருஷ்ணன் - ராமனாகவும் கிருஷ்ணனாகவும் வந்த நாராயணன்.

Link to comment
Share on other sites

லக்ஷ்மி நாராயணன் - லக்ஷ்மிக்குக் கணவனாகிய நாராயணன்.

சீதாலக்ஷ்மி - சீதையின் உருக் கொண்ட லக்ஷ்மி.

ரவிசங்கரன் - சூரியனுக்கு அந்தரியாமியாகிய சங்கரன்.

சிவசூரியன் - சிவனை அந்தரியாமியாகவுடைய சூரியன்.

சூரியநாராயணன் - சூரியனுக்கு அந்தரியாமியாகிய நாராயணன். பன்னிரு சூரியருள் நாராயணன் என்னும் பெயருடைய ஒரு சூரியன்.

சிவராமன் - சிவனை வணங்கிய ராமன்.

தாணுமாலயன் - உருத்திரனும் நாராயணனும் பிரமனும் ஆகிய சங்கரன்.

சங்கரநாராயணன் - சங்கரனுக்கு அடியானாகிய நாராயணன். சங்கரனை அடியானாகக் கொண்ட நாராயணன்.. சங்கரனுக்கு மனைவியாகிய நாராயணன்.

ஹரிஹரன் - ஹரியைத் தலைவனாகக் கொண்ட ஹரன். ஹரிக்குத் தலைவனாகிய ஹரன். ஹரியாகிய ஹரன்.

லக்ஷ்மி நாராயணன் - லக்ஷ்மிக்குக் கணவனாகிய நாராயணன்.

சீதாலக்ஷ்மி - சீதையின் உருக் கொண்ட லக்ஷ்மி.

ரவிசங்கரன் - சூரியனுக்கு அந்தரியாமியாகிய சங்கரன்.

சிவசூரியன் - சிவனை அந்தரியாமியாகவுடைய சூரியன்.

சூரியநாராயணன் - சூரியனுக்கு அந்தரியாமியாகிய நாராயணன். பன்னிரு சூரியருள் நாராயணன் என்னும் பெயருடைய ஒரு சூரியன்.

சிவராமன் - சிவனை வணங்கிய ராமன்.

தாணுமாலயன் - உருத்திரனும் நாராயணனும் பிரமனும் ஆகிய சங்கரன்.

சங்கரநாராயணன் - சங்கரனுக்கு அடியானாகிய நாராயணன். சங்கரனை அடியானாகக் கொண்ட நாராயணன்.. சங்கரனுக்கு மனைவியாகிய நாராயணன்.

ஹரிஹரன் - ஹரியைத் தலைவனாகக் கொண்ட ஹரன். ஹரிக்குத் தலைவனாகிய ஹரன். ஹரியாகிய ஹரன்.

Link to comment
Share on other sites

இப்படியே பிறவற்றையும் யோசித்துக்கொள்க. அச்சொற்களுக்கு வேறு பொருள் கூறுவாருங் கூறலாம். எப்படியும் சங்கரநாராயணர் என்பது ஒருமைச் சொல்லாகி ஒருமைப் பொருள் தரும் என்பது தான் முக்கியம்.

அச்சொல் பன்மையாயின் அது சேர சோழ பாண்டியர், இராமகிருட்டினர், சங்க பத்மர் முதலியன போல் சங்கரநாராயணர் என்று தானிருக்கும்; சங்கரநாராயணன் என்றிருக்க இலக்கணத்தில் இடங் கிடையாது. சங்கரநாராயணன் என்றிருக்க இலக்கணத்தில் இடங் கிடையாது. சங்கரநாராயணன் என்பது ஒருமையே.

சேர சோழ பாண்டியர் - சேரனும் சோழனும் பாண்டியனும்

இராமகிருட்டினர் - இராமனும் கிருட்டினனும்

சங்க பத்மர் - சங்கனும் பத்மனும்.

சங்கரநாராயணர் - சங்கரனும் நாராயணனும்.

ஆகலின் சங்கரநாராயணரென்பது பன்மையாய்ச் சங்கரனும் நாராயணனுமாகிய இரு வேறு கடவுளரெனின் அவ் விருவருக்கும் அக்கோவிலில் சமமான முதன்மையுண்டு என்பது சித்திக்கிறது. ஆனால் அங்குப் பிரதான மூர்த்தியாகிய மூலவர் சங்கரலிங்கம். ஆகலின் அது சங்கரன்கோவிலே யாகும். நாராயணன் அங்குப் பிரதான மூர்த்தியாதல் சிறிது மில்லை. நரசிம்மன், துர்க்கை, சனி, சூரியன் முதலிய தெய்வங்கள் போன்று சங்கரநாராயணனும் நாராயணனும் பரிவார தேவதைகளாயிருப்பதில் ஆ§க்ஷப மில்லை. ஆகலின் சங்கரநாராயணர் கோவில் என்றதிலுள்ள சங்கரநாராயணர் என்றது கூட்டுப் பெயராகிப் பன்மைப் பொருளில் இருக்கமுடியா தென்க.

Link to comment
Share on other sites

தல புராணம்

அத் தலத்து வடமொழிப் புராணத்துக்குப் 'பூ கைலாஸ §க்ஷத்ர மாஹாத்மியம்' என்றது பெயர். அப்புராண முடிவில் 'சங்கரநயினார் கோவில் ஸ்தல புராணம் முற்றுப் பெற்றது' என அச்சிடப்பட்டுள்ளது. அத்தலத்துத் தமிழ்ப் புராண 4-ஆம் பதிப்பில் உபக்கிரமமாக 12 துதிப் பாடல்க ளுள. அவற்றுள் ஒன்றாவது சங்கரநாராயணனுக் கில்லை. இறுதி வாழ்த்திலும் அவனுக்கு 'வாழி' கிடையாது. 129. 43-ஆம் பாடல் காண்க. மேலும்.

