Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மங்கலம், குழுஊக்குகறி, இடக்கரடக்கல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில பெண்களுக்கு முலைகள் நெஞ்சிலிருந்து நேரே முளைத்தனவாயும் சிலருக்கு மேல் நெஞ்சிலிருந்து வடிந்தனவாயும் சிலருக்கு மேல் விலாவிலிருந்து முன்னோக்கிப் படர்ந்து வருவன போலவும் இருக்கும். உண்மையில் உலகின் கோடிக்கணக்கான மனிதருக்குத் தனித்தனி முகங்கள் என்பது போல பெண்களுக்குத் தனித்தனி முலைகளாக இருக்க வேண்டும். ஒருவர் முகம்போல் உலகில் ஏழுபேர்கள் இருப்பார்கள் எனும் தேற்றத்தை ஒத்துக்கொண்டால், உலகின் மக்கட்தொகையின் பாதியை ஏழாக வகுத்துக்கொள்ளலாம், முலைகளின் தினுசுகளுக்கு.ஈர்க்கு இடைபுகாத, காற்று இடைபுகாத முலைகள் உண்டு. கொங்கைகளில் சந்தன, குங்குமக் குழம்பு பூசியதாகத் தமிழ் இலக்கியம் பேசியதுண்டு. "வெறிக் குங்குமக் கொங்கை மீதே இளம்பிறை வெள்ளை நிலா எறிக்கும்' என்பது ஓர் எடுத்துக்காட்டு. நுங்குக் குரும்பை போன்றவை உண்டு. கெவுளி பாத்திரம் எனும் பெயரில் அழைக்கப் பெறும் செவ்விளநீர் எனக் கூறுவோருண்டு.

பழைய காலத்தில் சுள்ளிக்காடுகளில் குழுவாக வாசிக்கப்பட்ட சரோஜாதேவி இதிகாசங்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட உவமை தேன்கூடு. அந்த உவமை சகிக்கவில்லை. பாலடை என்பது தேனடை அல்ல. மேலும் தீப் பந்தத்துடன் அணுகும் உறுப்புமல்ல அது. சொக்கநாதப்புலவன் பாடுகிறான், "முன்னே இரண்டு முலை, முற்றியபின் நாலு முலை, எந்நேரம் என் மதலைக்கு எட்டு முலை' என்று.

வடிவாக உடைக்கப்பட்ட தேங்காய் முறி சரியானதாக இருக்கும். சிறியதும் திண்ணியதும் கருமையானதும் என்றால் கண்முளைத்த உடன்குடி கருப்பட்டி என்பார்கள். நான் பயின்ற பல்கலைக்கழகங்களில் ஒருவர், எழுபத்து ஆறாவது வயதில் பால்நோய் வந்து இறந்தவர், மாநிறமும் வலியதும் இளகியதுமான முலைகள் எனில் சூரங்குடி கருப்பட்டி என்பார். கருப்பட்டிகள் எஞ்ஞான்றும் பால்வெள்ளை நிறமோ பொன்னின் நிறமோ கொண்டவை அல்ல.

அபினி மலர் மொட்டுக்கள் போன்ற முலைக் காம்புகள் என்றான் ஈழத்துக்கவிஞன் வ.ஐ.ச. ஜெய பாலன். பொல்லா வறுமையினால் முலைக்காம்பின் சுரப்பித் துளைகள் தூர்ந்து போயின தன் மனைவிக்கு -இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை - என்றார் ஒப்பிலா மணிப் புலவர். அந்தப் பாடம் நடத்தியபோது, எனது விரிவுரையாளர், முலை எனும் இடங்களில் எல்லாம் கலை என்று வாசித்தார். நான் வாசித்த கல்லூரி இருபாலருக்குமானது. அன்றெல்லாம் எனக்கு உடலில் கொழுப்புக் கிடையாது எனினும் மனதில் கொழுப்பு உண்டு. விரிவுரையாளர் "வறுமுலை'யை "வறுகலை' என்று வாசித்தபோது, "ஐயா, அது இடைக்குறை, வறுகடலை என்று இருக்க வேண்டும்' என்று சொன்னேன். எட்டு நாட்கள் வகுப்பில் ஏற முடியவில்லை. எவனோ ஒரு தமிழ்முனி அவருக்குக் கொடுத்த சாபத்தினால், பின்னர் எனது நாவலொன்றை அவர் பாடம் நடத்த வேண்டியது வந்தது.

