Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கில் துணைப்படை உதவியுடன் மகிந்த நடத்தியது மோசடித் தேர்தல்: பாக்கியசோதி சரவணமுத்து சாடல்

Featured Replies

கிழக்கில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படையினரின் உதவியுடன் மகிந்த ராஜபக்ச ஒரு மோசடித் தேர்தலை நடத்தியுள்ளார் என்று சிறிலங்காவின் மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் நிர்வாகி பாக்கியசோதி சரவணமுத்து சாடியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

மிச்சம் வாசிக்க எதுக்கு அங்கை போகணும் ? இனி வரும் நபர்கள் இங்கேயே படியுங்கள் -

கிழக்கில் துணைப்படை உதவியுடன் மகிந்த நடத்தியது மோசடித் தேர்தல்: பாக்கியசோதி சரவணமுத்து சாடல்

[வியாழக்கிழமை, 15 மே 2008, 07:47 பி.ப ஈழம்] [க.நித்தியா]

கிழக்கில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படையினரின் உதவியுடன் மகிந்த ராஜபக்ச ஒரு மோசடித் தேர்தலை நடத்தியுள்ளார் என்று சிறிலங்காவின் மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் நிர்வாகி பாக்கியசோதி சரவணமுத்து சாடியுள்ளார்.

கிழக்கு தேர்தல் தொடர்பாக கொழும்பிலிருந்து நேற்று புதன்கிழமை வெளிவந்த "த மோர்ணிங் லீடர்" வார ஏட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்:

மூன்று ஆசனங்கள் வித்தியாசத்தில் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் கைப்பற்றியுள்ளது.

2005 ஆம் ஆண்டு தேர்தலின் போது எதிர்க்கட்சித் தலைவர் கிழக்கில் மகத்தான வெற்றியை பெற்றிருந்தார்.

எனினும், இந்த நிலைமையை கூட்டமைப்பு அரசாங்கம் மாற்றியது.

பிரசார நடவடிக்கைகள் தொடங்கியது முதல் தேர்தல் நாள் வரை பல்வேறு வன்முறைகளும் மோசடிகளும் அநாயாசமாக அரங்கேற்றப்பட்டுள்ளன.

தேர்தல் முடிவுகள் தொடர்பான நம்பகத்தன்மை வெகுவாக குறைந்தளவிலேயே காணப்படுகின்றன.

வடமத்திய மாகாணத்தில் நடந்த கறை படிந்த தேர்தல்களுக்கு நிகரானதொரு தேர்தலாகவே அண்மைய கிழக்கு தேர்தல்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் பிரச்சார காலத்தில் அரசாங்கம் மோசமான முறையில் அதிகார துஸ்ப்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும், பிள்ளையான் குழுவினர் ஆயுத அத்துமீறல்களை கட்டவிழ்த்து விட்டதாகவும் கண்காணிப்பாளர்களும் அரசியல் கட்சிகளும் முறைப்பாடு செய்திருந்தன.

சாதாரண வாக்காளர்கள் தேர்தல் வன்முறைக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க முடியாத நிர்க்கதியான நிலையிலேயே காணப்படுகின்றனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் தீவிரமான வன்முறைகளை கிழக்கில் கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.

வாழைச்சேனை, காத்தான்குடி, பொத்துவில் போன்ற பிரதேசங்களில் மிக மோசமான தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறின.

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்ற வாக்குச் சாவடிகளில் மீள வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தேர்தல் வன்முறைச் சம்பவங்களை கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது.

வாக்குச் சீட்டு மோசடி, வாக்குச் சாவடி பிரதிநிதிகள் விரட்டியடிக்கப்பட்டமை மற்றும் வாக்களிப்பு மையங்களில் ஆயுததாரிகளின் செயற்பாடுகள் போன்ற சம்பவங்களை அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த தேர்தல் வன்முறைச் சம்பவங்களின் மூலம் மீண்டுமொரு முறை 17 ஆவது திருத்த அமுல்படுத்தலின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது.

பிரதானமாக அரசியல் சாசன பேரவையின் உருவாக்கலும், சுயாதீன ஆணைக்குழுக்களின் உருவாக்கலும் மிகவும் இன்றியமையாததாக பரிந்துரைக்கப்படுகிறது.

முக்கியமாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு, சுயாதீன காவல்துறை ஆணைக்குழு மற்றும் பொதுத்துறை ஆணைக்குழு ஆகியன அமைக்கப்படுவதன் மூலம் அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

17 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பிரச்சினைகளுக்கு பூரணமாக தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது என்ற போதிலும், சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் இந்தளவு பாரதூரமான வன்முறைகள் மற்றும் மோசடிககளை ஓரளவுக்கேனும் தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.

அடக்குமுறைகளை பிரயோகிக்க முனையும் அரசியல்வாதிகளுக்கு எதிராக ஓரளவுக்காவது செயற்படக்கூடிய வல்லமையை சுயாதீன ஆணைக்குழுக்களின் மூலம் ஏற்படுத்த முடியும்.

அரசியல்வாதிகளுக்கு எதிராகச் செயற்பட்டால் வழமையாக வழங்கப்படும் தண்டனை இடமாற்றங்கள் வழங்கப்பட மாட்டாது என்ற உத்தரதாதத்தை சுயாதீன ஆணைக்குழுவினால் அதிகாரிகளுக்கு வழங்க முடியும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளால் (பிள்ளையான் குழு) கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் அம்பலமாக்கப்பட்டுள்ள நிலைமை, பிள்ளையான் குழு அல்லாதோரினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை மூடிமறைக்க ஓர் சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

17 ஆவது திருத்தத்தின் மூலம் நியமிக்கப்படும் தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகத்திற்கு வாக்களிப்பு மையங்களின் வாக்கெடுப்பை இரத்துச் செய்யவும், மீள வாக்கெடுப்பை நடத்துவதற்கான பூரண அதிகாரம் காணப்படுகின்றது.