'சங்கரேசுரர் வாழ்தலம்' (50 . 4),

'சைவநற் றலமாஞ் சீரா சைப்பதி' (51 . 10),

'திங்களணி வேணியர் நகர்' (59 . 11) என்றதால் அத்தலம் சங்கர தலமே யாகும்.

'கடகரி யுரித்த கடவுள் மான்மியம்' (5 . 13),

'காதைகள் தனிற்சி ரேட்டங் கடவுள் தன் காதை யாகும்' (52 . 20),

'சங்கர மூர்த்தியின் பெருமை சொல்வீர்' (61 . 27),

'.........தையலா வுடையாள் பங்கின்

மேவிய இறைவன் காதை விருப்புடன் படிப்போர்

கேட்போர் - ஓவறு நிதிபெற் றோங்கி வுவப்பொடும் வாழி' (129 . 43)

என்றதால் அப்புராணம் சங்கர சரிதமே யாகிச் சங்கரநயினார் கோவில் தல புராணம் என்பதே முற்றிலும் பொருத்தமான பெயராகும். அப் புராண சருக்கங்களுள் ஒன்று 'சங்கரநாராயணரான சருக்கம்' என்பது. பின்னுள்ள சருக்கங்களில் யார்க்கும் சங்கரநாராயண வுருவக் காட்சி யளிக்கப்பட்டதாகக் கதையில்லை. அங்ஙனமாக அத் தமிழ்ப் புராணத்துக்கு அதன் பழம் பெயரை மாற்றி அவ வடமொழிப் புராணப் பெயருக்கும் விருத்தமாகச் 'சங்கரநாராயண சுவாமி கோயிற் புராணம்' எனப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது தகுமா?

Link to comment
Share on other sites

சங்கரநாராயணரான கதை

கயிலை உமை சிவனை வணங்கி

'மாலுடன்நீ - தண்ணும் அவ்வுருக் காண வேட்டனன்' (75 . 27)

எனக் கேட்டாள். சிவனும் அவளுக்குப் புன்னைவனத்தில்

'தானும் மாலும்ஒன் றாகிய வடிவினைத் தயங்க - மான்

உலாங்கரத் திறையவன் காட்டினன் வணங்கிக் - கான்

உலாங்குழல் உமையவள் கண்டுகண் களித்தாள்' (78 . 47)

இது பூர்வ கதை. பின்னர் இக்கோலத்தைச் சங்கன், பத்மன் என்ற பாம்பரசர் கண்டனர். இது பின் நிகழ்ச்சி. பத்மன்.

'பசுந்துளவோன் பாதந் தேர்ந்து' (79 . 54)

அதாவது விஷ்ணுவே பரம் பொருள் எனக் கொண்டு தவம் புரிந்தான். ஆனால் அந்நாராயணன் சங்கரனோ டொன்றாகி வந்திலன். அவன் அந்த

'அரா வரசின்முகம் விரும்பி நோக்கிப் - படைப்பாலும்

அளிப்பானும் வேறுளரோ அமரரெனப் படுவோ ரெல்லாஞ் -

சுடர்ப்பால்வெண் மதிக்கொழுந்து சூடினோன் கூறாவார்

சொல்லுங் கால்தன் - இடப்பாலா நம்முருவும் ஆங்கவனே

காட்டும்என இசைத்தா னன்றே' (80 . 56)

எனச் சொல்லித் தன்னிடத்திலேயே யிருந்துவிட்டான்.

'....மாணிக்கக் குன்று சேர்ந்த - முழு நீலப் பொருப் பென்னத்-

தன்னொருபால்......அரவணையா னுருத்திகழ அந்திவண்ணன்

.....வெவ்வரா வரசர்முனம் வெளிப்பட்டான்' (90.59).

Link to comment
Share on other sites

ariarthar.jpg

அச்சங்கரநாராயண வுருவை அப்பாம்பரசர் துதித்தனர். அதில் சங்கன் துதித்ததாகத் தனித்துதி யொன்றுமில்லை.

'நாறிதழ்க் கமலச் செங்கண் நளிமலர்த் துளபமால் உன் -

கூறென வுணர்கி லாது கூரறி வின்மையாலே - வேறென

வுணர்ந்து ளேற்கு விழியருள் சுரந்த தென்னை - ஆறணி கடவு

ளென்றாங் கடிதொழு துரைத்தான் பத்மன்' (81 . 16)

எனப் பதமன் செய்த தனித்துதி வருகிறது. அவன்றான் நாரணனே பரம்பொருள் என்ற மயக்க முள்ளவனாக இருந்தான். 'சங்கரனே! நீ தான் அமிசி (பூரணப் பொருள்), நாராயணன் உன் அமிழமே ( ஒரு கூறே), இது வரை நான் அதனை யறிந்திலேன்' என அம் மயக்கத்திலிருந்து விடுபட்டுக் கூறினான் அவன். அது முதல் சங்கரணே பரமாத்மா என்ற வுண்மை அவனுள்ளத்தைக் கவர்வதாயிற்று. அவனுடைய தவத்துக்கு இலக்காயிருந்த நாராயணனும், மற்றைப் பிரமன் முதலிய தேவருமாகிய எல்லாரும் சங்கரனின் அமிசங்களென்பதை அந்த (80 . 56) ஆம் பாடலிற் காண்க. நாராயணன் அமிசம், சங்கரன் அமிசி. அகலின் நாராயண சங்கரன் என்பது தான் ஹரிஹரன் என்பது போலும் சரியான தொடர். அது சங்கரநாராயணன் என மாறிக் கிடந்தது. இல்முன் என்றது முன்றில் என்பது போலும் அது. அமிசியாகிய சங்கரனே பரமாத்மா. நாரணன் முதலிய அனைத்துப் பிற தெய்வங்கலும் அமிசங்களே. ஆகலின் அவை தம்மளவில் பரமாத்மா வாகமாட்டா.