உங்களில் பலர் தாடிக்கொம்பு, கிருஷ்ணாபுரம், தாரமங்கலம், திருவில்லிப்புத்தூர், பேரூர், திருவானைக் காவல் போயிருக்கலாம். அடுத்துப் போனால் சற்று இணக்கமாக நின்று கவனியுங்கள். நமது சிற்பிகள் எத்தனை நுணுக்கமாய் தெளிவும் தேர்ச்சியும் உடற்கூற்றறிவும் கொண்டவர்கள் என்பது தெரிய வரும். மொத்தமாகப் பார்த்தாலும் பங்கு பங்காய்த் தசைக்கோளம், கருவட்டம், காம்பு எனப் பார்த்தாலும் ஒன்று போல் மற்றொன்று இல்லை. ஒன்றின் அழகுபோல் மற்றதின் அழகு இல்லை. முலைகளுக்கும் அரசியல் பார்வை உண்டு, இடதுசாரி வலதுசாரி என்று. என்றாலும் வடிவில், தன்மையில், கொள்கையில் சிறிய வேறுபாடுகள் மட்டுமே.

முலைகள் என்பவை ம்ஹம்ம்ஹப் ஞ்ப்ஹய்க்ள் அடங்கிய தசைக் கோளம் எனவும் பாலியலில் அதற்கு வேறெந்த சிறப்பான பணியும் இல்லை என்பர் உடற்கூற்றியல் விஞ்ஞானிகள். அதைப் பால்சுரப்பிகளின் கோளம் என்று மட்டும் மனிதன் பார்க்கவில்லை. கவிஞனும் காமுகனும் பார்க்கவில்லை.

"என் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க' என்பது திருவெம்பாவை. ஏனதை எதிர்மறையில் சொன்னான் மாணிக்கவாசகன்? "உன்னடியார் தாள் பணிவோம், ஆங்கவர்க்கே பாங்காவோம், அன்னவரே எங்கணவராவார்' என்று உடன்பாட்டில் பேசியவன்தானே! "என் கொங்கை நின் அன்பர் தோற் சேர்க' என்பதுதானே இயல்பு. இயல்பில் கவிதை வாய்ப்பதை விடவும் எதிர்மறையில் சரியாக வாய்க்கிறது என உணர்ந்திருப்பான் போலும்.

"கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை

தன்னைக் கிழங்கோடும்

அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்தென்

அழலைத் தீர்வேனே!'

என்கிறாள் ஆண்டாள் நாச்சியார் திருமொழியில். "திரி விக்கிரமன் திருகஙிகைகளால் என்னைத் தீண்டும் வண்ணம் சாயுடை வயிலும் என் தடமுலையும்' என்கிறாள். "முற்றிலாத பிள்ளைகளோம், முலை போந்திலாதோம்' என்கிறாள்.

"பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என்

கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து

ஆவியை ஆகுலஞ் செய்யும்'

என்கிறாள். "கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளி சோரச் சோர்வேனை' என்கிறாள். "குற்றமற்ற முலை தன்னைக் குமரன் கோலப் பணைத்தோளோடு அற்ற குற்றம் அவை தீர அணைய அமுக்கிக் கட்டீரே' என்கிறாள்.

ஆண்டாளை, பெரியாழ்வாரின் க்ர்ன்க்ஷப்ங் ஹஸ்ரீற் என்பாரும் உளர். ஒரு பெண் விரகதாபத்தை இத்தனை வெளிப்படையாகப் பேசும் போக்கு பெண் குலத்துக்கே இழிவு என்று காபந்து செய்யும் முயற்சியாகக்கூட இருக்கலாம் அது. ஆனால் கவிதையின் மொழியை, தொனியைக் கவனிக்க வேண்டும். மேலும் பெரியாழ்வார் ஏன் இன்னொரு புனைபெயரில் எழுத வேண்டும்? நாயகி பாவம் என்பது புனைபெயரில்தான் வருமா?