வாக்கெடுப்பு மீள நடாத்தப்பட வேண்டும் என்பதை வாக்கெடுப்பு மையத்தின் புறச்சூழ்நிலையும், புறக்காரணிகளுமே நிர்ணயிக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஓர் கருதுகோளாகும்.

வாக்காளர்களை அச்சுறுத்தல், ஆயுதச் செயற்பாடுகள் மற்றும் குறித்த ஒரு வாக்காளருக்கு வாக்களிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தல் உள்ளிட்ட பல வன்முறைச் செயல்கள் வாக்கெடுப்பு மையத்திற்கு வெளியிலேயே இடம்பெறும்.

வாக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்னதாகவே வாக்களிப்பு மையத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கு விடுக்கப்படும் மிரட்டல்கள் மற்றும் இன்னொரென்ன அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலைமையின் கீழ் வாக்களிப்பு மையங்களின் அகச்சூழ்நிலையை மாத்திரம் கருத்திற்கொண்டு நியாயமானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெற்றது என்ற முடிவுக்கு வர முடியாது.

வாக்குச்சாவடிகளில் மோசடிகள் இடம்பெற்றால் மீள வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையாளர் அநேக சந்தர்ப்பங்களில் எச்சரிக்கை விடுத்த போதிலும் வழமை போன்று எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கிழக்கின் முதலமைச்சராக பிள்ளையான் நியமிக்கப்படா விட்டால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் வன்முறை சார் செயற்பாடுகள் மேலும் தீவிரமடையக்கூடும்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கிழக்கை மீட்டெடுத்தன் பயனை அரசாங்கத்தினாலோ அல்லது தமிழ் மக்களாலோ இதனால் அடையா முடியாது போகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்படாத விடத்து பாதகமான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும்.

கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களின் போது பிள்ளையான் குழுவினர் அரசாங்கத்திற்கு காட்டிய நன்றி விசுவாசத்திற்கு உரிய பிரதி உபகாரம் கிடைக்கப் பெறாவிடின் பிள்ளையான் குழுவினரின் செயற்பாடுகள் மாற்றமடையலாம்.

13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் வழங்கப்படவுள்ள காவல்துறையினருக்கான அதிகாரம் குறித்து பிள்ளையான் அதிக முனைப்பு காட்டுவதாகத் தோன்றுகிறது.

அடுத்த அரச தலைவர் தேர்தல்களை இலக்கு வைத்து இவ்வாறான பல மாகாண சபைத் தேர்தல்களை அரசாங்கம் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான தேர்தல்களில் அடையும் வெற்றியின் மூலம் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தி, அவற்றின் மனோதிடத்தை சீர்குலைப்பதே அரசாங்கத்தின் பிரதான வியூகமாக அமைந்துள்ளது.

இந்தக் காலப்பகுதிக்குள் பிள்ளையானின் செயற்பாடுகள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்பதில் எவ்வித ஐயப்பாடுகளும் இல்லை. அப்படியானால் எங்களின் நிலைமை? என்று அவர் தனது கட்டுரையின் இறுதியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆதாரம்: http://www.puthinam.com/full.php?2b0pD6gC3...A4Oed0e40e1f73e

Edited by முரளி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விசயம் முரளி

உண்மையாகவே இன்னொரு இடத்தில் போயிருந்து செய்திகள் படிக்க எனக்கு பஞ்சியா இருக்கிறது. இனிமேலும் நீங்கள் இதை தொடர வேண்டும். இசூர்யா என்றவரும் இதே மாதிரிதான் செய்கிறார். அவருடையதையும் முழுதாக இணைத்து விடவும். அல்லது நானே இணைக்கிறன். அதே போல் இனியெழுதும் உங்கள் பதிவுகளையும் இணைக்கிறன்.

நீங்கள் எழுதுவதை இங்கே இணைக்க முடியாதபடி எழுத முடியும் - யாழ் விதிகளுக்கு புறம்பாக ஆங்கில சொற்களை போட்டு உங்கட புள்ளி நிறுவனத்தில் எழுதினால் அதை நான் இங்கு இணைக்க முடியாது :unsure:

இல்லை காவடி அண்ணை... யாழில ஒரு நாளைக்கு பத்து பதினைஞ்சு இணைப்பு செய்தி புதினத்துக்கு கொடுக்கப்படுகிது. ஒவ்வொரு முறையும் மேலதிகமாக வாசிக்க இஞ்ச அழுத்துங்கோ எண்டு சொல்லப்படுகிது.

எனது கேள்வி என்ன எண்டால் யாழ் முகப்பில புதினம் எண்டு பெரிய விளம்பரம் போட்டு இணைப்பு கொடுத்தால் வாசகர்கள் நேரடியாக அங்கு செல்ல உதவியாக இருக்குமே?

ஏன் அதுக்கு NEWSBOT எண்டுற பெயரில ஒரு கருத்துக்கள உறவு தினமும் ஆயிரம் லிங்கை புதுனத்துக்கு இணைச்சு கஸ்டப்படுவான்?

வேணுமெண்டால் நானே அழகிய பெரிய விளம்பரம் ஒண்டை புதுனத்துக்காக யாழில போட அடோபி பிளாஷில செய்து தரலாம்.

Edited by முரளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.