'உரையது கேட்ட லோடும் உரகர்தம் வதன நோக்கி - முருகவி

ழிதழி வேய்ந்த முதல்வனே பெரியோன் அன்னோற் - கர

விடைத் துயிலுமாலும் - அயிக்கமாம் பொருளா மென்றே - மருளி

லத் திரிதொன் னூலான் மலைவறக் கூறி னானே' (74 .16)

என்றது காண்க. அமிசியில் அமிசம் அயிக்கிய மாவது போல் சங்கரனில் நாராயணன் அயிக்கியமே யாவான் என்றார் அத்திரி முனிவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்பரே! மிகவும் நயமாக கட்டுரையை நகர்த்திக் கொண்டு செல்கிறீர்கள்.

எனக்கும் ஒரு சிறு ஐயமுண்டு!

'தெய்வத்தின் குரல்" லில் ஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகள் கூறுகிறார்!

மகாவிஷ்னுவானவர் சங்கரனாகிய சிவனுக்குப் பத்னி யென்றும், அவரே தாயார் மகாலஷ்மிக்கு மணவாளன் என்கிறார்.

ஆயினும்பாற்கடலில் அறிதுயில்கொள்ளும் மகாவிஷ்னுவின் உந்திக்கமலத்தினின்றும் தோன்றி பாற்கடலின் மேலெழுந்த தாமரை மலரிலே தான் பிரம்மதேவர் தோன்றுகிறார்.

பின் அப் பிரம்மதேவரே உலகைச் சிருஷ்டி செய்யும் பொருட்டு தனக்குதவியாக மானச புத்திரர்களாக சனகாதி முனிவர்களைத் தோற்றுவிக்கிறார்.ஆயினும் அம் முனிவர்கள் தந்தைக்கு உதவி செய்ய மறுத்து வைகுண்டம் சென்று விடுகின்றனர்.

இதனால் கோபமுற்ற பிரம்மதேவர் அதே கோபத்துடன் தன் நெற்றிப்புருவத்தினின்றும் ருத்திரனைப் படைக்கிறார். அந்த ருத்திரன்தானே சிவன்! அல்லது அந்த ருத்திரனும் சிவனும் வேறுவேறான இருவரா?

அப்படியாயின் விஷ்னு சிவனுக்குப் பேரனாகத்தானே வருகிறார்! ?

இதற்கு கொஞ்சம் விளக்கம் கிடைக்குமா?

Link to comment
Share on other sites

நன்றி நண்பரே! தொடர்ந்து படியுங்கள்!! விளக்கம் கிடைக்கும்.

உமை கோமதியாகிச் சங்கரநாராயண வடிவைக் கண்டான். அவ்வடிவில் வந்த சங்கரன் அக்கோமதியை நோக்கி,

'அளிப்பன் வேண்டிய தியம்பென அருளின னருளால்' (78 . 48)

என்றான். அவளும் 'சுவாமி! நீர் இவ்வடிவோடு இத்தலத்தில் என்றும் வீற்றிருந்து பக்தர்களுக்குச் சர்வாநுக்கிரகமுஞ் செய்தருளுவீராக' என வரம் வேண்டியிருக்கலாம். தபோதனரெல்லம் தமக்குக் காட்சி தந்த கடவுளிடம் அப்படியே கேட்டிருக்கின்றனர். பல புராணங்களில் அன்ன வேண்டுகோள் உண்டு. ஆனால் அவள் அப்படிக் கேட்கவில்லை. அவள் அவ்விரட்டை யுருவில் வந்த சங்கரனை நோக்கித்,

'தழைத்த காதலான் மலைமகள் தாங்குமிவ் வுருவம் ---

ஒழித்து நின்னுருத் தாங்குவா யெனவுரைத் திடலுங் ---

குழைத்த பைந்தளிர்க் கொன்றையான் றன்னுருக்

கொண்டு - மழைக்கண் மாதொடு புன்னையங் காவினில் வதித்தான்' (79 . 49)

என்றபடி அவ்விரட்டையுருவை ஒழித்துவிட்டு அவனுக்கே யுரிய உருவைக் கொள்ளச் சொல்லிப் பிறகு அவனோடு தானும் புன்னைவனத்தில் எழுந்தருளி யிருந்தாள். நின்னுரு -- அவ்விரட்டையுரு வல்லாத சங்கரன் சொந்த வுரு.

