Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமண மந்திரம்

Featured Replies

ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:

பொருள் : ஸோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன்.

விளக்கம்: திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக ஸோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத் தான் இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு விட்ட பின்பு தான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் என்பது விளக்கமாகும்.

இந்தப் பொருளைத் தரும் மேற்கண்ட மந்திரத்தைத் தான் புரோகிதப் பார்ப்பான் கலியாணத்தை நடத்தி வைக்கும் பொழுது சொல்கிறான்.

மந்திரம்: உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸோ நம ஸேடா மஸேத்வா அந்யா மிச்ச ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ!

பொருள்: விசுவாசு என்னும் கந்தர்வனே இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத் தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக.

மந்திரம்: உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வா வஸீந் நமஸ கீர்ப்பிரீடடே அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி

பொருள்: இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்குக் கணவன் இருக்கிறான் அல்லவா? விசுவாவசுவான உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்பதை நீ அறிவாயாக.

விளக்கம்: கலியாணம் நடந்து நான்கு நாள்கள் தம்பதிகள் ஒரே படுக்கையில் படுக்க வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் அவர்கள் உடலுறவு கொள்ளக் கூடாது. நான்கு நாள் கழிந்த பிறகு மேற்கண்ட மந்திரங்களைச் சொல்ல வேண்டும். அதாவது கலியாணமான அந்த மணப் பெண்ணானவள் கந்தர்வன் என்னும் கடவுளோடு ஒரே படுக்கையில் படுத்திருக்கிறாளாம். அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்ட இந்த மணமகன் தன் மனைவியுடன் படுத்து சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கந்தர்வன் என்னும் கடவுளிடத்தில் தன் மனைவியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமாய்க் கெஞ்சுகிறான் என்பதாகும்.

ஆதாரம்: விவாஹ மந்த்ராத்த போதினி.ஆக்கியோர்: கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் பி.ஓ.எல்., (பக்கங்கள்:முறையே: 22-59)

மேலே உள்ள விளக்கங்கள் தவறு.

பல்கலைகழகத்தில் முக்கிய ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதும் வேலையில் இருப்பதால் நீண்ட விவாதங்களுக்கு தற்போது நேரமில்லை. அந்த வேலைகள் இன்னும் 6, 7 வாரங்களில் முடிந்ததும் இது பற்றி பல நூல்களின் ஆதாரங்களுடன் நிறைய கலந்துரையாடுவோம்

Edited by vettri-vel

  • தொடங்கியவர்

தவறு என்று பொத்தாம்பொதுவாக சொல்லிவிட்டு தேர்வு, கீர்வு என்று தப்பிச் செல்வது மிக எளிது நண்பரே! :lol::D:rolleyes:

மந்திரங்களுக்கு ஆதாரநூலையும் இட்டிருக்கிறோம்!!!

தவறு என்று பொத்தாம்பொதுவாக சொல்லிவிட்டு தேர்வு, கீர்வு என்று தப்பிச் செல்வது மிக எளிது நண்பரே! :lol::D:rolleyes:

மந்திரங்களுக்கு ஆதாரநூலையும் இட்டிருக்கிறோம்!!!

பொறுத்திருங்கள் மூல நூல்களின் ஆதாரத்துடனேயே பேசுவோம்!!!. மந்திரங்களின் சொல்லுக்கு சொல் விளக்கங்கள் கிடைக்கும் நண்பரே. பொறுத்திருங்கள்.

தேர்வு இல்லை நண்பரே! இது அதை விட முக்கியமான ஒரு விடயம்

Edited by vettri-vel

புரியாத மொழியில் மந்திரங்களை வைத்திருக்க முயற்சிப்பதற்கு முக்கிய காரணமே ஒவ்வொருவரும் தத்தமது தேவைக்கேற்ற முறையில் விளக்கம் சொல்லலாம். மொழி புரியாதவன் எல்லாவற்றிற்கும் தலை ஆட்டுவான் என்பது தான்.

புரியாத மொழியில் மந்திரங்களை வைத்திருக்க முயற்சிப்பதற்கு முக்கிய காரணமே ஒவ்வொருவரும் தத்தமது தேவைக்கேற்ற முறையில் விளக்கம் சொல்லலாம். மொழி புரியாதவன் எல்லாவற்றிற்கும் தலை ஆட்டுவான் என்பது தான்.

ஒரு மொழியை படிப்பதற்கோ அதில் உள்ள விடயங்களை புரிந்து கொள்ளவோ யாரும் தடை விதிக்கவில்லை. அத்தோடு இந்த வடமொழி மந்திரங்களை உச்சரிக்காது இறைவனை வணங்கவே முடியாது என்று இந்து மதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை.

என் தாய் மொழி தமிழ்! ஆனாலும் நான் எழுதும் விஞ்ஞான ஆராய்ச்சி கட்டுரைகள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் எழுதவேண்டியுள்ளது. இன்னும் 500 வருடங்களின் பின் என்னுடைய கட்டுரையை வாசிப்பவர்கள் எவனோ ஆங்கிலேயன் எழுதிய கட்டுரை என்று சொன்னால் எப்படி இருக்கும்?

அது போல வடமொழியில் காணப்படும் எல்லா இலக்கியங்களும் நூல்களும் வடக்கில் வாழ்பவர்களே எழுதியதல்ல. அவற்றில் தமிழர்களுக்கும் பெரும்பங்கு உள்ளது. தன் பாட்டனார் ஆங்கிலத்தில் எழுதிய பல அறிவு பொக்கிசங்களை ஆங்கிலம் பிடிக்கவில்லை என்பதற்காக பேரன் கடலில் தூக்கி எறிய முனைவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்???!!!

