Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூச்சிருக்கும் காலம் வரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூச்சிருக்கும் காலம் வரை

அப்பா அப்பா” என்று அடிக்கடி என் அன்புச் செல்வங்களின் அழைப்பொலி என் அஸ்தமித்துக் கொண்டிருக்கும் புலன்களினூடே மெல்ல இழையோடி இதயத்தைப் பிசைந்து கொண்டிருந்தது. ஏன் சக்தியெல்லாம் ஒன்று திரட்டி விழி மலர்த்தி ஒளி செலுத்த விருப்பம் இருந்தும் கண்முன் இனம் தெரியாத என்னவென்று கிரகிக்க முடியாத பல வர்ண ஒளிவட்டங்கள் விழுந்து மறைந்து கொண்டிருந்தன.

ஏன்னைச் சுற்றி என் அன்புறவுகளின் அங்கலாய்ப்புகளை என்னால் உணரமுடிந்தும் என் இயக்கங்கள் செயல் இழந்ததால் செயல்பட முடியாமல் கைகளும் கால்களும் கட்டிப் போட்டதுபோல் கனத்துக் கிடந்தன. மெல்லத் தலையை அசைக்கின்றேன்.

“அம்மா இங்கை பாருங்கோ அப்பா அசைகிறேர். பால் கொஞ்சம் கொடுப்பமா?” என்று என் ஆசை மகள் ஆவலாய்க் கேட்பது கூட என் அறிவுக்கு எட்டுகிறது.

“அப்பா கொஞ்சம் பால் குடியுங்கோஅப்பா ஒரு கரண்டி பாலாவது குடியுங்கோ அப்பா” என்று கொஞ்சலுடனும் கெஞ்சலுடனும் என்னை இரப்பதுகூட எனக்கு இசைபோலக் கேட்கிறது.

பால் தொண்டைக்குழிக்குள் சிக்கி மிகுந்த சிரமப்பட்டு இறங்கிச் செல்லுகின்றது. ஏன் நினைவுப் பெட்டகம் கொஞ்சம் திறந்து விட என் எண்ணங்கள் பின்னோக்கி எங்கேயோ காட்டுக் குதிரையாய் கட்டவிழ்த்து ஓடி முட்டி மோதி மூச்சிரைக்க நிற்கிறது.

கிராமத்து மண்ணின் கால்பதிந்த தடங்கள் கனவுகளாக வந்து போகின்றன. உறவுகளுடன் உரிமையுடன் பகிர்ந்துண்ட கடந்தகால இனிமைகள் நினைவுத் திரைவிலக்கி நெஞ்சத்தின் ஓரங்களை மெல்ல உரசிச் செல்கின்றன. பூவரசம் வேலிகளும் மாமரத்து நிழல்களும் மங்கலாய் மனதில் வந்து போகையில் என் விடலைப்பருவ நண்பர்கள் துள்ளலும் துடிப்பும் நிறைந்த அந்த வசந்தகால அனுபவங்கள் இதயத்தை இரைமீட்க துள்ளித்திரிந்த அந்த பள்ளிக் காலங்கள் புள்ளிக் கோலங்களாய் கோலமிட அந்த புழுதிபடிந்த வீதிகளில் கால் புதையப் புதைய நடந்த ஞாபகங்கள் மங்கலாய் மனதில் விழுந்து மறைகின்றன.

என் மனைவியின் தை என் தலையைக் கோதி வாயில் வழிந்த பாலை மெல்லத் துடைக்கிறது. நான் அந்த அன்பு இதயத்தை விட்டு எங்கோ மீளமுடியாத தொலைவக்கு போகப் போகிறேன் என்று நினைக்கவே வேதனையில் மனது விம்மி வெடித்துவிடும்போல் உணர்வேற்பட்டது.

அன்று இளம் மொட்டாய் பார்ப்பவர் மயங்கும் பருவச் சிட்டாய் என் விழியில் விழுந்து இதயம் நுழைந்தவளின் நிழலுருவம் என் நினைவுகளை உரசிச் சென்றது.

“என்னங்க என்னங்க” என்று இதமாக அழைக்கும் பதமான குரலுக்குப் பதிலளிக்கவோ பரிவாகப் பார்க்கவோ இயலாதவனாய் இறுகிக் கிடக்கின்றேன். அடிக்கடி என்னைச் சுற்றி ஏற்படும் சலசலப்புகளில் இருந்து என்னை வழியனுப்ப சுற்றங்களும் உறவுகளும் கூடி இருப்பதை உணரமுடிந்தது.