மாணிக்கவாசகனின் "நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க' என்பது அரற்றல் இல்லை. தோள் சேர்தல் என்பது அணைதல் மட்டுமல்ல. தோளோடு இறுக அணைதலில் ஆசையும் காமமும் வெளிப்பாடு. தோள் சேர்தல் என்பதில் ஒரு கொஞ்சல், இசைவு, இணக்கம், கனிவு, காதல் . . . காதலித்தவர்க்கும் காதலுள்ள மனைவியைக் கொண்டவர்க்குமே அது அர்த்தமாகும். ஆண்டாளின் முலைகள் காமத்தின் வெளிப்பாடு எனின் எங்ஙனம் ஐயா அது ம்ஹம்ம்ஹப் ஞ்ப்ஹய்க்ள் மட்டுமே ஆகும்?

திருப்பூவனத்துத் தாசியை - "முலை சுருங்கிய வையை திருப்பூவனத்துப் பொன்னனையாள்' என்று எனக்கு அறிமுகப்படுத்தியவர், மதுரை மீனாட்சியின் கிழக்கு வாசல் சமீபம் வெண்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கும் கவிஞர் ந. ஜயபாஸ்கரன்.

முலை சுருங்கிப் போனது இன்று வையையுமே ஆகும். பொன்னனையாள் திருப்பூவன நாதர் மீது வைத்த நகக்குறி புராணம் என்றாலும், நகக்குறி வைத்த தாசி பொன்னனையாளின் கொங்கைகள் காமத் திரவியம்தானே! முலையழுந்தத் தழுவிக் கிடந்திருப்பாள்தானே! ஆனால் குட்டி ரேவதி, "முலைகள்' என்ற கவிதை எழுதினால் தமிழ்ப் பண்பாட்டுக் காப்பீட்டுக் கழக நிறுவனர்களுக்கும் இயக்குனர்களுக்கும் பொது மேலாளர்களுக்கும் கோபம் வருகிறது. "சாயாத கொம்பு' என்று அந்தக் காலத்தில் பாடிய போது பக்திப் பரவசத்தில் நின்றார்கள் போலும்.

"எங்கள் தனம் கச்சிருக்கும் பாலிருக்கும் காம பாணங்கள் பட்டுப் பிச்சிருக்கும்' என்பதை என் செய்யலாம்? "முலையும் குழலும் முளைப்பதற்கு முன்னே கலையும் வளையும் கழன்றாள்' என்பதை என் செய்?

தாசனின் மோகம் உணர லால்குடி சப்தரிஷி ராமமிர்தத்தின் "அபிதா' படியுங்கள் ஐயா!

ஒரு முலை திருகி எறிந்து சங்ககால மதுரையை எரியூட்டியவள் இளங்கோவின் கண்ணகி. அதென்ன க்ஷர்ப்ற்-ய்ன்ற் போட்டு இறுக்கி வைத்திருந்தாளா என்றனர் திராவிடர்கள். "வா, மீத முலை எறி' என்கிறார் நெல்லை கண்ணன். உடம்பெல்லாம் இந்திரனுக்கு அல்குல் கண் முளைத்ததைப் போல, முலை முளைத்து ஒவ்வொன்றாய்த் திருகி எறிந்து எரியூட்ட இங்கே ஏராளம் மாநகர்கள் உண்டு. மறுபடியும் பசுக்களையும் சிசுக்களையும் அறவோரையும் பத்தினிப் பெண்டிரையும் தீயிலிருந்து காத்துவிடலாம்.

ஆனால் அந்த முலை, நம் சொந்த முலை, தமிழனுக்குக் கெட்ட வார்த்தை. சுந்தர ராமசாமி ஒருமுறை எழுதினார், சிறுகதையில் முலை என்று எழுதினால் பத்திரிகை ஆசிரியர் வெட்டிவிடுவார் என. "அச்சமில்லை அச்சமில்லை' எனும் பாரதி பாடலிலேயே "கச்சணிந்த கொங்கை மாதர்' எனும் வரியைத் தணிக்கை செய்தவர் ஆகாஷ்வாணியினர். ஆனால் இன்று தூர்தர்ஷன் சானல்களில் முலையைப் போட்டு குலுக்கு குலுக்கு என்று குலுக்குகின்றனர். சூர்ப்பனகையின் முலையரிந்த இலக்குமணரின் வம்சாவளியினர் அவர்கள். முலைக்குப் பதில் மார்பு என்று அச்சுக் கோப்பார்கள். முலையும் மார்பும் ஒன்றா ஐயா? கிருஷ்ணன் நம்பியின் "மருமகள் வாக்கு' சிறுகதையில் வரும் "எனக்குத்தான் மாரே இல்லையே' என்பது வட்டார வழக்கு. சமகாலத் தமிழருக்கு நெஞ்சு, மார்பு, மார்பகம், மாங்கனி, ஆப்பிள், குத்தீட்டி, இளநீர், நுங்கு எல்லாம் முலைக்கு மாற்றுச் சொற்கள்.

