Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொறன்ரோவில் ஆர்ப்பாட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அருள்தந்தை எம்.எக்ஸ் கருணரத்தினம் அடிகளார் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ரொறன்ரோவில் ஆர்ப்பாட்டம்!

தமிழீழம் வேண்டும் என்ற முழக்கம்

ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதம் பலி கொண்ட அருள்தந்தை கருணரத்தினம் அடிகள், அருள்தந்தை ஜிம் பிரவுண் அடிகள், அருள்தந்தை பாக்கியரஞ்சித் அடிகள், அருள்தந்தை சம்சன் என். எதிரிசிங்க அடிகள் ஆகியோர்; சிங்களப் படையினால் கோழைத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆவேச கண்டன ஆர்ப்பாட்டம் எண் 40 சென்ட் கிளேயர் அவனியூ மேற்கு, ரொறன்ரோ கீழ்நகரில் உள்ள ஸ்ரீலங்கா துணைத் தூதரகம் முன்னால் மே 2 ஆம் நாள் (வெள்ளிக் கிழமை) நடைபெற்றது. கடுங்குளிரையும் மழையையும் வெள்ளிக்கிழமை வேலை நாள் என்பதையெல்லாம் பொருட்படுத்தாது பெண்கள், சிறார்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தையும் எதிர்ப்பையும் உரத்த குரலில் வெளிப்படுத்தினார்கள்.

ஸ்ரீலங்காவிற்கான துணைத் தூதுவர் நாடறிந்த இனவாதியும் முன்னாள் டெயிலி நியூஸ் நாளிதழின் முதன்மை ஆசிரியரும் ஆவார். ஸ்ரீலங்காவின் பரப்புரையை கனடாவில் முடுக்கிவிட இவர் ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சேயினால் தெரிந்தெடுத்து இங்கு அனுப்பி வைக்கப்பட்டவர் ஆவர். நாங்கள் பயங்கரவாதத்தை ஒழிக்கவே போர் செய்கிறோம் தமிழ் மக்களுக்கு எதிராகப் போர் புரியவில்லை”என்ற குழந்தைத்தனமான பரப்புரையை துணைத் தூதுவர் பந்துல ஜெயசேகரா கனாடாவில் முன்னெடுத்துள்ளார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் அதிகமான முழக்கங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும் கருப்புக் கொடிகளையும் தூக்கிப் பிடித்தவாறு மக்கள் கால்கடுக்க நின்றதோடு அந்த முழக்கங்களை உரத்த குரலில் ஆவேசமாக ஒலிக்கவும் செய்தார்கள்.

கத்தோலிக்க மதகுருமாரைக் கொல்லாதே!

தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொல்லாதே!

அப்பாவி தமிழ் மக்களைக் கொல்லாதே!

மகிந்த இராசபக்சே ஒரு பயங்கரவாதி!

ஸ்ரீலங்கா அரசு ஒரு பயங்கரவாத அரசு!

இனவாதிகளைக் கனடாவுக்குத் தூதுவராக அனுப்புவதை ஸ்ரீலங்கா நிறுத்தவேண்டும்!

மகிந்த இராசபக்சேயின் கைகள் அப்பாவி தமிழ்மக்களின் குருதி படிந்த கைகள்!

தமிழ்மக்களுக்கு நீதி வழங்கு!

நாங்கள் கேட்பது அமைதி! வேண்டுவது நீதி!

எமக்கு வேண்டும் தமிழீழம்!

DECLARE MADHU CHURCH A PEACE ZONE

SRI LANKA DONT KILL CATHOLIC PRIESTS

SINHALA ARMY QUIT THAMIL EELAM

FR KARUNARATNAM WAS A MAN OF PEACE YET SINHALA ARMY KILLED HIM

NO HUMAN RIGHTS FOR THAMILS IN SRI LANKA

SRI LANKA IS A RACIST STATE

ARREST, ABDUCTION AND KILLING OF THAMIS IS ROUTINE IN SRI LANKA

THANMILS WANT JUSTICE

RAJAPAKSE YOUR HANDS STAINED WITH THE BLOOD OF INNOCENT THAMILS

THAMILS DEMAND FREEDOM

THAMILS DEMAND JUST PEACE

KOSOVO TODAY! THAMIL EELAM TOMORROW !

SRI LANKA STOP SENDING RACISTS AS CONSULS

SRI LANKA STOP GENOCIDE OF THAMILS

SRI LANKA STOP KILLING JOURNALISTS

SRI LANKA STOP THE WAR AND GIVE PEACE A CHANCE

ONE OUT OF TEN THAMIL WOMEN IN THAMIL EELAM ARE WAR WIDOWS

RECOGNIZE THAMIL PEOPLE’S SOVEREIGNTY

INDICT MAHINDA RAJAPAKSE FOR WAR CRIMES

FREEDOM OF MOVEMENT DENIED TO THAMILS

THAMILS TREATED AS SECOND CLASS CITIZENS

SRI LANKA BOMBS ITS OWN CITIZENS

`

RIGHT TO LIFE AND SECURITY DENIED TO THAMILS

FREEDOM - THAMILS BIRTH RIGHT

400,000 THAMILS MADE REFUGEES IN THE LAND OF THEIR BIRTH

SINHALA ARMY OCCUPIED JAFFNA IS OPEN PRISON FOR THAMILS

எனப் பல்வேறுபட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அருள் தந்தை கருணரத்தினம் மற்றும் மூன்று குருமார்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட செய்தியையும் மடுமாதா கோயில் செல்தாக்குதலில் சேதப்படுத்தப் படம், புனித லேய வளாகத்தில் சீருடையில் சிங்கள இராணுவம் நிற்கும் படம் மற்றும் தமிழ் மடுமாதா ஆலய வளாகத்தை விட்டு சிங்கள இராணுவம் வெளியேற வேண்டும் ஆலய வளாகத்தை அண்டிய நிலப்பரப்பு அமைதி வலையமாக அறிவிக்கப் படவேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய துண்டு வெளியீடு கனடிய மக்களுக்கு வழங்கப்பட்டது.

ஆர்ப்பாட்ட முடிவில் கருணரத்தினம் அடிகளாரது உடன்பிறப்பு திருமதி மார்க்கிறட் வரதராசா, திரு. திருச்செல்வம், ஆசிரியர், தகவல் மாத இதழ், நக்கீரன், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் மற்றும் பலர் உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களைப் பாராட்டிப் பேசிய நக்கீரன் ஆர்ப்பாட்டத்துக்கு குறுகிய கால அவகாசத்தில் அனுமதி வழங்கியதோடு போற்றத்தக்க முறையில் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய 53 ஆவது பிரிவு காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். அத்தோடு ஆர்ப்பாட்டத்தை நல்ல முறையில் விளப்பரம் செய்த தமிழ் கனடிய வானொலி, தமிழ்த் தொலைக்காட்சி, தமிழ் ஒன்று தொலைக்காட்சி, ஈழமுரசு கிழமை இதழ் ஆகியவற்றுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

கனடிய தமிழ் கத்தோலிக்க மக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஆதரவு வழங்கியது.

IMG_9600.jpg

IMG_9592.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.