'.....சங்கர : அவோசதித்தம் தேவீத்வம் வரம் வரய ஸ¤வ்ருதே || தேவ்யுவாச || பவசர்வயதா பூர்வம் பவமத் ப்ராண வல்லப : || அத்ரைவ ருத்ர ஸாந்நித்யம் சங்கரஸ் ஸர்வ தேஹி நாம் || இதி கெளரீ வசச் சுருத்வா மூர்த்திம் தத்ரைவதாம் சிவ: || ஸங்கோப்ய லிங்கரூபேண தயாஸஹஸ மோததே ||' என்ற வடமொழிப் புராண வாக்கியத்தையும், 'சங்கரரானவர் மிகுந்த சந்தோஷத்துடன் கூடியவராய் தேவியைப் பார்த்து ஹே தேவி உன்னுடைய தபசானது ரொம்ப நன்றாச்சுது உனக்கு வேண்டிய வரத்தைக் கேட்டுக்கொள்ளென்று சொன்னார். தேவி சொல்லுகிறாள், ஓய் பிராண நாதரே முன்போல உம்முடைய சுவய ரூபத்தை அடையும் இந்த ஸ்தலத்தில் தானே ஒரு இடத்தில் சகலப் பிராணிகளுக்கும் §க்ஷமத்தைச் செய்கிறவராய் சான்னித்தியஞ் செய்து கொண்டிருக்கவேணு மென்று பிரார்த்தித்தாள். இந்தப் பிரகாரஞ் சொன்ன வசனத்தை பரமசிவன் கேட்டு அந்த சங்கரநாராயண ரூபத்தை மறைத்து அந்த உமாதேவியுடன் லிங்க ரூபத்தோடு அந்த ஸ்தலத்தில் தானே சந்தோஷத்துடன் வசிக்கிறார்'

Link to comment
Share on other sites

என்ற அதன் தமிழையுங் காண்க. சங்கரனும் கோமதியும் வீற்றிருந்து ஆன்மாக்களுக்கு அநுக்கிரகித்து வரும் புன்னைவன சேத்திரக் கோவிலில் சங்கரநாராயண கோலமாகிய இரட்டை யுரு இருப்பதைக் கோமதியே விரும்பவில்லை. அவ்விரும்பாமையைச் சங்கரனும் சம்மதித்தான் என்ற வுண்மையை மேற் காட்டிய தமிழ்ப்புராண பாடலையும், வடமொழிப்புராண வாக்கியத்தையும் படித்தவர் நன்கு அறிவர். ஆடித் தவசிலும் பிற்பகலில் சங்கரநாராயணன் இடப வாகனரூடனாய்க் காட்சியளிப்பான். அப்படியிருந்தும் அவனைக் கண்ட கோமதி அவனுடன் செல்லாமல் மீண்டும் தவசு மண்டபத்துக்கே போய்விடுவாள். நள்ளிரவில் இரண்டாங் காட்சி நடக்கும். அப்போது சங்கரன் அவ்விரட்டை யுருவை யொழித்துத் தன்னுருவில் யானை வாகனத்தின்மேல் வருவான். அப்படியிருந்தும் அவனை அவள் தொடர்ந்து பின் சென்று அவனுடன் கோவிலை யடைவாள். அதனால் இரண்டாம் காட்சியே அவளுக்கு உகந்ததென அதன் முக்கியத்துவம் உணரப்படும்.

sankaralingaswamigal.jpg

Link to comment
Share on other sites

'பின் வந்த சங்க பத்மர் சங்கரனை நோக்கி

ஐயநின் கூறே மாலும் அயன்முதல் தேவும் என்னும்--

மெய்யுணர் வேயெஞ் ஞான்றும் விளைவுற வேண்டும்' (82 .68)

என வரம் வேண்டிப் பெற்றனர். அக் கடவுளும்,

'சூட்டரா வரசர்க் கல்லால் தோன்றலன் உறைந்தா னன்றே' (82 . 70)

என்றபடி அவ்விருவருக்குப் பின் வேறொருவருக்குங் காட்சிப்படாத விதத்தில் அவ் விரட்டைய்ருவை மறைத்துத் தன்னுருவேகொண்டு அப்புன்னை வனத்தில் விளங்கினான்.

அவ் விரட்டையுருவைக் காட்டுக என உமை சிவனைக் கயிலையில் வேண்டினான். அதனை ஒழித்து விடுக எனக் கோமதி அவனைப் புன்னைவனத்தில் வேண்டினான். இரண்டும் நிகழ்ந்தன. அவ்வுருவை அவனே சங்கற்பித்துக் காட்டினான், சங்கற்பித்து ஒழித்தான். அச் செயல் அவனது முதன்மைக்கு அடையாளம். உருத்திரன், மால், அயன் என்ற மூவரையும் தன்பாற் காட்டி அவன் தாணுமாலயன் எனப் பெயர் பெறவில்லையா, அதுபோல மென்க. அம்முதன்மை அவ்வம்மையால் உலகிற்குப் புலப்படுத்தப் பட்டது. அவ்வுருவை ஒழித்துவிடுக என அவள் கேட்டதற்கு முக்கிய காரணம் இன்னொன்றுமுண்டு சங்கரனது இடப்பாகம் சக்திக்கே யுரியது. கோமதியே அச் சக்தி. அவன் அப்பாகத்திற்றான் நாராயணனை அவளுக்குக் காட்டினான்.

arthanaariswarar.jpg

Link to comment
Share on other sites

'தன் - னிடப்பாலா நம்முருவும்......அவனே காட்டும்' (80 .56)