"கொண்டையில் தாழம்பூ, நெஞ்சிலே வாழைப்பூ, கூடையில் என்ன பூ, குஷ்பு' என்றெழுதினால் பத்மபூஷண் விருதுக்குக் கோளுண்டு. ஆனால் முலை எனில் தீட்டு; குண்டி, பீ, மூத்திரம் எல்லாம் அமங் கலம். என்னுடைய சிறுகதை ஒன்றினைப் பிரசுரித்தவர் பீ, மூத்திரம் என வரும் இடங்களை வெட்டிவிட்டார். நேரில் பார்த்தபோது கேட்டேன், "உமக்கு அதுவெல்லாம் வருவதில்லையா? ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் என்றுதான் வருமா?' என.எனவே இடக்கரடக்கல், குழுஊக்குறி பயன்படுத்த வேண்டும். ஆனால் மனதின் மொழி முலை எனும் சொல். அது பால்பண்ணையும் பசி நிவாரணியும் மட்டுமல்ல. வளமுலை, இளமுலை, இணைமுலை, தடமுலை, உண்ணாமுலை என்பதெல்லாம் தமிழ் இலக்கியம்.

நாம் தப்புக்கொட்டும் திராவிட மொழிக் குடும்பத்தின் உறுப்பான மலையாளத்தில் முலை கெட்ட வார்த்தை இல்லை. "முலையும் தலையும்' என்பது அன்றாட மலையாள வழங்கு. "முலை கொடு' என்றால் பால்கொடு. "முலை குடிச்சு' என்றால் பால் குடித்தது. "முலை குடி மாறாத்த குட்டி' என்றால் பால்குடி மாறாத குழந்தை. "பகவத் கீதையும் குறைய முலைகளும்' என்பது பேப்பூர் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய சிறுகதைத் தலைப்பு. "ஆழ்ஹ"விற்கு முலைக்கச்சை என்பது வழக்கமான மலையாளப் பிரயோகம். ஆனால் நமக்கு "அவளுட ராவுகள்' என்பதை "அவளுட பிராவுகள்' என்று துணுக்கு வெளியிட்டுக் கிறுகிறுக்கத் தெரியும்.

"வாருருவப் பூண் முலையீர்' என்று மாணிக்கவாசகர் குறிக்கிறார்.

"பார இளநீர் சுமக்கப் பண்டே பொறாத இடை

ஆர வடம் சுமக்க ஆற்றுமோ-நேரே

புடைக்கனத்த கொங்கையின் மேல் பூங்களபம்

சாத்தி

இடைக்கு அனத்தம் வைத்தவரார் இன்று'

என்பது கவிஞனின் கரிசனம்.

"பிரம்மம் சத்யம், ஜகத் மித்யா' என்பது க்ஷழ்ங்ஹள்ற்ம், க்ஷழ்ஹவும் போல என்கிறார் மலையாளக் கவி குஞ்சுண்ணி (நன்றி : விகடகவி விஜயகுமார் குனிசேரி). நடக்கவே போகாததோர் காரியத்தை "கோழிக்கு முலை முளைத்தாற்போல' என்னும் பழமொழியில் சொல்லும் பழக்கம் மலையாளத்தில் உண்டு.தமிழனுக்கு "ஸ்தனம்' என்றால் அது கெ�ரவமான சொல். குண்டியைப் "பிருஷ்டம்' எனச் சொல்லிப் புளகாங்கிதப்படுவதைப் போல. முலைமீது மட்டும் என்ன காழ்ப்பு என்பது புலப்படவில்லை. ஸ்தனம் என்பதும் அற்புதமான வார்த்தைதான். சஸ்தனீ எனில் முலைகொடுக்கின்ற உயிரினங்கள் என்பது பொருள். ஆங்கிலத்தில் சொன்னால் ம்ஹம்ம்ஹப்ள்.