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு மொழி ஆதிக்கம் செலுத்துகிறது. இன்று விஞ்ஞானத்தில் பாவிக்கப்படும் விலங்கியல் தாவரவியில் பெயர்கள் அனைத்துமே கிரேக்க மொழியில் தான் உள்ளது. அதற்காக எந்த ஆங்கில பேராசிரியரும் சொன்னதில்லை என்ன இது புரியாத மொழியில் விஞ்ஞானம் பேசுகிறது என்று.

குறுகிய வட்டங்களில் இருந்து வெளியே வருவது வளர்ச்சியின் முதல் படி!!!

ஆமென் என்பது என்ன மொழி? அதன் அர்த்தம் என்ன? ஆலேலுயா என்பது என்ன மொழி? பிஸ்மில்லா ரஹ்மான் ரஹீம் என்பது என்ன மொழி. இவற்றை உச்சரிக்கும் தமிழர்களையுமா உங்கள் கருத்து சாடுகிறது????!!!

வெற்றிவேல் அவர்களே!

சமஸ்கிருத மந்திரங்களில் ஏதாவது தூய்மைத் தன்மையும் ஓசை நயமும் இருக்கிறதா? அவற்றிற்குப் பதிலாக தமிழில் ஓதுவதால் கடவுள் தீட்டுப்பட்டுவிடுவாரா? (காரணம் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்படுவதற்கு ஆதரவாக இதுபோன்ற காரணங்களே இந்தக் களத்திலும் வேறு இடங்களிலும் எனக்குக் கூறப்பட்டது)

உலகமொழிகளில் ஓசைநயம் இல்லாத மொழி என்று ஒன்று இல்லை. ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு அழகு இருக்கும். சீன மொழியும் சிங்கள் மொழியும் கூட அழகான ஓசை நயம் மிக்க மொழிகளாகவே நான் உணர்ந்திருக்கிறேன். வடமொழியும் அதற்கு விலக்கல்ல.

உங்கள் கேள்வியிலிருந்து உங்களுக்கு மந்திரங்கள் பற்றி சரிவர புரியவில்லை என்று தெரிகிறது. மந்திரங்களின் ஓசை நயம் பற்றி பிரித்தானியாவில் யாராவது மொழிவல்லுனர்களை கேட்டுப்பாருங்கள். பிரித்தானியாவின் பல பிரசித்த பெற்ற பல்கலைகழகங்களில் சமஸ்கிருதத்திற்கான தனிப்பிரிவுகள் உள்ளன. அங்குள்ள பேராசிரியர்களை கேட்டுப்பாருங்கள். இலத்தீனுக்கும், கிரேக்கத்திற்கும் ஆங்கிலத்திற்கும் ஓசைநயம் எங்கிருந்து கிடைத்தது என்று அவர்கள் சொல்வார்கள்

எமது பண்பாடு சிறப்பானது என்பது நியாயமானது. ஆனால் தனது பண்பாடு மட்டும் தான் சிறப்பானது என்று எவராவது சொன்னால் அதற்கு பெயர்தான் அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது

தமிழகத்திலும், ஈழத்திலும் தமிழில் வழிபாடு செய்யப்படும் கோவில்கள் நிறையவே உண்டு. பிராமணர்களும் வீட்டில் தமிழ் மொழியில் தான் பேசுகிறார்கள். சிதம்பரத்தில் சில தீட்திதர்களின் செயலை வைத்துக்கொண்டு வீண்புரளி கிளப்புவர்கள் வீணர்கள். ஒரு மொழியில் வணக்கம் செய்ய கூடாது என்று மறுக்க தீட்சிதர்களுக்கு என்ன, இறைவனுக்கே கூட உரிமையில்லை. அப்படி எந்த இந்து மத நூல்களிலும் சொல்லப்படவுமில்லை.

இப்படியான புரளி கிளப்புவர்களின் உள்நோக்கம் என்னவென்று மக்கள் அறிந்தே தான் வைத்துள்ளார்கள்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் பூசை செய்தால்......? கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கே வெறுப்புத்தான் வரும்.... காரணம் அவர்கள் எதை செய்து கொண்டிருக்கிறார்களோ அதைத்தான் சொல்லி கொண்டிருப்பார்கள். வேறு விழங்காத மொழி என்பதால் ஏதோ முக்ககியமான விடயமென்றெண்ணி அப்படியே பக்த்தியில் மூள்கிவிடுவார்கள் பக்திமான்கள். சமஸ்கிருத பூஜைதான் இந்து சமயத்தை காப்பாற்றும்.

கோயில்களில் பூசை என்பதைவிடவும் சரியான விளக்கங்கள் கொடுக்கப்படாமையினால்தான் சைவம் சிறுபான்மையினரின் கைக்குள் அகப்பட்டுள்ளது. அறிந்தவர்கள் விளக்கங்களைக் கொடுக்க வேண்டும். அம் மந்திரங்களில் தேவையில்லாதன தூக்கி எறியப்பட வேண்டும். லக்கி லூக்கியின் கருத்து உண்மையெனில் அப்படிப்பட்ட மந்திரம் உதவாதது. இந்த இடத்தில்தான் பகுத்தறிவின் பயன்பாடு சிறப்பாக இருத்தல் வேண்டும். மாற்றங்கள் காண்பது அறிவு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.