என் நினைவுகள் மீண்டும் பின்னோக்கி நழுவிச் சென்றன. ஏன் பெற்றவர்களும் பிரிய உறவுகளும் என் மனவானில் மின்னி மறைந்தனர். அந்தப் பாசங்கள் பரிவுகள் என் இளமைக்கால இனிய நினைவுகள் நீறுபூத்த நெருப்பாய் நெஞ்சைச் சுட்டன. மீண்டும் என் துணைவியின் தளிர்க் கரங்கள் என்னைத் தடவிச் செல்வதை உணர முடிந்தது. ஏன் உள்ளுணர்வு என்னுடன் இத்தனை ஆண்டுகள் இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்து நடந்தவளுக்கு இங்கிதமாய் ஒரு வார்த்தையாவது ஆறுதல் சொல் என்று என்னைத் தூண்டியது. இயக்கமிழந்து இறுகிக் கிடக்கும் என்னால் எதையுமே செயலாற்ற முடியவில்லை.

அன்று நான் மணமகனாய் கண்பார்க்க மங்கையவள் மண்பார்த்தநாள் தாய்மையின் பூரிப்பில் அவளும் தந்தையின் தலைநிமிர்வில் நானும் மனதுக்குள் சிலிர்த்திட்ட நாட்கள் தங்கச் சிலைகளாய் தளிர்க்கரங்கள் அணைப்பினிலே மழலைகள் தவழ்ந்திட்ட நாட்கள் அவர் தளிர் நடையின் எழில் கண்டு குதூகலித்த பொழுதுகள் வாரிசு வளர்ந்துவரும் கோலம் கண்டு செஞ்சில் போட்ட புள்ளிக் கோலங்கள் காலம் தடம் புரண்டு மக்கள் மண்ணுக்கு அந்நியப் பட்ட அவலம் பிள்ளைகளின் பிரிவினால் பிசையும் மனத்துடன் அந்த அந்நிய நாட்டு மடலுக்காய் தவமிருந்த காலங்கள். அப்பப்பா அந்தக் கடிதம் கைசேரும் பொழுதில் அடையும் ஆனந்தம்;

“இங்கை பாருங்கோ அப்பாவின் கண்ணிலிருந்து கண்ணீர் வழியுது” என்று என் இளையமகள் கட்டியம் கூற என் துணைவியவள் என் விழியோர ஈரத்தை துடைப்பது என் உணர்வுகளுக்குப் புலனாகியது.

அவள் விழியோரமும் நிச்சயம் ஈரம் இருக்கும். அதைத் துடைத்துவிட ஒருமுறை ஒரே ஒருமுறை என் கைகளுக்கு வலு வராதா? ஏன்று எண்ணித் துடிக்கின்றேன். அம்மா அம்மா என்ற அத்தனை குழந்தைகளும் அன்பைச் சொரிந்தாலும் என்னவளின் இதயத்து உணர்வுகளைப் புரிந்து கொள்ள இவர்களால் முடியுமா? ஏன்ற அங்கலாய்ப்பில் என் விழிகள் நதியாகியது.

ஏத்தனை இரவுகள் எம் மழலைகளுக்காய் நாம் தூக்கத்தைத் தொலைத்திருப்போம்.

“நீங்கள் வேலைக்குப் போகவேணும் போய்ப் படுங்கோ” என்று சொல்லி என்னைத் தூங்கவிட்டு அந்தத் தாய் வைகறைவரை வலுவோடு சுமையேந்தி தன் சுகங்களை மறந்திருக்கிறாள்.

திடீரென்று பக்கத்தில் ஏதோ சலசலப்பு.

“இப்பதானா அப்பாவைப் பார்க்க வந்தீங்க” என்று என் மனைவி அலறுவதும்

“அப்பா ஒருக்கா கண்திறந்து பாருங்கோ அப்பா இத்தனை வருசமா என் முகத்தைக்கூட பார்க்க மறுத்து விட்டீங்களே அப்பா” என்று என் மகன் நெஞ்சுருகக் கதறுவதும் அது என் பேரனாக இருக்கவேணும் இரு தளிர்க் கரங்கள் என் முகத்தைத் தடவுவதும் எல்லாமே எனக்குப் புரிகிறது. இருந்தும் என் அன்புப் பேரனை ஆசையுடன் அணைக்கவோ அள்ளி எடுக்கவோ எனக்குச் சக்தியில்லை. நெருங்கி வந்தபோதெல்லாம் நெட்டித் தள்ளிவிட்ட என் மனனையும் மருமகளையும் பேரக்குழந்தையையும் இறுதிவரை பார்க்கமுடியாமலேயே போகப் போகிறேன் என்ற உண்மை உள்ளத்தை உறுத்தியது. இனம் மதம் மொழி அனைத்துமே இந்த இறுதி அத்தியாயத்தில் அர்த்தமற்றுப் போனதை உணர்ந்து கொண்டேன். இனி உணர்ந்து யாருக்கு வேணும் இந்த சூரிய நமஸ்காரம்.