"சங்கீதாமபி சாகித்யம் சரஸ்வதீய ஸ்தனத்வயம்' என்பது சங்கீதமும் சாகித்யமும் சரஸ்வதியின் இரண்டு ஸ்தனங்கள் என்றாகும். நான் சரஸ்வதியின் இரு தனங்களிலும் பால் குடித்தவன்.

பார்வதிக்கு மூன்று ஸ்தனங்கள் இருந்தன என்றும் நாதனைக் கண்டு நாணியபோது மூன்றாவது ஸ்தனம் மறைந்தது என்பதும் புராணம். லா.ச.ரா. "புத்ர' நாவலில் "அவளுக்கு மூன்றாவது ஸ்தனம் மறைந்தது' என்று எழுதியதைப் புரிந்து அனுபவிக்க புராணம் தெரிந்திருக்க வேண்டும்.

"விள்ளப் புதுமை ஒன்றுண்டு ஆலவாயினில் மேவு தென்னன்

பிள்ளைக்கு ஒருகுலை மூன்றே குரும்பை

பிடித்து அதிலே

கொள்ளிக் கண்ணன் திட்டியால் ஓர் குரும்பை

குறைந்து அமிர்தம்

உள்ளில் பொதிந்த இரண்டு இளநீர் கச்சு உறைந்தனவே'

என்றார் கவி காளமேகம். அதுதான் லா.ச.ரா.

"அன்று இரவு' சிறுகதையில் பிட்டுக்கு மண் சுமந்தவன் பிரம்படி வாங்கியபோது, பிரம்படி எங்கு எல்லாம் விழுந்தது என்பதைச் சொல்லப் புறப்பட்ட புதுமைப்பித்தன் "மூன்று கவராக முளைத்து எழுந்ததன் மீது' என்று எழுதுவதும் மூன்று முலைகளையே என்று தோன்றுகிறது.

முலை என்பது மனித உறுப்பின் பெயர் மாத்திரம் இல்லை. கோமாதா என்று இன்று காவியர் கொஞ்சும் பசுக்களின் மடுவை அல்லது மடியை முலை என்றுதான் ஆண்டாள் அழைக்கிறாள். "சீர்த்த முலை பற்றி வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்கள்' என்பது திருப்பாவை.

முலை என்பது வெகுஜனத் தமிழில் கெட்ட வார்த்தையே தவிர, பெரியதோர் தொழில்துறையான திரைப்படத் துறையில் அஃதோர் மூலதனம். காற்று, தண்ணீர், சூரிய ஒளிபோல செலவில்லாததோர் கால்ஷீட். குனிந்து பெருக்கும், குதித்து மாங்காய் பறிக்கும், மழையில் நனைந்து கொடுங்கும், குலுங்கக் குலுங்க ஓடிவரும் சங்க கால யானை கற்கோட்டையை மத்தகத்தால் இடித்துத் தகர்க்க முயல்வதுபோல காதலனை ஓடிவந்து முலைகளால் இடித்துத் தாக்கும் காட்சிகளை நமது கலையுலகத் திலகங்கள் அறியாமலோ நோக்கமின்றியோ வைப்பதில்லை.

மேலும் பெருந்தனக்காரிகள் மீது அவர்களுக்குப் பெரும்பித்து. இறுகப் பிதுங்கக் கட்டிய முலைகள் குலுங்காது என்பதும் அவர்களுக்குத் தெரியும். என்ன வேகத்தில், எந்தக் கோணத்தில் என்ன சந்தத்துக்கு ஓட

http://tamil.sify.com/uyirmmai/august04/fu...php?id=13533147

  • கருத்துக்கள உறவுகள்

பழைய காலத்தில் சுள்ளிக்காடுகளில் குழுவாக வாசிக்கப்பட்ட சரோஜாதேவி இதிகாசங்களில்....

:icon_idea::unsure::)

இலங்கையில் 10ம் வகுப்பு தமிழ் இலக்கியப் புத்தகத்தில் வரும் நல்வெண்பா செய்யுள் ஒன்றில் "வீமன் திருமடந்தை தன் மென்மாலை தனை தோளில் சூட்டுவாள்" என்று மாற்றம் செய்யப்படிருந்தது...