என நாராயணன் சொன்னது காண்க. சங்கர னிடப் பாகத்தில் கோமதி யிருப்பது காண்க. சங்கர னிடப் பாகத்தில் கோமதி யிருப்பது அவனது அநாதியான அர்த்தநாரீசுர கோலம். அந்த இடப்பாகத்திற் காட்டப்பட்ட நாராயண கோலம் இடைப்பட்டது. அச் சங்கரநாராயண கோலமே அநாதியா யுள்ளது போலுமெனச் சாமானிய வுலகம் மயங்கக் கூடும். அது கருதி அவள் அஞ்சியிருக்கலாம், அ·தொன்று. சங்கரனும் நாராயணனும் புருஷ கோலங்கள். அந்நாராயணனை வைணவ சமய தெய்வமெனக் கொண்டு அவனையும் சங்கரனையும் சமமென எண்ண இடஞ் செய்யும். அது சங்கர பரத்துவத்துக்குப் பாதகம். சங்கரனுக்குச் சமமாகவோ, மேலாகவோ பிற தெய்வத்தைக் கொள்வதே சங்கரநிந்தை. அதற்குப் பிராயச்சித்தம் கிடையாது. பாம்பரசருள் சங்கன் எப்போதுமே பக்குவிதான். பத்மன் பின்னர்ப் பக்குவியானான். அவனுக்காகவே அவ்விரட்டையுருக் காட்டப்பட்டது என்பது அதிகம் பொருந்தும். அதில் அவன் சங்கரனையும் அவனிடத்தில் நாராயணன் அடங்கி நிற்பதையுமே கண்டான். அப்படி அவ்வுருவைச் சாமானியர் காண்பரா? அவர் அந் நாராயணனைச் சங்கரனுக்குச் சமமெனக்கொண்டு சங்கரநிந்தைக் குற்றத்துக்கு ஆளாய்விடக் கூடும். அது கருதியும் அவள் அஞ்சி யிருக்கலாம். அ·தின்னொன்று. அவ்விரட்டையுரு வொழிய வேண்டுமென அவள் விரும்பியதற்கு அவ்வச்சங்க ளன்றி வேறுங் காரணங்கள் உளவாகி நூலோடு இயையுமாயின் அவற்றையுங் கொள்க.

Link to comment
Share on other sites

நாராயண வகை

வடமொழியிலுள்ள இருக்கு முதலிய வேதம் 4 உம், காமிகம் முதலிய சிவாகமம் 28-உம், மெய்கண்ட நூல் 14உம், சிவஞானபோத திராவிட மஹாபாஷ்யமும் சைவ சமயத்துக்குப் பிரமாண சாத்திர வரம்பு. அவற்றோ டியைபுடைய நூலுரைகளும் பல. அவ்வியைந்த அளவில் அவையும் பிரமாணமாம். சாத்திர வரம்பில்லாத சமயம் சமயமே யாகாது. அரங்கின்றி வட்டாடுவதும் அவ்வரம்பின்றிச் சைவம் பேசுவதும் ஒன்று, அவ்வரம்புள் நின்று நாராயண வகைகளை இங்குச் சிறிதே காணலாம்-

'நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்

ஆறு கோடி நாராயண ரங்ஙனே

ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்

ஈறி லாதவன் ஈச னொருவனே'

என்றார் அப்பர். கோடிக்கணக்கான நாராயணர் இறந்தொழிந்தனர், ஆகலின் நாராயணன் உயிரே, சங்கரனொருவனே பிறப்பு இறப்பு முதலிய உயிர்க்குணமில்லாதவன், அவனே பரப்பிரமம் என்பது அப்பாடலின் பொருள். அந்நாராயணனுக்கு இருப்பிடம் பிரகிருதிதத்துவம்.

'முக்திபெற்று மலவாசனைமாத்திர முடையவராய்க் கீழுள்ள உருத்திரன் மால் அயன் இந்திரன் முதலியோரைத் தொழிற் படுத்துவோராகிய உருத்திரன் மால் அயன் இந்திரன் முதலியோர்க்கும், அவர் தனுகரணாதிகட்கும் இடமாம் என்றுணர்க'

என்றது சிவஞான பாஷ்யம்.

இதில தொழிற்படுத்தும் நாராயணன், தொழிற்படும் நாராயணன் என இருவகை நாராயணர் கேட்கப்படுகின்றனர். தொழில்படுத்துகிற நாராயணனும் உயிர்தான். ஆனால் அவன் முத்தி பெற்றவன், மல வாசனை மாத்திரம் உடையவன், ஆகலான் பிறப்பு இறப்பு இல்லாதவன். அவனுக்கு இருப்பிடம் மேலுள்ள சுத்தவித்தியா தத்துவம். அவனால் தொழிற் படுத்தப்படுபவன் அதன் கீழ்ப்பட்ட பிரகிருதி தத்துவ நாராயணன்.

'இறுதிசெய் திடலே சீற்றம் இன்பமே யாண்மை யென்னா

அறைதரு சத்தி நான்காம் அரன்றனக் கையை காளி

முறைதரு கவுரி யின்னோர் மும்மையும் பெற்றோர் ஏனைப்

பெறலருஞ் சத்தி யான்இப் பெற்றியு மறைகள் பேசும்'

என்றது கந்த புரணம். அந்நால்வகைச் சக்திகளுள் ஒன்று ஆண்மை யென்பது. அதுவே புருஷ சக்தி. அதற்கு நாராயணன் எனப் பெயருண்டு. அது சிவசக்தியின் ஒரு கூறு. அந் நாராயணன்றான் சங்கரனுக்குத் தேவி. அவளே சுத்தவித்தையி லுள்ள நாராயணனை யதிட்டித்து அவன் மூலம் அப்பிரகிருதி தத்துவ நாராயணனை யியக்குவாள். அத்தேவி நாராயணனுக்கு இருப்பிடம் நாதாதீதம்.

இப்படி மூன்று வகை நாராயணர் உளராதல் அறிக.