அந்த அந்திப் பொழுதின் அடிவானச் சிவப்பில் நெஞ்சுக் கூட்டுக்குள் துஞ்சும் நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டு விலகிக் கொண்டிருந்தன. ஏன் பேரக்குழந்தையின் பிஞ்சக் கைகளை ஒருமுறை கொஞ்சிமகிழ மனதுக்குள் தோன்றிய ஆசையை உள்ளுக்குள் அடக்கிக் கொள்கிறேன். பஞ்சுப் பொதியாக என்னை அழுத்திய அந்தப் பாச உணர்வை என்னால் புறக்கணிக்க முடியவில்லை.

“அப்பாவுக்குப் பால்குடு தம்பி” என்று சொல்லும் என் மனையாளின் குரலும் “அப்பா அப்பா” என்று அழைத்து என் மகன் நெருங்கி வருவதும்கூட என் உணர்வுக்குத் தெரிகிறது.

“கொஞ்சம் வாயைத் திறவுங்கோ அப்பா” என்று என் கிட்டிப் போய்க் கிடந்த வாயை திறக்க முயற்சி செய்கிறார்கள்.

வாயைத் திறப்பதும் மூடுவதும் இப்பொழுது என் கட்டுப்பாடுடிற்குள் இல்லை.

மெதுவாக பால் தொண்டைக்குழிக்குள் சொட்டுச் சொட்டாக இறங்க மறுத்து பிடிவாதம் செய்கிறது.

“அம்மாவை நல்லாப் பார்த்துக்கொள்” என்று சொல்ல மனம் ஆலாய் துடிக்கிறது. சொல்லத்தான் முடியவில்லை.

இக் கட்டிடக் காட்டுக்குள் கண்ணாடிக் கூட்டுக்குள் என் அன்புத் துணையாளும் வான் நிலவில் எழில் காட்டும் அம்புலிக் கிழவிகோல் பாசத்தை யாசித்து பரிதவிக்கப் போகிறாளோ என்று பரிதவித்துப் போகிறேன்.

“அப்பா அப்பா” என்று சூழநிற்கும் உறவுகள் ஓலமிடும் ஒலிகூட எனக்கு கிணற்றுக்குள் இருந்து ஒலிப்பதுபோல தூர ஒலித்தன.

ஒரு ஒளிவட்டத்தை நோக்கி என் விழித்திரை வெளிச்சம் போட நான் சூனியத்தை நோக்கி பயணத்தைத் தொடர்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்... துடிப்பாக உள்ளபோது சிலவற்றுக்கு வரட்டுகௌரவம் இடம் கொடுக்காது....பிரிகிறோம் என்கிறபேது இயலாமை இடம் கொடுக்காது.... இதுதான் வாழ்க்கையின் சூனியம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னினிய சகியே, எனக்குத் தெரியும் உந்தன் எழுதுகோலின் பிரசவங்கள் பொய்மையற்றவை. நீறு பூத்துக் கொண்டிருக்கும் நினைவுகள் எழுத்துப் பூக்களாக உலா வருவது கூட ஒருவகை அமைதியே. உந்தன் மனக்கூட்டிற்குள் நட்பின் நிமித்தம் நான் தரிசித்த எண்ணங்கள் இலக்கியங்களாக பிறக்கின்றன. இலக்கியங்களின் உயிர்ப்பே உள்ளிருந்து பிறப்பதில்தானே. இன்னும் உந்தன் உள்ளம் சுமக்கும் எண்ணக்கருக்கள் சிறகு விரிக்க வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சபேஸ் பலரது வாழ்வில் வரட்டுக் கௌரவத்தால் வாழ்க்கையே பாலைவனமாவதை அவர்கள் உணர்ந்துகொள்ளும்போது காலம் கடந்துவிடுகிறது கருத்திற்கு நன்றிகள்

சகாரா என் உள்ளம் சுமக்கும் எண்ணக்கருக்களின் பிரசவத்தை உணர்வுபூர்வமாக படித்து பாராட்டிய மென்மையான நட்பிற்கு என் நன்றிகள்

கதைய நல்லாச் சொல்லி இருக்கிறீங்கள் ஐபோல் அக்கா.. தடிச்ச எழுத்தில போடாமல் வேணுமெண்டால் எழுத்திண்ட அளவப் பெருசாக்கி போட்டு இருக்கலாம் எண்டு நினைக்கிறன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.