காவடி அண்ணை ஒண்டும் விளங்க இல்ல. எங்களுக்கு சின்னப்பெடியங்களுக்கும் விளங்குறமாதிரி சொல்லுங்கோ. <_<

இப்ப ஆம்பிளைகளுக்கும் ரெண்டு முளை இருக்கிதுதானே? அத வச்சும் ஏதாவது செய்யலாமோ? முளை கொஞ்சம் பெரிசா இருந்தால் ஆம்பளைகளும் பிரா போடலாம் என? இதப்பற்றி என்ன நினைக்கிறீங்கள். ஆம்பளைகளின்ட முலைகளைப்பற்றி தமிழ் இலக்கியத்துல ஒண்டும் சொல்லப்பட இல்லையோ? :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி உங்கடை பிரச்சனை விளங்குது - இது பற்றி நீண்ட ஆய்வும் விவாதமும் தேவை <_<

  • கருத்துக்கள உறவுகள்

முலைகள் என்பவை ........ அடங்கிய தசைக் கோளம் எனவும் பாலியலில் அதற்கு வேறெந்த சிறப்பான பணியும் இல்லை என்பர் உடற்கூற்றியல் விஞ்ஞானிகள். அதைப் பால் சுரப்பிகளின் கோளம் என்று மட்டும் மனிதன் பார்க்கவில்லை. கவிஞனும் காமுகனும் பார்க்கவில்லை.

இக்கருத்து.. இக்கட்டுரையை தனது சுய புத்திக்கு ஏற்ப திரித்து வழங்கியவரின் கருத்தே தவிர.. உடற்கூற்றியல் விஞ்ஞானிகள் சொல்வதாகச் சொல்வது பொய்.

முலைச்சுரப்பிகள்.. கொழுப்பு மற்றும் இழையங்கள் சூழ்ந்த பாற்சுரப்பிகளின் கோளம் என்பதும்.. அவை துணைப்பால் இயல்புகளுடன் தொடர்புடையன என்பதும் மட்டுமல்ல.. உடற்கூற்றியல் தகவல்கள்.

முலைச்சுரப்பி வெறும் பாற்சுரப்பி மட்டுமன்றி.. பெண்களிலும் சரி ஆண்களிலும் சரி (பாதங்க நிலை சுரப்பி) பாலியல் உணர்வைத் தூண்டக் கூடிய நரம்பு முடிவிடங்களைக் கொண்டவை. இதுதான் உடற்கூற்றியல் உண்மை.

நான் நினைக்கிறேன்.. சிலர் இப்படியான விடயங்களை எழுத்தில் எழுதுவதை.. புரட்சியாக எண்ணுகிறார்கள் என்று. அது தவறு. இவர்களுக்கு மனித உடற்கூறு பற்றிய முழுமையான அறிவின்மையே இப்படியாக எழுத வைக்கிறது. இது இப்போ இணையத்தில் வழி வெளிப்படும் ஒரு வகை மனநோயின் தாக்க விளைவு என்று கூடச் சொல்லலாம். <_<

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களிலும் சரி ஆண்களிலும் சரி (பாதங்க நிலை சுரப்பி) பாலியல் உணர்வைத் தூண்டக் கூடிய நரம்பு முடிவிடங்களைக் கொண்டவை

இக்கூற்றின் உண்மைத்தன்மையை நான் உறுதி செய்கிறேன் :rolleyes:

முரளி உங்கடை பிரச்சனை விளங்குது - இது பற்றி நீண்ட ஆய்வும் விவாதமும் தேவை :wub:

எதப்பற்றி காவடி அண்ணை? ஆம்பளைகள் பிரா போடுறது பற்றியோ இல்லாட்டிக்கு ஆம்பளைகளின்ட முளைகளப்பற்றி தமிழ் இலக்கியத்தில எழுதி இருக்கிறதப் பற்றியோ? என்ன எழவோ.... உதுகள எங்கதான் தேடி எடுக்கிறீங்களோ? :) ஆண்களில குழுங்குற இன்னொரு விசயம் இருக்குதல்லோ காவடி அண்ணை? அதப்பற்றியும் யாராச்சும் ஆராய்ச்சி செய்து இருக்கிறீனமோ? தமிழ் இலக்கியத்தில அதுபற்றி ஏதும் சொல்லப்பட்டு இருக்கிதோ? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.