Link to comment
Share on other sites

வைணவ சமயக் கடவுள்

வைணவத்தில் பிரகிருதி முடிவாக 25 தத்துவங்களே சொல்லப்பட்டன. அந்தப் பிரகிருதியிலுள்ள நாராயணனையே பத்மன் தவங்கிடந்து பூசித்தான்.

'ஏனமாய் மாயொன் வேலை யிருநிலங் கீண்டுங் காணா' (4 . 10)

'அன்னவா கனனுங் கருடவா கனனு மணிமுடி யடியறியாத' (26 .2)

'பிரமனு நாரணனு நாடரிய.....சங்கரேசுரர்' (28 . 9)

என்பன போன்ற அடிகளும் வருகின்றன. அம்மாயோன், கருடவாகனன், நாரணன் என்பனவும் அந்தப் பிரகிருதிதத்துவ நாராயணனையே சுட்டும்.

'கடகரியும் பரிமாவுந் தேருமுகத் தேறாதே

யிடபமுகந் தேறியவா றெனக்கறிய வியம்பேடி --

தடமதில்க ளவைமூன்றுந் தழலெரித்த வ்ந்நாளில்

இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ'

என்றதிலுள்ள திருமாலும் அவனே. ஐயிரு பிறப்பெடுத்தவனும் அவன்.

Link to comment
Share on other sites

'பிரமா விட்டுணு சரீரம் பிராகிருத மாகலானும் முன் பரமசிவன் அனுக்கிரகம் இல்லாமையானும் பிரம விட்டுணுக்கள் சரீரம்போலப் பரமசிவனைத் தியானிக்கலாகாது. பிரம விட்டுணுக்கள் பதம் பசுத்தானம். உருத்திரர்பதம் ஈசுரர்பதம் இரண்டும் பதித்தானம்'

என்றது சித்தாந்த பிரகாசிகை. பிராகிருத சரீரமுடையவனாய்ப் பசுத்தானத் திருப்பவ னெனப்பட்ட விட்டுணுவும் அவன். அந்நாராயணனைத்தான் வைணவ சமயம் கடவுளெனக் கொண்டு வணங்கிவரும். அவன் அந்த 25 தத்துவங்களளவே வியாபித்திருப்பான். ஆனால் அவற்றின் மேலுந் தத்துவங்களுள. அவற்றை அச்சமயம் அங்கீகரியாது. ஆகலின் அவற்றில் அவனுக்கு வியாபகமில்லை. சைவசமயம் அவற்றையுஞ் சேர்த்துத் தத்துவங்கள் 36 கொள்ளும். அவற்றின் மேல் தத்துவமில்லை. 36-ஆம் தத்துவம் நாதம் என்பது. அதன் முடிவிலுள்ளவன் சங்கரன். அவனே சைவ சமயக் கடவுள், அவ்வெல்லாத் தத்துவங்களிலும் அந்தர்யாமி யாகி மேலிருப்பவன், சர்வவியாபி. அவனையும் அந்தப்பிரகிருதி தத்துவ நாராயணனையும் சமமென இயைத்துச் சங்கரநாராயணனெனப் பேசுவது சைவ நூற்களைப் பயிலாத தோஷமே யாம்.

80 - 56 ஆம் பாடல் சங்கரன் சக்தன், மூன்றாவதாகச் சொல்லப்பட்ட நாராயணன் சக்தி என்றது. சக்தன் கர்த்தா. சக்தி அவனுடைமை. உடைமை உடையவனின் வழிப்பட்டதே. அத்தேவிநாராயணன்றான் நாதாதீதமாயுள்ள சிவசக்தியின் அமிசம்.

'அரியலால் தேவியில்லை ஐயன்ஐ யாற னார்க்கே'

என்ற அப்பர் வாக்கிலுள்ள அரி அத்தேவிநாராயணன். அவன் சுத்தவித்தை நாராயணன் மூலம் பிரகிருதி நாராயணனைத் தொழிற்படுத்தி வருகிறான். அச் சம்பந்தம் பற்றி அந்தப் பிரகிருதி நாராயணனையும் சங்கரனுக்குத் தேவியெனச் சில நூற்கள் கூறும். அவ்வளவே. பிரமன் முதலிய மற்றைத் தேவர்களை அமிசமென்பதும் அச் சம்பந்தம்பற்றித்தான். அவர்களெல்லாம் உயிர்களென்பதே உண்மை.

Link to comment
Share on other sites

சங்கரனே சங்கரநாராயணன்

'மாநிலத்தோர் சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவு படுத்துவது தவறு என்பதை உணர்த்தும் பொருட்டு' ஆனது ஆடித் தவசுக் காட்டியென அக்கோவில் தவசு விளம்பரப் பத்திரிக்கை கூறிவருகிறது, நரசிங்கவுருப் போன்றது சங்கரநாராயணன வுரு. முன்னையதில் நரனும் சிங்கமும் அல்லாத நாராயணன் மறைந்து நின்றான்.. பின்னையதில் அப்படிச் சங்கரனும் நாராயணனும் அல்லாத எவன் மறைந்து நின்றான்? எவனுமிலன். நரசிங்கவுரு நரன் வேறு, சிங்கம் வேறு எனப் பிளவு படுத்தவது தவறு என்பதை உணர்த்தவா வந்தது? இல்லை. அதுபோல் சங்கரநாராயண வுரு சங்கரன் வேறு. நாராயணன் வேறு எனப் பிளவுபடுத்துவது தவறு என்பதை உணர்த்தவா வந்தது? இல்லை. அதுபோல் சங்கரநாராயண வுரு சங்கரன் வேறு. நாராயணன் வேறு எனப் பிளவுபடுத்துவது தவறு என்பதை உணர்த்த வரவில்லை. மேலும் சிவன் வேறு, விஷ்ணு வேறு எனப்பிளவு படுத்துவோர் எதனை அப்படிப் பிளவு படுத்துகிறார் என்பதற்கும் அப்பத்திரிக்கையால் விடை காண முடியாது. நரசிங்க வுருவில் நாராயணன் மறைந்து நின்றது போல் அல்லாமல் சங்கரன் தன் உருவிலேயே தன்னை ஒரு பாதியிலும், நாராயண வுருவை இன்னொரு பாதியிலுமாகக் காட்டி நின்றான். அந்நாராயண வுரு வைணவக் கடவுளானால் நரசிங்க வுருவிலுள்ள நரன் வேறு, சிங்கம் வேறு பிராணிகள் ஆதலும் வேண்டும். அப்படியில்லை. நரசிங்க வுருவிலுள்ள நரவுருவும் சிங்கவுருவும் நாராயணனுடையனவேயாதல் போல் சங்கரநாராயண வுருவிலுள்ள நாராயண வுருவும் சங்கரனுடையதே யாகும். கோவில் சங்கரநாராயண சந்நிதியில் இடபவுருவமே யிருப்பதை இன்றுங் காணலாம். தவசுப் பிற்பகற் காட்சியில் சங்கரநாராயணன் காட்சி கொடுக்க எழுந்தருளுவதும் இடப வாகனத்திலேயா மென்பதும் முன் சொல்லப்பட்டது. ஆகவே சைவசமய வுண்மையைக் கண்டு அவ்விளம்பரப் பத்திரிகை வெளிவருவதாகச் சொல்ல முடியாது.

Link to comment
Share on other sites

சங்கரனே சங்கரநாராயணனாக உருக்காட்டினான் என்பது,

'சங்க பத்மர்செய் தவத்தினுக் கரனரி தானு - மெங்கு

மொன்றெனத் திருவுருக் கொண்டரு ளிமைய - மங்கையாவுடை மணாளர்' (6 . 1)

'அரியர வடிவா மரனுரு' (43 . 66)

'பனிவரு சடையான் மாலும்ஈ சனுமாய்ப் பகருருத்

தாங்கிய பண்பும்' (48 . 5)

என்றதால் விளங்கும். ஒருவனே தன்னை யிருவராக் காட்டினான். ஒருவன் சங்கரன். இருவர் அவனும் அவனது புருஷசக்தி யெனப்பட்ட தேவி நாராயணனும். ஆகலின்,

Link to comment
Share on other sites

'சங்கரநா ராயணரே யநாதி மூர்த்தி' (47 . 81)

என்றதால் அவ்வுரு சங்கரனுடையதே என்பதாயிற்று.

'புன்னைமா வனத்தின் நீழற் புவியினில் அநாதி யாகி

அன்னைகோ மதியி னோடும் அமர்ந்தருள் அமல வித்தாய்

மன்னிய தொண்டர்க் கெல்லா மங்கல நல்க லாலே

தன்னைநே ரிவ்வி லிங்கஞ் சங்கர லிங்க மாகும்' (64 . 1),

'சீர்த்திகொள் தேவ மூர்த்தி யசுரராற் செய்யு மூர்த்தி

யேர்த்திகழ் நாக மூர்த்தி யிவ்வுல கத்தி லுள்ள

பார்த்திப ரியற்று மூர்த்தி யாதிய படிவங் கொண்ட

மூர்த்திகட் கெல்லாம் அந்தச் சங்கர மூர்த்தி முன்னாம்' (64 . 4)

என்றதால் அக்கோவிலிற் சங்கரலிங்கமே அதாவது சங்கரமூர்த்தியே மூலவராகிய அநாதிமூர்த்தி. அவனுக்கு 8 நாமங்கள் உள. (68 . 30)ஆம் பாடல் காண்க. அவற்றுள் வரராசைநாதன், சீராசைநாதன், புன்னைவனநாதன், கூழையாண்டி என்பன இடம்பற்றி வந்தன. சங்கரநாராயணன் என்பது கொண்ட கோலம் பற்றி வந்தது. வைத்தியநாதன் என்பது புற்று மண் மருந்துபற்றி வந்தது. சங்கரமூர்த்தி, சங்கரலிங்கம் என்பன பெயராகவே யுள்ளன. இன்றும் அக்கோவில் மூலவர் பெயர் சங்கரலிங்கமே. அதனைச் சங்கரநாராயணரென யாருஞ் சொல்லார்.

Link to comment
Share on other sites

மஹாலக்ஷ்மி நாராயணனை நோக்கிச் "சுவாமி! உமது ஒரு பாதியில் உம்மையும், இன்னொரு பாதியில் சங்கர னுருவையும் எனக்குக் காட்டுக" எனப் பிராத்தித்தாள்; நாராயணனும் அவளுக்கு அவ்வாறே காட்டினான் என்ற கதை வைணவ சமயத்திலுண்டா? அவ்விரட்டையுரு எந்த வைணவக் கோவிலிலாவ துண்டா? அவ்வுருவைக் காட்டும் சக்தி அவனுக்கில்லை. அவ்விரட்டை யுருவிற்குப் பிராணனாவான் சங்கரனொருவனே, நாராயணனல்லன். ஆனால் 'தாழ்சடையும்' எனத் தொடங்குமொரு பாடலை ஆழ்வார் பாடியிருக்கின்றனரே யென்னலாம். அதற்கொரு சரித்தரமுங் கோயிலும் அம்மதத்தினருக்கில்லையாகலின

Link to comment
Share on other sites

விழா

உக்கிரபாண்டியன் என்றோ ரரசன் இருந்தான். அவன் அப்புன்னை வனத்தை ஊராக்கிச் சங்கரலிங்கப் பெருமானுக்கும் கோமதித் தாய்க்கும் கற்கோவில் எழுப்பிச் சிவாகம வழிப் பூசையாதிய நடைபெறச் செய்தான். அவனால் தொடங்கி நடத்தப்பட்ட விழாச் சித்திரைத் திருவிழா வாகும். அதுவே அக்கோவிலின் பிரமோத்ஸவம். வேறு அத்தலத்திற்குரிய விழா எதுவும் புராணத்தி லில்லை.

சங்கரன் அவ்விரட்டையுருக் காட்டிய நாள் அடிமாதப் பெளர்ணமி. அந்நாளில் சங்கரனை வணங்குவோர் பெரும் பேறடைவர். (65 . 13)ஆம் பாடல் காண்க. அதற்கு முந்தின பிந்தின பாடல்களில் சோமவாரம், சுக்கிரவாரம், சித்திரா பெளர்ணமி, மஹாசிவராத்திரி, பிரதோஷம், அட்டமி என்பனவும் அவனை வணங்குதற்குரிய நன்னாட்களெனச் சொல்லப்பட்டன. அவ்வளவே.

'சங்கபத்மருக்கன்றி மற்றொருவருக்குத் தெரியாமல் மறைந்து புன்னைமர நீழலில் சங்கரநாராயணராகிய பெருமான் எழுந்தருளியிருந்தனர்' (88 இறுதி வசனம்)

என்றதால் அங்ஙனம் மறைந்துபோன சங்கரநாராயண மூர்த்திக்கு உக்கிரபாண்டியனும் விழா நடத்தினதில்லை. அப்படியிருந்தும் அவ்விழாக் கோவிலில் சிறந்த இடம் பெற்றது. அவ்வளவுதானா? அக்கோவில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கும் இடனாயிற்று. எந்த வைணவக் கோவிலிலாவது மார்கழித் திருவாதிரை விழா நடக்கிறதா? சைவசமயிக ளெல்லாம் அடியோடு அத்தமித்துப்போன காலத்திற்போலச் சைவாலயங்களில் பூஜை, உத்ஸவம் முதலியன நடக்க லாயின.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் . தொடர்ந்து இணைந்திருங்கள் . உங்கள் பெயரின் அர்த்தம் என்னவோ?
    • இந்த கற்பனை கலந்த ஆக்கத்தை வாசித்த  போது மீண்டும் பின்வரும் பழைய பாடல் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.   
    • இன்று இணையத்தில் இந்தக்காணொளி பார்த்தேன்.. 80 மற்றும் 90 களில் புலம்பெயர்ந்த நமது தலைமுறை இரண்டாவது மூன்றாவது தலைமுறைகளை கண்டு இப்பொழுது பெரும் எண்ணிக்கையில் முதுமைக்குள் நுழைந்து விட்டிருக்கிறது.. அவர்கள் மொழிப்பிரச்சினை மற்றும் கலாச்சார உணவு தோல் கலர் போன்ற விடயங்களால் அந்தந்த நாட்டுக்காறருடனும் அவ்வளவு ஒட்டாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலை உருவாகி இருக்கிறது.. அதை போக்க கனடா பிரித்தானியா பிரான்ஸ் யேர்மன் என்று தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் கூட்டமாக வாழும் நாடுகளில் இப்படி அமைப்புக்களை உருவாக்கி ஒரு இடத்தையும் உருவாக்கி அதில் நூல்கள் தாயம் காட்ஸ் போன்ற விளையாட்டுக்கள் சிறிய கன்ரின் போன்றவற்றை உருவாக்கி எப்பொழுதும் முதியவர்கள் அங்கு வந்து தமிழில் தம் வயது ஒத்தவர்களுடன் பழைய நினைவுகளை பேசி இரைமீட்டி ஊரில் இருந்து வரும் பத்திரிகைகளை வாசித்து ரீ வடை போன்ற சோட்டீஸ்களை உண்டு மனதுக்குபுத்துணர்ச்சியுடன் வீட்டுக்கு போகக்கூடிய மாதிரி இடங்களை உருவாக்கவேண்டும்.. அப்படி இடங்கள் இருந்தால் எல்லோருக்கும் அறியப்படுத்தவேண்டும்.. பலபேருக்கு இதனால் பயனாகும்.. https://youtu.be/R3mnqwGjDaY?si=vxk1wGSrYSZYJ6K1    
    • அப்பு இப்ப சரியே...நீங்கள் அரசியலில் பி.ஹெச்.டி என்ற காரணத்தால்  எங்களுக்கு இப்படி கஸ்டமான கேள்விகளை கேட்க கூடாது கண்டியளோ😅
    • கஜேந்திரகுமார், சுமந்திரன் இருவரும் மீண்டும் கொழும்பு சென்று தமது சட்டதரணி தொழிலுக்கு திரும்பலாம். மணிவண்ணன் மீண்டும் யாழ் மாநகரசபை மேயராகி நகரை அபிவிருத்தி செய்யலாம். செலவம், சுரேஷ் ஓய்வெடுக்கலாம், சுகாஷ் “நான் லோயர்” என்று கத்திக்கொண்டு அடுத்த பைத்தியமான குதிரை கஜோட சேர்ந்து   தெரு தெருவா அலையலாம்.  மற்றயவர்கள் ஏதோ தெரிந்த தொழிலைச் செய்து பிழைக்கலாம். 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.